Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மோடி பொங்கல் வாழ்த்து: 'பொங்கிய' தமிழர்கள்

Posted: 14 Jan 2016 07:41 AM PST

புதுடில்லி,:சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' பொங்கல் வாழ்த்து கூறிய பிரதமர் மோடிக்கு, ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பாக, ஏராளமான தமிழர்கள், 'ரீ டுவிட்' செய்து, பொங்கித் தீர்த்தனர். பிரதமர் நரேந்திர மோடி, தன் முக்கியமான நிகழ்ச்சிகள், வெளிநாட்டு பயணங்கள் போன்ற விஷயங்களை, சமூக வலைதளமான, டுவிட்டரில் உடனுக்குடன் பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில், ஆப்கானிஸ்தானிலிருந்து, திடீரென பாகிஸ்தானுக்கு பயணம் செய்ததை கூட, டுவிட்டர் மூலமாகவே தெரிவித்திருந்தார். இதேபோல், முக்கியதலைவர்களின் பிறந்த நாள், முக்கியமான பண்டிகை ...

வாகன கட்டுப்பாடுக்கு சுப்ரீம் கோர்ட் ஆதரவு: டில்லி அரசின் நடவடிக்கையால் குறைந்தது மாசு

Posted: 14 Jan 2016 08:15 AM PST

புதுடில்லி,: தலைநகர் டில்லியில், வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை, அவசரமாக விசாரிக்க, சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. விளம்பர வெளிச்சம் தேடுவதற்காக, இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதாகவும், சுப்ரீம் கோர்ட் கண்டித்துள்ளது.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், காற்று மாசு அதிகரித்து விட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, காற்று மாசை குறைக்கும் வகையில், வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ...

பதன்கோட் தாக்குதல் எதிரொலி: இந்தியா - பாக்., பேச்சு இல்லை

Posted: 14 Jan 2016 08:18 AM PST

புதுடில்லி :இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் இடையே, இன்று நடைபெற இருந்த பேச்சு, ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான அமைதி பேச்சு, எல்லையில் நடந்த விரும்பத் தகாத சம்பவங்கள் காரணமாக முடங்கி இருந்தது. இந்நிலையில், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சமீபத்தில் பாகிஸ்தான் சென்று, அந்த நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து, இரு தரப்பு உறவு குறித்து பேச்சு நடத்தினார். இதைத் தொடர்ந்து, ஆப்கன் சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து, திடீரென பாகிஸ்தானுக்கு சென்று, நவாஸ் ஷெரீப்புடன் பேச்சு நடத்தினார். அப்போது, இரு நாடுகளின் வெளியுறவுச் ...

ஜல்லிக்கட்டு தடையை மீறினால் என்னவாகும்: தர்மசங்கடத்தில் தமிழக அரசு

Posted: 14 Jan 2016 08:57 AM PST

ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில், மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணைக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதனால், 'அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்' என, மத்திய, மாநில அரசுகள் மாறி, மாறி வலியுறுத்தி வருகின்றன.இதைப் பார்க்கும் போது, மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வராது என்பது தெளிவாகி விட்டது. மாநில அரசும், அவசர சட்டம் கொண்டு வர தயாராக இருப்பதாக தெரியவில்லை. அத்துடன், இந்த விஷயத்தில், உச்ச நீதிமன்றத்துடன் மோதல் போக்கை கடைபிடிக்க, மாநில அரசு விரும்பவில்லை.அதேநேரத்தில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தடையால், ஜல்லிக்கட்டு நடக்காமல் தடுக்க வேண்டிய பொறுப்பு, ...

'அவதூறு வழக்கில் ஆஜராவேன்'

Posted: 14 Jan 2016 09:09 AM PST

சென்னை: 'அவதுாறு வழக்கிற்காக, வரும், 18ல், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ஆஜராக முடிவு செய்துள்ளேன்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை: முதல்வர் ஜெயலலிதா, என் மீது தொடுத்திருக்கும் அவதுாறு வழக்கை சந்திக்க, தயாராக இருக்கிறேன். தி.மு.க., வழக்கறிஞர்கள் என்னை சந்தித்து, இந்த வழக்கில் இடைக்காலத் தடை உத்தரவு பெறலாம் என, யோசனை தெரிவித்தனர்; அதற்குமறுத்து

விட்டேன். நீதிமன்றத்தில் ஆஜராவதாகவும் தெரிவித்து விட்டேன்.வரும், 18ம் தேதி காலை, 10:30 மணிக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு நேரில் ...

'ஏழைகளின் தேவை மொபைல் போன் அல்ல': உலக வங்கி காட்டம்

Posted: 14 Jan 2016 09:25 AM PST

வாஷிங்டன்: 'உலகில், ஏழைகளுக்கு, சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதி ஆகியவற்றை விட, மொபைல் போன் தான் தேவைப்படுகிறது; அது, எந்த வகையிலும் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தாது' என, உலக வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், உலக வங்கி உள்ளது. 'டிஜிட்டல்' சாதனங்களின் வரவு மற்றும் அதனால் உலக மக்களின் வாழ்க்கை தர மேம்பாடு குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.அதன் முக்கிய அம்சங்களாவன: உலக மக்கள்தொகையில், ஏழைகளின் எண்ணிக்கையை, வரும், 2030க்குள், 3 சதவீதமாக குறைக்கும் நோக்குடன், உலக நாடுகள் செயல்பட வேண்டும். கடந்த, 10 ஆண்டுகளில், இணையத்தை ...

மேலும் சரிவடையும் கச்சா எண்ணெய்: எரிபொருள் விலை குறையுமா?

Posted: 14 Jan 2016 09:26 AM PST

சிங்கப்பூர் : சர்வதேச சந்தையில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 30 அமெரிக்க டாலருக்கும் கீழாக சரிவடைந்தது. கடந்த வாரம், 'அமெரிக்காவில், கச்சா எண்ணெய் இருப்பு, மதிப்பீட்டை விட, இரண்டு லட்சம் பீப்பாய்கள் அதிகமாக உள்ளது' என, அந்நாட்டு எரிசக்தி தகவல் நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து, கச்சா எண்ணெய் விலை, மளமளவென வீழ்ச்சி கண்டு வருகிறது. அமெரிக்காவின், ஒரு பீப்பாய், டெக்சாஸ் பிராண்டு கச்சா எண்ணெய், 30.60 டாலராகவும், 'பிரென்ட்' பிராண்டு, 29.90 டாலராகவும் சரிவடைந்துள்ளன. இது, 12 ஆண்டுகளுக்கு முன் காணப்பட்ட விலையாகும்.சீனா, பிரேசில் ஆகிய நாடுகளில், தொழிற்துறை மந்தமாக ...

அரசின் பொங்கல் பரிசை வாங்க மறுத்தவர்கள் 10 லட்சம் பேர்: குறைகிறது இலவசங்கள் மீதான கவர்ச்சி?

Posted: 14 Jan 2016 10:30 AM PST

சென்னை உட்பட, பல மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்குப் பின், அரசின் இலவச திட்டங்கள் மீதான கவர்ச்சி, மக்களுக்கு குறைந்து வருகிறது. இதன் விளைவாக, தமிழக அரசின் பொங்கல் பரிசை வாங்க, 10 லட்சம் பேர் மறுத்துள்ளனர்.தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியின் போது, 1.52 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச கலர், 'டிவி' வழங்கப்பட்டது. 2011ல் அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், 1.85 கோடி குடும்பத்தினருக்கு, இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி அல்லது மின் அடுப்பு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளில், இலவச பொருட்கள் வழங்க, 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டு ...

மத்திய அரசின் சூரிய சக்தி மின் நிலையம் கை நழுவியது: தமிழக அதிகாரிகளின் அலட்சியத்தால் பறிபோனது வாய்ப்பு

Posted: 14 Jan 2016 11:10 AM PST

தேசிய அனல் மின் கழகமான, என்.டி.பி.சி.,யின் பிரம்மாண்ட சூரிய சக்தி மின் நிலையத்தை, தமிழகத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் கோட்டை விட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்காத, சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைக்க, மத்திய அரசு பல திட்டங்களை அறிவித்து, மானியம், கடன் உள்ளிட்ட சலுகைகளை வழங்கி வருகிறது. 'ராஜஸ்தான், தமிழகம், குஜராத் மற்றும் ஜம்மு - காஷ்மீரில், பிரம்மாண்ட சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க, 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என, மத்திய அரசு, 2014ல் அறிவித்தது.தமிழகம் தவிர்த்த மற்ற மாநிலங்கள், மத்திய அரசிடம் நிதி ...

மோடி பாணியில் ரகுராம் ராஜன்: ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கு கடிதம்

Posted: 14 Jan 2016 11:58 AM PST

மும்பை: 'ரிசர்வ் வங்கி, ஒரு பழமைவாத, பிற்போக்கான அமைப்பு என்ற விமர்சகர்களின் கருத்தை மாற்ற, துடிப்புடன் செயல்படுங்கள்' என, ரிசர்வ் வங்கி கவர்னர், ரகுராம் ராஜன், 17 ஆயிரம் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ரிசர்வ் வங்கி செயல்பாடுகளில், அறிவார்ந்த சிந்தனைகளை விட, பாரம்பரிய, பழமைவாத தாக்கமே மேலோங்கியுள்ளதாக, விமர்சகர்கள் கூறுகின்றனர். அத்தகைய தோற்றத்தை மாற்ற, ஊழியர்கள் கடுமையாக பாடுபட வேண்டும். நம் விதிமுறைகள் கூட, நம் ஊழியர்களுக்கு முழுமையாக தெரிவதில்லை. அவற்றை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™