Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!

Posted: 14 Jan 2016 03:44 PM PST

வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே! https://www.facebook.com/100003968327877/videos/526342254174714/?theater அனைவரும் பார்க்கத் தவறாதீர்கள்.நீங்கள் உண்மையான தமிழர் என்றால்Posted by Krishna Zi Teng on Saturday, January 17, 2015

2047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Posted: 14 Jan 2016 03:28 PM PST

உறவுகளுக்கு என் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்! திருவள்ளுவராண்டு 2047 - சுறவம் (தை) முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு தினம்! வரவேற்போம் தமிழ்ப் புத்தாண்டை.....

பகலவனுக்கு வாழ்த்துப்பா

Posted: 14 Jan 2016 03:21 PM PST

காரிருள் கவ்விடும்  அதிகாலையிலேயே  கண்திறக்கும் முன்னே  காந்தக் கதிர்களால்  பொன்னொளி வீசி  புதுப் பொலிவுடன்  புதியதாய் பிறக்கும்  பொன்னாள்  உன்னாலே அன்றி  வேறில்லை!!  பகலவனே நீ கண்திறந்தால்  காரிருள் மட்டும் அல்ல!  கஷ்டங்களும்  விலகி விடும்!!  ஒவ்வொரு விடியலும்  வெளிச்சம் மட்டும் அல்ல! ஒவ்வொரு விடியலும்  வெற்றியை தரும் விடியல்தான்!!  வேர்வை சிந்ததும்  விவசாயிகளையும் விவசாயத்தையும்  செழிக்க செய்கிறாய்!!  விருப்பு வெறுப்பு இன்றி  விரும்பி ஏற்பதும்  உன்னைத்தான்!  நீ ...

தை முதல் நாளே "தமிழ்ப் புத்தாண்டு தினம்"

Posted: 14 Jan 2016 03:16 PM PST

இந்த கட்டுரை "தெய்வ முரசு" ஆன்மீக மாத இதழில் வெளியானது. தொலைக் காட்சியில் செய்திகள் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்தன. திடீரென உற்சாகத்தோடு துள்ளிக் குதிக்கும் படி ஒரு செய்தி படிக்கப்பட்டது. அது இது தான்: இன்று (29-1-2008) சட்ட மன்றத்தில் தை முதல் நாளை இனி தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொள்வதென சட்ட முன்னாக்கம் மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. ஆ! இதைவிட மகிழ்ச்சியான செய்தி வேறென்ன இருக்க முடியும்? இது தமிழறிஞர்களின் எத்தனை நாள் கனவு? இது தமிழ் மூதாதையர்களின் எத்தனை நாள் தினவு! காலையில் ...

பொங்கல் - எந்தன் வரிகளில்

Posted: 14 Jan 2016 10:02 AM PST

பொங்கல் - எந்தன் வரிகளில் நாளை மட்டுமல்ல எங்கள் வீட்டில் நாள்தோறும் பொங்கல். எப்படி? உலையில் அரிசி போட்டுவிட்டு உத்தமி உறங்கினால் பொங்கல். பானையில் அரிசி போட்டுவிட்டு பாவை பக்கத்து வீடு போனால் பொங்கல். சாதம் கொதிக்கும் போது என்மேல் கோபம் வந்தால் பொங்கல். சமையல் செய்யச் சொல்லி நான் சமைக்காவிட்டால் பொங்கல். இப்படி எங்கள் வீட்டில் நாள்தோறும் பொங்கல். ச. சந்திரசேகரன்

பொங்கல் வாழ்த்துக்கள்.

Posted: 14 Jan 2016 09:57 AM PST

பெயர்: கிாி
சொந்த ஊர்: மணப்பாறை
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: கூகுள்
பொழுதுபோக்கு: நெட்டில் அலைவது
தொழில்: சுயதொழில்
மேலும் என்னைப் பற்றி: குறிப்பிடும்படி இன்னும் எதுவும் செய்யவில்லை...

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.......

போகி - எந்தன் கவிதை

Posted: 14 Jan 2016 09:14 AM PST

போகி - எந்தன் கவிதை

என் இல்லாள்
பழையன கழித்தபோது
பழகிய என்னை கழிக்கவில்லை.

என் இல்லாள்
பழையன எரித்துக் கூட்டியபோது
பழகிய என்னை கூட்டிக்கொண்டாள்
நானும் கூடிக்கொண்டேன்.
ச.சந்திரசேகரன்.

தொப்பை

Posted: 14 Jan 2016 08:39 AM PST

தொப்பையை குறைக்க ஏதேனும் மருந்து இருந்தால் கூறவும்....

நான்கு நல்ல வார்த்தைகளைப் படித்துச் சிலிர்க்கத்தான்!

Posted: 14 Jan 2016 08:01 AM PST

- பொண்ணுக இல்லாத அத்தைகள் மட்டும்தான் என்னை, மருமகனே'னு கூப்பிடுறாங்க #டிசைன் அப்படி - ---------------------------------- - சர்வீஸ் பண்றேன்'னு வந்தவன் எல்லாம் எல்லாம் சம்பாதிக்கிறான், சம்பாதிக்க வந்தவன் எல்லாம் சர்வீஸ் பண்றான், இந்தியாடா...! - ------------------------------ - நமக்குப் பிடித்ததைச் செய்ய, தைரியமே அதிகமாகத் தேவைப்படுகிறது! - -------------------------------- - பெரும்பாலான அம்மாக்கள், ஃபிரிட்ஜைத் திறந்து வெச்சுட்டுதான் என்ன எடுக்கணும்னு யோசிக்கிறாங்க! - --------------------------------- - நான் ...

ஜல்லிக்கட்டு தேவையா! - சத்குரு சொல்வதென்ன?

Posted: 14 Jan 2016 06:42 AM PST

- ஒரு பெண்ணுக்கு அழகு எப்படியோ, அதைப் போலத்தான் ஆணுக்கு வீரமும். தன் வீரத்தையும், தன் துணிவையும், தன் திறமையையும் வெளிபடுத்தக்கூடிய பல வாய்ப்புகளை கிராமப்புற இளைஞர்கள் இன்று இழந்து நிற்கிறார்கள். தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, கிராமப்புறத்தைச் சேர்ந்த தமிழக இளைஞர்கள் தங்கள் வீரத்தை, தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பு. இவை எல்லாவற்றையும்விட, மது போதை பழக்கங்களுக்கு இளைஞர்கள் அடிமையாகாமல் இருக்க இது வழிசெய்கிறது. ஏனெனில், இதுபோன்ற ஒரு ...

ஒண்ணாம் வகுப்பு ' டிஸ்கன்டினியு ' தமிழகத்தில் ஹெட்மாஸ்டர்!

Posted: 14 Jan 2016 05:10 AM PST

கிருஷ்ணகிரியில் போலி சான்றிதழ் மூலம் அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வந்த 1-ம் வகுப்பு 'டிஸ்கன்டினியு' ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். போலீசில் பிடிபட்டால்தான் அவர் உண்மையில் பணியில் எவ்வாறு தாக்குபிடித்தார் என்பது தெரியவரும். கிருஷ்ணகிரி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்து பிடிபட்டார். இவரிடம் போலி சான்றிதழ்கள் பெற்ற பலரும் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் ஆசிரியர்களாக பணியாற்றி வருவது விசாரணையில் தெரிய வந்தது. பாலக்கோட்டைச் ...

எழுத்து

Posted: 14 Jan 2016 04:30 AM PST

கண்ணுக்குள் புகுந்தால்             சிந்தையில் அலைந்தால் பேனா மையில் பிறந்தால்             புத்தகமாக வளர்ந்தால் நூலகத்தில் அமர்ந்தால்         காற்று இல்லாத இடத்திலும் புகுந்தால் எழுத்து என்ற குழந்தைக்கு              புத்தகம் தந்தையாகவும் பேனா மை   தாயாகவும்                நாம் கடவுளாகவும் இருக்கும் வரை யாராலும்               இதை அழிக்க முடியாது                           by  நமண்டி ராஜசேகரன்

காதலியே....

Posted: 14 Jan 2016 03:21 AM PST

கார்கால  காலையிலே  காதலியே உன்னை  காணயிலே!  கண் கொள்ளா  காட்சியாய்  காணும் யாவையும்  கண்ணே உந்தன்  கண்கள் தானே  கண் முன் தோணுதடி!!  கற்பனை இல்லாத  காவியமே!! நீ  கற்சிலை இல்லையடி!  கற்சிலை இல்லையடி!! இதயம் மட்டும் கற்ப்பாறையடி!!  கட்டிக் கரும்பே உன்னை  கட்டிக்கொள்ள ஆசையடி!  கல்யாணம் கட்டிக் கொள்ள ஆசையடி!!  காதலால் நான்  காத்திருக்க  கண்டதும் கட்டியணைப்பாயா?இல்லை  கண்டபடி கறிச்சி கொட்டுவாயா??  காமம் இல்லை கண்ணே  காதல் தானடி!!  காதல் வருத்தத்தில்  கண்ணீர் வருகுதடி  கண்ணே ...

தமிழன்

Posted: 14 Jan 2016 03:10 AM PST

கல்லும் தண்ணிரில் மிதக்கும் கடலும் வற்ற துடிக்கும் அருவி உப்பாய் கரிக்கும் மலை ஓடி ஓடி கலைக்கும் மேகம் கனலை வாந்தி எடுக்கும் காற்று பிணத்தை எழுப்பும் சூரியன் இறந்து இருக்கும் விறகுகள் எரிய மறுக்கும் விஞ்ஞானம் செயல் இழக்கும் ஞானிக்கு பைத்தியம் பிடிக்கும் பேனா எழுத்தை சிறை பிடிக்கும் தமிழன் இல்லை என்றால் இது எல்லாம் நடக்கும் ஈகரை நண்பர்கள்அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் ...

அத்தை! - சிறுவர் கதை

Posted: 14 Jan 2016 03:10 AM PST

- மூங்கில் அடர்ந்திருந்த அத்தையின் தோட்ட வீட்டிற்குச் சென்றான் வேலு. ""அத்தை! அத்தை!'' என்று கூப்பிட்டான். ""என்ன வேண்டும்?'' என்று கேட்டாள் அத்தை. ""ஒரு கூடை வேண்டும்'' ""இப்போது என்னிடம் இல்லையே'' ""நாளை காலை தோட்டத்தில் பழங்கள் பறித்து வரலாம் என்றிருக்கிறேன். சரி, பரவாயில்லை. நான் சமாளித்துக் கொள்கிறேன். எனக்கு கொஞ்சம் தண்ணீர் வேண்டும்'' ""உள்ள போய் எடுத்துக் குடியேன்.'' ""சரி'' என்று கூறிவிட்டு உள்ளே சென்று தண்ணீர் குடித்துவிட்டுத் திரும்புகிறான். ""நீ நாளை ...

போகி பண்டிகை வாழ்த்துகள்

Posted: 14 Jan 2016 03:08 AM PST

போகி பண்டிகை வாழ்த்துகள் பழையன கழிதலும் புதியன புகுதலும் போகி அன்று என்பதை தவறாக கொண்டு , பழையவை தீயிட்டு , ரப்பர் உருளை நெருப்பிட்டு மாசு படுத்தும் மானிடரே ! வந்துவிடுமே பேரிடர் அறிவீரோ ! மாசு பட்ட வானம் கோபம் கொண்டு கொடுமைகளை தருமே தாங்கமுடியுமா ? பழையனவாம் குரோதம் , வெறுப்பை களைந்து , புதியனவாம் அன்பு பாசம் நேசம் வளர்ப்போம் வளர்வோம் . ரமணியன்

காதல் பொங்கல்....

Posted: 14 Jan 2016 02:33 AM PST

தித்திக்கும் தைப் பொங்கலில் 
தெவிட்டாத பொங்கலாக 
நீ எனக்கு கிடைத்தாய்! 

வேறொருவரும் 
சுவைக்க முடியாத
கட்டிக் கரும்பாக 
நீ கிடைத்தாய்!! 

வெண்மையான உள்ளம் 
கொண்ட வெண் பொங்கலாக 
நீ கிடைத்தாய்! 

உலகுக்கு வெளிச்சம் தரும் 
சூரியனை போற்றும் திருநாளில் 
என் வாழ்க்கைக்கு வெளிச்சம் தரும் 
சூரியனாக நீ கிடைத்தாய்!!

நான் கண்ட பொங்கல்

Posted: 14 Jan 2016 01:50 AM PST

நான் கண்ட பொங்கல் போவியலும் வந்தாச்சி சுவரெல்லாம் வெள்ளயாச்சி. ஓட்டடை அடிச்சாச்சி. வீடெல்லாம் சுத்தமாச்சி. பண்ட பாத்திரம் கழுவியாச்சி. குப்பை எல்லாம் எரிச்சாச்சி தோரணைகள் கட்டியாச்சி. அவரைக்கா கொழம்பு வச்சி ஆண்டவனுக்கு படச்சாசி. புது பான பச்சரிசி பாத்து நல்லா கழுவிவச்சி பொங்கவிடும் அடுப்புக்குதான் சாணம் விட்டு மெழுகி வச்சி. பச்சரிசி மாக்கோலம் வீடெல்லாம் இட்டு வச்சி . நல்ல நேராம் கேட்டு வச்சி சூரியனை பாத்துவச்சி. குடும்பமெல்லாம் சேர்ந்து நின்னு சந்தோசமா இருக்கயில சர்க்கரை ...

கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு

Posted: 13 Jan 2016 09:50 PM PST


தமிழகத்தில், பணம் சம்பாதிப்பதற்காக போலியான ஜோதிடர்கள் பலர்
உலவிக் கொண்டிருக்கும்போது, தனது ஜோதிடத் திறமையைப் பணம்
சம்பாதிக்கப் பயன்படுத்தாத ஏ.எம்.ராஜகோபாலன், பலருடைய
நம்பிக்கை நாயகனாகத் திகழ்கிறார்.
-
அவரை நமது 'துக்ளக்' வாசகர்கள், அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினார்கள்.
அந்த கலந்துரையாடலின் இறுதிப்பகுதி இங்கே:
-

கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!

Posted: 13 Jan 2016 07:03 PM PST

¦ அம்மா  விளையாடப்  போறேன் என்ன  விளையாட்டு? போய்ப்  படி ¦ உண்டி  கொடுத்தோரே உயிரை  எடுத்தனர் கல்லரை  வாசகம்:  ஈழத்தமிழர்   ¦ காதலியைப்  படைத்தவன் கடவுள்  என்றால் கடவுள்  எனக்கு  மாமா  உறவு ¦ படிடா … முடியாது! எழுதுடா … முடியாது! சார் நான் பாஸ் ஆயிட்டேன் ¦ வரிசையில் ஆண்கள் திறக்கப்பட்டது டாஸ்மாக்

காலை மலர்..

Posted: 13 Jan 2016 06:42 PM PST

- - இனிய காலையில் பறவைகளின் சீழ்க்கைஒலிகள் சங்கீதமாய்….. விடியலின் இன்னொரு பரிணாமம்…. மீண்டும் துவங்கும் புதிய நாளாய்… உவகையோடு ஏற்று பறவையோடு மனதையும் உயர பறக்க விடுங்கள்.. நேற்றைய நினைவுகள் எச்சங்களாய்.. குப்பையை சேர்க்காது சுத்தம் செய்யுங்கள்…. வன்மம் வஞ்சம் வாது சூது களவு பொய்மை புறத்தே தள்ளி புத்தம் புது மலராய் … இந்த நாளை தொடங்குங்கள்.. காலை வணக்கங்களோடு கவிதை சொல்லுங்கள்…. கவிதை கேளுங்கள்… – ———————————— அன்புடன் ஜெயராமன் பரத்வாஜ்.

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Posted: 13 Jan 2016 06:38 PM PST

µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு

µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை


µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி

எச்சமிட்ட காக்கையை அடிக்காதவர்…!

Posted: 13 Jan 2016 06:33 PM PST

- - எச்சமிட்டது காக்கை தடியிருந்தும் அடிக்கவில்லை தேசப்பிதா - ----------------------- - உரிமம் காட்டினர் ஏமாந்தனர் காவலர் பாவம் மாதக்கடைசி - ----------------------- - கூட்டணிக் கட்சி வலுத்துவிட்டது மொய்க்கும் கொசுக்கள் - ----------------------- - குடிக்காததால் தலைகீழாய்த் தெரிந்தது சாராயக்கடை பெயர் - ----------------------- - கிச்சு கிச்சு மூட்டாதே குலுங்க குலுங்க சிரிக்கிறேன் மத்துடன் மோர் - ----------------- --கவிஞர் கரசூர் பத்மாபாரதி -

ஒழுகும் வீட்டில் மழைத்துளி

Posted: 13 Jan 2016 06:30 PM PST

- – பட்டை நாமத்துடன் ஆயுட்கால ஏமாளி அணில் – ——————- – உம் கொட்டி கதை கேட்கிறது ஒழுகும் வீட்டில் மழைத்துளி – ———————- – தாய்ப்பால் பற்றாக்குறை யாரிடம் சொல்வது அம்மா என்றது கன்று – ——————— – தெரு முனைப்பிச்சைக்காரன் பசித்த வயிறு புண்ணியம் தேடும் உண்டியல் – ——————- – தூக்கில் இருந்து காப்பாற்றினேன் ஆ! கம்பளிப் பூச்சி – ———————— – –கவிஞர் கரசூர் பத்மாபாரதி

புலம்பும் கட்சிக் கொடிகள்…!

Posted: 13 Jan 2016 06:07 PM PST

ஆதாம் ஏவாளின் எச்சங்கள் நரிக்குறவர்கள் - – ———————– – நிறங்கள் போதவில்லை புலம்புகின்றன கட்சிக் கொடிகள் – ———————- – விபத்தாக்கிய வெட்கங்கெட்ட நடை எருமையைத் திட்டும் காவலர் – ——————— – இருவண்ணக் கொடி மெல்ல மெல்ல நகருகிறது மரவட்டை – ———————- – நடிகனின் பிறந்த நாள் பசியாறியது பால் குடித்த கட்அவுட் – ———————- –கவிஞர் கரசூர் பத்மாபாரதி

திருமந்திரம் விளக்கப்படங்கள்

Posted: 13 Jan 2016 05:46 PM PST

திருமந்திரம் நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள்   அதனால்தானோ  என்னவோ திருமூலர்  தமிழில்  திருமந்திரத்தை  எழுதி  உள்ளார் திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. ...

குழந்தை தூக்கி எறிநத கைப்பேசி

Posted: 13 Jan 2016 05:17 PM PST

குழந்தை தூக்கி எறிநத கைப்பேசி குழந்தை ஏன் தூக்கிப்போட்டது கைப்பேசியை? அப்பா சொன்னார் : குழந்தைக்கு என்ன தெரியும்? குழந்தைன்னா அப்படித்தான் இருக்கும். அம்மா சொன்னார்: அவன் விளையாடுற பொம்மைப்போல கைக்கு அடக்கமா இல்லை அதனால்தான். மனைவி சொன்னாள்: எது கையில் கிடைத்தாலும் தூக்கி வீசுவதே அவன் இயல்பு. நான் நினைத்தேன்: வளர்ந்து பொருளின் மதிப்பு புரியும்போது தூக்கிப்போட மாட்டான். குழந்தை மனதுக்குள் நினைத்தது: இனிமே Whatsapp facebook twitter இல்லை.   அப்பா, நான் அழுதா ஒழுங்கா ...

மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம்

Posted: 13 Jan 2016 03:47 PM PST

- நாகரீகம் நாலாபுறம் குடியேறினாலும், பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும், பறைசாற்றுவதிலும், தென்மாவட்டத்திற்கு இணை, தென்மாவட்டமே. "அச்சம் தவிர், நெஞ்சை நிமிர்' என, ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயங்களில் காளைகளுக்கு இணையாய் பாய்ந்து வரும், நம்மூர் காளைகளே அதற்கு சாட்சி. ரேக்ளா பந்தயத்தில் வெற்றி வாகை சூடும் தென்மாவட்ட காளைகளில், மதுரை ஓய்.கொடிக்குளம் பழனியாண்டியின் காளைகளுக்கு முக்கிய இடமுண்டு. "தவிடன் காளை வந்துருச்சுடோய்...' என, எதிர் தரப்பு பீதியடையும் அளவிற்கு, அவரது காளைகளின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™