Tamil News | Online Tamil News |
- ராணுவ வீரர் சீருடை, காலணி மகா மட்டம்?
- விருதை திரும்ப பெற எழுத்தாளர்கள் சம்மதம்
- பெட்ரோல், டீசல் விலை உயரும்!
- ஐதராபாத் மாணவர் தற்கொலையில் பிரதமர் மோடி உருக்கம்! 'நாடு தனது இளம் மகனை இழந்து விட்டது' என சோகம்
- செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு : 'விசாரணை கமிஷன் அமைக்க அவசியம் இல்லை!'
- தமிழகத்தில் ரூ.200 கோடி கள்ளநோட்டு புழக்கம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பால் வியாபாரிகள் பீதி
- ஜெ., விடுதலையை எதிர்ப்பது ஏன்? சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., விளக்கம்
- ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பிரதமரை கொல்ல சதித் திட்டம் அம்பலம்
- சட்டசபை உரிமை மீறல் தண்டனையில் இருந்து கருணாநிதி தப்பினார்: வயது முதிர்வு காரணமாக கண்டனம் மட்டுமே என தீர்மானம்
- கடலில் பலியாகும் இலங்கை தமிழர்கள்: ஆஸ்திரேலிய தூதரகம் எச்சரிக்கை
| ராணுவ வீரர் சீருடை, காலணி மகா மட்டம்? Posted: 22 Jan 2016 07:00 AM PST புதுடில்லி: உலகின் இரண்டாவது மிகப் பெரிய ராணுவமான நம் ராணுவத்தில், வீரர்களுக்கு வழங்கப்படும் சீருடை மற்றும் காலணியின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு, 18 மாதங்களுக்கு ஒரு முறை, சீருடை மற்றும் காலணி (பூட்ஸ்) இலவசமாக வழங்கப்படுகிறது. மூன்று மாதத்தில், பூட்ஸ்கிழிந்து, 'சோல்' தனியாக வந்து விடுகிறது. சீருடையை ஒரு முறை துவைத்ததும், சாயம் போய் வெளுத்து விடுகிறது. சாயம் போன சீருடை, பிய்ந்த காலணியை அணிய விரும்பாத வீரர்கள், மூன்று மாதங்களுக்கு பின்,தங்களின் சொந்த பணத்தை கொடுத்து, அவற்றை வாங்கி ... |
| விருதை திரும்ப பெற எழுத்தாளர்கள் சம்மதம் Posted: 22 Jan 2016 07:35 AM PST புதுடில்லி: நாட்டில் மத சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதாகக் கூறி, 'சாகித்ய அகாடமி' விருதை திரும்ப ஒப்படைத்த, நயன்தாரா சேகல், ௮௮, மற்றும் நந்த் கிஷோர் பரத்வாஜ் ஆகியோர், அகாடமியின் கோரிக்கையை ஏற்று விருதை பெற சம்மதித்துள்ளனர். எதிர்ப்பு: மத்தியில், பா.ஜ.,வைச் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பின், கடந்தாண்டு செப்டம்பரில், எழுத்தாளர் கல்புர்கி கொலை செய்யப்பட்டதற்கும், உ.பி., மாநிலம் தாத்ரியில், மாட்டிறைச்சி சாப்பிட்டதாக எழுந்த சந்தேகத்தில், முஸ்லிம் நபர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டதற்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது. நயன்தாரா ஷெகல், ... |
| Posted: 22 Jan 2016 08:49 AM PST புதுடில்லி: பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை, மேலும் உயர்த்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சர்வ தேச சந்தையில், கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை, எண்ணெய் நிறுவனங்களே, 15 நாட்களுக்கு ஒரு முறை நிர்ணயம் செய்து வருகின்றன.சர்வ தேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை, கடந்த, 13 ஆண்டுகளாக இல்லாத அளவில், பேரல் ஒன்றுக்கு, 1,943 ரூபாயாக குறைந்துள்ளது. ஆனால், பெட்ரோல், டீசல், விலையை, எண்ணெய் நிறுவனங்கள் அதற்கேற்ப குறைக்கவில்லை. இந்நிலையில், கடந்த இரண்டு மாதத்தில் மட்டும், பெட்ரோல், டீசல் உற்பத்தி வரியை, மத்திய அரசு நான்குமுறை உயர்த்தி, ... |
| ஐதராபாத் மாணவர் தற்கொலையில் பிரதமர் மோடி உருக்கம்! 'நாடு தனது இளம் மகனை இழந்து விட்டது' என சோகம் Posted: 22 Jan 2016 08:53 AM PST லக்னோ: நாடு முழுவதும், மிகப்பெரும் கொந்தளிப்பையும், இரண்டு மத்திய அமைச்சர்களின் பதவிக்கு ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ள, ஐதராபாத் பல்கலைக்கழக தலித் மாணவர் தற்கொலை குறித்து, கருத்து தெரிவிக்காமல் இருந்த பிரதமர் நரேந்திர மோடி, ''நாடு தன் இளம் மகனை இழந்து விட்டது,'' என, உருக்கமாக நேற்று கூறினார். ஐதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா, 26, தற்கொலை செய்த விவகாரத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரேயா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.அந்த மாணவர் மீது நடவடிக்கை ... |
| செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு : 'விசாரணை கமிஷன் அமைக்க அவசியம் இல்லை!' Posted: 22 Jan 2016 09:37 AM PST சென்னை: ''செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து விசாரிக்க எதுவுமில்லை. எனவே, விசாரணை கமிஷனுக்கு அவசியம் இல்லை,'' என, அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். இது தொடர்பாக, சட்டசபையில் நடந்த விவாதம்: மா.கம்யூ., - சவுந்தரராஜன்: சென்னை வெள்ளம், செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து, அமைச்சர் நீண்ட விளக்கம் அளித்தார். ஆனால், முழுதிருப்தி ஏற்படவில்லை.நான், 46 ஆண்டுகளாக சென்னையில் வசிக்கிறேன். மூன்று பெரு வெள்ளத்தை பார்த்துள்ளேன்.ஆனால், வெள்ளத்தால் அனைத்து தெருக்களும் பாதிக்கப்பட்டது இப்போது தான். அமைச்சர் கூறிய விளக்கத்தில், அதிக மழை என்பதில் ... |
| தமிழகத்தில் ரூ.200 கோடி கள்ளநோட்டு புழக்கம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பால் வியாபாரிகள் பீதி Posted: 22 Jan 2016 09:46 AM PST சேலம்: தமிழகத்தில், 200 கோடி ரூபாய் மதிப்பில், 1,000 மற்றும், 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பால், வியாபாரிகள் பீதியில் உள்ளனர். இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில், பாகிஸ்தான், இந்திய ரூபாய் நோட்டுகளை கோடிக்கணக்கில் அச்சடித்து, மேற்கு வங்கம் வழியாக, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும், புழக்கத்தில் விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், வங்கி ஏ.டி.எம்.,களில் கூட, கள்ள நோட்டுகளின் புழக்கம் சர்வ சாதாரணமாக உள்ளது. கள்ள நோட்டுகளின் புழக்கத்தை தடுக்க, சி.பி.சி.ஐ.டி., பிரிவின், 'பேக் நோட் ... |
| ஜெ., விடுதலையை எதிர்ப்பது ஏன்? சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., விளக்கம் Posted: 22 Jan 2016 09:47 AM PST புதுடில்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று, மனு சமர்ப்பிக்கப்பட்டதற்கான காரணங்களை குறிப்பிட்டார். சொத்து குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவர் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், சிறப்பு கோர்ட் அளித்த தீர்ப்பை, கர்நாடகா ஐகோர்ட் ரத்து செய்தது.இதை எதிர்த்து, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் சார்பில், அவர் வழக்கறிஞர் பிரகாசம், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனு ... |
| ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பிரதமரை கொல்ல சதித் திட்டம் அம்பலம் Posted: 22 Jan 2016 09:52 AM PST பெங்களூரு: குடியரசு தின விழாக்களை சீர்குலைக்க திட்டமிட்டு வந்த, ஆறு பயங்கரவாதிகளை பயங்கரவாத தடுப்பு படையினர், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து அதிகளவிலான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த ஆறு மாதங்களாக அதிகளவிலான ஆயுதங்களை சேகரித்து வைத்து, கல்லுாரிகளில் ஐ.எஸ்., பயங்கரவாத சதித்திட்டத்தை தீட்டி வந்துள்ளனர். கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் அனைவரும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ... |
| Posted: 22 Jan 2016 10:44 AM PST சென்னை:சட்டசபை உரிமை மீறல் பிரச்னையில், தண்டனையில் இருந்து கருணாநிதி தப்பினார். 'வயது முதிர்வு காரணமாக, சபையில் அவருக்கு கண்டனம் தெரிவிக்கலாம்' என, உரிமைக் குழு பரிந்துரை செய்தது. அதன்படி, கருணாநிதியின் உரிமை மீறிய செயலுக்கு, சபாநாயகர் கடும் கண்டனம் தெரிவித்தார். 'சட்டசபையில் பேசாததை பேசியதாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி குறிப்பிட்டு உள்ளார்' என, அவர் மீது, வீட்டுவசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம், உரிமை மீறல் பிரச்னை கொண்டு வந்தார். அது, சபை உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்பப்பட்டது. அக்குழு விசாரணை நடத்தி, சபை உரிமையை கருணாநிதி மீறியதாக குற்றஞ்சாட்டி ... |
| கடலில் பலியாகும் இலங்கை தமிழர்கள்: ஆஸ்திரேலிய தூதரகம் எச்சரிக்கை Posted: 22 Jan 2016 12:47 PM PST சென்னை: 'பணம் சம்பாதிக்கும் நோக்கில், கள்ளத் தோணியில் ஆஸ்திரேலியா வரும் இலங்கை தமிழர்கள், நடுக்கடலில் கொத்து கொத்தாக பலியாகின்றனர்' என, சென்னையில் உள்ள ஆஸ்திரேலிய துாதரகம் எச்சரித்துள்ளது.இலங்கை தமிழர்கள் பலர், தமிழக முகாம்களில் இருந்து தப்பித்து, கடல் வழியாக கள்ளத் தோணியில், ஆஸ்திரேலியா செல்லும் சம்பவங்கள், பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இதுகுறித்து, 'க்யூ' பிரிவு போலீசார் பல வழக்குகள் பதிவு செய்து, படகுகளை இயக்குவோரை கைது செய்கின்றனர்.கரூர் மாவட்ட முகாமில் இருந்து வெளியேறி, நியூசிலாந்துக்கு கடல் வழியாக செல்ல திட்டமிட்டு, திருச்சியில் கூடிய ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 23,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |