Tamil News | Online Tamil News |
- விவசாயிகள் தற்கொலையை தடுக்க குழு
- பிச்சைக்காரர்களை ஒழிக்க ஆதரவற்றோருக்கு உதவி புதுமை : பிரதமர் மோடி தலைமையிலான அரசு புதிய திட்டம்
- கெஜ்ரிவால் மீது மை வீசிய பெண்
- கார், பைக் இன்சூரன்ஸ் காகித நகல் கையில் வைத்திருக்க தேவையில்லை
- எம்.ஜி.ஆர்., பிறந்த நாள்: ஜெ., பங்கேற்பு
- 'இயற்கையோடு இணைந்து வாழ்வோம்'
- பொதுத்துறை வங்கியில் அரசு 'டிபாசிட்' செய்த ரூ.20 கோடி... மாயம்!:மர்ம நபர்களின் கில்லாடி வேலையால் அதிகாரிகள் அதிர்ச்சி
- 'பேச்சில் இருக்கும் வேகம் மோடியின் செயலில் இல்லை'
- நடப்பு ஆண்டில் வறட்சி ஏற்படுமா?
| விவசாயிகள் தற்கொலையை தடுக்க குழு Posted: 17 Jan 2016 08:47 AM PST புதுடில்லி: எட்டு ஆண்டாக அமலில் உள்ள, விவசாயிகள் குறித்த, தேசியக் கொள்கையை மறு ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கப் போவதாக, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு கூறியுள்ளது. வறுமையால், நாட்டின் பல்வேறு பகுதிகளில், விவசாயிகள் தற்கொலை செய்வது, அதிகரித்து வருகிறது. விவசாயிகள் தற்கொலையை தடுக்க தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, பஞ்சாபை சேர்ந்த அரசு சாரா அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், மத்திய விவசாயத் துறை சார்புச்செயலர் கமல் அரோரா, பதில் மனு தாக்கல் செய்துள்ளார்; ... |
| பிச்சைக்காரர்களை ஒழிக்க ஆதரவற்றோருக்கு உதவி புதுமை : பிரதமர் மோடி தலைமையிலான அரசு புதிய திட்டம் Posted: 17 Jan 2016 08:53 AM PST புதுடில்லி: பிச்சைக்காரர்களை ஒழிக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு, ஆதரவற்றோர் மற்றும் மிகவும் ஏழைகளுக்கு, தொழில் திறன், தங்குமிடம் மற்றும் நிதியுதவி அளித்து, அவர்களை பிச்சைக்காரர்களாக மாறாமல் தடுக்கும் புதுமையான முயற்சியில் இறங்கவுள்ளது. இதற்காக, விரைவில் புதிய சட்டம் ஒன்றை மத்திய அரசு பிறப்பிக்க உள்ளது. மத்தியில் ஆளும், பிரதமர் மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, உலக அளவில், இந்தியாவுக்கு மிகுந்த கெட்ட பெயரை கொண்டு வரும் இரண்டு அம்சங்களை நாட்டிலிருந்தே ஒழிக்க முடிவு செய்துள்ளது. ஒன்று, குப்பை; மற்றொன்று பிச்சைக்காரர்கள். குப்பை, ... |
| Posted: 17 Jan 2016 08:58 AM PST புதுடில்லி: டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது, இளம்பெண் ஒருவர், மை வீசிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது. டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது; இங்கு, காற்றில் ஏற்படும் மாசை குறைக்க, கார்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும்திட்டம், சோதனை முயற்சியாக, 15 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கு ஒத்துழைப்பு அளித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, டில்லியில் நேற்று நடந்தது; இதில், கெஜ்ரிவால் பங்கேற்றார். விழாமேடைக்கு அருகே வந்த இளம் பெண், கெஜ்ரிவாலை நோக்கி, சில ... |
| கார், பைக் இன்சூரன்ஸ் காகித நகல் கையில் வைத்திருக்க தேவையில்லை Posted: 17 Jan 2016 09:02 AM PST புதுடில்லி: கார், பைக் உள்ளிட்ட வாகனங்களின் இன்சூரன்ஸ் ஆவணங்கள், விரைவில் மின்னணு முறையில் மாற்றப்பட உள்ளதால், போக்குவரத்து போலீசாரின் சோதனையின் போது அவற்றின் நகல் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இருக்காது. இன்சூரன்ஸ் கட்டுப்பாடு ஆணையம், 'இ - வாஹன் பீமா' என்ற புதிய திட்டத்தை துவக்கி உள்ளது. இதன்படி, இன்சூரன்ஸ் ஆவணங்கள் அனைத்தும் மின்னணு முறையில் மாற்றப்பட உள்ளன. திட்டத்தின் சிறப்பம்சங்கள்:* வாகன உரிமையாளருக்கு, இ - மெயில் அல்லது எஸ்.எம்.எஸ்., மூலம்இன்சூரன்ஸ் பாலிசி விவரங்கள் அனுப்பப்படும் * அதில், 'பார் கோடு, கியு.ஆர்., கோடு' போன்ற ரகசிய ... |
| எம்.ஜி.ஆர்., பிறந்த நாள்: ஜெ., பங்கேற்பு Posted: 17 Jan 2016 09:27 AM PST சென்னை: சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நேற்று நடந்த கட்சியின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின், 99வது பிறந்த நாள் விழாவில், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று, பிறந்த நாள் விழா மலரை வெளியிட்டார். மலரின் முதல் தொகுப்பை, கட்சியின் இலக்கிய அணிச் செயலரும், சமூக நலத்துறை அமைச்சருமான வளர்மதியும்; இரண்டாம் தொகுப்பை, மகளிர் அணிச் செயலரும், கைத்தறித்துறை அமைச்சருமான கோகுல இந்திராவும் பெற்றுக் கொண்டனர். இதன்பின், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பத்திரிகை யாளர்களுக்கு, முதல்வர் இனிப்பு ... |
| Posted: 17 Jan 2016 09:54 AM PST புதுடில்லி:''நம் வாழ்க்கைப் பாணியை, இயற்கையோடு இணைந்ததாக அமைத்துக் கொள்ள வேண்டும்,'' என, பிரதமர் மோடி பேசினார்.டில்லியில், மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவின் இல்லத்தில், 'மகா சங்கராந்தி' விழா நடந்தது. லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், குத்துவிளக்கேற்றி, விழாவைத் துவக்கி வைத்தார். இவ்விழாவில், பிரதமர் மோடி பேசியதாவது: இயற்கையை நேசிக்கும் இந்தியாவின் பாரம்பரியம், நமது திருவிழாக்களில்அடங்கியுள்ளது; இது, கடந்த மாதம் பாரிசில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மாநாட்டிலும் பிரதிபலித்தது.இயற்கை குறித்த இந்திய ... |
| Posted: 17 Jan 2016 10:01 AM PST தமிழக அரசின் நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவைகள் நிறுவன பெயரில் பொதுத்துறை வங்கி ஒன்றில், 'நிரந்தர வைப்புத் தொகை' என அழைக்கப்படும் 'பிக்சட் டிபாசிட்'டில் போடப்பட்ட 23 கோடியில் 20 கோடி ரூபாயை நான்கு பேர் மிகவும் லாவகமாக வேறு வங்கிக்கு மாற்றி அபகரித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியானது குறிப்பிட்ட நோக்கத்துக்கு பயன்படுத்தப்படும் வகையில், பொதுத்துறை வங்கிகளில் 'டிபாசிட்' செய்யப்பட்டு பராமரிக்கப் படும். தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவைகள் நிறுவனம், ... |
| 'பேச்சில் இருக்கும் வேகம் மோடியின் செயலில் இல்லை' Posted: 17 Jan 2016 10:51 AM PST பாட்னா: ''பிரதமர் மோடிக்கு, பேச்சில் இருக்கும் வேகம் செயலில் இல்லை,'' என ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறினார்.ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவராக, ஒன்பதாவது முறையாக, லாலு பிரசாத் யாதவ், போட்டியின்றி நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையொட்டி, பாட்னாவில் நடந்த பாராட்டு விழாவில் அவர் பேசியதாவது:லோக்சபா தேர்தலுக்கு பின், அனைத்து பிரசார கூட்டங் களிலும் மோடி ஆவேசமாக பேசுவார். 'பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டால்பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்; சரியான பதிலடி கொடுப்போம்' என்றார். ஆனால், மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்த பின், ... |
| நடப்பு ஆண்டில் வறட்சி ஏற்படுமா? Posted: 17 Jan 2016 01:28 PM PST 'நடப்பு ஆண்டில், கோடை வெயில் மிக கடுமையாக இருக்கும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அத்துடன், 'மழை பொய்த்து வறட்சி நிலவும்; தானிய உற்பத்தி குறையும்; உணவு பொருட்களின் விலை எகிறும்' என, கணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் முதல் மார்ச் வரை குளிர் காலம். ஆனால், 2015 நவம்பரில் துவங்கி, வரும் மார்ச்சில் முடிய உள்ள குளிர்காலம் எதிர்பார்த்தபடி இல்லை. வழக்கமாக, கடுங்குளிர் நிலவும் வட மாநிலங்களில், வெப்பம் அதிகரித்து உள்ளது. 'இந்த சீதோஷண நிலை மாற்றமே, வறட்சியை ஏற்படுத்தும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இந்திய வானிலை ஆய்வு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 18,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |