Tamil News | Online Tamil News |
- காங்கிரசை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்: மத்திய அமைச்சர்களுக்கு பா.ஜ., உத்தரவு
- பாக்., பயங்கரவாதிகளின் களமாக எல்லை மாநிலங்கள் மாறுகிறது: 'கறுப்பு ஆடுகளை' பிடிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை
- மாத்தி யோசிங்கப்பா: நிபுணர்கள் அறிவுரை
- 'டாஸ்மாக்' நேரம் குறைகிறது: சாயங்காலம் மட்டுமே இனி 'சரக்கு' கிடைக்கும்
- 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 'அ, ஆ' தெரியவில்லை: அரசு பள்ளிகளில் நடந்த ஆய்வில் அதிகாரிகள் அதிர்ச்சி
- ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு என்ன?
- கரும்பு கொள்முதல் விலையால் விவசாயிகள் ஏமாற்றம்: கருணாநிதி
- தடையை மீறுமா ஜல்லிக்கட்டு காளை?
- தமிழக கலாசாரத்தை சீர்குலைக்கும் முயற்சிகளை மீறி ஜல்லிக்கட்டு நடக்கும்
- கேரள மீனவரை சுட்டுக்கொன்ற இத்தாலி கடற்படை வீரர் இந்தியா திரும்ப மாட்டார்
- வீழ்ந்தது கச்சா எண்ணெய் 30 டாலராக விலை குறைந்தது
| காங்கிரசை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்: மத்திய அமைச்சர்களுக்கு பா.ஜ., உத்தரவு Posted: 12 Jan 2016 08:44 AM PST புதுடில்லி: மத்திய அரசின் சாதனைகள் குறித்து, நாடு முழுவதும் பிரசாரம் செய்யும் படி, கூட்டணி கட்சிகளை சேர்ந்த, மத்திய அமைச்சர்களுக்கும், பா.ஜ., மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விரைவில், பார்லிமென்ட்டில், குளிர்கால கூட்டத் தொடர் துவங்கவுள்ளது. அதற்கு முன், தங்கள் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்களுக்கு, ஒரு முக்கியமான பணியை, பா.ஜ., மேலிடம் ஒதுக்கியது. இதன்படி, மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும், குறிப்பிட்ட சில லோக்சபா தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த தொகுதிகளுக்கு சென்று, மத்திய அரசின் சாதனைகளையும், ஜி.எஸ்.டி., மசோதாவை நிறைவேற்றுவதற்கு ... |
| Posted: 12 Jan 2016 08:56 AM PST புதுடில்லி,: பாகிஸ்தானிலிருந்து, நம் நாட்டின் எல்லையோர மாநிலங்கள் வழியாக ஊடுருவும் பயங்கரவாதிகள் அதிகரித்துள்ளனர். துவக்கத்தில், ஜம்மு - காஷ்மீரை தங்களின் ஊடுருவும் களமாக பயன்படுத்திய பாக்., பயங்கரவாதிகள் இப்போது, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத்திலும் ஊடுருவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பயங்கரவாதிகளுக்கு உதவும் நபர்களை வேட்டையாடவும், பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.கடந்த ஆண்டில், ஜம்மு - காஷ்மீரில் இரு இடங்களில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இரு பயங்கரவாதிகள் உயிருடன் பிடிபட்டனர். அதையடுத்து, ... |
| மாத்தி யோசிங்கப்பா: நிபுணர்கள் அறிவுரை Posted: 12 Jan 2016 08:57 AM PST புதுடில்லி: பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இந்தியாவில் ஊடுருவி தாக்குதல் நடத்துவதும், அப்போதைக்கு, கடும் கண்டனம் தெரிவிக்கும் இந்தியா, சில காலம் கழித்து, பாகிஸ்தானுடன் பேச்சுக்கு, மீண்டும் அடி போடுவதும் மக்களுக்கு அலுத்துப் போன விஷயங்களாகி விட்டன. பாக்., விஷயத்தில், மாற்றி யோசித்தால், மட்டுமே விடிவு கிடைக்கும் என, நிபுணர்கள் கூறுகின்றனர். மும்பை தொடர் குண்டு வெடிப்பு, பார்லி மென்ட் மீதான தாக்குதல் என, பாகிஸ்தானில் நிலைபெற்றுள்ள பயங்கரவாத இயக்கங்கள், கடந்த, 20 ஆண்டுகளில், இந்தியாவில் அரங்கேற்றிய தாக்குதல்கள் ஏராளம். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் ... |
| 'டாஸ்மாக்' நேரம் குறைகிறது: சாயங்காலம் மட்டுமே இனி 'சரக்கு' கிடைக்கும் Posted: 12 Jan 2016 09:15 AM PST 'டாஸ்மாக்' மது கடைகளின் நேரத்தை குறைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதனால், விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில், மது விலக்கை அமல்படுத்தக் கோரி, சில மாதங்களுக்கு முன், எதிர்க்கட்சிகள் பல போராட்டங்களை நடத்தின. அதனால், மது விலக்கு பிரச்னையில், எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, 'டாஸ்மாக்' நிறுவனத்திடம், தமிழக அரசு கருத்து கேட்டது.அதற்கு, 'மதுக்கடைகளை, காலை, 10:00 மணிக்கு திறப்பதற்கு பதிலாக மதியம், 2:00 மணிக்கு திறக்கலாம்' என, தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனாலும், இதுவரை அந்த அறிவிப்பும் ... |
| 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 'அ, ஆ' தெரியவில்லை: அரசு பள்ளிகளில் நடந்த ஆய்வில் அதிகாரிகள் அதிர்ச்சி Posted: 12 Jan 2016 09:55 AM PST அரசு பள்ளிகளில் படிக்கும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 'அ, ஆ' போன்ற தமிழ் எழுத்துக்களே தெரியாதது ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால், கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அனைவருக்கும் கல்வி கிடைக்கும் வகையில், மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டம், 2009ல் கொண்டு வரப்பட்டது. இதன்கீழ், ஐந்து வயது முதல், 14 வரையிலான மாணவ, மாணவியருக்கு கட்டாய இலவச கல்வி அளிக்க வேண்டும். தனியார் பள்ளிகளிலும், 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.கட்டாய கல்வி உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்துவதால், கல்வியின் தரம் குறைந்து விட்டதாக, ... |
| ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு என்ன? Posted: 12 Jan 2016 09:58 AM PST புதுடில்லி: தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு, சுப்ரீம் கோர்ட், நேற்று, இடைக்கால தடை விதித்தது.ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து, இந்திய விலங்குகள் நல வாரியம், 'பீட்டா' என்ற விலங்கு வதை தடுப்பு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், தனித் தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்கள், நேற்று, விசாரணைக்கு வந்தன. அப்போது, இந்த மனுவை விசாரிக்கும்,'பெஞ்ச்'சில் இடம்பெற்றிருந்த நீதிபதி பானுமதி, தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால், விசாரணையிலிருந்து விலகி கொள்வதாக ... |
| கரும்பு கொள்முதல் விலையால் விவசாயிகள் ஏமாற்றம்: கருணாநிதி Posted: 12 Jan 2016 10:01 AM PST சென்னை: கரும்புக்கான கொள்முதலுக்கான தமிழக அரசின் அறிவிப்பு, புதிய மொந்தையில் பழைய கள் போல் உள்ளது என கருணாநிதி கூறியுள்ளார். தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை:கரும்புக்கான கொள்முதல் விலை, டன்னுக்கு, 2,850 ரூபாய் என்றும்; அந்தத் தொகை, மத்திய அரசு நிர்ணயித்ததை விட, 550 ரூபாய் அதிகம் எனவும் அறிக்கை வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டில் மாநில அரசு, கரும்புக்கு நிர்ணயம் செய்த விலை, 2,650 ரூபாய். இந்த ஆண்டு, 2,850 ரூபாய், அதாவது, 200 ரூபாய் மட்டும் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த, 200 ரூபாயிலும், 100 ரூபாய்போக்குவரத்து செலவுக்கானது.தமிழக அரசின் இந்த ... |
| தடையை மீறுமா ஜல்லிக்கட்டு காளை? Posted: 12 Jan 2016 10:10 AM PST தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணைக்கு, உச்ச நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்துள்ளது. எனவே, ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறுத்தப்படுமா அல்லது தடையை மீறி நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்போதைக்கு வாய்ப்பு குறைவு! மூத்த வழக்கறிஞர் விஜயன்:பிராணிகள் வதைச் சட்டப் பிரிவு, 3, 11 மற்றும், 22ன் படி, ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்து இருந்தது. சட்டப் பிரிவு - 3, 11 ஆகியவை பிராணிகள் வதை, காயம் ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கு தடை ... |
| தமிழக கலாசாரத்தை சீர்குலைக்கும் முயற்சிகளை மீறி ஜல்லிக்கட்டு நடக்கும் Posted: 12 Jan 2016 10:26 AM PST ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்ததை தொடர்ந்து, மதுரை மாவட்டம், அலங்காநல்லுார், பாலமேடு, அவனியாபுரம் மக்கள் கொந்தளித்து உள்ளனர். கறுப்புக்கொடி போராட்டம், தீக்குளிக்க முயற்சி என, எதிர்ப்பை காட்டத் துவங்கியுள்ளனர். சேலம் மாவட்டம், ஓமலுார் தாலுகாவில், 'தடையை மீறி எருதாட்டம் நடத்துவோம்' என, ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கூறியுள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம், வீரளூர் வீரர்கள், அதே கோபத்துடன், 'தடை விதித்தாலும் திட்டமிட்டபடி, மஞ்சு விரட்டு விழாவை நடத்துவோம்; போலீசார் கைது செய்தாலும் சிறைக்கு செல்ல தயார்' எனக் ... |
| கேரள மீனவரை சுட்டுக்கொன்ற இத்தாலி கடற்படை வீரர் இந்தியா திரும்ப மாட்டார் Posted: 12 Jan 2016 10:45 AM PST ரோம்: இந்திய கடற்ப்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த கேரள மீனவரை சுட்டுக்கொன்ற இத்தாலி மீனவர்களில் ஒருவர், மருத்துவ சிகிச்சைக்காக தற்காலிகமாக நாடு திரும்ப அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் இந்தியா திரும்ப மாட்டார் என அந்நாட்டு செனட்டர் ஒருவர் கூறியுள்ளார்.கடந்த 2012-ம் ஆண்டில் கேரள பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மீது இத்தாலி கடற்படை வீரர்கள் மாஸிமிலியனோலட்டோர், கிரோன் ஆகியோர் துப்பாக்கிச்சூடு நடத்தி கொன்றனர். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வீரர்களில் ஒருவரான லட்டோர் மூளை பக்கவாத நோயால் ... |
| வீழ்ந்தது கச்சா எண்ணெய் 30 டாலராக விலை குறைந்தது Posted: 12 Jan 2016 12:55 PM PST மும்பை :சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை, கடும் வீழ்ச்சியை சந்தித்தது. நேற்று, 3 சதவீதம் சரிவை கண்ட கச்சா எண்ணெய், 12 ஆண்டுகளுக்கு பின், முதல் முறையாக, 30 டாலராக குறைந்தது. அமெரிக்காவில், பாறை இடுக்குகளில் கிடைக்கும், 'ஷேல்' வாயுவில் இருந்து, அபரிமிதமாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. அதுபோல, எண்ணெய் உற்பத்தி செய்யும் பிற நாடுகள், வழக்கம் போல், உற்பத்தியை தொடர்கின்றன. 13 ஆண்டு பொருளாதாரத் தடையிலிருந்து மீண்டுள்ள ஈரான், முழு அளவில் எண்ணெய் உற்பத்தியை துவக்கிஉள்ளது. இதுபோன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, கடும் வீழ்ச்சியை ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 13,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |