Tamil News | Online Tamil News |
- கணினி வழி கற்பித்தலில் கலக்குது கன்னியாகுமரி
- கேரளா செல்கிறது தமிழக இலவச வேட்டி, சேலைகள்: அதிகாரிகள் குளறுபடியால் வீணாகுது அரசு திட்டம்
- முடங்கியது 3 லட்சம் மரக்கன்றுகள் திட்டம்: சென்னை பசுமையாவது எப்போது?
- எந்த நாட்டிலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்: அதிபர் ஒபாமா அறிவிப்பு
- தமிழக சட்டமேலவை ரத்து சட்டம் கிடப்பில் போட்டது மத்திய அரசு
- சட்டசபை தேர்தல் முடிவு கருத்துக்கணிப்புகள் சரியா? உளவுத்துறை போலீசார் சர்வே
- திருவாரூரில் கருணாநிதி மீண்டும் போட்டி? விருப்ப மனு கொடுத்த கட்சியினர்
- தேர்தலில் அ.தி.மு.க., தனித்து போட்டி? ஜெ., அறிவிப்பால் கட்சிகள் கலக்கம்
- 'கால் டிராப்' பிரச்னையை தீர்க்காத துறை செயலர்தூக்கியடிப்பு: சொன்னதை செய்தே விட்டார் பிரதமர் மோடி
- காஞ்சிபுரத்தில் தி.மு.க., - தே.மு.தி.க., பலப்பரீட்சை பிப்., 20, 21 தேதிகளில் போட்டி மாநாடு
- மாணவர்களுக்கு ஆதரவாக நள்ளிரவில் பல்கலை. வளாகத்தில் ராகுல் தர்ணா
| கணினி வழி கற்பித்தலில் கலக்குது கன்னியாகுமரி Posted: 29 Jan 2016 08:43 AM PST மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில், கணினி வழி கற்பித்தல் மூலம், கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், அரசு பள்ளிகளை உற்சாகமடைய செய்துள்ளன. மாணவர்களின் பொதுத்தேர்வு தேர்ச்சி, மாநில, 'ரேங்க்' எடுப்பது போன்றவற்றில், அரசு பள்ளிகள் பின்தங்கி இருப்பது வழக்கம். அதிகாரிகளின் நிர்வாக மேலாண்மையிலும் பல குறைபாடுகள் உள்ளதாக புகார்கள் உள்ளன. இந்த குறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, நவீன தொழில் நுட்பத்தையும், 'டிஜிட்டல் இந்தியா'வின் நோக்கத்தை அடையும் ... |
| கேரளா செல்கிறது தமிழக இலவச வேட்டி, சேலைகள்: அதிகாரிகள் குளறுபடியால் வீணாகுது அரசு திட்டம் Posted: 29 Jan 2016 10:41 AM PST விருதுநகர்: தை பொங்கலுக்காக தமிழக அரசின் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டிய வேட்டி,சேலைகள் பதுக்கப்பட்டு, புரோக்கர்கள் மூலம் வெளி மார்க்கெட்டில் விற்கப்படும் நிலையில், கேரளாவிற்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.தமிழக அரசு சார்பில் தைப் பொங்கலையொட்டி அரிசி வாங்கும் அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது.இவைகள் தாலுகா வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு ரேஷன்கடைகள் மூலம் மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு ஒரு கிராமத்தில் 1000 பேருக்கு வழங்கப்பட வேண்டிய வேட்டி, சேலைகளை 600 பேருக்கு ... |
| முடங்கியது 3 லட்சம் மரக்கன்றுகள் திட்டம்: சென்னை பசுமையாவது எப்போது? Posted: 29 Jan 2016 10:47 AM PST சென்னையின் பசுமை பரப்பை அதிகரிக்க, மூன்று லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டம் முழுமை பெறாமல் முடங்கிப்போயுள்ளது.சென்னையில் பசுமை பரப்பு, 7 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. அதனால், சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், பசுமை பரப்பை அதிகரிக்க அரசு உத்தரவிட்டது. ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சென்னையில் பசுமை பரப்பு குறைவாக உள்ள, 340 இடங்களை கண்டறிந்து, மூன்று லட்சம் மரக்கன்றுகளை நட வனத்துறை பரிந்துரை செய்தது.ஆனால், இத்திட்டம்பரிந்துரைக்கப்பட்டு, ஓராண்டாகியும் முழுமையடையாமல் உள்ளது. இதுப்பற்றி வனத்துறையினர் கூறும் போது, 'போதிய நிதி ... |
| எந்த நாட்டிலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்: அதிபர் ஒபாமா அறிவிப்பு Posted: 29 Jan 2016 10:53 AM PST வாஷிங்டன்: ''ஐ.எஸ்., பயங்கரவாதிகள் எந்த நாட்டில் ஒளிந்திருந்தாலும் விடமாட்டோம்; நாடு புகுந்து அழிப்போம்,'' என, அமெரிக்க அதிபர் ஒபாமா, நேற்று சூளுரைத்து உள்ளார்.வாஷிங்டனில், ஒபாமா தலைமையில், தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த, ஒபாமா அப்போது உத்தரவிட்டார். அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப், 'அமெரிக்காவில் முஸ்லிம்கள் நுழைய அனுமதிக்கக் கூடாது' என, தெரிவித்துஇருந்தார். அதை கண்டிக்கும் விதத்திலும் அதிபர் ஒபாமாவின் பேச்சு ... |
| தமிழக சட்டமேலவை ரத்து சட்டம் கிடப்பில் போட்டது மத்திய அரசு Posted: 29 Jan 2016 10:55 AM PST புதுடில்லி: தமிழகத்தில், சட்ட மேலவையை ரத்து செய்யும் சட்டம் உள்ளிட்ட, மூன்று சட்டங்களை, தற்காலிகமாக கிடப்பில் போட, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைகளுக்கு இடையிலான குழு கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டது.தமிழகத்தில் சட்ட மேலவையை ஏற்படுத்துவதற்காக, முந்தைய, தி.மு.க., ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை, ரத்து செய்யும் பொருட்டு, அ.தி.மு.க., அரசு, புதிய சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டிய நிலையில், தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் ... |
| சட்டசபை தேர்தல் முடிவு கருத்துக்கணிப்புகள் சரியா? உளவுத்துறை போலீசார் சர்வே Posted: 29 Jan 2016 10:57 AM PST கம்பம்: 'அவசர அசைன்மென்ட்' என்ற பெயரில் தமிழக அரசு உளவுத்துறை போலீசிற்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்புக்கள் சரியா அல்லது திட்டமிட்டு தயாரிக்கப்பட்டதா என்பதை கண்டறிய மக்களிடம் 'சர்வே' செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. கூட்டணி வியூகங்கள் வகுக்கப்படுகின்றன. கட்சிகளின் சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. இத்தேர்தலில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் போன்ற விபரங்களை உள்ளடக்கி கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது . இவை ... |
| திருவாரூரில் கருணாநிதி மீண்டும் போட்டி? விருப்ப மனு கொடுத்த கட்சியினர் Posted: 29 Jan 2016 11:07 AM PST தி.மு.க., தலைவர் கருணாநிதி, திருவாரூர் சட்டசபை தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. திருவாரூரில் போட்டியிட, அவரது கையெழுத்து போட்ட விருப்ப மனுவை, கட்சியினர், நேற்று அறிவாலயத்தில் அளித்தனர். தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள், ஜன., 24ம் தேதியில் இருந்து பெறப்படுகின்றன. சென்னை துறைமுகம், அண்ணா நகர் உள்ளிட்ட பல தொகுதிகளில், கருணாநிதி போட்டியிட வேண்டும் என, அக்கட்சியினர் மனு தாக்கல் செய்தனர். இதற்கிடையில், திருவாரூர் சென்றிருந்த கருணாநிதி, 'மக்கள் விருப்பப்பட்டால், திருவாரூரிலேயே மீண்டும் போட்டியிடுவேன்' என, கூறியிருந்தார். ... |
| தேர்தலில் அ.தி.மு.க., தனித்து போட்டி? ஜெ., அறிவிப்பால் கட்சிகள் கலக்கம் Posted: 29 Jan 2016 11:16 AM PST தேர்தல் பணியாற்றும்படி, கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், '234 தொகுதிகளிலும், அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும்' எனக் கூறியிருப்பது, அ.தி.மு.க., கூட்டணி கனவில் மிதக்கும் கட்சிகளுக்கு, கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.கடந்த லோக்சபா தேர்தலின்போது, அ.தி.மு.க., தனித்து போட்டியிடும் என, முதல் ஆளாக, முதல்வர் ஜெயலலிதா, கட்சி பொதுக்குழுவில் அறிவித்தார்.ஆனால், டிச., 31ம் தேதி நடந்த பொதுக் குழுவில், வரும் சட்டசபை தேர்தலுக்கு தனித்து போட்டி என, ஜெயலலிதா அறிவிக்கவில்லை. 'தேர்தல் நெருக்கத்தில், சூழ்நிலைக்கு ஏற்ப, சரியான முடிவை ... |
| 'கால் டிராப்' பிரச்னையை தீர்க்காத துறை செயலர்தூக்கியடிப்பு: சொன்னதை செய்தே விட்டார் பிரதமர் மோடி Posted: 29 Jan 2016 11:18 AM PST புதுடில்லி: சில தினங்களுக்கு முன், 'பணியில் சிறப்பாக செயல்படாத அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்' என, எச்சரித்த பிரதமர் மோடி, சொன்ன படியே அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். 'கால் டிராப்' எனப்படும், மொபைல் போன் அழைப்பு அவ்வப்போது துண்டிக்கப்படும் பிரச்னையை தீர்க்காத, தொலைத் தொடர்புத் துறை செயலர் உட்பட, பல துறைகளின் செயலர்களை இடம் மாற்றியுள்ளார்.'இது, முதற்கட்ட நடவடிக்கை தான், புதிய பொறுப்பிலும், அந்த அதிகாரிகள் நன்றாக செயல்படவில்லை என்றால், அடுத்தும் கடினமான நடவடிக்கையை அவர்கள் சந்திக்க வேண்டி வரும்' என, பிரதமர் அலுவலக மூத்த அதிகாரி ஒருவர் ... |
| காஞ்சிபுரத்தில் தி.மு.க., - தே.மு.தி.க., பலப்பரீட்சை பிப்., 20, 21 தேதிகளில் போட்டி மாநாடு Posted: 29 Jan 2016 11:21 AM PST தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடாகிவிட்டதால், கட்சிகள் போட்டி போட்டு மாநாடுகளை நடத்த துவங்கி உள்ளன. காஞ்சிபுரத்தில், பிப்., 20 மற்றும், 21ல், அடுத்தடுத்து மாநாடுகளை நடத்தி பலப்பரீட்சையில் ஈடுபட, தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் மாநாடு நடத்தி, தொண்டர்கள் கருத்து கேட்டு, அதன்படி கூட்டணி குறித்து முடிவெடுப்பது, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் வாடிக்கை. வரும் சட்டசபை தேர்தலுக்கும் அப்படியே செய்யப் போவதாக, சமீபத்தில் பெரம்பலுாரில் நடந்த கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் அவர் ... |
| மாணவர்களுக்கு ஆதரவாக நள்ளிரவில் பல்கலை. வளாகத்தில் ராகுல் தர்ணா Posted: 29 Jan 2016 12:38 PM PST ஐதராபாத்: ஐதராபாத் பல்கலை. மாணவர் தற்கொலை விவகாரத்தில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக காங். துணை தலைவர் ராகுல், நள்ளிரவில் போராட்டத்தில் குதித்து பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார்.தெலுங்கானா மாநிலத்தில்தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது அக்கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் முதல்வராக உள்ளார். இம்மாநிலத் தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஐதராபாத் மத்திய பல்கலையில், குண்டூரைச் சேர்ந்த தலித் மாணவர் ரோஹித் வெமுலா, ஆராய்ச்சிப் படிப்பு படித்து வந்தார். கடந்தாண்டு, ஏ.பி.வி.பி., எனப்படும், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர்களுடன், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 30,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |