Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இப்போதும் பூக்கும் ஒரு மழைப்பூ

Posted: 11 Jan 2016 02:44 PM PST

— இந்த உலகின் மீது முதலில் பெய்த மழையில் முதலில் நனைந்தது ஒரு பெண்ணாக இருக்கலாம் – மண் நிறத்தை அவளது உடலுக்கும் ஆகாய நீலத்தைக் கண்களுக்கும் அப்போது அவள் தேர்ந்தெடுத்திருக்க கூடும் – தனித்த அவள் புன்னகையின் ஒளியை கொடி மின்னல்களில் பொருத்தவும் சுமந்து திரிந்த கனவுகளை வேர்களில் சொரிந்து மலரச் செய்யவும் அப்போது அவள் பழகிஇருப்பாள் – புழுதிக்குள்ளிருந்து கடவுள் அவளுக்காக உருவாக்கி அனுப்பி வைத்த உலகின் முதல் காதலன் அவள் இதழ்களின் மீது மானுடத்தின் முதல் முத்தத்தை பதித்த போது அவளது ...

விரல் மொழி

Posted: 11 Jan 2016 02:00 PM PST

கட்டைவிரலை உயர்த்திக் காட்டி சவாலையும் கீழ்நோக்கி கவிழ்த்துக் காட்டி தோல்வியையும் காட்டுகிறான் ஒருவன். ஒற்றைவிரலொன்றையும் இரட்டை விரலையும் காட்டி உபாதைகளைத் தெரிவிக்கிறான் சிறுவன் ஒருவன். ஆட்காட்டி விரலை எச்சரிக்கவும் இருவிரல் காட்டி வெற்றியையும் காட்டுகிறான் ஒருவன். கட்டை விரலை காதுக்கும் சுண்டு விரலை வாயருகிலும் வைத்து தொலைபேசியில் பேசுவதை நினைவூட்டுகிறான் ஒருவன். நடுவிரலைக் காட்டி எதிரியைக் கோபமூட்டுகிறான் ஒருவன். ஐந்து விரல்களை இட வலமாக ஆட்டி பிரிவையும் ...

மார்கெட்டிங் என்றால் என்ன?

Posted: 11 Jan 2016 01:30 PM PST

சிலருக்கு மார்க்கெட்டிங்கை பற்றி தெரிந்திருக்கும், ஆனால் அதன் வகைகளைப்பற்றி தெரிந்திருக்க‍ வாய்ப்பில்லை. பலருக்கு மார்க்கெட்டிங் என்றால் என்ன‍வென்றே தெரியாமலும் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே இந்த பதிவு. நீங்கள் ஒரு விருந்தில் அழகான, ஒரு பணக்கார பெண்ணை பார்க்கிறீர்கள். நீங்கள் அந்த பெண்ணிடம் சென்று "நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள்"என்று கூறினால் அது Direct Marketing. உங்கள் நண்பர்கள் அந்த பெண்ணிடம் சென்று உங்களை காண்பித்து "அவனும் பணக்காரன் தான். அவனை திருமணம் செய்து ...

தென்கொரியாவுக்கு மேலாக அமெரிக்கப் போர் விமானம் பறந்துள்ளது

Posted: 11 Jan 2016 01:18 PM PST

அமெரிக்க போர் விமானம் ஒன்று தென்கொரியாவுக்கு மேலாக மிகவும் தாழ்வாக பறந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் குவாம் விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்ட, அணு ஆயுதங்களை கொண்டுசெல்லக்கூடிய இந்த B-52 ரக போர் விமானத்துக்கு பாதுகாப்பாக அமெரிக்க மற்றும் தென்கொரிய போர் விமானங்களும் உடன் பறந்துள்ளன. வடகொரியா கடந்தவாரம் நடத்தியிருந்த அணு குண்டு பரிசோதனைக்கு பதிலடியாகவே அமெரிக்கா தனது வான் தாக்குதல் வல்லமையை வெளிப்படுத்தியுள்ளது. ஹைட்ரஜன் குண்டு ஒன்றை பரிசோதித்ததாக வடகொரியா ...

ஆயுதங்களுடன் பிடிபட்ட அமெரிக்க கப்பல்: இந்தியர்கள் உள்பட 35 பேருக்கு 5 ஆண்டு சிறை!

Posted: 11 Jan 2016 01:15 PM PST

ஆயுதங்களுடன் அமெரிக்க கப்பல் பிடிபட்ட வழக்கில், 35 பேருக்கு தலா 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி, தூத்துக்குடி அருகே இந்திய கடல் பகுதிக்குள், ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்ததாக அமெரிக்க தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ''சீமேன் கார்டு ஓகியோ'' என்ற கப்பல் பிடிபட்டது. இந்த கப்பலில் இருந்த 10 மாலுமிகள் உள்பட 35 பேரை, கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களில் இந்தியாவை சேர்ந்த 12 பேர், உக்ரைனை சேர்ந்த 3 பேர், ...

கெஜ்ரிவால் முதல் சகாயம் வரை

Posted: 11 Jan 2016 01:09 PM PST

சகாயம் அரசியலுக்கு வரவேண்டும் என்னும் குரல் ஓரளவு வலிமை பெற்று வருவதைக் காணமுடிகிறது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் பெற்ற பெரும்வெற்றியைத் தமிழகத்துக்கு இழுத்து வர சகாயம் உதவுவார் என்று சிலர் திடமாக நம்பத் தொடங்கியிருக்கிறார்கள். அவர் இவர், அந்தக் கட்சி இந்தக் கட்சி, அந்த அணி இந்த அணி என்று திரும்பத்திரும்பப் பார்த்து வெறுத்துப்போன பெரும்திரளான மக்கள், சகாயத்தை ஒரு மாற்றாகப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். சகாயம் செய்யவேண்டிய சகாயம் குறித்து கட்டுரைகளும் திறந்த கடிதங்களும் எழுதப்பட்டு ...

விரைவில் நாஞ்சில் கூடு தாவலாம்!

Posted: 11 Jan 2016 01:04 PM PST

மீண்டும் தாய்க் கழகத்தில் ஐக்கியமாகிறார் நாஞ்சில்?   அண்மையில் தனியார் தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்த விவகாரத்தில்,  நாஞ்சில் சம்பத்தின் அதிமுக துணை கொள்கை பரப்பு செயலாளரின் பதவி பறி போனது. எனினும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக அவர் இன்னும் நீடிக்கிறார்.  அதனால், தனது நீக்கம் குறித்து அதிமுக தலைமைக்கு மனம் திறந்த மடல் ஒன்றை நாஞ்சில் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த மடலில், தனது நிலைப்பாட்டையும்,  மதிமுகவில் இருந்து தான் விலகிய பிறகு அதிமுக தலைமைக்கு தான் காட்டிய விசுவாசம் ...

நகரத்துக் காக்கை

Posted: 11 Jan 2016 09:57 AM PST

கடைசி வரை!

Posted: 11 Jan 2016 09:50 AM PST

சரக்கு மாஸ்டர் வெங்காய பஜ்ஜி மாவை, கடாயில் கொதிக்கும் எண்ணெயில் போடுவதை பார்த்தபடி நின்றிருந்தார் நரசிம்மராவ். பலகார அயிட்டம் தயாராகும் போது, கேஷ் கவுன்டரில் கொள்ளை போனால் கூட பொருட்படுத்த மாட்டார், நரசிம்மராவ். 'ரவுண்ட்டானா கபே'வின், வெற்றி சூட்சுமம், அந்த வெங்காய பஜ்ஜியிலும், அக்ரூட் அல்வாவிலும் இருந்தது. வேட்டியை மடித்துக் கட்டி, கரடி போல மண்டியிருக்கும், மார்பு ரோமத்தை, வெள்ளைத் துண்டு மறைத்தும், மறைக்காமலும் தொங்க, வெள்ளி வெற்றிலைச் செல்லத்தில், ஒரு வெற்றிலையை எடுத்து, பதமாக நீவி, ...

தை பிறந்தால் வழி பிறக்கும்!

Posted: 11 Jan 2016 09:38 AM PST

ஜன., 15 - தை பொங்கல் பொங்கல் திருநாளை, மகர சங்கராந்தியன்று கொண்டாடுகின்றனர். காரணம், அன்று தான், மகர ராசியில் நுழைகிறான் சூரியன். சங்கராந்தியை, சங்+கராந்தி என, பிரித்து பொருள் காண வேண்டும். 'சங்' என்றால், நல்ல முறை; 'கிராந்தி' என்றால், மாறுதல்! கிராந்தி என்ற சொல்லே, கராந்தி என மருவியுள்ளது. 'சங்கராந்தி' என்ற சொல்லுக்கு, நல்ல முறையிலான மாற்றம் என்று பொருள். பொதுவாக, தை மாதம் முதல் தேதியில், மகர சங்கராந்தி வரும். இந்நாளில், வடதிசை பயணத்தை துவக்குகிறது சூரியன். வடக்கு திசையை, 'குபேர திசை' ...

அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா?

Posted: 11 Jan 2016 09:36 AM PST

நம் நிலைப்பாடுகள், பல நேரங்களில், கேலி செய்யப்படுவதையும், கேள்விக்குரியதாக ஆவதையும் பார்க்கிறோம்; அனுபவிக்கிறோம். போதுமென்ற மனதோடு, இருப்பதை வைத்து திருப்தி அடைந்தால், 'முன்னேற்றத்தில் அக்கறை இல்லாதவர்கள்...' என்கிறது இச்சமூகம். உணர்வுபூர்வமான சச்சரவுகளின் போது, பொறுமையை கடைப்பிடித்தால், 'உனக்கு ரோஷமே வராதா...' என்கின்றனர் நண்பர்கள். பெருந்தன்மையோடு, நமக்கு தெரிவிக்கப்படாத வீட்டின் துக்கத்தில் பங்கேற்றால், 'வெட்கமே கிடையாதா...' என்கின்றனர் உறவினர்கள். இப்படியே குடும்ப உறுப்பினர்களுடனோ, ...

சங்கடங்களை போக்க சம்மணங்கள்!

Posted: 11 Jan 2016 09:34 AM PST

பொதுவாக நாம், நிறைய நேரம் காலை தொங்க வைத்தே அமர்கிறோம். இதனால், ரத்த ஓட்டம் இடுப்பிற்கு கீழ்ப் பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது. இதன் காரணமாக, பல உடல் உபாதைகள் எற்பட வாய்ப்பு உண்டாகிறது.  மாறாக, காலை மடக்கி, சம்மணமிட்டு அமரும் போது, இடுப்புக்கு மேலே, ரத்த ஓட்டம் அதிகமாகி, நம் உடலின் மிக முக்கிய உறுப்புகளான சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண் மற்றும் காதுகளுக்கு சென்று, சக்தியும், ஆரோக்கியமும் கிடைக்க செய்கிறது. மேலும், காலை மடக்கி, கீழே அமர்ந்து சாப்பிடுவதன் மூலம், இடுப்புக்கு ...

படித்ததில் பிடித்தது :) --'நீங்க அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறீங்களா?!

Posted: 11 Jan 2016 09:31 AM PST

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

விநாயகர் எத்தனை விநாயகர்

Posted: 11 Jan 2016 09:22 AM PST

விநாயகர் எத்தனை விநாயகர் இன்னும் எவ்வளவு எவ்வளவு வருமோ ? ரமணியன்

பொய்யலங்காரம்

Posted: 11 Jan 2016 09:19 AM PST

எங்கள் குடும்ப whatsapp குழுமத்தில் நாங்கள் மட்டும் கேட்க நான் சொன்ன புது கவிதை இது. என் முதல் முயற்சி. தவறுகள் இருப்பின் மன்னிக்கவும் **** நல்ல சேதி சொல்ல வந்தேன் நண்பா, உண்மையின் அருமை விளம்ப வந்தேன். வெளிச்சத்தின் அருமை அறிய கொஞ்சம் இருட்டு அவசியமல்லவா? உண்மை பற்றி சொல்லும்முன் கொஞ்சம் பொய்கள் பற்றி சொல்லவா? உண்மை இங்கே மலடாய் இருக்க பொய் குட்டிகள் போடுது. பொய்யின் குட்டியை பார்த்து உண்மை, குட்டிக்கரணம் போடுது. பிழைப்புக்காக பொய்கள் சொன்னது பழங்கதையாய் போனது, பொய் ...

பூத்து குலுங்கும் கலர் கலரான பூக்கள்

Posted: 11 Jan 2016 09:19 AM PST



நன்றி- முகநூல்

பிரகாசமான வண்ணங்களில் அதிவேக ரயில்கள்

Posted: 11 Jan 2016 09:17 AM PST

- மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் மாதிரி ரயில் பெட்டியில் பல வண்ணங்களை தீட்டும் இறுதிக் கட்ட பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள். - அடுத்த ஆண்டு முதல் சாம்பல், நீலம் மற்றும் மஞ்சள் ஆகிய பிரகாசமான வண்ணம் பூசப்பட்ட அதிவேக ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. - இதுகுறித்து ரயில்வே துறை உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ''ரயில் பெட்டி வடிவமைப்புக் கான தேசிய மையம் ரயில் களுக்கான வண்ணங்களை தேர்ந்தெடுத்துள்ளது. அதில் சாம்பல், நீலம் மற்றும் மஞ்சள் பார்டர்களை ரயில் பெட்டிகளில் பயன்படுத்த ...

பழனி மலை முருகா

Posted: 11 Jan 2016 09:12 AM PST

■ பழனி மலை முருகா, எனக்கு வர 2016ல லவ்வர் செட் ஆனா, இந்த மெசேஜ் படிக்கற ஃபிரெண்ட்க்கு மொட்டை போட்டு, வேல் குத்தி, அவங்க மொபைலை உன் உண்டியல்ல போட்டுறேன்.. அரோகரா...! ■ காதலி : என்ன அப்படி பார்க்கறே டியர்.. இப்போ உன் மனசு முழுக்க நாந்தானே..? காதலன் : அட.. ஆமாம்..! எப்படிக் கண்டுபிடிச்சே..? காதலி : உன் லவ் எனக்கு தெரியாதா..? சரி.. இந்த நிமிடத்தில நீ என்ன நினைக்கிறே..? மறைக்காம சொல்லேன்.. காதலன்: இந்த தீனி திங்கிறாளே.. முக்காவாசி கடலையை இவளே தின்னுட்டாளே.. இவள வச்சு குடும்பம் நடத்த முடியுமான்னு ...

செட்டிநாடு சாப்பாடு, தலைவாழை இலை விருந்து.. அடடா... தமிழ்நாட்டை புகழ்ந்து தள்ளும் நியூயார்க் டைம்ஸ்!

Posted: 11 Jan 2016 09:01 AM PST

சென்னை: 2016ம் ஆண்டு பார்க்க வேண்டிய உலகின் முக்கிய இடங்களின் வரிசையில் தமிழ்நாட்டுக்கு 24வது இடத்தைக் கொடுத்துள்ளது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை. இந்தியாவிலேயே தமிழகம் மட்டும்தான் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் கலை, கலாச்சாரம், பண்பாடு, தொன்மை ஆகியவற்றையும் நியூயார்க் டைம்ஸ் வெகுவாகப் புகழ்ந்து பாராட்டியுள்ளது. அது மட்டுமல்லாமல், தமிழகத்தின் வரலாறு, ருசியான சாப்பாடு, கோவில்கள் ஆகியவை குறித்தும் சிலாகித்து எழுதியுள்ளது நியூயார்க் டைம்ஸ். இந்தப் பத்திரிகையின் ...

முதல் பார்வை: அழகு குட்டி செல்லம் - கொஞ்சி மகிழலாம்

Posted: 11 Jan 2016 08:59 AM PST

குழந்தைகளை மையமாகக் கொண்ட இன்னொரு படம், நீயா நானா ஆண்டனி தயாரிப்பில் உருவான படம், அழகு குட்டி செல்லம் பாடல், ட்ரெய்லர் தந்த எதிர்பார்ப்புகள் என்ற இந்த காரணங்களே அழகு குட்டி செல்லம் படத்தைப் பார்க்கத் தூண்டின. - தியேட்டருக்குள் நுழைந்ததும் நிசப்தம் நிலவியது. டைட்டில் கார்டு ஆரம்பித்ததும், தம்பி ராமையாவை ஆசிரமத்துச் சிறுவன் கென் கமென்ட் அடிக்கும்போது தியேட்டர் சிரிப்பில் அதிர்ந்தது. - படம் எப்படி? - ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும் இந்த பூமிக்கு புதிய நம்பிக்கையைக் கொண்டு வருகிறது. ...

பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி

Posted: 11 Jan 2016 08:56 AM PST

- ஐதராபாத், ''பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம் செய்து கொள்வேன்'' என்று நடிகை அனுஷ்கா கூறினார். பேட்டி அனுஷ்கா தமிழ், தெலுங்கில் தயாராகும் 'பாகுபலி' இரண்டாம் பாகத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். சூர்யா ஜோடியாக 'சிங்கம்' படத்தின் மூன்றாம் பாகத்திலும் நடிக்கிறார். ஐதராபாத்தில் அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:– புத்தாண்டில் புதிய முடிவுகள் எடுத்துள்ளேன். பணம் தேவையான அளவில் இருந்தால் போதும். அதிகமாக வேண்டாம். என்னை சினிமாதான் நடிகையாக இந்த சமூகத்துக்கு அடையாளப்படுத்தியது. ...

படித்ததில் பிடித்தது

Posted: 11 Jan 2016 08:49 AM PST

இன்பத்திலும் துன்பத்திலும் நாம் நெனைக்க  வேண்டியது ஒன்றே  ஒன்று  மட்டும்  தான் .. இந்த நிமிடம் நிரந்தரம் இல்லை இதுவும் கடந்து போகும் ... உதவி செய்ய அறிவு தேவை இல்லை நல்ல இதயம் இருந்தாலே போதும் அன்பும் மரியாதையும் கேட்டுப்  பெற வேண்டியது இல்லை கொடுத்து பெற வேண்டியது. அளவு கடந்த பாசங்களும் நம்மை (கொள்ளும்)  கொல்லும் ஆயுதங்களே வெற்றியின் ரகசியம் என்பது செய்யும் செயலில் நிலையாக நிற்பதே. வலியோடு போராடினால் தான் ஒரு பெண் தாயாக முடியும். இருளோடு போராடினால் (தன)  தான்  புழு ...

அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை

Posted: 11 Jan 2016 08:31 AM PST

அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை கலி ஃ போர்னியா / லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் புறநகர்ப் பகுதி போர்ட்டர் ரேஞ்ச். இங்கு ஏற்பட்டிருக்கும் மீத்தேன் கசிவு, அப்பகுதியில் நெருக்கடி நிலை அறிவிக்கப்படும் அளவுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தி யிருக்கிறது. இப்பகுதி யில், 'சோகால்கேஸ்' எனும் நிறுவனம் மீத்தேன் எடுக்கும் பணியை ஈடுபட்டிருக்கிறது. சுமார் 8 ஆயிரம் அடி ஆழமுள்ள ஒரு கிணற்றில் கடந்த அக்டோபர் மாதம் மீத்தேன் கசிவு ஏற்பட ஆரம்பித்தது. இதைச் சரிசெய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் தோல்வியடைந்தன. புவிவெப்பமடையச் ...

ஆண்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டிய தருணம் இது: தில்லி நீதிமன்றம்

Posted: 11 Jan 2016 08:30 AM PST

பொய்யான பலாத்கார வழக்கு ஒன்றில் வழக்குரைஞர் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்ட நிலையில், ஆண்களைப் பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டிய தருணம் இது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. வழக்குரைஞரிடம் பணியாற்றிய பெண், அவர் மீது பொய்ப் புகார் கூறியிருந்ததும் நிரூபிக்கப்பட்டுள்ளது. பலாத்கார வழக்கில், நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்ட வழக்குரைஞர், இந்த பொய் வழக்கால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாகவும், வழக்கில் தான் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டாலும், தன்னை ஒரு குற்றவாளியைப் போலவே இந்த ...

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II

Posted: 11 Jan 2016 08:26 AM PST

வாவ் ! திரி இரண்டாக  பிரிந்து விட்டதா?...... ....................... . . கிட்ட தட்ட ஒரு வருடம் போய் இருக்கு அந்த திரி .....நன்றி நண்பர்களே ! இது  முதல்  திரி  இன்  link: //படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்// பார்த்து  ரசியுங்கள்  

காதல்

Posted: 11 Jan 2016 08:18 AM PST

நீ எனோடு இல்லாத நாட்களில் உன் நினைவுகளை எனக்கு துணையாக விட்டு சென்றாய் துணையாக விட்டு சென்ற உன் நினைவுகள் என்னை கேட்கிறது ... நினைவோடு இருந்தது போதும் உன் துணையோடு போய் சேரு என்று. எப்படி சொல்வேன் அன்பே அதற்கு. பிரிந்திருப்பது உடல் மட்டும் தான் உயிர் இல்லை என்று. நீ எனோடு பேசாவிட்டாலும் என் மௌனத்திலும் என் சிரிப்பிலும் , என் இதய துடிப்பின் நினைவிலும் நீ எனோடு என்னுள் இருகிறாய் என்பதை என் மனம் உறுதி செய்கின்றது. ( இது என் சொந்த கவிதை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன் ) ...

உனக்காக அனுப்புகிறேன்!!!

Posted: 11 Jan 2016 08:14 AM PST

விடைபெறும் நேரத்தில்  விடைகொடுக்க முடியாமல் தவிப்பில் -உன் விழிகள் தொடுத்த வினாக்கனையையும் மீறி விதி விட்டபடி விடட்டும் என்று -நான்  விரைந்து வந்து விட்டேன் வெளிநாடு! இங்கு விழிமூடி உறங்க நினைத்தும்- உன் விழிகள் தொடுத்த வினாக்களுக்கு தினமும் விடையறிய விழைகின்றேன் ஆனால்  விடையொன்றும் அறிந்தபாடில்லை! கிளி  பேசும் மொழிகூட அறிந்த நான் - உன் விழி பேசும் மொழி அறியானானேன்! கடல்தாண்டி நான் வந்தாலும் என் உடல் மட்டும் தான் இங்கே உள்ளம் எப்போதும் உன்னோடுதான்!!! எனைக்காண துடிக்கும்- ...

காத்திருந்து கண்ட சுகம்!!!!!

Posted: 11 Jan 2016 08:10 AM PST

எப்பொழுது வரும் ஞாயிரென்று - நான் என்னி என்னி காத்திருப்பேன் என்னவளே உன் குரலை என் அழைபேசியலே நான் கேட்க! வாரத்தின் ஏழு நாட்களிலே -உன் வார்த்தையை கேட்கும் அந்நாள்தான் -என் வாழ்விலே மிகவும் இனிமையான வசந்தகாலமாய உணர்கிறேன்! உண்டேன் உறங்கினேன் -நான் உணரச்சியற்ற தேகத்துடன் உன் குரலை கேட்டவுடன் - என்மனமோ உயரே வானில் பறந்த்தடி! இன்று விஞ்ஞானத்தின் வளர்ச்சினால் விரும்பும் போதெல்லாம் பேசுகிறோம்- ஆயினும் காத்திருந்து உன் குரல்கேட்டு - நான் கண்ட அந்த சுகத்தை -இன்று ...

சென்சாரில் 'யு' சான்றிதழ்: ஜன.14ம் தேதி வெளியாகிறது 'கெத்து'

Posted: 11 Jan 2016 08:02 AM PST

- உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் 'கெத்து' படத்துக்கு சென்சார் அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். ஜனவரி 14ம் தேதி வெளியாகிறது. உதயநிதி ஸ்டாலின், ஏமி ஜாக்சன், கருணாகரன், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடிக்கும் 'கெத்து' படத்தை இயக்கி வருகிறார் திருக்குமரன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி கொச்சின், கோவா உள்ளிட்ட பல பகுதிகள் நடைபெற்றது. இறுதிகட்டப் பணிகள் முடிந்து, படத்தை ...

ஹாய் நண்பர்களே !

Posted: 11 Jan 2016 07:56 AM PST

பெயர்: ச. KAVIYANJALI
சொந்த ஊர்: Pudhucherry
ஆண்/பெண்: Female
ஈகரையை அறிந்த விதம்: Health டிப்ஸ் பாக்கும் போது கிடைத்தது.
பொழுதுபோக்கு: SONGS  KEKRATHU
தொழில்: ACCOUNTANT
மேலும் என்னைப் பற்றி: EPOTAIKU  YETHUM இல்லை  

நாடு முழுவதும் 2,500 ‘வை-பை’ இணைப்பு மையங்கள்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

Posted: 11 Jan 2016 07:42 AM PST

- அடுத்த நிதியாண்டுக்குள் நாடு முழுவதும் 256 இடங்களில் 2,500 'வை-பை' மையங்கள் அமைக்கப்படும் என மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். - மும்பை பங்குச் சந்தையில் ஞாயிறன்று இலவச 'வை-பை' சேவையை தொடங்கிவைத்து அவர் பேசியதாவது: - மொபைல் தொலைபேசி பயன்பாடு 100 கோடியை எட்டியுள்ளது. இணையதள பயன்பாடு 40கோடியை கடந்துவிட்டது. அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள் கூடுதலாக 20 முதல் 30 கோடியாக அதிகரிக்கும். எனினும் அடுத்த 6 மாதங்களுக்குள் 50 ...

கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று

Posted: 11 Jan 2016 07:25 AM PST

திருப்பூர் குமரன் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. திருப்பூர் குமரன் திருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் ...

வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய வரவு

Posted: 11 Jan 2016 07:07 AM PST

- - குட்டியை ஈன்றது. நீர் நில வாழ் உயிரினமான இவை, நிலவாழ் உயிரினங்களில் யானை, காண்டாமிருகத்துக்கு அடுத்த படியாக 3 வது பெரிய உயிரினமாகும். குதிக்கத் தெரியாத உயிரினமான இது, மணிக்கு நிலத்தில் 30 கி.மீ வேகத்தில் ஓடவும், நீரில் 8 கி.மீ வேகத்தில் நீந்தவும் செய்யும். -

லால் பகதூர் சாஸ்திரி மறைந்த தினம் ஜனவரி 11 !

Posted: 11 Jan 2016 06:17 AM PST

லால் பகதூர் சாஸ்திரி மறைந்த தினம் ஜனவரி 11 ! (அக்டோபர் 2, 1904 - சனவரி 11, 1966) இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆவார். இவர் ஒரு முக்கியமான விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பதவிக்கு வந்தார். இவர் முறையாகத் தெரிவு செய்யப்படும் வரை குல்சாரிலால் நந்தா 14 நாட்கள் இடைக்காலப் பிரதமராக இருந்தார். இவர் பதவியேற்று 2 ஆண்டுகளுக்கு உள்ளாகவே, சோவியத் ஒன்றியத்திலுள்ள தாஷ்கண்டில் ...

48 வாழைப்பழங்களை சாப்பிட வைத்து மும்பையில் திருடன் வயிற்றிலிருந்து தங்க சங்கிலியை மீட்ட போலீஸார்

Posted: 11 Jan 2016 06:10 AM PST

மும்பையில் திருடனின் வயிற்றில் இருந்த தங்கச் சங்கிலியை 48 வாழைப்பழங்களை சாப்பிட வைத்து மீட்டுள்ளனர் போலீஸார். மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் புறநகர் பகுதியான கட்கோபரில் புதன்கிழமை இரவு, ஒரு பெண்ணிடமிருந்து 25 கிராம் எடை கொண்ட தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடி உள்ளார் ஒருவர். இதை அறிந்த அப்பகுதி மக்கள், அந்த நபரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். பின்னர் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் அந்த நபரை ஒப்படைத்தனர். கோபி ஆர் கவாரே (25) என்ற ...

ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே

Posted: 11 Jan 2016 04:05 AM PST

பாடியவர்: இளையராஜா இசை : இளையராஜா படம்: ஆவாரம்பூ - ---------------------------------- - ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக்கேட்டு தூங்கும் ஆவராம்பூவே தனியானால் என்ன துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு அமுதே என் கண்ணே பசும் பொண்ணே இனி துன்பம் ஏன் இங்கு - [ஆலோலம் பாடி] - மண்ணுலகில் வந்தோர்க்கெல்லாம் இன்பம் துன்பம் என்றும் உண்டு தாய் இழந்த துன்பம் போலே துன்பம் அது ஒன்றுமில்லை பூமி என்ற தாயும் உண்டு வானம் என்ற தந்தை உண்டு நீங்கிடாத சொந்தம் என்று நீரும் காற்றும் எங்கும் உண்டு பூபாளம் ...

மோகனம்! தொகுப்பாசிரியர் : பேராசிரியர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Posted: 11 Jan 2016 03:52 AM PST

மோகனம்! தொகுப்பாசிரியர் : பேராசிரியர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! திருவரசு புத்தக நிலையம், 23, தீன தயாளு தெரு,தியாகராய நகர், சென்னை – 600 017. 044 – 24342810/2310769 thiruvarasubooks@gmail.com விலை : ரூ. 300/- 496 பக்கங்கள் ***** நூலின் தோரண வாயில் வரவேற்பு வாயிலாக கவிஞர் வைரமுத்து அவர்கள் மனம் திறந்து தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களையும், நூலின் தொகுப்பாசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்களையும் பாராட்டி உள்ளார். ஒப்புக்காக பாராட்டாமல் ...

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Posted: 11 Jan 2016 03:26 AM PST

மெழுகுவர்த்தி உறவுகள் ,
          உருகாவிட்டால் உறவில் ஒளி இல்லை ,
உருகிவிட்டால், பின்பு உறவே இல்லை !

லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர்

Posted: 10 Jan 2016 10:31 PM PST

- லால் பகதூர் சாஸ்திரி (அக்டோபர் 2, 1904 – சனவரி 11, 1966) - மூன்றாவது இந்திய பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி நினைவு நாள் இன்று… ======================== – அக்டோபர் இரண்டு என்றால் எல்லாருக்கும் காந்தியை ஞாபகம் வரும். இன்னொரு தலைவருக்கும் அக்டோபர் இரண்டு தான் பிறந்த நாள். அவர் லால் பகதூர் சாஸ்திரி. – சாஸ்திரி படித்து பெற்ற பட்டம் – சாதி பெயர் இல்லை. எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த உருவத்தில் சிறிய மனிதர். – இளவயதில் கங்கையை கடந்து தான் படிக்க செல்ல வேண்டும். படகில் போக காசில்லாத ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™