Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பொங்கலுக்கு உதவாத சிறப்பு ரயில்கள் டிக்கெட் போணி ஆகாததால் வீண்

Posted: 10 Jan 2016 06:54 AM PST

பொங்கல் பண்டிகைக்கு உதவாத வகையில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில்களில், டிக்கெட்கள் முன் பதிவு ஆகவில்லை.இம்மாதம், 15ல், பொங்கல் பண்டிகை கொண்டாடப் படுகிறது. பண்டிகைக்கு உதவும் வகையில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட வேண்டும். ஆனால், சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படவில்லை. அறிவிக்கப்பட்ட சில ரயில்களும், அதிக கட்டணம் வசூலிக்கும், 'சுவிதா' ரயிலாக இயக்கப்பட்டன. நேற்று முன்தினம், சில சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், பண்டிகை முடிந்து பயணிக்கும் வகையில்அறிவிக்கப்பட்ட இந்த ரயில்களின் டிக்கெட்கள் ...

நீர்வள துறைக்கு ரூ.600 கோடி சேதம்

Posted: 10 Jan 2016 06:56 AM PST

பருவ மழையால், நீர்வளத் துறைக்கு, 600 கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதாக, மத்திய குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில், வடகிழக்கு பருவ மழை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களை புரட்டி போட்டது; சாலைகள் அதிகளவில் சேதம் அடைந்தன. இவற்றைச் சீரமைக்க, மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு, 3,500 கோடி ரூபாய், மாநில நெடுஞ்சாலைத் துறையின் கீழ் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் பிரிவிற்கு, 350 கோடி ரூபாய் தேவை என, மாநில நெடுஞ்சாலைத் துறை வெளிப்படையாக அறிவித்துள்ளது. இதே போல, பொதுப்பணித்துறையின் கீழ் ...

தபால் வங்கி சேவைக்கு அரசின் மானிய திட்டங்கள்...மாற்றம்? ரூ.1,500 கோடி வருவாய் ஈட்டிய தபால் துறை

Posted: 10 Jan 2016 08:40 AM PST

புதுடில்லி: மத்திய அரசின் நேரடி மானிய திட்டங்களை, புதிதாக துவக்கப்படவுள்ள, தபால் வங்கிச் சேவை மூலம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சமையல் காஸ், கிராமப்புற வேலை வாய்ப்பு உள்ளிட்ட, மத்திய அரசின், 40க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கான மானியங்கள், பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம், மானியங்கள் நேரடியாக, பயனாளிகளுக்கு கிடைப்பதுடன், அதில் நடந்த முறைகேடுகளும் தடுக்கப்பட்டுள்ளன. 2015 டிசம்பர், 27 வரை, 40 ஆயிரம் கோடி ரூபாய், நேரடி மானியமாக, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தபால் துறையை மேம்படுத்தும் ...

ஆன்மிகமா, மதவாதமா?பிரதமர் நரேந்திர மோடி அதிரடி

Posted: 10 Jan 2016 08:42 AM PST

மும்பை,:''இந்தியா, உலகுக்கு வாரி வழங்கியது ஆன்மிகம்; மதவாதம் அல்ல,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மும்பையில் நேற்று நடந்த, ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், 'வீடியோ கான்பரன்சிங்' முறையில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது:பண்டைய காலத்தில், நம் நாட்டின் துறவிகளும்,முனிவர்களும், உலகுக்கு வாரி வழங்கியது, ஆன்மிகத்தை; மதவாதத்தை அல்ல. இனப் பிரிவுகள், சில சமயம் பிரச்னைகளுக்கு வழி வகுக்கும். மாறாக ஆன்மிகம், அப்பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும். மறைந்த முன்னாள் ஜனாதிபதிஅப்துல் கலாம், இந்தியாவின் ஆன்மிகத் ...

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

Posted: 10 Jan 2016 08:43 AM PST

புதுடில்லி,: 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை, www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி உள்ளது. அதன்படி, 2014ல், மூன்று லட்சம், 2013ல், 2.35லட்சம், 2012ல், 2.01 லட்சம் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், பல புகார்கள் பொய்யாகவும், பழிவாங்கும் நோக்கிலும் தெரிவிக்கப்படுவதால், அரசு அதிகாரிகள் மீது தேவையில்லாமல் விசாரணை நடத்த வேண்டியது நேரிடுகிறது. எனவே, இனி ...

ஜல்லிக்கட்டுக்கு யாரால் அனுமதி தி.மு.க., - அ.தி.மு.க., 'மல்லுக்கட்டு'

Posted: 10 Jan 2016 09:21 AM PST

'ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்று தந்தது நாங்கள் தான்' என, மக்களிடம் பறைச்சாற்றும் தீவிரத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் களம் இறங்கி உள்ளன.

'இந்தாண்டு பொங்கலுக்கு ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்; அதற்கான அவசர சட்டத்தை இயற்ற வேண்டும்' என, தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தன.அதற்கான முயற்சியில் இறங்கிய மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், மத்திய வனத் துறை அமைச்சகம் மூலம், வன விலங்குகளைக் காட்சிப் படுத்தும் பட்டியலில் இருந்து, காளைகளுக்கு விலக்கு அளிக்கும் அறிவிக்கையை வெளியிட வைத்து, ...

'அ.தி.மு.க., ஆட்சியில் ஆலோசனை இல்லை!'

Posted: 10 Jan 2016 09:29 AM PST

சென்னை:தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை:இடுபொருட்களின் விலை உயர்வு, அதிகரித்து வரும் உற்பத்தி செலவு ஆகியவற்றை கருத்திலே கொண்டு, மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும், கரும்பு விலையை உயர்த்திக் கொண்டே வருகிறது.

ஆனால், அந்த இயல்பான நிலைமைகளுக்கு மாறாக, அ.தி.மு.க., அரசு, ஒவ்வொரு ஆண்டும், மாநில அரசின் பரிந்துரை விலையைக் குறைத்து, கரும்பு விவசாயிகளை வஞ்சித்து கொண்டே வருகிறது.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், விவசாயிகள், வேளாண் துறை அதிகாரிகள், சர்க்கரை ஆலை நிர்வாகம் பங்கேற்கும் முத்தரப்பு கூட்டம், ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு, அந்தக் ...

மன்மோகன் அரசை கவிழ்க்க சதி நடந்ததா?

Posted: 10 Jan 2016 09:35 AM PST

புதுடில்லி:மன்மோகன் சிங் தலைமையிலான, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, அரசுக்கு தெரிவிக்காமல், ராணுவத்தின் இரு பிரிவுகள் டில்லியை நோக்கி சென்றதாக கூறப்பட்டது.

இந்த விவகாரத்தை, முன்னாள் மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி மீண்டும் கிளப்பியதால் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த, 2012 ஜன., 16ல், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, ஹரியானா மாநிலம், ஹிசார் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவத்தின் தரைப்படை பிரிவு, டில்லியை நோக்கி சென்றதாக, ஆங்கில பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது. அதே நாளில், உ.பி., மாநிலம், ...

அ.தி.மு.க., உடன் கூட்டணி இல்லை என பா.ஜ., திட்டவட்டம்:டூவிஜயகாந்திற்காக கடைசி வரை காத்திருக்க முடிவு

Posted: 10 Jan 2016 09:42 AM PST

''வரும் சட்டசபை தேர்தலில் எக்காரணம் கொண்டும், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை,'' என, பா.ஜ., தேசிய பொதுச் செயலர் முரளிதர் ராவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், விஜயகாந்த் கூட்டணிக்காக கடைசி வரை காத்திருக்கவும், அக்கட்சி முடிவு செய்துள்ளது.

பா.ஜ., சார்பில், சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்வது குறித்து, அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப தன்னார்வலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், பா.ஜ., தேசிய பொதுச் செயலரும், தமிழக மேலிட பொறுப்பாளருமான முரளிதர் ராவ், தகவல் தொழில்நுட்ப பிரிவு தேசிய ...

நாடு திரும்பினார் ராகுல்!

Posted: 10 Jan 2016 10:50 AM PST

புதுடில்லி : காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், இரண்டு வார, ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை முடித்து, நேற்று, டில்லி திரும்பினார்.
கடந்த ஆண்டு, பிப்., 15ல், திடீரென மாயமான ராகுல், 56 நாட்களுக்குப் பின், நாடு திரும்பினார். பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில், முக்கிய மசோதாக்கள் மீதான எதிர்க்கட்சி விவாதங்களில், அனல் பறந்தபோது, ராகுல் இல்லாதது, காங்கிரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. பா.ஜ., மட்டுமின்றி, நாடு முழுவதும், 'எங்கே ராகுல்' என, கேள்விக் குரல்கள் எழுந்தன. இந்த முறை, அது போன்ற சர்ச்சையில் சிக்கக் கூடாது என, முடிவெடுத்த ராகுல், தன் ஐரோப்பிய ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™