ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தலைமுறை இடைவெளி
- மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ரொம்ப மோசம்...!
- சனவரி பன்னிரண்டு ... இன்று
- மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்
- சொந்தக்காரும் சொந்தக்காரரும்
- நேற்றைய நினைவுகள்
- அரேபிய பேரீச்சை சாகுபடி: சாதிக்கும் பி.டெக்., பட்டதாரி
- நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே
- விருந்துக்கான அழைப்பு
- இயற்கை என்னும் இளைய கன்னி
- யாதுமாகி நின்றாய் தோழி!
- காதல் கண்ணாமூச்சி
- திணறும் பட்டாம்பூச்சி
- வரலாற்றில் இன்று - ஜனவரி
- தெலுங்கு படப் பாடலுக்காக சிம்பு - அனிருத் இணைய வாய்ப்பு
- கோபுரமாய் நின்றாள்
- குடியரசுதின அணிவகுப்பில் பங்கேற்க தேனி மாணவி தேர்வு
- ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்
- கரகாட்டக்காரன் நகைச்சுவை வசனங்கள் - கவுண்டமணி செந்தில் காமெடி
- படத்துடன் சிரிப்பு
- இந்திய தேசிய இளைஞர் தினம்- சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று
- சோதனையை வென்ற சாதனையாளர் - ஸ்டீபன் ஹாகிங்
- இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்
- ஞாயிறு போற்றுதும்...
- மும்பையில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் செய்த கல்லூரி மாணவி
Posted: 12 Jan 2016 03:23 PM PST தலைமுறை இடைவெளி கருக்கலிலே கண்விழித்து தெருவினிலே கோலமிட்டு பருவமகள் புத்தாண்டை வருகவென வரவேற்பாள் - அன்று கைப்பேசியில் கண்விழித்து முகநூலில் முத்தமிட்டு வாட்ஸ்ஹாப்பில் புத்தாண்டை வருகவென வரவேற்பாள் - இன்று பருவமதன் பயன்பெறவே திருமணமும் செய்துகொண்டு இருவர்நாம் ஒருவராகி பெருமையுடன் வாழ்ந்திடுவோம் - அன்று பிடித்திருந்தால் ப்ரெண்டாக பிரியாமல் இணைந்திடுவோம் முடிச்சின்றி தம்பதியாய் முழுமையாய் வாழ்ந்திடுவோம் - இன்று புத்தாடைதனை உடுத்தி சிற்றாடைதனை திருத்தி ... |
மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ரொம்ப மோசம்...! Posted: 12 Jan 2016 03:07 PM PST ![]() - தொடரும்... |
Posted: 12 Jan 2016 03:02 PM PST இளைஞர்களின் எழுச்சி சுவாமி விவேகனந்தரின் பிறந்த தினம் துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே நல்லது. நீ நினைத்தால், விண் மீனையும் விழுங்கிவிட முடியும். இதுவே உன் உண்மை பலம். மூட நம்பிக்கைகளை உதரித் தள்ளிவிட்டுத் தைரியமாகச் செயல்படு! கடுமையான உழைப்பின்றி மகத்தான காரியங்களைச் சாதிக்க முடியாது. பயந்து பயந்து புழுவைப்போல் மடிவதை விட, கடமை எனும் களத்திலே போரிட்டு உயிர் துறப்பது மேலானது. எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது; அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை. எதிர் ... |
மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார் Posted: 12 Jan 2016 02:35 PM PST - உத்தரப் பிரதேச மாநிலம், பிஜ்னோரில் மாமியாரின் கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற மருமகள், வீட்டில் இருந்த ரகசிய கேமரா மூலம் போலீஸிடம் சிக்கினார். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: பிஜ்னோரைச் சேர்ந்தவர் சந்தீப் ஜெயின். அவரது மனைவியான சங்கீதா ஜெயினுக்கு, கணவர் மற்றும் மாமியார் ராஜ்ராணி ஜெயினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து, அங்குள்ள நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இதனிடையே தன்னிடம் வரதட்சிணை கேட்டு கொடுமை செய்ததாக சங்கீதா அளித்த புகாரின் பேரில், கணவர் சந்தீப் ... |
Posted: 12 Jan 2016 10:08 AM PST சொந்தக்காரும் சொந்தக்காரரும் சொந்தக்கார் வாங்கிடவே சொந்தக்கார் வைத்துள்ள சொந்தக்காரரிடம் சென்று சொந்தக்கார் வாங்கிய சொந்த அனுபவம் பற்றி கேட்கச் சென்றேன் சொந்தக்கார் வைத்துள்ள சொந்தக்காரர், என்னை சொந்தக்கார் இல்லாததால் சொந்தக்காரர் இல்லையென சொல்லாமல் சொல்லி சொந்தக்கார் ஏறி சொல்லாமல் சென்றுவிட்டார் ச. சந்திரசேகரன் |
Posted: 12 Jan 2016 09:54 AM PST நேற்றைய நினைவுகள் - எந்தன் கவிதை சின்னஞ்சிறு சிட்டாய் சிறகடித்த நாட்களில் சிரமங்கள் ஏதுமில்லை சில்லறை தேவையில்லை சிரிப்புக்குப் பஞ்சமில்லை சின்னத்திரை கண்டாலே சிந்தை மகிழும் காலம் சிறுசிறு சண்டைகள் மறந்து சிரித்து மகிழ்ந்த காலம் ச.சந்திரசேகரன் |
அரேபிய பேரீச்சை சாகுபடி: சாதிக்கும் பி.டெக்., பட்டதாரி Posted: 12 Jan 2016 09:28 AM PST ராஜபாளையம்: - - அரேபிய நாடுகளில் மட்டுமே விளையும் 'கனேஷில்' எனும் உயர் ரக பேரீச்சம்பழம், ராஜபாளையம் தரிசு காட்டில் அமோகமாக விளைவித்து அசத்துகிறார், பி.டெக்., பட்டதாரி அழகர் பெருமாள். தமிழகத்தில் வறட்சி மாவட்டங்களில் ராமநாதபுரம் முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக சிவகங்கை, விருது நகர் மாவட்டங்கள். இங்கு மானாவரி சாகுபடியை மட்டுமே விவசாயிகள் நம்பி உள்ளனர். 2011ல் இருந்து, 2015 ஜூலை வரை மழையில்லாமல் வறட்சி நிலவியது. மானாவரி சாகுபடிக்கும் வழியில்லாமல் போனது. பேரீச்சை தோட்டம் ... |
நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Posted: 12 Jan 2016 09:19 AM PST நற்பகல் நேரம், மத்தியான வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான். அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான். "கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால்தான் இந்த வெயிலிலும் இப்படிஉறங்குகிறான்." என நினைத்துக்கொண்டே சென்றான். அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான் "இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப்போட்டதுபோல் தூங்குகிறான் " என நினைத்துக்கொண்டே ... |
Posted: 12 Jan 2016 08:56 AM PST முதலில் பானகம்.. ஜிகிரிதாண்டா.. சுக்குகாபி.. திப்பிலிரசம் ஸ்டார்ட்டர் வழங்கப்படும்.. கூடவே மண்சட்டிகளிலும் பானையிலும் வாழைப்பூ வடை தவலைவடை ஏழுகறிக்கூட்டு.. திருவாதிரைக்களி.. . வடாம்.. வத்தல்.. அப்பளம்.. சிப்ஸில் ஐந்து வகை.. நேந்திரங்காய்.. உருளை உட்பட.. பால்கொழுக்கட்டை காரடையான் நோன்புக் கொழுக்கட்டை (இனிப்பு மற்றும் உப்புக் காரம்).. துணையாக உண்டு.. இத்தோட நின்னு நின்னு பேசிக் கூத்தடிக்கிற மாதிரி ப்பப்பே.. (Buffet) .. அப்புறம் தலை வாழை இலையில் சாப்பாடு.. டேபிள் .. சார்.. வரிசையாக அமர்ந்த பிறகு.. ... |
Posted: 12 Jan 2016 08:07 AM PST |
Posted: 12 Jan 2016 08:00 AM PST 23சி பஸ்ஸில் கூட்டம் அவ்வளவாக இல்லை... 'சார் அயனாவரம் ஒரு டிக்கெட்' பரிச்சயமான அந்தக் குரலைக் கேட்டவுடன் திரும்பிப் பார்த்த எனக்கு அதிர்ச்சி! - அட நம்ம வசந்தி! அவளும் என்னை கவனித்தாள்... எப்படி இருக்கீங்க ராஜா? நல்லா இருக்கேன். நீ சாரி.. நீங்க எப்படி வசந்தி? - ரொம்ப நல்லா இருக்கேன் என்றாள். அந்த ரொம்பவில் ஏதோ ஒன்று இருந்தது. உங்க வீடு எங்க வசந்தி? அதே பழைய வீடுதான். அதே பழைய வசந்திதான் என்றாள், கேஷூவலாக அதே என்ற சொல்லின் அர்த்தத்தை நான் வேறு மாதிரியாக உள் வாங்கிக் கொண்டேன். - அதே ... |
Posted: 12 Jan 2016 07:53 AM PST காணும் காட்சிதனில் காதல் தனை ஒளித்து வைத்து கண்ணாமூச்சி ஆடும் காதலியே!! கண்ணுக்குள் உயிர் பிறந்தது காதலியே உன்னால்! அது இல்லை என்று சொல்ல இயலாது என்னால்!! கண்ணிமைக்கும் கணமும் கண்ணே நான் உன்னை மறப்பதில்லை! களவாடிப்போன கண்களும் இதயமும் கருகிப் போவதற்குள் காதல் தனை சொல்லி விடுவாயா? இல்லை கண்களும் இதயமும் என் இதயத்தில் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது! இது உனக்கு தெரியவில்லையே காதலனே! என கண்ணாமூச்சி ஆடுகிறாயா?? இது தான் காதல் விளையாட்டா?? விளையாட்டு ... |
Posted: 12 Jan 2016 07:02 AM PST - மரத்திலிருந்து இறங்கியது ஒரேயொரு பறவையொலி மீண்டும் நிசப்தம் - ---------------------- - எத்தனை மலர்கள் எதில் அமர திணறும் பட்டாம்பூச்சி - ------------------ - காட்டில் கோடரிச்சத்தம் காதில் விழவில்லை மரங்களின் அழுகை - ------------------- - என்ன கூட்டம் ஆற்றில் இறங்கும் அழகர் தொலைக்காட்சிப் பெட்டி - -------------------- - போக்குவரத்து நெரிசல் இடமும் வலமும் பார்த்துக் கடக்கும் பூனை - ----------------------- -ஷங்கரநாராஞணன் கடவுளின் காலடிச் சத்தம் - நூலிலிருந்து |
Posted: 12 Jan 2016 06:55 AM PST ![]() ![]() |
தெலுங்கு படப் பாடலுக்காக சிம்பு - அனிருத் இணைய வாய்ப்பு Posted: 12 Jan 2016 06:24 AM PST - சிம்பு - அனிருத் கூட்டணி, 'ஷீ' என்கிற தெலுங்கு காதல் த்ரில்லர் படத்தில் பாடல் பாடவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. மங்கத்தா படத்தில் அஜித்துடன் நடித்த மஹத், 'ஷீ' என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இதில் 2 பாடல்களை பாட சிம்பு மற்றும் அனிருத் இருவரையும் அணுகியுள்ளதாக மஹத் தெரிவித்துள்ளார். பாம்பே போலே என்பவர் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். மார்ச் மாதம் இந்தப் படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் பீப் பாடல் சர்ச்சையில் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ... |
Posted: 12 Jan 2016 06:09 AM PST ரமா, ரமா இங்கே வைத்திருந்த கவரை எங்கே காணும்? என்ற கணவன் மோகனின் அலறலைக் கேட்டு, கையில் இருந்த டிபன் பாக்ஸை அப்படியே வைத்துவிட்டு ஓடினேன் ஹாலுக்கு. - என்னங்க என்ன காணம்? - நேற்று ஆபீஸிலிருந்து கொண்டு வந்தேனே ஒரு நீளக்கவர், அதைக் காணும். ஒரு சாமான் வைச்ச இடத்தில் இருக்காதே... - கொஞ்சம் இருங்கள் நான் பார்க்கிறேன். எங்கே போய்விடும்? யார் உங்கள் டேபிளை தொடுகிறார்கள்? டேபிளின் மேல் இரைந்து கிடந்த காகிதங்களை அடுக்கிவி்ட்டு, சோபாவின் மேல் இருந்த ப்ரீப்கேஸைத் திறந்தேன். உள்ளே நீளக்கவர் ... |
குடியரசுதின அணிவகுப்பில் பங்கேற்க தேனி மாணவி தேர்வு Posted: 12 Jan 2016 05:48 AM PST தேனி: சென்னையில் ஜன., 26ல் நடக்க உள்ள குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க தேனி என்.எஸ்.எஸ்., மாணவி கோகிலா தேர்வாகியுள்ளார். தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் இந்த அணிவகுப்பில் பங்கேற்க மாநிலம் முழுவதும் என்.எஸ்.எஸ்., சார்பில் 6 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். - அதன்படி திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹெபர் மேல்நிலைப்பள்ளி மாணவர் யோகேஷ் ராஜா, தஞ்சாவூர் செயின்ட் ஆன்டனி மேல்நிலைப்பள்ளி மாணவர் சுபாஷ்கர், கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர் விஷ்வஜித், ... |
ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் Posted: 12 Jan 2016 05:28 AM PST ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்த மத்திய அரசின் அறிவிக்கைக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், இதனால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதித்தது. இதனால் கடந்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்த ... |
கரகாட்டக்காரன் நகைச்சுவை வசனங்கள் - கவுண்டமணி செந்தில் காமெடி Posted: 12 Jan 2016 05:12 AM PST கவுண்டமணி செந்தில் ஜோக்ஸ் பிடிக்காதவங்க யாரும் இருக்கமாட்டங்க. அதிலும் குறிப்பா கரகாட்டக்காரன் படத்துல வரும் நகைச்சுவைகள் அனைத்தும் மக்களிடையே மிகவும் பிரபலமானவை.அந்த நகைச்சுவை வசனங்களை அப்படியே பதிவாக மாற்றினால் என்ன? என்று நினைத்ததன் விளைவே இந்த காமெடி பதிவு ராமராஜன் : ஏன்னே, எனக்கு என்ன கல்யாண ஊர்வலமா நடத்துறிங்க? கவுண்டமணி : ஊர்வலம் விட்ற நேரம் வந்தாச்சுல,அதான் ஒத்திகை பார்த்துகிட்டு இருக்கோம். ராமராஜன் : வண்டிய வித்துடுங்கன்னாலும்,விக்க மாட்றீங்க, மானத்த வாங்குறீங்க! கவுண்டமணி ... |
Posted: 12 Jan 2016 04:59 AM PST படத்துடன் சிரிப்பு நன்றி முகநூல் ரமணியன் |
இந்திய தேசிய இளைஞர் தினம்- சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று Posted: 12 Jan 2016 03:45 AM PST சுவாமி விவேகானந்தர் அவர்கள், வேதாந்த தத்துவத்தின் மிக செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக தலைச்சிறந்து விளங்குபவர். அவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் 'ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்' மற்றும் ஸ்ரீ 'ராமகிருஷ்ணா மிஷன்' போன்ற அமைப்புகளையும் நிறுவியவர். சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகத்தின் வாழும் அவதாரமாகத் திகழ்ந்தவர். ஆங்கிலேயர் ஆட்சியில், இருண்டுக் ... |
சோதனையை வென்ற சாதனையாளர் - ஸ்டீபன் ஹாகிங் Posted: 11 Jan 2016 09:12 PM PST பள்ளியில் சுட்டியாக இருந்த அவர் இளம் வயதிலேயே வீட்டில் கிடந்த சாமான்கள்,கடிகார பாகங்கள் அட்டைகள் எல்லாவற்றையும் இணைத்து ஒரு கணினியை உருவாக்கினார் . அப்பா மருத்துவம் படிக்க சொல்ல இவர் இயற்பியலை ஆக்ஸ்போர்டில் படித்தார் ; வகுப்புகள் அவருக்கு போர் அடித்தன . மூன்று வருட காலத்தில் மொத்தமே ஆயிரம் மணிநேரம் தான் படித்திருப்பார் ; முதல் கிரேடில் தேர்வு பெறாவிட்டால் காஸ்மாலஜி துறையில் மேற்படிப்பை படிக்க இயலாது ;எனினும் தன் திறனை கல்லூரியின் நேர்முகத்தில் காட்டி கேம்ப்ரிட்ஜில் சேர்ந்தார் ... எதோ தடுமாற்றம் ... |
Posted: 11 Jan 2016 06:42 PM PST 1990ல் அகில உலக ஹைக்கூப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ஹைக்கூ இது. புயலுக்குப் பிறகு, சிறுவன் ஆகாயத்தைத் துடைக்கிறான், மேசைகளின் மீதிருந்து! – டார்கோ பிளாஸனின் மேசைகளின் உயரம் போதுமா, ஏறி நின்று வானத்தைத் துடைக்க? அந்தச் செயல் அல்ல, நிகழ்ந்தது; புயலின்போது, வானமே இடிந்து விழுந்தது போல் மழை, காற்று… ஆகாயப் பொழிவுகள் மேசைகளின் மீது! மேகங்கள் அல்லவா துகள்களாய்ச் சிதறி விழுந்தன… புயலின் வன்மையைக் கலைநயத்தோடு மறைமுகமாய்ச் சுட்டியிருக்கும் தன்மை வியக்கத்தக்கது. மேசைகள் வெளியே இருப்பதற்கு ... |
Posted: 11 Jan 2016 05:13 PM PST - தைமாதம் முதல் நாள் வரும் பொங்கல் திருநாள் தமிழர் திருநாள் என்று போற்றப் பெறுகின்றது. அனைவரும் முப்பெருநாளாக விழாக் கொண்டாடும், இப்பொங்கல் திருநாளின் தலைநாள் பெரும் பொங்கல் திருநாள் - உலகச் சுழற்றியில் ஞாயிறு உத்தராயணம் கொள்ளும் இன்னாளில் தமிழகத்தை நோக்கி ஞாயிறு வருகை தொடங்குதலை எண்ணி மக்கள் பொங்கலிட்டு ஞாயிற்றுக்குப் படைத்து வழிபட்டு வருகின்றனர். - ஞாயிறு ஒளிக்கோளம் என்றும், அதன் ஒளிவீசும் தன்மை எது? ஒளியின் பயன் என்ன? என்றெல்லாம் ஆய்தாய்ந்து அறிவதே அறிவியல் முறை சார்ந்த ... |
மும்பையில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் செய்த கல்லூரி மாணவி Posted: 11 Jan 2016 05:01 PM PST - பெண் வன்கொடுமையைத் தடுக்க வலியுறுத்தி, மும்பையைச் சேர்ந்த கல்லூரி மாணவி தொடங்கிய சைக்கிள் பயணம் கன்னியாகுமரியில் திங்கள்கிழமை நிறைவடைந்தது. - மும்பை பன்வேல் பகுதியைச் சேர்ந்தவர் பிரிசில்லா (24). இவர், அங்குள்ள கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர், பெண்களுக்கு எதிரான வன்கொடுமையைத் தடுக்க வலியுறுத்தி தன்னந்தனியாக சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். - இதையடுத்து, தனது சைக்கிள் பயணத்தை கடந்த டிசம்பர் 24ஆம் தேதி மும்பையில் தொடங்கினார். 19 நாள்களில் 1,700 கி.மீ. பயணம் செய்து ... |
You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |