Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அரசு தகவலை திருடி தருவோருக்கு ரூ.7 லட்சம்: ஐ.எஸ்., தாராளம்

Posted: 26 Jan 2016 07:40 AM PST

புதுடில்லி: இந்திய அரசின் ரகசியத் தகவல்களை, திருடித் தருவோருக்கு, ஏழு லட்சம் ரூபாய் வரை தருவதாக, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு ஆசை காட்டி வருவது தெரியவந்துள்ளது. ஈராக், சிரியா போன்ற நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் கால் பதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.இந்திய அரசின் ரகசியங்களை, கம்ப்யூட்டரில் புகுந்து திருடி, 'ஹேக்கிங்' செய்து தருவோருக்கு, ஒவ்வொரு தகவலுக்கும், ஏழு லட்சம் ரூபாய் வரை தருவதாக ஐ.எஸ்., அமைப்பு ஆசை காட்டி வருகிறது.சைபர் குற்றங்களை கண்டுபிடிப்பதில் நிபுணரான கிஸ்லே ...

இந்தியாவை சுற்றி வளைக்க தொடர்ந்து முயற்சிக்கும் சீனா

Posted: 26 Jan 2016 09:12 AM PST

இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவை சுற்றி வளைக்கும் வகையில் 'ஆபரேஷன் முத்துமாலை' என்ற திட்டத்தை செயல்படுத்த சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இலங்கையில் விடுதலை புலிகளுடனான இறுதிப் போர் முடிந்த நிலையில் அப்போதைய அதிபர் ராஜபக் ஷே ஹம்பன்தோட்டா துறைமுக மற்றும் விமான நிலைய கட்டுமான பணிகளை சீனாவிடம் ஒப்படைத்தார். இதற்கு 'ஆபரேஷன் முத்துமாலை' என பெயரிடப்பட்டது.அடுத்து வந்த சிறிசேனா அரசு, சீனாவின் மெல்லக் கொல்லும் பொருளாதார திட்டத்தை சிறிது புரிந்து கொண்டது. ஹம்பன்தோட்டா துறைமுக பணிகள் முடிந்த நிலையில் சீனாவை சற்று தள்ளி வைத்தது. சில ...

'என்னை அரசியலுக்கு கூப்பிடாதீங்க சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வாங்க!' : சகாயம் வேண்டுகோள்

Posted: 26 Jan 2016 09:30 AM PST

'அரசியலில் நேர்மையை கொண்டு வர விரும்புவோர், தங்கள் பணியை, சமூகத்தில் இருந்து துவக்க வேண்டும். துாய, நேர்மையான சமுதாயத்தை உருவாக்கினால், நேர்மையான சமூகம்,நேர்மையான அரசியலை எளிதாக கொண்டு வரலாம்' என, ஐ.ஏ.ஏஸ்., அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையுடன், தமிழகத்தின் பல பகுதிகளில், இளைஞர்கள் பேரணி நடத்தி வருகின்றனர். சமூக வலை தளங்களிலும், சகாயத்திற்கு ஆதரவான பிரசாரங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், சகாயம் மவுனம் கலைத்துள்ளார். 'வாட்ஸ் ஆப்' பில் சகாயம் ...

'சுயநலம் இல்லாவிட்டால் புகழ் கிடைக்கும்'

Posted: 26 Jan 2016 09:43 AM PST

திருவாரூர்: ''மனிதன் சுயநலம் கருதாமல் இருந்தால், வாழ்க்கையில் பெருமையும், புகழும் வந்தடையும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.திருவாரூர், வ.சோ.ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில், சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பள்ளி கட்டடத்தை, தி.மு.க., தலைவரும், தொகுதி எம்.எல்.ஏ.,வுமான கருணாநிதி நேற்று திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: மாணவர்களின் அமைதியையும், ஆசிரியர்களின் ஆர்வத்தையும் பார்க்கும்போது,நான் படித்த இந்த பள்ளிக்கு, மீண்டும் ஒருமுறை வரவேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது. மாணவ, மாணவியர், ...

குற்றமற்றவராம் ராபர்ட் வாத்ரா!

Posted: 26 Jan 2016 09:44 AM PST

புதுடில்லி: அரசு நிலத்தை, தனியார் நிறுவனத்துக்கு விற்றதாக, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ரா மீது தொடரப்பட்ட வழக்கில், 'அவர், குற்றமற்றவர்' என, போலீசார் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் வசுந்தரா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிகானிரில், அரசு நிலத்தை, தனியார் நிறுவனத்துக்கு விற்றதாக, ராபர்ட் வாத்ரா மீது, 2014ல், வழக்கு தொடரப்பட்டது. போலி ஆவணங்கள் மூலம், இந்த மோசடி நடந்ததாககூறப்பட்டது. இது குறித்து, ராஜஸ்தான் மாநில போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை அறிக்கையில், ' ராபர்ட் வாத்ரா, யாரையும் ...

ரேஷன் கடைகளில் ஊழியர் பற்றாக்குறை அரிசி, பருப்பு வாங்க காத்திருக்கும் மக்கள்

Posted: 26 Jan 2016 10:02 AM PST

ரேஷன் கடைகளில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையால், உணவு பொருட்கள் வாங்க, பொது மக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு எடை போட்டு வழங்கவும், ரசீது கொடுக்கவும், ஒரு கடைக்கு விற்பனையாளர், எடையாளர் என, இரண்டு ஊழியர் இருக்க வேண்டும். ஆனால், பல ரேஷன் கடைகளில், ஒரு ஊழியர் மட்டும் உள்ளதால், அவர் ஒருவரே, இரண்டு வேலைகளையும் செய்ய வேண்டி
உள்ளது. இதனால், உணவு பொருட்களை வாங்க, மக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலைஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்க தலைவர் ...

ஆசிரியர்கள் போராட்டத்தால் வகுப்புகள் முடங்கும் அபாயம்

Posted: 26 Jan 2016 10:29 AM PST

ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழுவான, 'ஜாக்டோ' பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதனால், ஒரு வாரம் வரை வகுப்புகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் சங்க கூட்டுக் குழுவான ஜாக்டோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன., 30, 31 மற்றும் பிப்., 1ல் மாவட்ட தலைநகரங்களில், ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இதையடுத்து, அனைத்து பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை நேரில் சந்தித்து, போராட்டம் குறித்து பிரசாரம் செய்யவும் ஜாக்டோ அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர். இதனால், பல பள்ளிகளில் ஆசிரியர்கள் ...

மக்கள் நல கூட்டணிக்கு த.மா.கா., தலைவர் வாசன் டாட்டா: தி.மு.க., அல்லது அ.தி.மு.க.,வுடன் சேரப் போவதாக சூசகம்

Posted: 26 Jan 2016 10:41 AM PST

அணி சேர அழைப்பு விடுத்து, எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள் நலக் கூட்டணிக்கு, த.மா.கா., தலைவர் வாசன், 'டாட்டா' காட்டி உள்ளார். பிரதான கட்சிகளான, தி.மு.க., அல்லது அ.தி.மு.க.,வுடன் சேரப் போவதாக, சூசகமாக தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு மாற்றாக, மக்கள் நலக் கூட்டணியை, ம.தி.மு.க., கம்யூனிஸ்ட்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் இணைந்து உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணியில், தே.மு.தி.க., - த.மா.கா.,வை இடம்பெற வைக்க, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் விரும்பினர். இதற்காக, விஜயகாந்தையும், வாசனையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன், ...

ஒவ்வொரு ஆண்டும் இவ்வளவு பத்ம விருது அவசியமா: அரசியல் கலப்பு இருப்பதால் எழுகிறது கேள்வி

Posted: 26 Jan 2016 11:21 AM PST

புதுடில்லி: மத்தியில் ஆளும், பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு, முந்தைய காங்கிரஸ் திட்டங்கள் பலவற்றை பின்பற்றுவது போல, பத்ம விருதுகள் விவகாரத்திலும், காங்கிரசை, 'காப்பி'யடித்துள்ளது. தங்களுக்கு வேண்டியவர்களுக்கும், சங் பரிவார் ஆதரவாளர்கள் பலருக்கும் விருது வழங்கி, கவுரவித்துள்ளது. விருது பட்டியலில் அரசியல் கலப்பு அதிகம் காணப்படுவதால், ஆண்டுக்கு ஆண்டு, இவ்வளவு விருதுகள் அவசியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடுநிலைக்கு ரொம்ப கஷ்டம்: 'நாங்க நடுநிலையானவங்க தெரியுமா...' என காட்டுவதற்காக, மத்திய ஆட்சியாளர்கள் கொஞ்சம் சிரமப்பட்டுள்ளனர் என்று தான் ...

இந்திய சுதந்திரம் அடைய நேதாஜிதான் காரணம்

Posted: 26 Jan 2016 11:59 AM PST

புதுடில்லி: மறைந்த சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்து எழுதப்பட்ட புத்தகத்தில், இந்தியா விடுதலை பெற, அவர்தான் காரணம் என கூறப்பட்டுள்ளது.

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்களை, பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் வெளியிட்டார். இவற்றில் உள்ள விஷயங்கள் குறித்து, பா.ஜ., - காங்., கட்சியினரிடையே, கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், இந்திய ராணுவத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜி.டி.பக் ஷி, நேதாஜி குறித்து எழுதிய புத்தகம், விரைவில் வெளியாக உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 1956ல், கோல்கட்டா ...

ஜனாதிபதி விருது எங்கே? விமானிகள் குடும்பத்தினர் ஏமாற்றம்

Posted: 26 Jan 2016 12:22 PM PST

தமிழகத்தில், விமான விபத்தில் உயிரிழந்த கடலோர காவல் படை வீரர்களின் பெயர்கள், ஜனாதிபதி விருது பட்டியலில் இல்லாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.தமிழக காவல் துறை ஏற்பாடு செய்த, தீவிரவாத தடுப்பு ஒத்திகைப் பணிக்காக, 2015 ஜூன், 8ல், சென்னையில் இருந்து சென்ற கடலோர காவல் படை விமானம் விபத்துக்குள்ளானது. இதில், துணை கமாண்டன்ட்கள் வித்யாசாகர், சுபாஷ் சுரேஷ் மற்றும் துணை விமானி எம்.கே.சோனி ஆகியோர் உயிரிழந்தனர்.சிறப்பான சேவையாற்றிய பாதுகாப்பு படை வீரர்களுக்கான ஜனாதிபதி விருது பட்டியல், நேற்று முன்தினம் வெளியானது. அதில், கடலோர காவல் படை வீரர்களின் பெயர் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™