Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சமூக வலைதள பிரசாரங்கள் மூலம் மக்களை கவர தி.மு.க., திட்டம் : தொண்டர்களுக்கு தெம்பூட்ட கோர்ட்டிலும் ஆஜராகிறார் கருணாநிதி

Posted: 16 Jan 2016 06:25 AM PST

இந்த முறை எப்படியும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் மும்முரமாக உள்ள தி.மு.க., சமூக வலைதள பிரசாரங்கள் மூலம் மக்களை கவர திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில் தி.மு.க., தொண்டர்களுக்கு தெம்பூட்டவும் தேர்தல் பணிகளில் அவர்களை சுறுசுறுப்பாக ஈடுபட வைக்கவும் அ.தி.மு.க., அரசு தொடர்ந்துள்ள அவதுாறு வழக்கில் நாளை கோர்ட்டிலும் ஆஜராகிறார் கருணாநிதி. தமிழகத்தில் 2011ல் பொறுப்பேற்ற அ.தி.மு.க., அரசின் பதவிக்காலம் மே மாதத்துடன் முடிவதால் விரைவில் சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. அதற்காக இறுதி வாக்காளர் பட்டியலை வரும் 20ம் தேதி வெளியிட ...

தமிழக பா.ஜ., மீது பாய்ந்த 'ஜல்லிக்கட்டு'

Posted: 16 Jan 2016 06:30 AM PST

'ஜல்லிக்கட்டு விவகாரத்தை, சட்ட ரீதியாக அணுக வேண்டிய நேரத்தில், மக்களின் உணர்வு, நம்பிக்கை, கலாசாரம் எனக் கூறி, தேவையற்ற தர்ம சங்கடத்தை, தமிழக பா.ஜ., தலைவர்கள், மத்திய அரசுக்கு ஏற்படுத்திவிட்டனர்' என, அக்கட்சிக்குள் புகைச்சல் கிளம்பி உள்ளது. 'உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயலற்றதாக்க, அரசு ஆணை ஒன்று வெளியிடுவது தவறான முன் உதாரணம். இதை, பா.ஜ., அரசு செய்திருக்கக் கூடாது' என, பா.ஜ.,வின் தீவிர ஆதரவாளரும், விலங்குகள் நல ஆர்வலருமான ராதா ராஜன் சுட்டிக் காட்டினார்.

கட்டாயம்:
ஜனநாயகத்தில், நீதிமன்றத்தின் மாண்பை போற்ற வேண்டிய கட்டாயம் மத்திய, மாநில ...

எதிர்க்கட்சிகள் புதிய தேர்தல் வியூகம்: அ.தி.மு.க., காத்திருக்க முடிவு

Posted: 16 Jan 2016 06:36 AM PST

எதிர்க்கட்சிகளின் வியூகத்திற்கேற்ப, கூட்டணி வியூகம் அமைக்க, அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி பதவிக் காலம், மே மாதம் நிறைவு பெறுகிறது. ஏப்ரல் மாதம் இறுதியில் அல்லது மே துவக்கத்தில், தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

தனித்து போட்டி:
தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை, அனைத்து கட்சிகளும் துவக்கி விட்டன. அ.தி.மு.க., 2014 லோக்சபா தேர்தலில், தனித்து போட்டியிட்டது. அப்போது தி.மு.க., தலைமையில் ஒரு அணி, பா.ஜ., தலைமையில் ஒரு அணி போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது. பல முனை போட்டி காரணமாக, அ.தி.மு.க., 37 இடங்களில் ...

அமெரிக்காவுக்கு ஓடுபவர்களில் இந்திய இன்ஜினியர்களே அதிகம்: லட்சக்கணக்கில் செலவு செய்யும் அரசுகளுக்கு பயனில்லை

Posted: 16 Jan 2016 07:00 AM PST

வாஷிங்டன்:அமெரிக்காவுக்கு உலகின் பல நாடுகளை சேர்ந்த மாணவர்களும் படையெடுக்கின்றனர். அதில், ஆசியாவிலேயே, இந்தியர்கள் தான் அதிகளவில், அமெரிக்காவுக்கு ஓட்டம் பிடிப்பது தெரிய வந்துள்ளது. இன்ஜினியர்களையும், விஞ்ஞானிகளையும் உருவாக்க, மத்திய, மாநில அரசுகள் பல லட்சம் ரூபாய் செலவு செய்யும் நிலையில், படித்து முடித்து பட்டம் பெற்றதும், அமெரிக்கா உட்பட வெளிநாடுகளுக்கு பறந்து விடுகின்றனர். இன்ஜினியரிங், மருத்துவம், அறிவியல் ஆராய்ச்சி படிப்புகளுக்கு மாணவர்கள், செலவு செய்வதை போல், இரு மடங்கு கூடுதலாக, அரசு செலவு செய்கிறது. இவர்கள், படித்து முடித்த பின், ...

கருணை கொலை சரியா? சுப்ரீம் கோர்ட் விசாரணை

Posted: 16 Jan 2016 08:15 AM PST

புதுடில்லி:கருணைக் கொலை தொடர்பாக, மத்திய அரசின் நிலையை தெளிவுபடுத்தும்படி, சுப்ரீம் கோர்ட்டின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கேட்டுக் கொண்டுள்ளது.

'காமன் காஸ்' என்ற அரசு சாரா அமைப்பு, கருணைக் கொலையை அனுமதிக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளது. இம்மனுவை, சுப்ரீம் கோர்ட் நீதிபதி அனில் ஆர்.தவே தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, நேற்று விசாரித்தது.
அரசு சாரா அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் வாதம்:நீண்ட காலம் நோய்வாய்ப்பட்ட நபர், தான் உயிர் வாழ உதவும் மருத்துவ ...

15 நிமிடங்களில் ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேறும்: ராகுல்

Posted: 16 Jan 2016 08:19 AM PST

மும்பை,:''எங்கள் நிபந்தனைகளை ஏற்றால், 15 நிமிடங்களுக்குள், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை பார்லி.,யில் நிறைவேற்றுவதற்கு, ஒத்துழைப்பு அளிப்போம்,'' என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் பேசினார்.
பாத யாத்திரைமஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது; இங்கு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், நேற்று, மும்பை வந்திருந்தார். மஹாராஷ்டிராவில் நிலவும் மின்வெட்டை கண்டித்து, மும்பையின் பாந்த்ராவிலிருந்து, தாராவி வரை, கட்சி தொண்டர்களுடன் ...

'ஸ்டார்ட்அப்' நிறுவனங்களுக்கு மூன்று ஆண்டு வரிச்சலுகை

Posted: 16 Jan 2016 08:49 AM PST

புதுடில்லி: ''புதிதாக துவக்கப்படும் 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்களுக்கு உதவ, 10,000 கோடி ரூபாய் மதிப்பில் நிதியம் துவக்கப்படும். மூன்று ஆண்டுகளுக்கு வரிவிலக்கு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். டில்லி, விஞ்ஞான் பவனில் நடந்த நிகழ்ச்சியில், 'ஸ்டார்ட்அப் இந்தியா' திட்டத்தை துவக்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:தொழில் நிறுவனங்கள் விஷயத்தில், அரசின் தலையீடு வெகுவாக குறைக்கப்பட வேண்டும். இவ்விஷயத்தில், அரசிடம், தொழில்துறையினரின் எதிர்பார்ப்பை அறிய விரும்புகிறேன். 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்களை ...

கூடங்குளம் அணு உலை மூடப்பட்டது ஏன்? மத்திய அரசு விளக்கம்

Posted: 16 Jan 2016 09:36 AM PST

புதுடில்லி: ''தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணு உலையின் முதல் பிரிவு, அரசியல் காரணங்களுக்காக மூடப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை,'' என, பிரதமர் அலுவலகத் துறை, இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.டில்லி, தேசிய அறிவியல் மையத்தில், 2.50 கோடி ரூபாய் செலவில், அணுசக்தி கண்காட்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது; இதை, ஜிதேந்திர சிங் திறந்து வைத்து பேசியதாவது: தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணு உலையின் முதல் பிரிவு, அரசியல் காரணங்களுக்காக மூடப்பட்டதாக, ஊடகங்களில் வெளியான செய்தியில் உண்மையில்லை. தொழில்நுட்பம் ...

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியதால் மக்கள் கொதிப்பு: லிட்டர் ரூ.16க்கு விற்க வேண்டியதை தடுப்பதா என, கட்சிகள் ஆவேசம்

Posted: 16 Jan 2016 10:27 AM PST

புதுடில்லி: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தி, கச்சா எண்ணெய் விலை குறைப்பின் பயன்கள் கிடைக்க விடாமல் தடுத்து விட்டதால், பொதுமக்கள் கொதிப்படைந்துள்ளனர். டீசல் விலை லிட்டருக்கு, 16 மற்றும் பெட்ரோல் விலை, 20 ரூபாய்க்கு விற்க வேண்டியதை, மத்திய அரசு மாற்றி விட்டதாக, காங்கிரஸ் உட்பட, அரசியல் கட்சிகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன. சர்வ தேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை, 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. அதாவது, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, 2,010 ரூபாய்க்கும் கீழே குறைந்துள்ளது.அதற்கேற்ற வகையில், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை ...

ஒபாமாவுடன் அனுமன் சிலை:உடனடியாக மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் என்கிறார்

Posted: 16 Jan 2016 11:08 AM PST

வாஷிங்டன்: ''எனக்கு மூடநம்பிக்கை கிடையாது. அதே நேரத்தில் மனது சோர்வடையும்போது, என் சட்டை பாக்கெட்டில் உள்ள பொருட்களை எடுத்துப் பார்ப்பேன். உடனடியாக மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்,'' என்கிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா. அவருடைய பாக்கெட்டில் உள்ள பொருட்களில் அனுமனின் சிறிய சிலையும் ஒன்று.அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து, விரைவில் விலக இருக்கும் ஒபாமா, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது, 'உங்களுடைய பாக்கெட்டில் என்னென்ன பொருட்களை வைத்திருப்பீர்கள்' என, கேட்கப்பட்டது.உடனடியாக, தன் பாக்கெட்டில் இருந்து சில பொருட்களை எடுத்து ...

மெகபூபாவின் அரசியல் சதுரங்க விளையாட்டு வெற்றி பெறுமா? முடிவை அறிவிக்காமல் இழுத்தடிப்பதால் பரபரப்பு

Posted: 16 Jan 2016 01:15 PM PST

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், புதிய அரசு அமைப்பது குறித்து, எந்த முடிவையும் அறிவிக்காமல், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா, தொடர்ந்து அமைதியாக இருப்பது, அவருக்கு சாதகமான பலனைத் தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.ஜம்மு - காஷ்மீரில், பா.ஜ., - மக்கள் ஜனநாயகக் கட்சியான, பி.டி.பி., கூட்டணி அரசு கடந்த மார்ச்சில் பதவியேற்றது. முதல்வராக இருந்த, பி.டி.பி., தலைவர் முப்தி முகமது சயீது, சமீபத்தில் உடல்நலக் குறைவால் காலமானார். கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முப்தியின் மகள், மெகபூபா முப்தி, புதிய முதல்வராக பதவியேற்பார் என்று ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™