Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வானம் வசப்படும்!

Posted: 02 Jan 2016 03:01 PM PST

- கேள்விக்குறி போல் வளைந்து நெளிந்து போகாதே சற்று நிமிர்ந்து நில் எல்லாருக்கும் நீயே வியப்புக்குறி! கருவில் உருவாகும் போதே வாழ்க்கைப் பாடத்தின் கேள்வியும், பதிலும் எழுதப்பட்டு விடுகிறது... எந்தக் கேள்விக்கு எது பதில் எந்தப் பூட்டுக்கு எது சாவி கண்டுபிடிப்பதே வாழ்க்கை வாழ்க்கையை வென்று முடி! தம்மை புதைக்கப்பட்டதை எண்ணி விதைகள் பூமிக்குள் முடங்கி விடுவதில்லை விதைக்கப்பட்டதாய் எண்ணி உயிர்த்தெழுந்து முட்டி முட்டி வெளியே முகத்தைக் காட்டி தன் முகவரி எழுதுகிறது! தட்டாமல் எந்தக் ...

திருடனைப் பார்த்து குலைக்காம வாலாட்டும் நாய்...!

Posted: 02 Jan 2016 02:56 PM PST

சென்னை தீவுத்திடலில் ஜனவரி 7இல் பொருள்காட்சி தொடக்கம்

Posted: 02 Jan 2016 02:46 PM PST

சென்னை தீவுத்திடலில் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய 42-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சி ஜனவரி 7 இல் தொடங்குகிறது. அதற்கான பல்வேறு அரங்குகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சுற்றுலாத் துறை சார்பில் ஆண்டுதோறும் தொழில் பொருள்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், நிகழாண்டிற்கான இப்பொருள்காட்சி வரும் 7-இல் தொடங்கி, தொடர்ந்து 70 நாள்கள் வரையில் நடைபெற இருக்கிறது. இதில், குழந்தைகள் முதல் பெரியவர்களைக் கவரும் வகையில் பல்வேறு பொழுது ...

புதியதோர் உலகு செய்தோம்: ஆ.வேளாங்கண்ணி

Posted: 02 Jan 2016 02:41 PM PST

- இச்சகத்திலே இயங்கிய அச்சகத்தை எல்லாம் துச்சமெனவெண்ணி அச்சமொன்றின்றி - உச்சத்திலே "புதியதோர் உலகு செய்தோம்" என தலை நமிர்த்தி நிற்கும் எதையும் கணிக்கவல்ல கணினி கண்டிட்டோம் - மிச்சமில்லை ஒன்றும் சொச்சத்திலே இயங்கும் பட்சத்திலே ஜகமதை உள்ளங்கையில்லடக்கி சட்டைப் பையிலே இட்டு செல்வோரை இவ்வுலகம் ஏந்திடினும் - இவ்வுலகையே அவர் கை அல்லவா ஏந்திச் செல்கிறதிங்கே என்னே அதிசயம் கண்டீரோ மெச்சத்தகும் செயலன்றோ - புதியதோர் உலகு செய்தோம் என்றே நெஞ்சை நிமிர்த்திடுவோம் - --------------------------------- நன்றி- ...

உங்கள் IPhone, Android ஆகியவற்றில் தமிழ் டீவீ பார்ப்பது எப்படி?

Posted: 02 Jan 2016 12:59 PM PST

உங்கள் IPhone, Android  ஆகியவற்றில் தமிழ் டீவீ  பார்ப்பது எப்படி என்று பார்போம். IPhone  ல் அதிக வசதி இல்லை அதனால்  குறைந்தளவு  டிவி க்களே பார்க்க முடியும் apkland.net  என்னும்  இணையத்தள முகவரியை  ஒரு உங்கள்  விருப்பாமான பிரவுசரில் கொடுங்கள். இதில் மேலே காணப்படும் மெனுவில் Iphone என்பதைதெரிவு செய்யுங்கள் இதன்   மூலம்  சில  தொலைக்காட்சிகள் பார்க்கலாம் அல்லது லிவேத்வால்.நேரத் க்கு செல்லுங்கள் இங்கேயும் மேல் மெனுவில் இபோனே டிவி யை தெரிவு செய்யுங்கள் பார்த்து மகிழுங்கள் இந்த முறையில் ...

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Posted: 02 Jan 2016 10:00 AM PST

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸ்ன்   ஒரு அற்புதமான போட்டோ   

கொலுசு ஒலி…

Posted: 02 Jan 2016 09:17 AM PST

- – கோயில் மணியோசையை முந்திக்கொண்டது கொலுசு ஒலி – ————————— – அடிக்கும் கணவன் சமாதான மனைவி அணைப்பின் ஒத்திகை – ————————- – கூன் விழுந்த பிள்ளைகள் கூலி கொடுத்துக் கல்வி மெத்தனத்தில் அரசு – ————————- – ஆதியில் உயிரோடு இன்றோ நடைப்பிணம் ஊஞ்சலில் நீதி – ———————— – வீடெங்கும் மின்சாரம் வேலையில்லை ஓயாமல் ஊர் வம்பு – ————————– -கவிஞர் சுடர் வருடும் முள் – தொகுப்பிலிருந்து

ஞானம்

Posted: 02 Jan 2016 09:15 AM PST

- ஓ__நாமி என்ற மல்யுத்த வீரன் மிகவும் புகழ் பெற்று திகழ்ந்தான். அவனுக்கு மல்யுத்தம் கற்றுத் தந்த குருவையும் வெல்லும் ஆற்றல் பெற்றவன். ஆனால் ஓர் போட்டியில் தோல்வியைத் தழுவினான். - - ஒரு ஜென் குருவிடம் சென்று சந்தித்து தனது பிரச்னையைக் கூறினான். குரு ஓ___நாமியை பார்த்து " ஓ__நாமி என்றால் பேரலைகள் என்பது உனது பெயர். இன்ற் இரவு முழுவதும் இந்த இடத்திலேயே தங்கி இரு. நீ ஒரு மல்யுத்த வீரன் என்பதையே மறந்துவிடு. இந்த அதிவேகமாக கரையை முட்டும் அலைகளைப் போல பேரலைகள் உருவாகி பெரும் சப்தத்துடன் அதிவேகமாக ...

ஜீரோ சைஸ்ல இருக்குற பெண்ணை…

Posted: 02 Jan 2016 09:09 AM PST

- ஜீரோ சைஸ்ல இருக்குற பெண்ணை பீரோ சைஸுக்கும் சிக்ஸ் பேக்ல இருக்குற ஆணை ஃபேமிலி பேக்குக்கும் மாற்றுகிறது திருமணம்‬! – – செல்லி சீனிவாசன் – ——————————————– – சாராயம் போதைப்பொருள் இல்லை – பஞ்சாப் சுகாதார மந்திரி சுர்ஜித் குமார் ஜெயானி சர்ச்சை பேச்சு. ‪#‎ எண்டோசல்பான்‬ கூட சத்து டானிக்தான், வாங்கி குடிச்சு பாருங்க மந்திரியாரே… – – இளையராஜா அனந்தராமன் – ——————————————— – விடுறா, பொடிப்பய தெரியாம செஞ்சுட்டான் – நிர்பயா விடுறா, போதையில தெரியாம செஞ்சுட்டான் – சல்மான்கான் ‪#‎ புடிறா‬ ...

சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும்.

Posted: 02 Jan 2016 09:08 AM PST

- – "பணக்காரனாக ஆவதற்கு பணத்தைச் சேர்த்து வைக்க வேண்டியதில்லை. தேவைகளைக் குறைத்துக் கொண்டாலே போதும். " -ஸ்பெயின். – ——————————————— – "போலியான நண்பனாக இருப்பதைவிட, வெளிப்படையான எதிரியாக இருப்பது மேல்." -இங்கிலாந்து. – ———————————————— – "தாகத்தால் தவிக்கும் ஒருவனுக்கு ஒரு சொட்டுத் தண்ணீருக்கு முன்னால் ஓராயிரம் முத்துக்கள் மதிப்புள்ளது ஆகாது." -பாரசீகம். – ————————————————- – "செழிப்பானபண்ணையிலிருந்து குதிரையை வாங்கு: ஏழை வீட்டிலிருந்து பெண்ணை எடு." -எஸ்டோனியா. – ———————————————- – "மனிதர்கள் ...

குடிகாரன் திருந்துவதற்கு ஒரு வழி !

Posted: 02 Jan 2016 09:04 AM PST

– ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான். "நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா…" என்று கேட்டுக் கொண்டான். அதற்கு ஞானி, "நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன்". – மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான். அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றார். தூணைப் பார்த்து, "ஐயோ என்னை விட்டுவிடு… விட்டுவிடு…" என்று கத்திக் கொண்டிருந்தார். – உடனே குடிகாரன், "நீங்கள்தானே தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதை விட்டுவிடுங்கள்" ...

தடைகள் நம்மைத் தடுப்பதற்கு அல்ல…

Posted: 02 Jan 2016 08:59 AM PST

- தடைகள் நம்மைத் தடுப்பதற்கு அல்ல, நாம் தாண்டும் உயரத்தைக் கூட்டுவதற்கே! – – அம்புஜா சிமி – ——————————————– – வெள்ளத்தில் ஸ்டிக்கர் ஒட்டியதை சிம்புவின் 'பீப்' பாடல் கவ்வும்; இறுதியில் மக்களின் மறதியே வெல்லும்! – – இளையராஜா அனந்தராமன் – ——————————————— – இந்தியாவில் தப்பு செய்யணும்னா, ஒண்ணு 18 வயசுக்குள்ளே செஞ்சுடணும். இல்லை, நிறைய காசு சம்பாதிச்சுட்டு செய்யணும்… – ‪#‎ நிர்பயா‬ வழக்கு; சல்மான் கான்‬ வழக்கு! – – பச்சை தங்கம் – ————————————– – தமிழகத்தில் கடந்த 10 நாட்களின் ...

திமிரும் நீயும் ஒரே சாயல் ! நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Posted: 02 Jan 2016 08:54 AM PST

திமிரும் நீயும் ஒரே சாயல் ! நூல்ஆசிரியர் : கவிதாயினி ஷர்மிவீரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வாசகன் பதிப்பகம், 167, AVR வளாகம், அரசு கலைக்கல்லூரி எதிரில், சேலம் 636 007. பக்கங்கள் : 96, விலை : ரூ. 75 ***** இந்த நூலின் வெளியீட்டு விழா அழைப்பிதழ் முகநூலில் பதிந்தவுடன் பலரும் விருப்பம் தெரிவித்து இருந்தனர். 2015 முகநூல் பதிவில் முக்கிய இடம் பிடித்தது. காரணம் நூலின் தலைப்பு மிக வித்தியாசமாக இருந்தது. நூல் ஆசிரியர் பெயர் ஷர்மிவீராவும் வித்தியாசமாக உள்ளது. ...

கரையும் காதல் மேகமே!!

Posted: 02 Jan 2016 08:39 AM PST

பெண்ணே  நீ என்னை மேகம்  போல கடந்து சென்ற போதும்  மின்னல் ஒளியை போல்  என்னை சுடர்விட்டு  எரிக்கிறாய்!  கோவத்தில்  நீ உதிர்க்கும் வார்த்தைகள்  பேரிடியாய் என் காதில்  ஒலித்தாலும்  சில்லென்று  உன் சுவாசத்தின்  வாசம் வீசும் போது  சோகத்தை சுகமாய்  சுமக்கும் என் இதயம்!!  காதல் மழையின்  கண்ணீர்  மிச்ச சொச்சமாய்  என்னில் உன் நினைவுகள்  கடந்து செல்கிறது!!  கரைசேர்ப்பாயா?  இல்லை என்னை  கரைந்து போகச்செய்வாயா??

இனிக்கும் மழலைக் குறும்பு

Posted: 02 Jan 2016 08:37 AM PST

- அச்சம் – தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும் அதற்காகவாவது பயப்படுகிறார்களே..! – ——————- – சாதனை – விற்பனையில் சாதனை சரியே, இதில் உயிருக்கு கேடான மதுபானக் கடைகள்! – முத்து ஆனந்த் – ———————— – அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமாய் இனிக்கிறது மழலைக் குறும்பு – சுப்புலட்சுமி – ————————— – விடியல் – விடியலுக்காகக் காத்திருக்கின்றன இரவைப் போலவே உழவனின் வறுமையும்! – முத்தூஸ் —————————– பொதிகைச் சாரல் – டிசம்பர் 2015

டெல்லியில் இரட்டைப்படை பதிவு எண் காரில் வந்த பா.ஜனதா எம்.பி. தடுத்து நிறுத்தப்பட்டார்

Posted: 02 Jan 2016 08:34 AM PST

- புதுடெல்லி, ஜன.2- உத்தரபிரதேசத்தின் பாக்பட் தொகுதி பா.ஜனதா எம்.பி. சத்யபால் சிங், இரட்டைப்படை பதிவு எண் கொண்ட காரில் நேற்று டெல்லிக்கு வந்தார். அவரது காரை இந்தியா கேட் பகுதியில் தடுத்து நிறுத்திய போலீசார், புதிய வாகன இயக்க நடைமுறை குறித்த துண்டு பிரசுரம் ஒன்றை அவரிடம் அளித்தனர். பின்னர் அவரது டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதா? என்பது குறித்து தகவல் இல்லை. எனினும் சத்யபால் சிங் எம்.பி., சில மணி நேரத்தில் டெல்லியில் இருந்து திரும்பி விட்டார் என அவரது உதவியாளர் கூறினார். எம்.பி. ...

மூன்று வருஷம் பெயிலாயிட்டியா?”

Posted: 02 Jan 2016 08:33 AM PST

தம்பி என்ன படிக்கிறே?" - "பி.இ. நாலாவது வருஷம்" - "மூன்று வருஷம் பெயிலாயிட்டியா?" @@@@@@@@@@ நீ இடக்கையால் எழுதுவியா? வலது கையால் எழுதுவியா?" ""ரெண்டு கையாலும் இல்லை….."பேனா'வால்தான் எழுதுவேன்" @@@@@@@@@@@  ஒரே ஒரு கிழிஞ்ச வேட்டியோட சென்னைக்கு வந்தேன். இப்ப கையிலே பத்து லட்சம் இருக்கு" "பத்து லட்சம் கிழிஞ்ச வேட்டியை என்ன பண்ணப்போறீங்க?" @@@@@@@@@@ டேய், ராசா வெண்டக்காய் நிறைய சாப்பிடணும் அப்பதான் மூளை நல்லா வளரும்…! ஏன், அப்பா வெண்டக்காய் சாப்பிடவேயில்லை..? ஏற்கனவே இருந்தால்தான்டா ...

உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை

Posted: 02 Jan 2016 08:25 AM PST

- தமிழ் இலக்கிய வரலாற்றில் 18,19-ம் நூற்றாண்டுகளில் எண்ணற்ற தமிழ்ச் சான்றோர் தோன்றினர். இந்த நூற்றாண்டுகளைச் சிற்றிலக்கியக் காலம் என்றும் கூறுவர். இந்தக் காலத்தில் திருத்தலங்களின் வரலாறு கூறும் தல புராணங்கள் பெருமளவில் பாடப்பெற்றன. அக்காலகட்டத்தில் தலபுராணங்களைப் பாடிய பெருமை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களையே சாரும். பல பெரியோர்களின் பெருமை, அவர்களிடம் கல்வி கற்ற மாணவர் களாலும், மாணவர்களின் பெருமை அவர்களுக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர் களாலும் உலகுக்குத் தெரியவரும். அத்தகைய ...

அது என்ன வரிக்கழுதை?

Posted: 02 Jan 2016 08:24 AM PST

- கிராமங்களில் வீட்டில் வளர்க்கும் கழுதைகளைப் பார்த்திருப்பீர்கள். பொதி சுமக்கும் கோவேறு கழுதைகளைப் பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள். காட்டுக் கழுதைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆப்ரிக்காவில் காட்டுக் கழுதைகள் நிறைய உள்ளன. இவற்றை 'சோமாலியக் கழுதைகள்' என்று சொல்கிறார்கள். பார்ப்பதற்குப் பழுப்பும் வெள்ளையும் கலந்த வழக்கமான கழுதைகள் போலவே தெரியும். ஆனால், வரிக்குதிரைகளைப் போல இந்தக் கழுதைகளின் கால்களில் காணப்படும் அழகான வரிகள் இவற்றை வித்தியாசப்படுத்திக் காட்டும். சோமாலியா, எத்தியோப்பியா, ...

மழையின் சேவை

Posted: 02 Jan 2016 08:23 AM PST

மழையின் சேவை               கூவ ஆற்றையே  குளிக்க வைத்தாய் காஞ்ச புரத்தையே தண்ணிரில் மிதக்க வைத்தாய் கடலுருக்கு கடலூருக்கு  அதன் பெயரை புரிய வைத்தாய்            திருவள்ளுவர்க்கும் திருவள்ளூருக்கும்  சென்னைக்கும் விவாகரத்து                                               செய்து வைத்தாய் முஸ்லிம் எல்லாம் தீவிரவாதி இல்லை என்று                                             விளங்க வைத்தாய்             மீனவர்களை அவரவர் விட்டுக்குள் மீன்                                                     ...

செந்தில் குமாரும் குட்டிகவிதைகளும்

Posted: 02 Jan 2016 08:16 AM PST

ஏக்கங்கள் இப்படியும் இருக்கலாம்...??? இன்னும் ஒருமுறை இவ்வுலகில் அவதரிக்க வேண்டும் புத்தரே என் நிழலில் அமர்ந்து ஞானம் பெற ஞாலத்தில் எவருளர்...?? போதிமரம் இருவரிகளால் மனிதர்களின் வாழ்க்கை நெறியை வகுத்து கொடுத்த வள்ளுவரே உன் கரவிரல்களுக்குள் என்று அகப்படுவேன்..?? எழுத்தாணி அனுதினமும் ஆயிரம்பேர் வந்துபோனாலும் அந்த கரிகால் பெருவளத்தானின் அடிச்சுவடு இன்னொரு முறை இங்கு படுமா...?? கல்லணை பெருவுடையாரை கட்டிஎளுப்பிய பெரிய மனதுடையார் ராஜராஜனே என்னை ராஜியம் பண்ண ...

காண்டம் கேக்குறது தப்பா?- ராதிகாவுக்கு விஷால் பதில்

Posted: 02 Jan 2016 07:46 AM PST

- ராதிகா, விஷால் | கோப்புப் படம் காண்டம் கேக்குறது தப்பா? இதைப் பற்றி பேசுவது எனக்கு காமெடியாகவும், சிரிப்பாகவும் இருக்கிறது என்று விஷால் கூறியுள்ளார். பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடிப்பில் சமீபத்தில் 'கதகளி' ட்ரெய்லர் வெளியானது. இதில் விஷால் மருந்துக்கடையில் வேலை செய்யும் கேத்ரீன் தெரசாவிடம் காண்டம் இருக்கா என கேட்பார். இந்த காட்சி ட்ரெய்லரில் வெளியானது. இதுகுறித்து ராதிகா தன் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். ''காண்டம் பற்றி ட்ரெய்லரில் வந்தது குற்றம். இதற்காக யாராவது மன்னிப்பு ...

பித்தப் பூக்கள்...!!

Posted: 02 Jan 2016 07:44 AM PST

காதல் கா கசம்….!!
1.
அண்டா கா கசம் அபு கா கசம்
அன்பு கா கசம் காதல் கா கசம்
திறந்திடு சீசே..
இப்பொழுது என்னிடம்
ஒப்படைத்திடு
அவளை என் வசம்.
2.
பாதுகாப்பாக இதய லாக்கரில்
பூட்டி வைத்திருக்கிறாயே
உன் தங்கம்
மீட்டுவிட்டாயா? அல்லது
எவருக்கேனும் கோட்டை
விட்டு விட்டாயா?
உருகி உருகி
வேறு நகையானதோ?
உன் சொ ( ந்த ) க்க தங்கம்.
*

தொடத் தொடத் தொல்காப்பியம்(409)

Posted: 02 Jan 2016 07:34 AM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (148)

Posted: 02 Jan 2016 07:30 AM PST

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

படகோட்டி இன்றி நகரும் அதிசயம்...

Posted: 02 Jan 2016 07:12 AM PST

- ஆண்களுக்கு மதிப்பு உண்டா? நடக்கும் பட்டி மன்றம் அரங்கத்தில் ஆண்கள் இல்லை! - ------------------------------- - அரைப்புள்ளி, முற்றுப்புள்ளி கணத்தில் மட்டும் வாழ்க்கையில் அல்ல - ---------------------------- - அரசியலுக்கு நடிப்பு ஒன்றே போதும் படிப்பு தேவை இல்லை... - ------------------------ - படகோட்டி இன்றி நகரும் அதிசயம் பிறை நிலவு... - ----------------------- - மூச்சுத்திணறும் பாட்டு முகாரி ராகம் எய்ட்ஸ்... - --------------------- -கவிஞர் சுடர் வருடும் முள் ...

சசியின் குட்டி கவிதைகள்

Posted: 02 Jan 2016 06:49 AM PST

விரக்தியில் இருந்தேன்  வெளியே வந்தாய்  சன்னியாசி ஆனேன்!!  _____________________________ மறைத்தாய்  முகம்தனை  மரமானேன்!!  ________-_____-_- காய்ந்த சருகாய்  காணப்பட்டேன் புன்னகைத்தாய்  மலர்ந்தேன்!!!!  _----___-________-----_- கரம்பிடிப்பாயா?  கைக்கெட்டா தூரத்தில்  காகித பூவாய் நான்!!  ____-----________ வார்த்தைகளால்  அல்ல வலி  உன் மௌனத்தால்!!


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™