Tamil News | Online Tamil News |
- முதல்வர் ஜெ.,வின் கூட்டணி அறிவிப்பு: பா.ஜ., தலைவர்கள் திடீர் தெம்பு
- போஸ்டர்கள் மூலம் தி.மு.க.,வில் மீண்டும் சகோதர யுத்தம்
- சென்னையில் கார் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு வருமா: டில்லியை தொடர்ந்து ஆமதாபாத் நகரிலும் அமல்
- மோடி அரசின் சுற்றுப்பயண செலவு 'விர்...'
- ஜெ., பேச்சு அ.தி.மு.க., சரிவை காட்டுகிறது: கருணாநிதி
- விமானப்படை தளத்தை தகர்க்க நடந்த முயற்சி முறியடிப்பு: பஞ்சாபில் பாக்., பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை
- பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி மீண்டும் உயர்வு
- ஜல்லிக்கட்டு தடைக்கு யார் காரணம்?
- அ.தி.மு.க., முடிவால் கூட்டணிகள் அமைவதில் இழுபறி: தி.மு.க., வலை விரிப்பால் நால்வர் அணியிலும் குழப்பம்
- பல்கலைகளில் யோகா பாடம்: மத்திய அரசு புதிய திட்டம்
| முதல்வர் ஜெ.,வின் கூட்டணி அறிவிப்பு: பா.ஜ., தலைவர்கள் திடீர் தெம்பு Posted: 02 Jan 2016 06:36 AM PST முதல்வர் ஜெயலலிதாவின் கூட்டணி தொடர்பான அறிவிப்பால், தமிழக பா.ஜ., தலைவர்கள் புதுதெம்பு அடைந்துள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு, சட்ட சபை தேர்தல் மற்றும் அதற்கு முன் நடந்த பல்வேறு தேர்தல்களை கூட்டணி பலத்துடன் அ.தி.மு.க., தலைமை எதிர் கொண்டது. வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த பின், நடந்த உள்ளாட்சி தேர்தல், 2014ல் நடந்த லோக்சபா தேர்தல்களில், அக்கட்சி தனித்து போட்டியிட்டது. இதிலும் அக்கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலையும், அ.தி.மு.க., தனித்தே சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. |
| போஸ்டர்கள் மூலம் தி.மு.க.,வில் மீண்டும் சகோதர யுத்தம் Posted: 02 Jan 2016 07:10 AM PST தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கும், முன்னாள் அமைச்சர் அழகிரிக்கும் சகோதர யுத்தம் மீண்டும் போஸ்டர் சீண்டல்கள் மூலம் துவங்கியுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க., தென்மண்டல பொறுப்பாளருமான மு.க.அழகிரியின் பிறந்தநாளுக்கு அவரது ஆதரவாளர்கள் அடித்த போட்டி பொதுக்குழு போஸ்டர் விவகாரத்தால், அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து கட்சியையும், தன் சகோதரரும், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினையும் அவர் விமர்சித்து வந்ததால், தி.மு.க.,வுக்கும், அவருக்கும் இடைவெளி அதிகரித்தது. |
| சென்னையில் கார் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு வருமா: டில்லியை தொடர்ந்து ஆமதாபாத் நகரிலும் அமல் Posted: 02 Jan 2016 08:12 AM PST புதுடில்லி:டில்லியில், கார் போக்குவரத்து கட்டுப்பாட்டு திட்டம் வெற்றி பெற்றதால், ஆமதாபாத் நகரும் அந்த திட்டத்தை பின்பற்ற உள்ளது. அதேபோல், காற்று மாசு அதிகம் உள்ள சென்னையிலும் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது. டில்லியில் ஞாயிறு தவிர்த்து, வாரத்தில் மூன்று நாட்கள் வீதம், ஒற்றைப் படை மற்றும் இரட்டைப்படை பதிவெண்களில் முடிவடையும் கார்களின் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அமலுக்கு வந்த இத்திட்டப்படி, முதல் நாள் காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, ஒற்றைப் ... |
| மோடி அரசின் சுற்றுப்பயண செலவு 'விர்...' Posted: 02 Jan 2016 08:25 AM PST புதுடில்லி,:பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின், முதல் நிதியாண்டில், சுற்றுப் பயணங்களுக்காக, 314.76 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது, அதற்கு முந்தைய ஆண்டில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால், செலவிடப்பட்ட தொகையை விட, 56 கோடி ரூபாய் அதிகம். பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரின் இறுதியில், நிதிக் கணக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கூறப்பட்டு உள்ளதாவது:ஐ.மு., கூட்டணி அரசுஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடைசி ஆண்டான, 2013 - 14ல், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களின் சுற்றுப் பயணங்களுக்காக, 258.49 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ... |
| ஜெ., பேச்சு அ.தி.மு.க., சரிவை காட்டுகிறது: கருணாநிதி Posted: 02 Jan 2016 09:20 AM PST சென்னை,: 'எதிரிகளே கண்ணுக்கு தெரியவில்லை என்றவர், கூட்டணிக்கு இறங்கி வருவது, சரிவின் வெளிப்பாடு' என, முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி பதில் கூறியுள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை :நீதிமன்ற உத்தரவுகளை மீறி, சென்னை மாநகர மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், அ.தி.மு.க., பொதுக்குழுவுக்கு, சாலைகளில் பேனர் மற்றும் வரவேற்பு வளைவுகளை வைத்துள்ளனர். நீதிமன்ற உத்தரவை சுட்டிகாட்டிய போது, போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, சுட்டிக் காட்டியவர்களை கைது செய்தனர்.பொதுக்குழுவில், பத்திரிகைகளை ... |
| Posted: 02 Jan 2016 09:31 AM PST பதன்கோட் (பஞ்சாப்): பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள், பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்தினர். உடன், பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில், பயங்கரவாதிகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் மூலம் விமானப்படை தளத்தை தகர்க்க, பாக்., பயங்கரவாதிகள் மேற்கொண்ட சதி முறியடிக்கப்பட்டது. பஞ்சாப் மாநிலம் பதன்கோட், பாகிஸ்தான் எல்லையை ஒட்டி உள்ளது. இங்கு, இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமான தளம் அமைந்துள்ளது. 'மிக் - 21' உட்பட, முக்கியமான போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் ... |
| பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி மீண்டும் உயர்வு Posted: 02 Jan 2016 09:35 AM PST புதுடில்லி: பெட்ரோல் மீதான கலால் வரி, லிட்டருக்கு, 37 காசுகளும், டீசல் மீதான கலால் வரி, லிட்டருக்கு, 2 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இருக்காது. கடந்த, டிச., 17ல், பெட்ரோல் மீதான கலால் வரி, லிட்டருக்கு, 30 காசுகளும், டீசல் மீதான கலால் வரி, லிட்டருக்கு, 1.17 ரூபாயும் உயர்த்தப்பட்டது. இதனால், மத்திய அரசுக்கு, கூடுதலாக, 2,500 கோடி ரூபாய் கிடைக்கும் என,தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், 16 நாள் இடைவெளியில், இரண்டாம் முறையாக நேற்று, பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு, 37 காசுகளும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு, ... |
| ஜல்லிக்கட்டு தடைக்கு யார் காரணம்? Posted: 02 Jan 2016 09:39 AM PST தமிழகத்தின் பாரம்பரியமான, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என, அனைத்து அரசியல் கட்சிகளும், போராட்டத்தில் இறங்க தயாராகி விட்டன; ஆனால், இத்தடைக்கு யார் காரணம் என்பதை அலசிப் பார்த்தால் உண்மை தெரியும் என்கின்றனர் டில்லி பா.ஜ.,வினர். கடந்த, 2014, மே மாதம், ஜல்லிக்கட்டைத் தடை செய்தது உச்ச நீதிமன்றம். இதற்கு மூல காரணம், 2011ம் ஆண்டு, மத்திய அரசு வெளியிட்ட ஒரு அரசு ஆணை. அப்போதைய காங்., அரசு, ஜூலை, 2011ல் வெளியிட்ட, 'மிருகங்களை வதை செய்யக் கூடாது' என்கிற அரசு ஆணையில் உள்ள மிருகங்களின் பட்டியலில், காளையையும் சேர்த்து விட்டது; இதனால், ஜல்லிக்கட்டில் காளைகளை ... |
| அ.தி.மு.க., முடிவால் கூட்டணிகள் அமைவதில் இழுபறி: தி.மு.க., வலை விரிப்பால் நால்வர் அணியிலும் குழப்பம் Posted: 02 Jan 2016 10:30 AM PST பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க., பொதுக்குழுவில் கூட்டணி குறித்து தெளிவான முடிவு எதையும் முதல்வர் ஜெயலலிதா அறிவிக்காததால், தமிழகத்தில் கூட்டணிகள் அமைவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் தே.மு.தி.க., - த.மா.கா., போன்ற கட்சிகளுக்கு தி.மு.க.,வும் வலை விரிப்பதால், நால்வர் அணியிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்னும் மூன்று மாதத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கட்சிகள், இப்போதே கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளன. தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வுக்கு அடுத்த நிலையில் ஓட்டு வங்கி வைத்துள்ள தே.மு.தி.க.,வை இழுக்க ... |
| பல்கலைகளில் யோகா பாடம்: மத்திய அரசு புதிய திட்டம் Posted: 02 Jan 2016 11:55 AM PST புதுடில்லி: பல்கலை கழகங்களில் பி.எஸ்சி., மற்றும் எம்.எஸ்சி., யோகா பாட பிரிவுகளை துவக்க, பல்கலை கழக மானியக்குழுவான, யு.ஜி.சி., திட்டமிட்டுள்ளது.யோகாவுக்கு உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே மவுசு அதிகரித்து வருகிறது; பிரதமர் நரேந்திர மோடியும் யோகாவை பிரபலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டில், சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது, நாடு முழுவதும் பெரிய அளவில், ஒரே நாளில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.இந்நிலையில், யோகாவை கல்வியாக அங்கீகரித்து பல்கலை கழகங்களில், பாடப்பிரிவுகள் மற்றும் துறைகளை ஏற்படுத்த, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 03,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |