Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்

Posted: 04 Jan 2016 01:27 PM PST

1. எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும், ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும். 2. கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில், தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது. 3. மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது. 4. இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் ...

பிளான் – ஒரு பக்க கதை

Posted: 04 Jan 2016 01:15 PM PST

- என்னப்பா ஹரி! நீ எதிலும் ரொம்ப கவனமாக பிளான் பண்ணி செய்வே. உன் பிள்ளை கல்யாணத்துக்கு எத்தனை பேர் வருவாங்க… எத்தனை சாப்பாடு தயார் பண்ணணும்னு கரெக்டா திட்டம் போட்டிருப்பே! இப்ப நூறு பேருக்கான சாப்பாடு மிஞ்சிருச்சுன்னு சமையல்காரர் சொல்றார்… எப்படி?'' என்றார் நண்பர் குமரேசன். - குமரேசனை கை அமர்த்தி நிறுத்தி, தன் செல்போனில் ஏதோ ஒரு நம்பரை அழுத்தினார் ஹரிஹரன். இணைப்பு கிடைத்ததும், ''ஹலோ! அமர்சேவா ஆதரவற்றோர் இல்லம்தானே? நான் பிஎஸ்எஸ் கல்யாண மண்டபத்தில் இருந்து பேசுறேன். நூறு பிள்ளைகள் சாப்பிடுற ...

வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!

Posted: 04 Jan 2016 10:08 AM PST

வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! https://www.facebook.com/100003968327877/videos/526342254174714/?theater அனைவரும் பார்க்கத் தவறாதீர்கள்.நீங்கள் உண்மையான தமிழர் என்றால்Posted by Krishna Zi Teng on Saturday, January 17, 2015

மனைவியெனும் மாயத் தத்துவம் - பூர்ணம் விசுவநாதன்

Posted: 04 Jan 2016 09:58 AM PST

ஆபிஸிலிருந்து வீடு திரும்பிய போது, நன்றாகத்தான் இருந்தேன். அதாவது 'நன்றாகத் தான் இருந்தேன், என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். நன்றாக இல்லை என்பது பிறகல்லவா தெரியப் போகிறது? - கதவைத் திறந்து என்னை வரவேற்ற மனைவி, என்னை ஏதோ மாதிரி பார்த்தாள். ஓயாமல் உழைக்கும் 'டைப்' ஆனதால், அவள் தான் களைத்த நிலையில் என்னை எதிர்க் கொண்டழைத்தாள்! நான் சரியாகத் தானிருந்தேன். ஆனால், நான் கதவைத் தாண்டி, அவளையும் தாண்டி உள்ளே சென்ற போது, சட்டென்று, எங்கே, திரும்புங்க' என அவள் சொல்லவே, திரும்பினேன். ...

அல்லியின் சாமர்த்தியம்

Posted: 04 Jan 2016 09:49 AM PST

இருப்பாச்சி என்ற ஊரில் புள்ளான் என்று ஒரு திருடன் இருந்தான். அவன் மனைவி பெயர் புள்ளி. இவள் பகல் நேரத்தில் ஒவ்வொரு தெருவாகச் சென்று வீடுகளில் கைரேகை ஜோசியம் சொல்லுகிற மாதிரி, அங்குள்ள பெண்களிடம் வாயைக் கிளறி விவரம் தெரிந்து கொள்வாள்.  வீட்டில் உள்ள ஆண்கள் எப்போது வருவார்கள், போவார்கள் என்று அறிந்துகொண்டு ஆண்கள் இல்லாத வீட்டுத் திண்ணையில் உள்ள மாடத்தில் ஒரு வெள்ளை அரளிப்பூவை வைப்பாள். ஆண்கள் இருக்கும் வீட்டில் ஒரு சிவப்பு அரளிப்பூவை வைப்பாள். ஆள் இருக்கிறது என்று எச்சரிப்பதற்காக.  புள்ளான் அந்த ...

சிற்றின்பம்...பேரின்பம்......by krishnaamma :)

Posted: 04 Jan 2016 09:49 AM PST

சிற்றின்பம்...பேரின்பம்......by  krishnaamma   டிவி இல் வேளுக்குடி கிருஷ்ணன் மாமாவின் கதை கேட்டுக்கொண்டிருந்தாள் வத்சலா.   "ஆச்சார்யர்களும் ஆழ்வார்களும் நமக்காக எத்தனையோ செய்து வைத்து விட்டு போய் இருக்கிறார்கள். நாம் அதில் கொஞ்சமாவது 'ருச்சி' வைக்கணும். என்றாவது ஒருநாள் , எப்ப என்று தெரியாது 'சட்' என்று நமக்கு மனத்தில் 'இதெல்லாம் இவ்வளவு தான்' என்ற நினைப்பு வந்துடும். 'அவன்' மட்டுமே சாஸ்வதம் என்றும் மத்ததெல்லாம் ஒன்றுமில்லை என்றும் துச்சமாய் நினைக்கத்தோன்றும். அது எப்போ யாருக்கு எப்படி ...

தோழி - ஒரு பக்க கதை

Posted: 04 Jan 2016 09:37 AM PST

- ''ஷர்மிளாவின் பால்ய சிநேகிதி ஸ்ருதி நீண்ட நாட்களுக்குப் பின் வீட்டுக்கு வந்திருந்தாள். அவள் பெண்ணுக்கு பூப்புனித நன்னீராட்டு விழாவாம். - பத்திரிகை வைக்க வந்திருந்தாள்.பார்க்க மிகவும் ஏழ்மையாகத் தெரிந்தாள். சாதாரண கைத்தறிப் புடவை, கழுத்தில் தாலியைத் தவிர வேறொன்றுமில்லை. - கைகளில் ரப்பர் வளையல். கண்கள் அலை பாய, இருப்புக் கொள்ளாமல் ஒருவித தவிப்புடன் ஏதோ முள்மேல் உட்கார்ந்த மாதிரி இருந்தாள். - இந்த வீட்டு ஆடம்பரம் அவளுக்கு அன்னியமாய் தெரிந்தது போலும். ரொம்ப நாட்களுக்கு அப்புறம் ...

வருஷப்பிறப்பு…! – ஒரு பக்க கதை

Posted: 04 Jan 2016 09:36 AM PST

- ''ஏங்க, நேரம் ஆச்சே! கிளினிக் போகலையா?'' – தன் கணவன் டாக்டர் செல்வமணியைக் கேட்டாள் அவள்.  செல்வமணி ஒரு சிறு நகரத்தில் மெடிக்கல் ஷாப்புக்குப் பக்கத்தில் கிளினிக் வைத்திருக்கிறார். சுற்றிலும் நிறைய கிராமங்கள் இருக்க, 'ராசியான டாக்டர்' என்ற பேரும் இருக்க, தினம் கும்பல் இருக்கும். ''இன்னிக்கு வருஷப் பிறப்பு. அதான் லீவு விட்டுடலாம்னு நினைக்கிறேன்!''''வருஷப் பிறப்பும் அதுவுமா போகாம இருக்கக்கூடாது. இன்னிக்கு போகலன்னா வருஷம் முழுக்க சரியா கேஸ் வராது, அதனால போயிட்டு வாங்க!''எதுவும் பதில் சொல்லாமல் ...

உதவி – ஒரு பக்க கதை

Posted: 04 Jan 2016 09:35 AM PST

சுந்தர் தன்னை நோக்கி நடந்து வருவதைப் பார்த்துவிட்டான் கணேஷ். 'ஐயோ, இவனா? அப்பப்போ ஆயிரம், ஐந்நூறுன்னு வாங்குவான். எதையும் திருப்பித் தரமாட்டான். பத்து வருஷமா தொல்லை இல்லாம இருந்தேன். இப்போ பார்த்தான்னா, அஞ்சாயிரம் கொடு, பத்தாயிரம் கொடுன்னு கேட்பான்' என மனதுக்குள் நினைத்தவன், சுந்தரைப் பார்க்காதது போல பைக்கைக் கிளப்பிக் கொண்டு வேகமாய் போனான் கணேஷ். – தன்னைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக்கொண்டு கிளம்புவது நண்பன் கணேஷ்தான் என்பதை அடையாளம் கண்டுகொண்டான் சுந்தர்.'இவனைப் பார்த்து பத்து ...

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?

Posted: 04 Jan 2016 09:31 AM PST

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்'  என்றுசொல்கிரோமே, அந்த பத்தும் என்னென்ன....சொல்லமுடியுமா ? புன்னகை

நெஞ்சம் மறப்பதில்லை!

Posted: 04 Jan 2016 09:23 AM PST

''பானு... நம்மோட ரயில் சினேகிதம், இந்தளவு, நமக்குள்ள நெருக்கத்தை ஏற்படுத்தும்ன்னு நான் நினைச்சுப் பாக்கல,'' என்றான் மோகன். ''நானும் தான்; ஒரு குழந்தைக்கு தாயாகி, கணவனை பறி கொடுத்த எனக்கு, எப்படி ஆறுதல் சொல்றதுன்னு என் அம்மா மனசொடிஞ்சு போனாங்க. தொடர்ந்து என் அப்பாவின் மறைவும் சேர்ந்து, அடுத்து என்ன செய்யப் போறோம்ங்கிற பரிதவிப்போடு, திருநெல்வேலியில் இருந்து நானும், என் அம்மாவும், என் ரெண்டு தங்கைகளோட ரயிலில் சென்னைக்கு வந்துட்டு இருக்கும் போது, எங்கள மறந்து சிறிது கண்ணசந்த வேளையில, எங்களோட பயண ...

இது போல் உங்களுக்கு நேர்ந்து உள்ளதா ?

Posted: 04 Jan 2016 09:22 AM PST

இது போல் உங்களுக்கு நேர்ந்து உள்ளதா ?  எப்போதும் நான் இட்ட பதிவுகளுக்கும் , பின்னூட்டமிட்ட பதிவுகளுக்கும் ,புதிய பின்னூட்டம் வரின் , எனது மெயிலில் செய்தி வரும்  இன்றும் எனக்கு ஒரு பழைய பதிவிற்கு ஒரு பின்னூட்டம் வந்ததாக  செய்தி வந்தது , eegarai.net/t125903-topic#1183222 ஜோக் சொல்லிட்டு போலாம்னு வந்தேன் . எனக்கு வந்த (மேலே உள்ள )link இல் கிளிக் பண்ணினால் nov 18இக்கு வந்த செய்தியை காண்பிக்கிறது  nov  18க்கு வந்த பின்னூட்டதிற்கு இன்று இந்த செய்தி வரவேண்டிய அவசியம் தெரியவில்லை அதவும் அந்த ...

நான் வரைந்த ஓவியங்கள்

Posted: 04 Jan 2016 09:21 AM PST

எவ்வளவு தைரியம் இந்த பெண்ணுக்கு?

Posted: 04 Jan 2016 09:15 AM PST

சர்வதேச அளவில் பிரபலமாக வேண்டும் என்றால், வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும்...' என்ற எண்ணம், பலருக்கும் ஏற்பட்டு விட்டது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லீ யங் என்ற பெண், பேன்ட் அணிவதற்கு பதில், ஜீன்ஸ் பேன்ட் கலரில், பெயின்ட் அடித்து, மெட்ரோ ரயிலில் பயணம் செய்து, சூப்பர் மார்க்கெட் மற்றும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்கள் என, அமெரிக்காவின் நியூயார்க் நகரையே, நாள் முழுவதும் வலம் வந்துள்ளார். ஆனால், யாருமே, அவர், பேன்ட் அணிவதற்கு பதிலாக, பெயின்ட் அடித்து வந்துள்ளார் என்பதை, கடைசி வரை கண்டுபிடிக்கவில்லை! தினமலர் 

மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் !

Posted: 04 Jan 2016 09:15 AM PST

[size=30][/size] மார்கழியின் அடையாளங்களான வீட்டு வாசலில் வண்ண கோலம் போடுவது மறைந்து வருகிறது. கிராமங்களிலும் இதே நிலை தொடருவதால், பாரம்பரியமான கோலமிடும் முறை காணாமல் போகும் சூழல் உருவாகியுள்ளது. மார்கழி என்றாலே உடல் சிலிர்க்கும் பனிப்பொழிவும், வீட்டு வாசலில் வண்ண கோலங்களும், பெருமாள் கோயிலில் பக்தி பாடல்களும் பெரும்பாலும் அனைவருக்குமே நினைவுக்கு வரும். இப்போது அவசர யுகத்தின் மாற்றத்தால், இவற்றில் பல மறைந்து வருகிறது. புவி வெப்பமடைந்து மார்கழி குளிரும் காணாமல் போய் விடுமோ என்ற அச்சமும் ...

10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை

Posted: 04 Jan 2016 09:08 AM PST

* பாலிபோனிக் & மோனோபோலிக் ரிங்டோங்களை SMS மூலமாக அனுப்பி அடிக்கடி போட்டுக் கேட்டோம். * பிக்சர் மெசேஜ் என்னும் கருப்பு வெள்ளை படங்களை மாற்றி மாற்றி அனுப்பி சிரித்துக் கொண்டோம். * GPRSல் டவுன்லோடு செய்பவர்களை ஆச்சரியத்துடன் பார்த்து மலைத்தோம். * கேமரா செல்போன் வைத்திருந்தவர்கள் பெரும்பணக்காரர்களாக இருந்தார்கள். * பலரது மொபைலில் ஏர்டெல் டோன்களை ரிங்டோன்களாக வைத்திருந்தார்கள். * மாதாமாதம் 200ரூ ரீசார்ஜ் செய்து வேலிடிட்டியை தக்க வைத்துக் கொண்டோம். * ரீசார்ஜ் செய்ய ...

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்...

Posted: 04 Jan 2016 09:00 AM PST

ஜனவரியின் ஜனனத்தில் மார்கழியின் மங்களத்தில்-கூடவே தை திங்களின் தகதகப்பில் புதுவருட புன்னகையில் பொங்கலின் பூரிப்பில் இருக்கும் எங்களுக்கு ஆளவரும் அரசியல் தலைவர்கள் ஊழலில்லா உத்தமர்களாய் இருக்க தந்து கடமையுடன் பணியாற்றி கையூட்டு பெறா அதிகாரிகளாய் இருக்க கண்டு நாங்கள் அவர்களை நன்றியுடன் போற்றி வேளாண்மை புரியும் விவசாயிகள் வாழ்வில் தாளாண்மை தந்து ஆடை நெய்யும் நெசவாளி வீட்டில் கோடை போய் குளுமை வீசி சத்தான வாழ்வை சகல உயிர்களும் பெற   நிலமகளின் பிள்ளைகளின் வாழ்வில் நிம்மதி ...

உலகின் மிகப்பெரிய ஏமாற்றம்,..!

Posted: 04 Jan 2016 08:57 AM PST

- உலகின் மிகப்பெரிய ஏமாற்றம், காபியில முக்கின பிஸ்கட் திரும்ப வராமல் காபில மூழ்குவதுதான்! - - பெரியசாமி மாதேஸ்வரன் - ----------------------------------------------- - 'இந்த பீப்சாங் என்னோட 16வது வயசுல பாடுனது'னு சொன்னா சிம்பு எஸ்கேப் ஆகிடலாம். பத்தாயிரம் பணமும் கொடுப்பாங்களாம்! - ------------------------------------------- - வெளிநாட்டுக்காரன் புதுசு புதுசா கிரகத்தைக் கண்டு புடிக்கிறான். இங்க என்னடான்னா பைக் துடைக்க வச்சிருந்த பழைய துணியை ஆட்டைய போட்ருக்காய்ங்க... எப்புடி வல்லரசு ...

ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா

Posted: 04 Jan 2016 08:54 AM PST

- அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் குட்டிக்கதை கூறி ஸ்டாலினையும், திமுகவையும் முதல்வர் ஜெயலலிதா விமர்சித்துள்ளார். - சென்னை திருவான்மியூரில் இன்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பேசியபோது, ''சட்டமன்றத்துக்கான தேர்தல் நெருங்குவதால் திமுக பல பொய்களை கட்டவிழ்த்துவிடும். எனவே, அதிமுக அமைச்சர்கள் திமுக-வின் பொய்களை தோலுரித்துக் காட்ட மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். இது போன்று எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் பொய்களுக்கு அமைச்சர்கள் ...

என்னுடைய கதைகளின் PDF இங்கே ! :) - Krishnaamma :)

Posted: 04 Jan 2016 08:30 AM PST

என்னுடைய கதைகளின் PDF  இங்கே ! புன்னகை

மனிதாபிமானம் !  

DOWNLOAD

டவுன்லோட் செய்து படித்து மகிழுங்கள் !

காந்தி ஓர் இதழியலாளர் ! நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Posted: 04 Jan 2016 08:24 AM PST

காந்தி ஓர் இதழியலாளர் ! நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு : காந்தி நினைவு அருங்காட்சியகம், மதுரை. விலை : ரூ. 50 பக்கங்கள் : 80 ***** இனிய நண்பர் மூத்த பத்திரைகையாளர் ப. திருமலை அவர்கள் எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பவர். அவருக்கு உடல்நலம் ஒத்துழைக்காவிட்டாலும் அதையும் மீறி ஓய்வுக்கு ஓய்வு தந்து உழைத்து வருபவர். காந்தி அருங்காட்சியகத்தில் ஆற்றிய அரிய உரையை நூலாக்கி உள்ளார். 'காந்தி ஓர் இதழியலாளர்' ...

தாய்மை - ஒரு பக்க கதை

Posted: 04 Jan 2016 08:20 AM PST

- ''சித்ரா, ஈவினிங் ரெடியா இரு! ஆஸ்பத்திரிக்குப் போகணும்!'' - செல்வம் சொன்னதும் திடுக்கிட்டாள் சித்ரா.''எதுக்குங்க... டெஸ்ட் பண்றதுக்குத்தானே..?'' - பதட்டத்துடன் கேட்டாள். - ''இல்ல... அபார்ஷன் பண்றதுக்கு!'' சித்ராவின் விழிகள் துடித்தன. - மாலை செல்வம் வீட்டுக்கு வந்ததும், ''அப்பா...'' என்று ஓடி வந்து கட்டிக்கொண்டான் ஐந்து வயது மகன் ராஜேஷ். அவன் முகத்தில் ஆயிரம் நிலவின் மலர்ச்சி. - ''என்ன ராஜேஷ், ரொம்ப சந்தோஷமாயிருக்கே... என்ன விஷயம்?'' ''அம்மாவுக்கு பாப்பா பொறக்கப் போகுதாம்'' ...

தலைமுறை இடைவெளி

Posted: 04 Jan 2016 08:09 AM PST

தலைமுறை இடைவெளி கருக்கலிலே கண்விழித்து தெருவினிலே கோலமிட்டு   பருவமகள் புத்தாண்டை வருகவென வரவேற்பாள் -  அன்று கைப்பேசியில் கண்விழித்து முகநூலில் முத்தமிட்டு வாட்ஸ்ஹாப்பில் புத்தாண்டை வருகவென வரவேற்பாள் -  இன்று பருவமதன் பயன்பெறவே திருமணமும் செய்துகொண்டு இருவர்நாம் ஒருவராகி பெருமையுடன் வாழ்ந்திடுவோம் -  அன்று பிடித்திருந்தால் ப்ரெண்டாக பிரியாமல் இணைந்திடுவோம் முடிச்சின்றி தம்பதியாய் முழுமையாய் வாழ்ந்திடுவோம் -  இன்று புத்தாடைதனை உடுத்தி சிற்றாடைதனை திருத்தி ...

விவசாயின் புலம்பல்

Posted: 04 Jan 2016 07:56 AM PST

ஆடி மாசத்த பார்த்து  ஆடிப்போனாலும்  கையில் இருக்கும்  காசுக்கு  காடு கழனில  கை ஊன்றி  கால் ஊன்றி  இருக்கும் நெல்மணிகளை நிலத்தில் ஊன்றி  அப்பாடா என்று  ஆசுவாசப்படுத்தி உட்கார்ந்தா!!  காவிரியும் கைவிரிச்சா  விவசாயி பாடு வெறுமை தான்!  மனசு வெ(வ)றுமைதான்!  கதிர் பிடிச்சா  களை எடுத்து  வானத்தை பார்த்தா  கறுத்த மேகம்  பொழிந்தால் பரவாயில்லையே!!  ஆனால்  கறுத்த மேகம்  வாய்க்கால் வரப்பையும்  வயலையும் வாரிக் கொண்டு  செல்லுதே!  விவசாயி வயத்துல  ஈரத்துணி காயுதே!!  காடு கழனில  கதிர் ...

குறுந்தொகை.....தொடர் பதிவு !

Posted: 04 Jan 2016 07:50 AM PST

அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
                கோப்பெருஞ்சோழன்

முச்சந்தியில் நிற்கும் மூன்று வண்ணக்காரன் - விடுகதைகள்

Posted: 04 Jan 2016 07:45 AM PST

1. முச்சந்தியில் நிற்கும் மூன்று வண்ணக்காரன் யார்? 2. மாமியாரும் மருமகளும் உருண்டு உருண்டு விளையாடுகிறார்கள்... யார் இவர்கள்? 3. குண்டு சட்டிக்குள் முத்தும் முத்தும் குதித்துக் கூத்தாட வெள்ளையர்கள் புறப்பட...? 4. சின்னப் பெட்டிக்குள் வசிப்பவன், வெளியே வந்தவனை சீண்டினால் பிரகாசிப்பான்! 5. இவனும் அவனைப் போலத்தான்... சின்னப் பெட்டிக்குள்தான் வாழ்கிறான். ஆனால் உலகமெல்லாம் காட்டுவான் ? 6. ஏறுவான், இறங்குவான் பயிர் செழிக்க உதவுவான்... 7. இரண்டு பேர் முன்னாடி போக, இரண்டு பேர் ...

உடைந்து போன தந்தை

Posted: 04 Jan 2016 07:38 AM PST

மகன் : "அப்பா" நா ஒரு கேள்வி கேட்கவா ? தந்தை : கண்டிப்பா! என்ன கேளு? மகன் : 1 மணி நேரத்திற்கு எவ்வளவு சம்பாரிப்பிங்க ? தந்தை : அது உனக்கு தேவை இல்லாதே விஷயம்! நீ எதுக்கு இது எல்லாம் கேக்குறே ? மகன் : சும்மா தெரிஞ்சிக்கத்தான்! சொல்லுப்பா தந்தை : உனக்கு தெரிஞ்சே ஆகணும்னா சொல்றேன்! மணிக்கு 100 ரூபாய் சம்பாரிப்பேன் சராசரியா. மகன் : "ஓ" ! (தலைகுனிந்தவாறே) அப்பா நா அதுல 50 ருபாய் எடுத்துக்கவா? தந்தைக்கு கோபம் வந்தது. தந்தை : "நீ இவளோ பணம் கேக்குறது ஒரு நாய் பொம்மையை வாங்கி விளையாடத்தானே? ...

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ................காக்காயும் ராணியின் வைர மாலையும் !

Posted: 04 Jan 2016 07:33 AM PST

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............ இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் இந்த ...

மனைவியின் அன்பைப் பெற 10 விதிகள்...

Posted: 04 Jan 2016 07:06 AM PST

1. மதியுங்கள் வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள் முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குவியுங்கள். 2. கனவுகளைப் பின்பற்றட்டும், உங்களை அல்ல இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள். 3. எல்லை தாண்டிச் சிந்தியுங்கள் மனைவியை சமாதானப்படுத்துவதற்கான ...

கனவு பலனை கூற முடியுமா?

Posted: 04 Jan 2016 06:42 AM PST

நேற்று இரவு ஓர் எருமை துரத்துவது போல் கனவு கண்டன். இதன் பலனை கூற முடியுமா?
கூறினால் மனம் கொஞ்சம் நிம்மதியாகும்.
மிக்க நன்றி.

வைப்பு நிதியின் அவசியம்

Posted: 04 Jan 2016 06:20 AM PST

வைப்பு நிதியின் அவசியம் கோவாலு வர வர நம்ம தலிவரு ஏன் வைப்பு நிதியை பத்தி ரொம்ப பேசறாரு கூட்டத்துலன்னு தெரியுமா? அதான்னே - வருங்காலத்துக்கு உதவியா இருக்குமேன்னு தான் தலிவரு நம்ம தொண்டர்களுக்கு வைப்பு நிதியைப் பத்தி அவரு கணக்கா ஜோடா கூட குடிக்காம கத்தினு இருக்காரு. போடா மாக்கான் அப்டி இல்லடா. என்னன்னே சொல்றீங்க? அது ஒன்னுமில்லடா நம்ம ஊர்ல ரெண்டாந்தாரம், மூனாந்தாரம் இதெல்லாம் என்ன சொல்வோம்? கீப்புன்னு சொல்லுவோம்ன்னே. அதுக்கு தமிழ்ல வச்சுக்கறதுன்னு அர்த்தம், அப்டீன்னா வைப்பு/ ...

Unable to access tamilnesan1981.blogspot.in

Posted: 04 Jan 2016 05:09 AM PST

என்னால் தற்போது தமிழ்நேசன்1981.blogspot.in தளத்தில் நுழைய முடியவில்லை. blogger - ஐ அணுகவும் என்று வருகிறது. இதற்கு உதவி செய்ய முடியுமா?

விந்தையான சிந்தனைகள் ......

Posted: 04 Jan 2016 03:51 AM PST

  விந்தையான சிந்தனைகள் நீங்கள் இழுக்கின்ற இழுவைக்கு இழுவண்டிகூட அசையாது போகலாம் நாங்கள் எப்பொழுதும் இசைகிறோம் உங்கள் சரீரத்தை நாங்கள் சுமப்பதை மறந்துவிட்டு மனமில்லாமல் நீங்கள் எங்களை சுமப்பதாக எண்ணி சில நேரம் அலுத்துகொள்கிறீர்கள் அனைத்தையும் கைகளால் அறுக்க தெரிந்த உங்களுக்கு எங்கள் காதுகளை மட்டும் கால்களால் அறுத்து விடுகிறீர்கள் முதல் சந்திப்பில் நாங்கள் முத்தமிட்டதை கடித்துவிட்டதாக  கூறி கடிந்துகொள்கறீர்கள் உங்களை அழகுபடுத்திக்கொள்ள எங்களை மை தீட்டி ...

ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தாருங்கள்

Posted: 04 Jan 2016 03:16 AM PST

வணக்கம்,

தன் நிலைமை தன்னைவிட சிறிதும் குறைந்தாலும் ...
தன் நிழல் கூட தன்னை மதிக்காது.....

மேற்கூறிய பொன்மொழியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தாருங்கள்.
கூகுள் மொழிபெயர்ப்பில் சரியாக மொழி பெயர்க்கமுடியவில்லை

உதவுங்கள் ....

அது என்ன வரிக்கழுதை?

Posted: 04 Jan 2016 03:13 AM PST

- கிராமங்களில் வீட்டில் வளர்க்கும் கழுதைகளைப் பார்த்திருப்பீர்கள். பொதி சுமக்கும் கோவேறு கழுதைகளைப் பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள். காட்டுக் கழுதைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆப்ரிக்காவில் காட்டுக் கழுதைகள் நிறைய உள்ளன. இவற்றை 'சோமாலியக் கழுதைகள்' என்று சொல்கிறார்கள். பார்ப்பதற்குப் பழுப்பும் வெள்ளையும் கலந்த வழக்கமான கழுதைகள் போலவே தெரியும். ஆனால், வரிக்குதிரைகளைப் போல இந்தக் கழுதைகளின் கால்களில் காணப்படும் அழகான வரிகள் இவற்றை வித்தியாசப்படுத்திக் காட்டும். சோமாலியா, எத்தியோப்பியா, ...

விழி இழந்தோரின் விளக்கு லூயி பிரேயில் பிறந்த தினம் இன்று

Posted: 04 Jan 2016 02:12 AM PST

லூயி பிரெயில் விழி இழந்தோரின் விளக்கு 'கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.' 'எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்.' ஆகவே கல்வி ஒரு அரிய பொக்கிஷம். ஆனால் கல்வியை கண்போல் கருதாத ஆசாமிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பதுபோல் எழுதப் படிக்க தெரிந்தால்தான் கல்வி கற்றுக்கொள்ள முடியும் என்பது உண்மை. கல்வி என்ற 'சுவரே' இல்லாவிட்டால் 'அறிவு' என்ற சித்திரத்தை தீட்டவே முடியாது. விழி இழந்தோர், எழுத்துக்களைப் பற்றி ஒன்றுமே அறியாதவர்களாக பல நூற்றாண்டுகளை கழித்தனர். ஆனால் 19-ஆம் ...

மென்பொருள் நேரம் நிறுத்தி Time Stopper

Posted: 04 Jan 2016 01:55 AM PST

உங்க்கள் கணினியில் நிறுவப்பட்ட Trial  version    மென்பொருட்களின் கால நேரக் கணிப்பை நிறுத்தி தொடர்ந்து பாவிக்க
http://www.timestopper.net/


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™