Tamil News | Online Tamil News |
- பஸ் எரிப்பவர்கள் மீது நடவடிக்கைக்குதயக்கமா? கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
- வாழ்த்து பெற்றவர்களுக்கு ரூ.10 கருணாநிதி பரிசு
- ஜல்லிக்கட்டிற்கு சட்ட முயற்சி
- கனிமொழி, ராஜா வழக்கு விரைவில் நிறைவடைகிறது
- சசி தரூர் மனைவி மரணம், இயற்கையானதல்ல
- துரோகியை விட விரோதி மேல்: மேற்கு வங்க காங்கிரஸ் முடிவு
- ராணுவ அமைச்சர், தே.பா.ஆலோசகருடன் ராஜ்நாத் ஆலோசனை:நாடு முழுவதும் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு
- மசூத்தை கைது செய்யல: பாக்., அமைச்சர் விளக்கம்
- சிறார்களுக்கு பீடி, சிகரெட், பான்பராக் விற்றால் 7 ஆண்டு 'கம்பி' எண்ணணும்: ரூ.ஒரு லட்சம் அபராதமும் உண்டு என புதிய சட்டத்தில் தகவல்
- ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி விருது
| பஸ் எரிப்பவர்கள் மீது நடவடிக்கைக்குதயக்கமா? கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி Posted: 15 Jan 2016 06:48 AM PST புதுடில்லி: 'பஸ்களை தீ வைத்து கொளுத்தும் வன்முறை கும்பல் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?' என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.இந்த விஷயத்தில், அரசியல் கட்சிகள், அசைந்து கொடுக்க மறுத்தால் கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளது.அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளின் போராட்டங்களில், பஸ்களை அடித்து நொறுக்குதல், பொது சொத்துகளுக்கு தீ வைத்தல் போன்ற வன்முறை சம்பவங்கள் நிகழ்கின்றன. இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதையடுத்து,பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால், போராட்டம் நடத்தும் ... |
| வாழ்த்து பெற்றவர்களுக்கு ரூ.10 கருணாநிதி பரிசு Posted: 15 Jan 2016 07:24 AM PST சென்னை: பொங்கல் திருநாளை முன்னிட்டு, தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன்னிடம் வாழ்த்து பெற்றவர்களுக்கு தலா, 10 ரூபாய் வழங்கினார். சென்னை, கோபாலபுரத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வீடு உள்ளது. அவரிடம் பொங்கல் வாழ்த்து பெற, சென்னை உட்பட, பல மாவட்டங்களில் இருந்தும், ஏராளமான தி.மு.க., தொண்டர்கள் நேற்று காலை அவரது வீட்டு முன் குவிந்தனர்.தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், மனைவி துர்காவுடன் வந்து கருணாநிதி மற்றும் தாயார்தயாளுவை சந்தித்து பொங்கல் வாழ்த்து பெற்றனர். தி.மு.க., வை சேர்ந்த முன்னாள் மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உட்பட பலர், ... |
| Posted: 15 Jan 2016 07:46 AM PST சென்னை: ''ஜல்லிக்கட்டை நடத்த சட்ட ரீதியாக முயற்சிக்கப்படும்,'' என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார். சென்னையில் அவர் கூறியதாவது:- ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை தான் விதித்துள்ளது; முற்றிலும் தடை செய்யவில்லை. ஜல்லிக்கட்டை நடத்த சட்ட ரீதியான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. தமிழக அரசின் பரிந்துரைகளை ஏற்று இன்னும் ஒரு வாரத்தில் சட்ட ரீதியாக உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு அணுகும் என்றார். |
| கனிமொழி, ராஜா வழக்கு விரைவில் நிறைவடைகிறது Posted: 15 Jan 2016 07:49 AM PST புதுடில்லி:'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக டில்லியில் சி.பி.ஐ., விசேஷ கோர்ட்டில் நேற்று அமலாக்க இயக்குனரக தரப்பு இறுதி வாதம் முடிந்தது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, அவர் அமைச்சரவையில், தி.மு.க.,வை சேர்ந்த ராஜா தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்தார்.அப்போது நடைபெற்ற '2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்குடன்தொடர்புடைய ராஜா, கனிமொழி எம்.பி., போன்றோருக்கு எதிரான சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு சி.பி.ஐ., விசேஷ கோர்ட்டில் நடக்கிறது.சிறப்பு நீதிபதி ஓ.பி.ஷைனி முன் வாதிட்ட சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர்,''தி.மு.க., நடத்தும் கலைஞர் 'டிவி' ... |
| சசி தரூர் மனைவி மரணம், இயற்கையானதல்ல Posted: 15 Jan 2016 08:07 AM PST புதுடில்லி: 'சசி தரூர் மனைவி மரணம், இயற்கையானதல்ல; எனினும், 'பொலோனியம்' போன்ற கதிரியக்க மருந்துகளும் அவரின் மரணத்திற்கு காரணமல்ல' என, எப்.பி.ஐ., எனப்படும், அமெரிக்க புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி.,யும் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான சசி தரூரின் மனைவி சுனந்தா, 2014, ஜனவரியில், டில்லி ஓட்டல் அறையில், மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.அவர் மரணத்திற்கு, விஷம் காரணமாக இருக்கலாம் என, டில்லி, எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறினர்; எனினும், உறுதியாக கூறவில்லை.இதையடுத்து, மேல் ஆய்வுக்காக, சுனந்தாவின் உடல் உள் உறுப்புகள், ... |
| துரோகியை விட விரோதி மேல்: மேற்கு வங்க காங்கிரஸ் முடிவு Posted: 15 Jan 2016 08:11 AM PST கோல்கட்டா: 'துரோகி' திரிணமுல் காங்கிரசை வீழ்த்த, 'எதிரி' மார்க்சிஸ்டுடன் கைகோர்ப்பதில் தவறில்லை' என, கட்சி காங்கிரஸ் மேலிடத்தை, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது, இந்த மாநிலத்தில், ஏப்ரல் - மே மாதங்களில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து, மாநிலத்தில், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தில், 34 ஆண்டுக்கு மேல், தொடர்ந்து ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் அரசை, 2011ல் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் படுதோல்வியடைய ... |
| ராணுவ அமைச்சர், தே.பா.ஆலோசகருடன் ராஜ்நாத் ஆலோசனை:நாடு முழுவதும் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு Posted: 15 Jan 2016 08:40 AM PST புதுடில்லி: உள்நாட்டு பாதுகாப்பு குறித்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று, ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் உயரதிகாரிகள், டில்லியில் ஆலோசனை நடத்தினர்.பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள், இந்தியாவுக்குள் ஊடுருவி, அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில், பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஏழு ராணுவ வீரர்கள் பலியானது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் வெளியுறவுத்துறை செயலர்கள் நேற்று ... |
| மசூத்தை கைது செய்யல: பாக்., அமைச்சர் விளக்கம் Posted: 15 Jan 2016 09:18 AM PST லாகூர்,: பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமான தளத்தில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு காரணமான, பயங்கரவாத தலைவன் மவுலானா மசூத் அஸார் கைது செய்யப்படவில்லை; பாதுகாப்பு காவலில் உள்ளான் என, பாக்., அமைச்சர் கூறியுள்ளார். இம்மாத துவக்கத்தில், பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமான தளத்தில் ஊடுருவிய, ஜெய்ஷ் - இ - முஹமது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஏழு வீரர்கள்கொல்லப்பட்டனர்; பயங்கரவாதிகள் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இச்சம்பவத்துக்கு, 'மசூத் அசார் தான் காரணம்' என, இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. அதைத் தொடர்ந்து, அவன் கைது செய்யப்பட்டதாக ... |
| Posted: 15 Jan 2016 10:39 AM PST புதுடில்லி: சிறார்களுக்கு, பீடி, சிகரெட், மது, பான்பராக், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வோருக்கு, ஏழு ஆண்டுகள் சிறையும், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கும், புதிய சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த மாதம் முடிவடைந்த, பார்லிமென்டின் குளிர் கால கூட்டத் தொடரில், சிறார் நீதிச்சட்ட திருத்த மசோதா - 2015 நிறைவேற்றப்பட்டது. இதற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஒப்புதல் அளித்ததை அடுத்து, அந்தச் சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்கான அரசாணையை, குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சகம் ... |
| ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி விருது Posted: 15 Jan 2016 11:46 AM PST ஹிசார்:ஹரியானா மாநிலம், ஹிசார் நகரில், நேற்று நடந்த, ராணுவ தின விழாவில், துணிச்சலுடன் செயல்பட்ட வீரர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி விருதுகள் வழங்கி கவுரவித்தார்.ஹரியானாவில், பா.ஜ.,வை சேர்ந்த மனோகர்லால் கட்டார் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், ஹிசார் நகரில் நேற்று, ராணுவ தினம் அனுசரிக்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற, பிரதமர் நரேந்திர மோடி, வீறு நடை போட்டு வந்த ராணுவ வீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார். துணிச்சலுடன் பணியாற்றிய ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, விருதுகள் வழங்கி கவுரவித்தார்.இதுபற்றி, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், மோடி ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 16,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |