Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


திருவாரூரில் மீண்டும் போட்டி: 93 வயது கருணாநிதி ஆசை

Posted: 25 Jan 2016 09:38 AM PST

திருவாரூர்: ''மக்கள் விரும்பினால், திருவாரூர் சட்டசபை தொகுதியில், மீண்டும் போட்டியிடுவேன்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி,93, கூறினார்.

திருவாரூரில், தி.மு.க., சார்பில் நடந்த, மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த கருணாநிதி, நேற்று, காட்டூரில் உள்ள தன் தாயார் அஞ்சுகம் நினைவிடத்தில், மலர் அஞ்சலி செலுத்தினார். பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:மக்கள் விரும்பினால், திருவாரூர் சட்டசபை தொகுதியில், நான் மீண்டும் போட்டியிடுவேன். சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.கோவில்
...

'100க்கு 47 பேர் 'சரக்கு' அடிக்கின்றனர்'

Posted: 25 Jan 2016 09:43 AM PST

தமிழகத்தில், 47 சதவீதம் பேர் மது பழக்கத்திற்கு ஆளாகியிருப்பதாக, மத்திய அரசு

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 2015 - 16ம் ஆண்டில், ஊட்டச்சத்து, தாய்ப்பால், உடல் பருமன் குறித்து, மத்திய அரசு ஆய்வு செய்தது. அதன் முடிவுகளை, 'தேசிய குடும்ப நலவாழ்வு ஆய்வு - 4' என்ற தலைப்பில், சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
*தமிழகத்தில், 5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலைமை மேம்பட்டு இருந் தாலும், உள்ளூரில் கிடைக்கும் சிறு தானியம் மற்றும்
இயற்கை உணவுகள் குறித்து, போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே, ...

தமிழகத்துக்கு அடித்தது 'ஜாக்பாட்': 10,000 வீடுகளில் 'சோலார் பேனல்'

Posted: 25 Jan 2016 10:02 AM PST

புதுடில்லி: பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த 10 ஆயிரம் பேரின் வீட்டுக் கூரைகளில் சூரிய ஒளி பேனல் அமைக்க மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தின் நகர்ப்புறங்களில் பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவு மக்களின் வீடுகளில் சூரிய ஒளி மின்சக்தி பேனல் அமைக்கும் பசுமைத் திட்டத்தை தமிழக அரசு சமர்ப்பித்தது. இத்திட்டத்துக்கு அமைச்சகங்கள் இடையிலான மத்திய அனுமதி வழங்கல் மற்றும் கண்காணிப்பு குழு, நேற்று அனுமதி ...

ரயில்வே திட்டங்கள் : சுதாரித்த கேரளம்; அலட்சியம் செய்யும் தமிழகம்

Posted: 25 Jan 2016 10:07 AM PST

முக்கிய ரயில் திட்டங்களை நிறைவேற்ற, ரயில்வேயுடன் கேரள அரசு கைகோர்க்கவுள்ள நிலையில், தமிழக அரசு இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை.

இரட்டை ரயில் பாதை, அகல ரயில் பாதை என, ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படுத்த வேண்டிய, ரயில்வே திட்டங்கள் நிறைய உள்ளன. அதேநேரத்தில், 26 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில், ரயில்வே இயங்கி வருவதால், அனைத்து திட்டங்களுக்கும், போதிய நிதியை உடனே ஒதுக்க முடியவில்லை.இதற்கு தீர்வாக, மாநில அரசு, 51 சதவீதம்; ரயில்வே துறை, 49 சதவீதம் நிதி முதலீடு செய்து, திட்டங்களை விரைவாக செயல்படுத்தும்,புதிய நடைமுறையை, ரயில்வே வாரியம் கொண்டு ...

'பள்ளிகள் ஹோம் ஒர்க் கோ - எஜுகேஷன் கூடாது'

Posted: 25 Jan 2016 10:19 AM PST

புதுடில்லி: புதிய கல்விக் கொள்கையை உருவாக்க, தேவையான ஆலோசனைகளை அளிக்கும்படி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கல்விப் பிரிவான வித்யா பாரதி, பல்வேறு ஆலோசனைகள் அளித்துள்ளது; அதன் முக்கிய அம்சங்கள்:

* காலை, 7:30 மணி முதல், மாலை, 7:30 மணி வரை, 12 மணி நேரம் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்
* வெளிநாட்டு மொழிகளுக்கு
பதிலாக, சமஸ்கிருதம் கற்றுத் தர வேண்டும்
* சிறிய வயதில், மாணவர்கள், மிகவும் எளிதாக மொழிகளை கற்றுக் கொள்ள முடியும். அதன்படி, தாய்மொழி, சமஸ்கிருதம், ஹிந்தி, ...

ரஜினி, டாக்டர் சாந்தாவுக்கு பத்மவிபூஷண் சானியா மிர்சா, சாய்னாவுக்கு பத்மபூஷண்

Posted: 25 Jan 2016 10:23 AM PST

புதுடில்லி: மிகச் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு, 2016ம் ஆண்டுக்கான, பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. பத்மவிபூஷண் விருதுக்கு, பிரபல நடிகர் ரஜினிகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா, ரிலையன்ஸ் நிறுவனங்களை நிறுவிய திருபாய் அம்பானி, வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்டோர் பத்மவிபூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர், விளையாட்டு வீராங்கனைகள் சானியா மிர்சா, சாய்னா நெய்வால் உள்ளிட்டோர் பத்மபூஷண் விருதைப் பெறுகின்றனர். ...

வியட்நாமில் இந்தியாவின் ஆதிக்கத்தால் சீனாஅலறல்: 'சேட்டிலைட்' கண்காணிப்பு மையம் அமைக்க முடிவு

Posted: 25 Jan 2016 10:28 AM PST

புதுடில்லி: வியட்நாமில், செயற்கைக்கோளை கண்காணிக்கும் மையத்தை நிறுவ, இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், இந்திய செயற்கைக்கோள் உதவியுடன், சீனா உள்ளிட்ட பகுதிகளின் புகைப்படங்களை பெற முடியும். இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கைகளால், சீனா, கலக்கமடைந்துள்ளது.ஆசிய பிராந்தியத்தில் உள்ள சீனாவுடன், இந்தியா, வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகளுக்கு, நீண்ட காலமாக, எல்லை பிரச்னை உண்டு. சீனாவை கண்காணிக்கும் வகையில், வியட்நாம் தலைநகர் ஹனோயில், செயற்கைக்கோள் கண்காணிப்பு மையத்தை நிறுவ இந்தியா திட்டமிட்டுள்ளது. விண்ணில் இயங்கி வரும் இந்திய செயற்கைக்கோள் மூலம், சீனா, ...

தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசுக்கு ஊழியர்கள்... பிப்., 10 முதல் காலவரையற்ற 'ஸ்டிரைக்' அறிவிப்பு

Posted: 25 Jan 2016 10:57 AM PST

சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில், அ.தி.மு.க., அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக, பிப்., 10 முதல் காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்தப் போவதாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட வேண்டும்; காலி பணிஇடங்களை நிரப்ப வேண்டும்; அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பது உட்பட, 20 அம்ச கோரிக்கைகளை, அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தி வருகிறது.அதிருப்தி : இதற்காக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், ஒட்டுமொத்த விடுப்பு என, பல கட்ட போராட்டங்களை நடத்தினர். ...

நேதாஜி மறைந்தது எப்படி? டுவிட்டரில் 'ரணகள' விவாதம்

Posted: 25 Jan 2016 12:17 PM PST

புதுடில்லி: நேதாஜி பற்றிய, 100 ரகசிய கோப்புகளை, மத்திய அரசு வெளியிட்டதை தொடர்ந்து, சமூக வலைதளங்களில், பா.ஜ., - காங்., கட்சிகளின் ஆதரவாளர்கள் இடையே, மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
நேதாஜி குறித்த, 100 ரகசிய கோப்புகளை, அவரது பிறந்த நாளில், மத்திய அரசு வெளியிட்டது. அதையடுத்து, நேதாஜி காணாமல் போனது தொடர் பான விசாரணையை, நாட்டின் முதல் பிரதமரும், காங்., தலைவருமான, ஜவகர்லால் நேரு முடக்கி விட்டதாக, பா.ஜ., ஆதரவாளர்கள், 'டுவிட்டர்' மற்றும் 'பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டி, பதிவிட்டுவருகின்றனர். இதனால், ஆத்திரம் அடைந்த காங்., ஆதரவாளர்கள், பிரதமர் ...

போர் விமான ஒப்பந்தத்தில் இழுபறி நீடிப்பு; மோடி - ஹோலண்டே சந்திப்பில் ஏமாற்றம்

Posted: 25 Jan 2016 12:40 PM PST

புதுடில்லி : இந்தியா - பிரான்ஸ் நாடுகள் இடையே, விண்வெளி தொழில் நுட்பம், ரயில்வே, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.ஆனாலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, 'ரபேல்' வகையைச் சேர்ந்த, போர் விமானங்களை வாங்குவது தொடர்பான இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள, பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹோலண்டே, இரண்டாம் நாளான நேற்று, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து பேசினார்.

இதைத் தொடர்ந்து, ஐதராபாத் ஹவுஸ் வந்த, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™