Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


கீரனூர் அருகே மனைவியைக் கொன்ற கணவர் கைது

Posted: 16 Jan 2016 01:22 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக கட்டையால் தாக்கி மனைவியைக் கொன்ற கணவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

திருக்கோகர்ணத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா

Posted: 16 Jan 2016 01:21 PM PST

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்ணேஸ்வரர் கோயிலில் தை மாதப்பிறப்பை முன்னிட்டு பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதி உலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஜெஜெ. கல்லூரியில் வேதியியல் கருத்தரங்கு

Posted: 16 Jan 2016 01:20 PM PST

புதுக்கோட்டை ஜெஜெ. கலை அறிவியல் கல்லூரியில் வேதியியல் துறை சார்பில் கருத்தரங்கு வியாழக்கிழமை நடந்தது.

மதகம் கிராமத்தில் பொங்கல் விளையாட்டுப் போட்டி

Posted: 16 Jan 2016 01:20 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், மதகம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை  பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

வாலியம்பட்டியில் பண்ணைப்பள்ளி பயிற்சி

Posted: 16 Jan 2016 01:17 PM PST

கந்தர்வகோட்டையை அடுத்துள்ள குன்றாண்டார்கோவில் வட்டாரத்தில் அட்மா விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் பண்ணைப்பள்ளி பயிற்சி வாலியம்பட்டி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பொங்கல் பண்டிகை: செரியலூரில் திருவிழா

Posted: 16 Jan 2016 01:17 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூர் கிராமத்தில் சனிக்கிழமை கொப்பித் திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டை தடுக்க தீவிர கண்காணிப்பு

Posted: 16 Jan 2016 01:16 PM PST

உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைத் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினரும், வருவாய்த் துறையினரும் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

புதுகை அருகே இந்திய கம்யூ. கொடியேற்று விழா

Posted: 16 Jan 2016 01:15 PM PST

புதுக்கோட்டை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை சங்கக் கொடியேற்று விழா வியாழக்கிழமை  நடைபெற்றது.

திருவள்ளுவர் சிலைக்கு மாலை

Posted: 16 Jan 2016 01:15 PM PST

திருவள்ளுவர் தினத்தையொட்டி புதுக்கோட்டையிலுள்ள திருவள்ளுவர் சிலைக்கு பல்வேறு இலக்கிய தமிழ் அமைப்பினர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினர்.

சத்திரக்குளத்தை தூர்வார நுகர்வோர் மன்றம் கோரிக்கை

Posted: 16 Jan 2016 01:14 PM PST

அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகிலுள்ள சத்திரக்குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டுமென நுகர்வோர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

மனநலக் காப்பகத்துக்கு கல்லூரி சார்பில் பொங்கல் பரிசு

Posted: 16 Jan 2016 12:27 PM PST

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ். தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் ஸ்ரீ அருணோதயா மனநலக் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா

Posted: 16 Jan 2016 12:26 PM PST

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. திருவள்ளூரை அடுத்த பாண்டூரில் இயங்கி வரும் இந்திரா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில்

மாற்றுத் திறனாளிக்கு வங்கி வணிகத் தொடர்பாளர் பணி

Posted: 16 Jan 2016 12:25 PM PST

ஆர்.கே.பேட்டை அருகே மாற்றுத் திறனாளிக்கு வங்கி வணிக தொடர்பாளராக பணிக்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் அண்மையில் வழங்கினார்.

விவசாயப் பரப்பு 40 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு

Posted: 16 Jan 2016 12:24 PM PST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பெய்த கனமழைக்குப் பிறகு, விவசாயிகள் விவசாயப் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளனர். இதனால், விவசாயம் செய்யும் நிலங்களின் பரப்பு 40 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாயத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பருவமழை காலத்தில் சிறப்பான பணி: ஆட்சியருக்கு பாராட்டு

Posted: 16 Jan 2016 12:24 PM PST

திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வெள்ளத்தின் போது சிறப்பாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவுக்கு, நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில் இயங்கி வரும் சர்வதேச மக்கள் உரிமை கமிட்டியினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கடலூர் அருகே: மரத்தில் கார் மோதியதில் மாணவர்கள் உள்பட 8 பேர் சாவு

Posted: 16 Jan 2016 12:23 PM PST

கடலூர் அருகே சனிக்கிழமை மரத்தில் கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை திரும்பப் பெற வேண்டும்:முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

Posted: 16 Jan 2016 12:22 PM PST

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

6 அம்மா மருந்தகங்கள், 13 பசுமைக் கடைகள் திறப்பு

Posted: 16 Jan 2016 12:21 PM PST

தமிழகத்தில் 6 இடங்களில் புதிதாக அம்மா மருந்தகங்களும், 13 இடங்களில் பண்ணை பசுமைக் கடைகளும் திறக்கப்பட்டன.

பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.310 கோடி அளிப்பு

Posted: 16 Jan 2016 12:21 PM PST

மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.310 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.

அலங்காநல்லூர், பாலமேட்டில் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டம்:கருப்புக் கொடி ஏந்தி வாடிவாசல் முற்றுகை

Posted: 16 Jan 2016 12:21 PM PST

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பாலமேட்டில் 5-ஆவது நாளாக சனிக்கிழமை பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலமானார்: ராமமூர்த்தி

Posted: 16 Jan 2016 12:12 PM PST

இந்தியன் எக்ஸ்பிரஸ் சென்னை அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ராமமூர்த்தி (75) ஜனவரி 16-ம் தேதி காலமானார்.

அறிவியலின் தாய் தமிழே!

Posted: 16 Jan 2016 11:29 AM PST

அறிவியல் சார்ந்த நிலையிலேயே பண்டைத் தமிழர் தம் வாழ்க்கை நெறிமுறைகளையும், நாகரிகத்தையும், பண்பாட்டையும், மொழியையும் தோற்றி, சீர்படுத்தி, நிலைப்படுத்திப் போற்றி வந்துள்ளனர் என்பதைத் தமிழ் இலக்கிய, இலக்கண நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது.

ஏறுதழுவுதலும் ஜல்லிக்கட்டும்

Posted: 16 Jan 2016 11:29 AM PST

கலித்தொகையில் முதல் ஏழு முல்லைக்கலிப் பாக்களில் விரிவாகக் கூறப்பெற்றுள்ள ஏறு தழுவுதலே, இன்று ஜல்லிக்கட்டு எனும் பெயரில் நிகழ்த்தப்பெறுகிறது என்ற செய்தி

இந்தவார கலாரசிகன்

Posted: 16 Jan 2016 11:27 AM PST

இந்தவார கலாரசிகன்

சொல் தேடல் -43

Posted: 16 Jan 2016 11:26 AM PST

சொல் தேடல் -43

தொழில்முனைவோருக்கு உகந்த வரி விதிப்பு பட்ஜெட்டில் அறிமுகம்: அருண் ஜேட்லி

Posted: 16 Jan 2016 11:21 AM PST

மத்திய பட்ஜெட்டில், தொழில்முனைவோருக்கு உகந்த வரி விதிப்பு முறை அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

தில்லியில் கடும் குளிர்: 45 ரயில்கள் ரத்து

Posted: 16 Jan 2016 11:20 AM PST

தலைநகர் தில்லியில் சனிக்கிழமையும் கடும் குளிர் நிலவியது. இதைத் தொடர்ந்து, 45 ரயில்களின் சேவையை வடக்கு ரயில்வே ரத்து செய்தது. மேலும்,14 ரயில்கள் தாமதமாகச் செல்வதாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்று இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த சில நாள்களாக தில்லி மற்றும் அண்டை மாநிலங்களான ஹரியாணா, சண்டீகர்,   உத்தரப் பிரதேசம் உள்ளிட்டவற்றில் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த வாரத் தொடக்கத்திலிருந்து குளிரின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. குளிர் காற்றும் தொடர்ந்து வீசி வருகிறது.

தேர்தல் பணிகளை தொடங்குங்கள்:அதிமுகவினருக்கு ஜெயலலிதா வேண்டுகோள்

Posted: 16 Jan 2016 11:20 AM PST

சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பான அனைத்துப் பணிகளையும் தொடங்க வேண்டும் என அதிமுகவினருக்கு கட்சியின் பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழர்களுடன் அதிகாரப்பகிர்வுக்கு இலங்கை அரசு தயார்: ரணில்

Posted: 16 Jan 2016 11:20 AM PST

தமிழர்களுடன் அதிகாரப்பகிர்வு செய்து கொள்ள இலங்கை அரசு தயாராக இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

உங்கள் பதவியை நீங்களே குறைத்து மதிப்பிட்டு கொள்கிறீர்கள்: நஜீப் ஜங்குக்கு நீதிபதி அகர்வால் கடிதம்

Posted: 16 Jan 2016 11:19 AM PST

"உங்கள் பதவியை நீங்களே குறைத்து மதிப்பிட்டு கொள்கிறீர்கள்' என்று தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கு, தில்லி அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவர் நீதிபதி அகர்வால் கடிதம் எழுதியுள்ளார்.

பெட்ரோல், டீசலுக்கு கலால் வரி உயர்வு: மத்திய அரசுக்கு கண்டனம்

Posted: 16 Jan 2016 11:19 AM PST

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டதற்காக மத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கூடுதல் மெட்ரோ ரயில் சேவை தொடரும்

Posted: 16 Jan 2016 11:19 AM PST

தில்லியில் வாகனக் கட்டுப்பாடு திட்ட அமலாகத்தின் போது மேற்கொள்ளப்பட்ட கூடுதல் மெட்ரோ ரயில் சேவை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) தெரிவித்துள்ளது.

கொடிய குற்றங்களில் ஈடுபடும் சிறார்களுக்கு இனி கடும் தண்டனை:சிறார் நீதி திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது

Posted: 16 Jan 2016 11:18 AM PST

சிறார் நீதி திருத்தச் சட்டம் வெள்ளிக்கிழமை முதல் (ஜன.15) அமலுக்கு வந்துள்ளது. இதனால், பாலியல் பலாத்காரம் போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபடும் 16 வயது நிரம்பிய சிறார்களுக்கு இனி கடும் தண்டனை கிடைக்கும்.

தில்லிக்கு சிறந்த மாநில விருது: எரிவாயு சேமிப்பு செயல்பாட்டில் முன்னணி

Posted: 16 Jan 2016 11:18 AM PST

எண்ணெய், எரிவாயு சேமிப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வரும் சிறந்த மாநிலத்துக்கான விருதை தில்லிக்கு எண்ணெய், எரிவாயு சேமிப்புக்கான அமைப்பு வழங்கியது. இந்த விருதை தில்லி சுற்றுச்சூழல் துறைச் செயலர் சுகேஷ் குமார் ஜெயின், சிறப்புச் செயலர் குலானந்த் ஜோஷி, இயக்குநர் அனில் குமார், முதுநிலை அறிவியல் அதிகாரி பி.சி. சபதா ஆகியோருக்கு பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வழங்கினார்.

2ஜி: அமலாக்கத் துறை வாதம் நிறைவு:வழக்கு மார்ச் 1-க்கு ஒத்திவைப்பு

Posted: 16 Jan 2016 11:18 AM PST

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடந்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய அமலாக்கத் துறை தரப்பு வாதம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வரும் மார்ச் 1-ஆம் தேதிக்கு தில்லி சிபிஐ நீதிமன்றம் ஒத்திவைத்தது.

நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராஜ்நாத் சிங் தலைமையில் ஆலோசனை:ஆபத்து மிகுந்த இடங்களில் ஆய்வு நடத்த முடிவு

Posted: 16 Jan 2016 11:17 AM PST

 நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர் நிலைக் குழுவினர் தில்லியில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர்.

தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் தின விழா

Posted: 16 Jan 2016 11:17 AM PST

தில்லி தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழ்ச் சங்க வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், சங்கத்தின் இணைச் செயலாளர்கள் சத்யா அசோகன், பி. குருமூர்த்தி,  செயற்குழு உறுப்பினர் கே.எஸ் முரளி, காத்திருப்பு உறுப்பினர் பா. குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

"கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதில் அரசியல் இல்லை

Posted: 16 Jan 2016 11:17 AM PST

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாம் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதன் பின்னணியில் எந்த அரசியல் காரணங்களும் இல்லை என்று மத்திய அணுசக்தித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

சிறுமி பாலியல் பலாத்கார சம்பவம்: பல்வேறு இடங்களில் போலீஸ் சோதனை

Posted: 16 Jan 2016 11:16 AM PST

தில்லி ஜகாத்புரியில் 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தில்லி மற்றும் தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளில் போலீஸார் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இருந்தாலும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டவர் கைது

Posted: 16 Jan 2016 11:16 AM PST

தேசியத் தலைநகர் வலயம், குர்கானில் கொலை, பணம் பறிப்ப் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த சுதர்ஸன் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். குர்கான் நஹர்பூர் பகுதியில் போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு அவர் பிடிபட்டார்.

ரூ.86 கோடியில் புதிய சேமிப்புக் கிடங்குகள்-கூட்டுறவுக் கடன் சங்கங்கள்:முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

Posted: 16 Jan 2016 11:16 AM PST

ரூ.86 கோடியே 87 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள், கூட்டுறவுக் கடன் சங்கங்கள் உள்ளிட்டவை திறக்கப்பட்டன.

குண்டுகளை துல்லியமாக கண்டுபிடிக்கும் மோப்ப நாய் "நான்ஸி'

Posted: 16 Jan 2016 11:15 AM PST

குடியரசு தினக் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ள தில்லி ராஜபாதை சாலையில் பாதுகாப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வீரர்களின் அணிவகுப்பு ஒத்திகை ஒரு பக்கத்தில் நடைபெற்று வந்தாலும், விழா மேடை அருகே பாதுகாப்பு ஒத்திகைகளும் தினந்தோறும் நடைபெற்று வருகின்றன.

மார்க்சிஸ்டுடன் கூட்டணி:காங்கிரஸுக்கு புத்ததேவ் அழைப்பு

Posted: 16 Jan 2016 11:15 AM PST

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸைத் தோற்கடிக்க வேண்டுமெனில், பிற இடதுசாரிக் கட்சிகளும், காங்கிரஸும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி சேர வேண்டும் என்று முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா அழைப்பு விடுத்துள்ளார்.

சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்படலாம் - கேஜரிவால்

Posted: 16 Jan 2016 11:15 AM PST

தனது அமைச்சரவை சகாக்களான மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோரின் அலுவலகங்களில் சோதனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டினார்.

பெட்ரோல் விலையை ரூ.20 ஆக குறைக்க வேண்டும்

Posted: 16 Jan 2016 11:14 AM PST

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 70 சதவீதம் வரை குறைந்துள்ள நிலையில், பெட்ரோல் விலையை ரூ.20 ஆக குறைக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிகிச்சைக்கு மீண்டும் பெங்களூர் செல்கிறார் கேஜரிவால்

Posted: 16 Jan 2016 11:14 AM PST

தொடர் இரும்பலுக்கு இயற்கை முறையில் சிகிச்சைப் பெற வரும் 22ஆம் தேதி மீண்டும் பெங்களூரு செல்கிறார் தில்லி முதல்வர் கேஜரிவால். இதுகுறித்து தில்லி அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

காலமானார்:ம.சங்கரலிங்கம்

Posted: 16 Jan 2016 11:13 AM PST

திமுகவைச் சேர்ந்த, மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் ம. சங்கரலிங்கம் (92), வெள்ளிக்கிழமை (ஜன.15) காலமானார்.

ஆசிரியையை மீண்டும் பணியமர்த்த சிசோடியாவுக்கு மாணவர்கள் கடிதம்

Posted: 16 Jan 2016 11:13 AM PST

பணியிடை மாற்றம் செய்யப்பட்ட அறிவியல் ஆசிரியையை மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்த வேண்டும் என்று வட கிழக்கு தில்லி ஜாப்ராபாதில் உள்ள ஜீனத் மஹால் சர்வோதயா பள்ளி மாணவர்கள், துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

திருவள்ளுவர் தினம்:கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் அமைப்புகள் மரியாதை

Posted: 16 Jan 2016 11:13 AM PST

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் அமைப்புகள் சனிக்கிழமை (ஜன.16) மலர் தூவி மரியாதைச் செலுத்தினர்.

புது தில்லி

Posted: 16 Jan 2016 11:12 AM PST

சுனந்தா புஷ்கரின் மரணம் இயற்கையாக நிகழ்ந்ததல்ல:தில்லி காவல்துறை ஆணையர் தகவல்

Posted: 16 Jan 2016 11:12 AM PST

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் இயற்கையாக நிகழ்ந்ததல்ல; அதேசமயம், அவரது மரணத்துக்கு கதிரியக்கத்தன்மை கொண்ட வேதிப்பொருள்கள் காரணமல்ல என்று ஆய்வக முடிவுகளில் தெரிய வந்துள்ளது என்று தில்லி மாநகர காவல் துறை ஆணையர் பி.எஸ்.பஸ்ஸி உறுதிபட தெரிவித்தார்.

தில்லி மாநகராட்சிகளின் நிதி நிலைமை: உயர் அதிகாரிகளுடன் கேஜரிவால் ஆலோசனை

Posted: 16 Jan 2016 11:12 AM PST

மாநகராட்சிகளின் தற்போதைய நிதி நிலைமை குறித்து ஆணையர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர்.

"2015-16}ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி சரிவடையும்'

Posted: 16 Jan 2016 11:11 AM PST

நடப்பு நிதியாண்டில் (2015-16) நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்துக்கும் கீழ் சரிவடைய வாய்ப்புள்ளதாக முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்தார்.

பாஜகவில் வார்டு தலைவர்கள் நியமனம்

Posted: 16 Jan 2016 11:11 AM PST

தில்லி பாஜகவின் 130 வார்டுகளுக்கான மண்டல (வார்டு) தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றத் தடை எதிரொலி: அஸ்ஸாமில் பாரம்பரிய எருமைச் சண்டை ரத்து

Posted: 16 Jan 2016 11:11 AM PST

உச்ச நீதிமன்றத் தடை உத்தரவுக்கு மதிப்பளிக்கும் விதத்தில், அஸ்ஸாம் மாநிலத்தில், பிஹு (பொங்கல்) பண்டிகையையொட்டி பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் போட்டியான எருமைச் சண்டை இந்த ஆண்டு கைவிடப்பட்டது. இருப்பினும், பாரம்பரிய அடையாளமாக உள்ளூர்வாசிகள் சிலர், எருமைச் சண்டை

பயங்கரவாதத் தலைவர் மசூத் அசார் கைது செய்யப்பட்டாரா?:குழப்பம் நீடிப்பு

Posted: 16 Jan 2016 11:10 AM PST

ஜெய்ஷ்- ஏ-முகமது பயங்கரவாத இயக்கத் தலைவர் மசூத் அசாரை பாகிஸ்தான் அரசு கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளதா? என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.

வாகனக் கட்டுப்பாடு திட்டம் முழு வெற்றி: முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பெருமிதம்

Posted: 16 Jan 2016 11:10 AM PST

தில்லியில் ஜனவரி 1 முதல் 15-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட வாகனக் கட்டுப்பாடு திட்டம் முழு வெற்றி பெற்றுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இந்தத் திட்டம் முடிவடைந்தாலும் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தொழில் தொடங்குவதை எளிமையாக்க மத்திய அரசு நடவடிக்கை

Posted: 16 Jan 2016 11:10 AM PST

புதிதாக தொழில் தொடங்குதல், அதை விட்டு வெளியேறுதல் ஆகிய நடவடிக்கைகளை எளிமையாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக, மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

Posted: 16 Jan 2016 11:09 AM PST

பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகளும், டீசலின் விலை லிட்டருக்கு 85 காசுகளும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளன.

வாகன கட்டுபாடு திட்டம் நிறைவு: தில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்

Posted: 16 Jan 2016 11:09 AM PST

தில்லியில் கடந்த 15 நாள்களாக அமலில் இருந்த வாகன கட்டுப்பாடு திட்டம் நிறைவடைந்த அடுத்த நாளான சனிக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.40 லாபம் கிடைக்கிறது

Posted: 16 Jan 2016 11:09 AM PST

பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.40-ம், டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.29-ம் மத்திய அரசுக்கு லாபமாகக் கிடைக்கிறது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

ஆம் ஆத்மி எம்எல்ஏவின் கணவருக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

Posted: 16 Jan 2016 11:08 AM PST

இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஆர்.கே. புரம் தொகுதி எம்எல்ஏ பர்மிலா தோகாஸின் கணவர் தீரஜுக்கு தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை ஜாமீன் வழங்கியது. தலித் பெண்களை ஜாதிப் பெயர் கூறி திட்டியதாகவும், அரசு அதிகாரியை தாக்க முயற்சி செய்ததாகவும் தீரஜுக்கு எதிராக தில்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

டிடிசிஏ அவதூறு வழக்கு:  கேஜரிவாலுக்கு நோட்டீஸ்

Posted: 16 Jan 2016 11:08 AM PST

தில்லி மாவட்ட, கிரிக்கெட் சங்கம் (டிடிசிஏ) தாக்கல் செய்த  அவதூறு மனுவுக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால்,பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

டிடிஇஏ பள்ளிகளில் திருவள்ளுவர் தின விழா

Posted: 16 Jan 2016 11:07 AM PST

தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் திருவள்ளுவர் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

சத்தீஸ்கர்: 4 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

Posted: 16 Jan 2016 11:07 AM PST

சத்தீஸ்கர் மாநிலம், பீஜாப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் 4 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தில்லியில் களைகட்டியது பொங்கல் திருவிழா: தமிழ்நாடு இல்லத்தில் உற்சாகக் கொண்டாட்டம்

Posted: 16 Jan 2016 11:07 AM PST

தில்லியில் பொங்கல் பண்டிகை வெள்ளிக்கிழமை களைகட்டியது. இதையொட்டி, கௌடில்யா மார்கில் உள்ள தமிழ்நாடு இல்ல வளாகத்தில் பாரம்பரிய  முறைப்படி தமிழர்கள் பொங்கல் வைத்து உற்சாகமாக பண்டிகையைக் கொண்டாடினர்.

பாஜகவில் இணைந்த பகுஜன் சமாஜ் எம்.பி.

Posted: 16 Jan 2016 11:06 AM PST

பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.யான ஜுகல் கிஷோர், அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொங்கல் கொண்டாட்டம்

Posted: 16 Jan 2016 11:06 AM PST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொங்கல் விழா பல்வேறு இடங்களில் கோலாகலமாக நடைபெற்றது.

சபரிமலை கோயில் தொடர்பான வழக்கு:பொது நல மனுவை திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் அனுமதி மறுப்பு

Posted: 16 Jan 2016 11:06 AM PST

கேரள மாநிலம், சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி தொடுக்கப்பட்ட பொது நல மனுவை திரும்பப் பெறுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளிக்க மறுத்துவிட்டது.

காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

Posted: 16 Jan 2016 11:05 AM PST

மாமல்லபுரம் காவல் ஆய்வாளராக சிரஞ்சீவி பொறுப்பேற்றார்.

வேன் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் காயம்

Posted: 16 Jan 2016 11:05 AM PST

காஞ்சிபுரம் அருகே சனிக்கிழமை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் காயமடைந்தனர்.

ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கான நேர்காணல் முகாம்

Posted: 16 Jan 2016 11:04 AM PST

காஞ்சிபுரத்தில் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கான நேர்காணல் முகாம் வரும் ஜனவரி 19-ஆம் தேதி நடைபெறுகிறது.

விமான விபத்தில் ஏற்பட்ட காயங்களால் நேதாஜி உயிரிழப்பு:பிரிட்டன் இணையதளத்தில் தகவல்

Posted: 16 Jan 2016 11:04 AM PST

தைவான் நாட்டில் கடந்த 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேரிட்ட விமான விபத்தின்போது ஏற்பட்ட காயங்களால் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்து விட்டார் என்று பிரிட்டனில் இயங்கும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு

Posted: 16 Jan 2016 11:04 AM PST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் சென்றவர்கள் இருவருடைய வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

பிஎஸ்என்எல் செல்லிடப்பேசி கட்டணம் 80 சதவீதம் குறைப்பு

Posted: 16 Jan 2016 11:03 AM PST

மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் செல்லிடப் பேசி ப்ரீபெய்டு அழைப்புக் கட்டணம் சனிக்கிழமை முதல் 80 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

இரு சக்கர வாகனத்தில் இருந்து விழுந்தவர் சாவு

Posted: 16 Jan 2016 11:03 AM PST

மாமல்லபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவர் இறந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மால்டா வன்முறை: குடியரசுத் தலைவரிடம் பாஜக முறையீடு

Posted: 16 Jan 2016 11:03 AM PST

மேற்கு வங்க மாநிலம், மால்டாவில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் பாஜக தலைவர்கள் சனிக்கிழமை புகார் மனு அளித்தனர்.

தூக்கில் தொங்கிய ஆண் சடலம் மீட்பு

Posted: 16 Jan 2016 11:03 AM PST

காஞ்சிபுரம் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வழக்குரைஞர்களால் சாமானியர்களுக்கு பாதிப்பு: சதானந்த கெளடா

Posted: 16 Jan 2016 11:02 AM PST

வழக்குரைஞர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதால், சாமானிய மக்கள் மேல் நீதிமன்றங்களை அணுகுவது சாத்தியமற்றதாக மாறி வருகிறது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்த கெளடா தெரிவித்தார்.

விபத்தில் முதியவர் சாவு

Posted: 16 Jan 2016 11:02 AM PST

காஞ்சிபுரம் அருகே மிதிவண்டி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் இறந்தார்.

மாமல்லபுரம்

Posted: 16 Jan 2016 11:01 AM PST

வெற்றி நெருக்கடியில் இந்திய அணி

Posted: 16 Jan 2016 11:01 AM PST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி நெருக்கடியில் இந்திய அணி, ஞாயிற்றுக்கிழமை களமிறங்குகிறது.

ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரிக்கு இரு தேசிய விருதுகள்

Posted: 16 Jan 2016 11:01 AM PST

கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுவாயலில் உள்ள ஆர்.எம்.கே. பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிக்கு தேசிய அளவிலான இரு விருதுகள் வழங்கப்பட்டன.

மகளிர் இரட்டையர் டென்னிஸ் தரவரிசை: சானியாவுடன் முதலிடத்தில் இணைந்தார் ஹிங்கிஸ்

Posted: 16 Jan 2016 11:00 AM PST

சர்வதேச மகளிர் இரட்டையர் டென்னிஸ் போட்டியின் தரவரிசையில் தனது ஜோடியான சானியா மிர்ஸாவுடன், முதலிடத்தில் இணைந்தார் சுவிட்சர்லாந்து வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிஸ்.

திருவள்ளுவர் தின விழா

Posted: 16 Jan 2016 11:00 AM PST

மாதவரம் வடக்கு பகுதி சார்பில் திமுகவினர் திருவள்ளூர் தின விழாவையொட்டி, மாதவரம் வடக்கு பகுதியில் உள்ள 16-ஆவது வட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் உள்ள திருவள்ளூர் சிலைக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன் விரோதத்தால் மோதல்: 22 பேர் கைது

Posted: 16 Jan 2016 10:59 AM PST

திருத்தணி அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 22 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பிரீமியர் பாட்மிண்டன் லீக்:இறுதிப் போட்டியில் தில்லி-மும்பை அணிகள் இன்று மோதல்

Posted: 16 Jan 2016 10:59 AM PST

பிரீமியர் பாட்மிண்டன் லீக் இறுதிப் போட்டியில் தில்லி ஏசர்ஸ் - மும்பை ராக்கெட்ஸ் அணிகள் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன.

திருக்குறள் ஹிந்தியில் விநியோகம்: தருண் விஜய்

Posted: 16 Jan 2016 10:59 AM PST

திருக்குறளை ஹிந்தி மொழியில் அச்சடித்து விநியோகித்து வருவதாக மாநிலங்களவை உறுப்பினர் தருண்விஜய் தெரிவித்தார்.

ஸ்டூவர்ட் பிராட் 6 விக்கெட்டுகள்:இங்கிலாந்து வெற்றி

Posted: 16 Jan 2016 10:59 AM PST

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் 6 விக்கெட்டுகளை கைப்பற்ற, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

அகதிகள் முகாமில் தகராறு: 4 பேர் கைது

Posted: 16 Jan 2016 10:58 AM PST

கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் தகராறு செய்ததாக, 4 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூரில் சமத்துவப் பொங்கல் விழா 

Posted: 16 Jan 2016 10:58 AM PST

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி பொது இடங்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

துறைமுக அலுவலர் மர்மச் சாவு

Posted: 16 Jan 2016 10:57 AM PST

தூத்துக்குடி துறைமுக அலுவலர், தனது வீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

பர்கினா ஃபாஸோ: பயங்கரவாதத் தாக்குதலில் 23 பேர் பலி

Posted: 16 Jan 2016 10:57 AM PST

மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினோ ஃபாஸோவிலுள்ள நட்சத்திர ஹோட்டல் மற்றும் அதன் அருகே உள்ள உணவு விடுதியில் அல்-காய்தா தொடர்பு பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர்.

குரும்பூர் அருகே நீரில் மூழ்கி டிவி மெக்கானிக் சாவு

Posted: 16 Jan 2016 10:56 AM PST

குரும்பூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடி சுனையில் மூழ்கி டி.வி. மெக்கானிக் சனிக்கிழமை இறந்தார்.

காணும் பொங்கல்: கடற்கரை, பூங்காக்களில் குவிந்த மக்கள்

Posted: 16 Jan 2016 10:56 AM PST

மாட்டுப் பொங்கல் மற்றம் காணும் பொங்கலையொட்டி தூத்துக்குடி கடற்கரை, பூங்காக்களில் சனிக்கிழமை ஏராளமான மக்கள் குவிந்தனர்.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

Posted: 16 Jan 2016 10:55 AM PST

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.

பொத்தகாலன்விளை மாதா கோயில் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

Posted: 16 Jan 2016 10:55 AM PST

சாத்தான்குளம் அருகே பொத்தகாலன்விளை புனித திருக்கல்யாண மாதா திருத்தல 103 ஆவது தேரோட்டத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தைவானின் முதல் பெண் அதிபர் ஆகிறார் சய்-யிங்வென்

Posted: 16 Jan 2016 10:54 AM PST

தைவானில் சனிக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக முன்னேற்றக் கட்சி அமோக முன்னிலை பெற்றதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் முதல் பெண் அதிபராக சய்-யிங்வென் (59) தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

ஐ.எஸ்.ஸை அழிக்க சர்வதேச கூட்டு முயற்சி:ஒபாமா வலியுறுத்தல்

Posted: 16 Jan 2016 10:54 AM PST

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத இயக்கத்தை அடியோடு அழிப்பதற்கு சர்வதேச அளவில் பல்வேறு வகையிலான கூட்டு முயற்சி தேவை என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார்.

கழுகுமலை கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

Posted: 16 Jan 2016 10:53 AM PST

கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™