Tamil News | Online Tamil News |
- 'ஆடை கட்டுப்பாடு கோரி மனுவே கொடுக்காத போதுஎப்படி அது குறித்து உத்தரவு போட முடியும்?'
- ஜல்லிக்கட்டுக்கு அனுமதி உண்டா? சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
- சபரிமலைக்கு பெண்களை ஏன் அனுமதிக்க கூடாதென... கேள்வி தேவசம் போர்டுக்கு சுப்ரீம் கோர்ட் 'நோட்டீஸ்'
- பெரியாறு அணையில் கேரளா அடாவடி புதிய போலீஸ் ஸ்டேஷன் திறப்பு :இன்று கடையடைப்பு போராட்டம்
- தூத்துக்குடிக்கு வந்த வெளிநாட்டினர் உட்பட 35 பேருக்கு 5 ஆண்டு : கப்பலில் ஆயுதங்களுடன் இந்திய எல்லையில் நுழைந்ததால் தண்டனை
- பதன்கோட் தாக்குதலை விசாரிக்க கூட்டு குழு அமைத்தார் ஷெரீப்
- ரூ.3,696 கோடிக்கு கணக்கு எங்கே தமிழக மின் வாரியத்திற்கு கேள்வி
- டில்லியில் கார் கட்டுப்பாடு தொடர ஐகோர்ட் அனுமதி
- உயிர் பிழைத்தது அண்ணா நூலகம்
- சிலம்ப போட்டிக்கு தடை கோரி வழக்கு விளையாட்டு ஆணையத்துக்கு 'நோட்டீஸ்
| 'ஆடை கட்டுப்பாடு கோரி மனுவே கொடுக்காத போதுஎப்படி அது குறித்து உத்தரவு போட முடியும்?' Posted: 11 Jan 2016 08:21 AM PST மதுரை: 'கோவில்களில் பக்தர்கள் பாரம்பரிய ஆடைகள் அணிந்து வர வேண்டும்' என, கட்டுப்பாடு விதித்த தனி நீதிபதி உத்தரவிற்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு தடை விதித்தது. திருச்சி, துவரங்குறிச்சி அருகே, ராஜு என்பவர், 'போலீஸ் பாதுகாப்புடன் கோவில் திருவிழாவில், கிராமிய ஆடல், பாடல் நடத்த அனுமதிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.பாரம்பரிய உடைதனி நீதிபதி, 'எந்த ஒரு சமூகமும், தலைவர்களை வாழ்த்தி பாடக்கூடாது. பக்தர்கள் அரைக்கால் டிரவுசர், மினி ஸ்கர்ட்ஸ், மிடி, ஸ்லீவ்லெஸ் டாப்ஸ், குட்டையான ஜீன்ஸ் அணிந்திருந்தால் கோவிலில் ... |
| ஜல்லிக்கட்டுக்கு அனுமதி உண்டா? சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை Posted: 11 Jan 2016 08:50 AM PST புதுடில்லி: ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளித்து, மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று, மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன; இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடக்கிறது. தமிழகத்தில், பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படும், ஜல்லிக்கட்டு போட்டிக்கு, 2014ல், சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இருப்பினும், இந்தாண்டில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை, தமிழகத்தில்தீவிரமாக எழுந்தது. அதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா போட்டிகளுக்குஅனுமதி அளித்து, மத்திய அரசு, கடந்த ... |
| சபரிமலைக்கு பெண்களை ஏன் அனுமதிக்க கூடாதென... கேள்வி தேவசம் போர்டுக்கு சுப்ரீம் கோர்ட் 'நோட்டீஸ்' Posted: 11 Jan 2016 08:57 AM PST புதுடில்லி: 'கோவில்களுக்கு பெண்கள் செல்ல அரசியல் சட்டம் அனுமதி அளித்துள்ளது. அப்படிப்பட்ட நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்ல, ஏன் அனுமதிக்கக் கூடாது' என, கேரள மாநில அரசிடமும், திருவாங்கூர் தேவசம் போர்டிடமும் விளக்கம் கேட்டு, சுப்ரீம் கோர்ட், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடக்கும், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு வழிபாட்டை காண்பதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ... |
| பெரியாறு அணையில் கேரளா அடாவடி புதிய போலீஸ் ஸ்டேஷன் திறப்பு :இன்று கடையடைப்பு போராட்டம் Posted: 11 Jan 2016 09:47 AM PST கூடலுார் :முல்லைப்பெரியாறு அணையில் புதிய போலீஸ் ஸ்டேஷனை கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா நேற்று திறந்து வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலுார், கம்பத்தில் கருப்பு கொடி கட்ட முயன்ற விவசாயிகளை தமிழக போலீசார் தடுத்து நிறுத்தினர்.முல்லைப்பெரியாறு அணையில் கேரள வனத்துறையின ரின் தங்கும் அறையை போலீஸ் ஸ்டேஷனாக மாற்ற கேரள அரசு நடவடிக்கை எடுத்தது. இதில் பணிபுரிய ஒரு டி.எஸ்.பி., தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 6 எஸ்.ஐ.,க்கள் உட்பட 124 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான திறப்பு விழா நேற்று மாலை குமுளியில் நடந்தது. கேரள உள்துறை அமைச்சர் ... |
| Posted: 11 Jan 2016 09:48 AM PST துாத்துக்குடி: துாத்துக்குடி கடல் பகுதியில், 2013ல் அத்துமீறி நுழைந்த, அமெரிக்க தனியார் நிறுவன கப்பல் ஊழியர்கள், 35 பேருக்கு, தலா, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டுள்ளது; 12 இந்தியர்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த, 2013 அக்., 11ல், 'சீமேன் கார்டு ஓகியோ' என்ற கப்பல், துாத்துக்குடி கடல் பகுதியில் நுழைந்தது. இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக, கடலோர காவல்படையினர் அதை சிறைபிடித்தனர்.அத்துமீறல்: விசாரணையில், அமெரிக்காவின், 'அட்வன்போர்ட்' என்ற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த, கடல் பாதுகாப்பு கப்பல் என தெரிந்தது.அதில் இருந்து, 35 ... |
| பதன்கோட் தாக்குதலை விசாரிக்க கூட்டு குழு அமைத்தார் ஷெரீப் Posted: 11 Jan 2016 10:16 AM PST இஸ்லாமாபாத்: பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமானப்படை தளத்தில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து, முழுமையான விசாரணை நடந்த, கூட்டு விசாரணை குழுவை அமைத்துள்ளார், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப். இம்மாதம், 2ம் தேதி, பதன்கோட் விமானப்படை தளத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பாதுகாப்புப் படையினர் ஏழு பேர் கொல்லப்பட்டனர். பதிலடி தாக்குதலில், ஆறு பயங்கரவாதிகள் பலியாயினர்.இந்த தாக்குதலை, பாகிஸ்தானில் இருந்து செயல்படும், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பினர் தான் நடத்தினர் என, குற்றஞ்சாட்டிய இந்தியா, அதற்கான ... |
| ரூ.3,696 கோடிக்கு கணக்கு எங்கே தமிழக மின் வாரியத்திற்கு கேள்வி Posted: 11 Jan 2016 10:20 AM PST சீரான மின் வினியோக திட்டத்திற்கு வழங்கிய நிதியை, செலவழித்த விவரத்தை வழங்குமாறு, தமிழக மின் வாரியத்திடம், மத்திய அரசு கேட்டுள்ளது. தமிழகத்தில், ஆர்.ஏ.பி.டி.ஆர்பி., திட்ட பணி கள், சென்னை, கோவை, திருச்சி உட்பட, 110 நகரங்களில், 2009ல் துவங்கின. முதல் பிரிவிற்கு, 417 கோடிரூபாய்; இரண்டாவது பிரிவிற்கு, 3,279 கோடி ரூபாய் என, மொத்தம், 3,696 கோடி ரூபாயை மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.சென்னை, திருப்பூர், சேலம் உட்பட, ஏழு நகரங்களில் உள்ள துணைமின்நிலையங்களை கண்காணிக்க, நவீன கட்டுப்பாட்டு மையம் அமைக்க, 182 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், ஆர்.ஏ. ... |
| டில்லியில் கார் கட்டுப்பாடு தொடர ஐகோர்ட் அனுமதி Posted: 11 Jan 2016 10:41 AM PST
புதுடில்லி : டில்லியில், சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டுள்ள, கார் போக்குவரத்து கட்டுப்பாட்டு திட்டம், வரும், 15ம் தேதி வரை தொடர, டில்லி ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. டில்லியில், காற்று மாசை கட்டுப்படுத்த, ஜனவரி, 1ம் தேதி முதல், கார் போக்குவரத்து கட்டுப்பாடு திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, ஞாயிறு தவிர்த்து, ஒரு நாள் விட்டு ஒரு நாள், ஒற்றைப் படை மற்றும் இரட்டைப் படை பதிவெண் உள்ள கார்கள் மட்டும், சாலைகளில் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. வரும், 15ம் தேதி வரை சோதனை முறையில் அமலில் உள்ள, இந்த திட்டத்தை தடை செய்யக் கோரி, டில்லி ஐகோர்ட்டில், ... |
| Posted: 11 Jan 2016 11:02 AM PST சென்னை:தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை: அண்ணா நுாற்றாண்டு நினைவு நுாலகத்தை திட்டமிட்டு, அ.தி.மு.க., ஆட்சி அலங்கோலப்படுத்தி யது. சென்னை உயர் நீதிமன்றம் தலையீட்டால், நுாலகம் உயிர் பிழைத்திருக்கிறது; எனினும், உருக்குலைந்திருக்கிறது என்ற உண்மையை மறைப்பதற்கில்லை.ஒவ்வொருமுறையும், உயர் நீதிமன்றம் தலையிட்டும் கூட, அதன் உத்தரவுகளை உதாசீனப் படுத்தி, தொடர்ந்து அலட்சியம் செய்து வந்ததால், அ.தி.மு.க., அரசுக்கு, இறுதி எச்சரிக்கை வழங்கியுள்ளது.அண்ணா பெயரால், தி.மு.க.,ஆட்சியில், நுாலகம் ஒன்றை திறந்தேன் என்பதற்காக, ஜெயலலிதா அதை ... |
| சிலம்ப போட்டிக்கு தடை கோரி வழக்கு விளையாட்டு ஆணையத்துக்கு 'நோட்டீஸ் Posted: 11 Jan 2016 11:35 AM PST 'சென்னை: இந்திய பள்ளி விளையாட்டுகள் கூட்டமைப்பு விதிகள் படி, தேசிய பள்ளி விளையாட்டு போட்டிகளில் சிலம்ப போட்டி நடத்த தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்திய பள்ளி விளையாட்டுகள் கூட்டமைப்பு, ஜன., 16 முதல், 20 வரை, ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில், 61வது தேசிய பள்ளி விளையாட்டு போட்டிகளை நடத்துகிறது. 'இந்திய பள்ளிகள் கூட்டமைப்பு விதிகள் படி, சிலம்ப போட்டி நடத்தப்படும்' என,அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து, இந்திய சிலம்பம் கூட்டமைப்பு சார்பில், அதன் பொதுச் செயலர் கேசவன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 12,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |