Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


இழப்பீட்டுத் தொகையை வாங்க மறுத்து விவசாயிகள் போராட்டம்

Posted: 30 Jan 2016 01:05 PM PST

மதுராந்தம் அருகே மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தங்களுக்கு வந்த இழப்பீட்டுத் தொகையை வாங்க மறுத்து விவசாயிகள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீடு கட்டித் தருவதாக ரூ. 3 கோடி மோசடி:  நடிகரின் மகள் உள்ளிட்டோர் போலீஸில் புகார்

Posted: 30 Jan 2016 01:05 PM PST

திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் வீடு கட்டித் தருவதாகக் கூறி, ரூ. 3 கோடி வரை மோசடி செய்ததாக தனியார் நிறுவனம் மீது பழம்பெரும் நடிகரின் மகள் உள்பட பொதுமக்கள் பலர் திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் சனிக்கிழமை புகார் அளித்தனர்.

குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது

Posted: 30 Jan 2016 01:05 PM PST

காஞ்சிபுரத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இருவர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிகாகோ பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருத கல்வி மையம் தொடக்கம்

Posted: 30 Jan 2016 01:05 PM PST

அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில், சம்ஸ்கிருத கல்வி மையத்தை தொடங்க, அமெரிக்கவாழ் இந்திய தம்பதியரான குரு, அனுபமா ராமகிருஷ்ணன் ஆகியோர் ரூ.23 கோடி நன்கொடை அளித்துள்ளனர்.

பரமத்தி வேலூரில் ஆம்னி பேருந்து - கிரேன் வாகனம் மோதியதில் 2 பேர் சாவு

Posted: 30 Jan 2016 01:05 PM PST

கிரேன் வாகனமும், தனியார் ஆம்னி பேருந்தும் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

குடிநீர் வரி-கட்டணத்தையும் இணைய சேவை மையத்தில் செலுத்தலாம்

Posted: 30 Jan 2016 01:04 PM PST

சென்னை குடிநீர் வாரிய வரியையும், கட்டணத்தையும் இணைய சேவை மையத்தில் செலுத்தலாம் என்று தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 88 உயர்வு

Posted: 30 Jan 2016 01:04 PM PST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.88 அதிகரித்து, சனிக்கிழமை ரூ.20,272-க்கு விற்பனையானது.

பாமக தலைமையில்தான் கூட்டணி

Posted: 30 Jan 2016 01:03 PM PST

பாமக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

சாத்தூர் அருகே கல்குவாரியில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு

Posted: 30 Jan 2016 01:03 PM PST

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சனிக்கிழமை கல்குவாரியில் தவறி விழுந்து 2 பள்ளி மாணவர்கள் இறந்தனர்.

கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 30 Jan 2016 01:03 PM PST

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்றச் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பள்ளி ஆண்டுவிழா

Posted: 30 Jan 2016 12:30 PM PST

புதுகை மச்சுவாடி குத்தூஸ் மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் 20 ஆம் ஆண்டு விழா அண்மையில் (ஜன.25) நடைபெற்றது.

"தன்னம்பிக்கை,விடாமுயற்சி,உற்சாகம் இம்மூன்றும் வெற்றிக்கு அவசியம்'

Posted: 30 Jan 2016 12:30 PM PST

தன்னம்பிக்கை, விடாமுயற்சி, உற்சாகம் இம்மூன்றும் மாணவர்களின் வெற்றிக்கு அவசியம் என்றார் காரைக்குடி தமிழிசைச் சங்க செயலர் வி.சுந்தரராமன்.

மகாத்மா காந்தியின் நினைவு நாளில் புதுக்கோட்டையில் ஐம்பெரும் விழா

Posted: 30 Jan 2016 12:29 PM PST

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு புதுகை மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சார்பில் மதுவிலக்கு விழிப்புணர்வுப் பேரணி,உறுதி ஏற்பு,மரக்கன்று வழங்கும் விழா உள்பட ஐம்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூரில் மறியலில் ஈடுபட்ட 615 ஆசிரியர்கள் கைது

Posted: 30 Jan 2016 12:28 PM PST

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (ஜாக் டோ) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்ட 305 பெண்கள் உள்பட 615 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கல்லூரி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்

Posted: 30 Jan 2016 12:27 PM PST

பெரம்பலூர் ரோவர் பொறியியல் கல்லூரியில், கல்லூரி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

"ஒவ்வொருவரும் மனிதநேயத்துடன் பழக வேண்டும்'

Posted: 30 Jan 2016 12:27 PM PST

ஒவ்வொருவரும் மனிதநேயத்துடன் பழக வேண்டும் என்றார் சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி.

உசிலை.யில் கிட்டங்கி அமைக்க எதிர்ப்பு: மறியலில் ஈடுபட்ட 200 பேர் கைது

Posted: 30 Jan 2016 12:26 PM PST

உசிலம்பட்டி அருகே சுடுகாட்டுக்கான இடத்தில் கிட்டங்கி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

Posted: 30 Jan 2016 12:26 PM PST

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5-ஆவது அலகில் (யூனிட்) சனிக்கிழமை பழுது ஏற்பட்டது. ஏற்கெனவே 3-ஆவது அலகில் பழுது ஏற்பட்டிருப்பதால் தற்போது 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை

Posted: 30 Jan 2016 12:25 PM PST

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தும் வகையில், பீகார் மாநிலத்திலிருந்து பெரம்பலூர் மாவட்டத்துக்கு 114 வாக்குப்பதிவு இயந்திரமும், 500 கட்டுப்பாட்டுக் கருவிகளும் சனிக்கிழமை கொண்டு வரப்பட்டன.

பிப். 1-ல் வழக்கம்போல் அரசுப் பள்ளிகள் இயங்கும்

Posted: 30 Jan 2016 12:25 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளும் பிப். 1 ஆம் தேதி வழக்கம்போல் இயங்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. முனுசாமி.

அரசின் இ-சேவை மையங்களில் மின் கட்டணம் செலுத்தும் வசதி

Posted: 30 Jan 2016 12:24 PM PST

மாவட்டத்தில் செயல்படும் அரசின் இ-சேவை மையங்களில் பொதுமக்கள் தங்களது மின் கட்டணத்தைச் செலுத்தும் வசதி செய்து தரப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் க. நந்தகுமார்.

உயிரிழந்த 14 காவலர்களின் குடும்பத்துக்கு நிதி: முதல்வர் ஜெயலலிதா

Posted: 30 Jan 2016 12:24 PM PST

உடல்நலக் குறைவால் உயிரிழந்த 14 காவலர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதியை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

பணி நிரந்தரம் செய்யாவிடில் தேர்தல் புறக்கணிப்பு: புதுவாழ்வு திட்ட பணியாளர்கள் முடிவு

Posted: 30 Jan 2016 12:24 PM PST

பணி நிரந்தரம் செய்யாவிடில், சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக புதுவாழ்வுத் திட்ட பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மாணவிகள் உயிரிழந்த சம்பவம்: விசாரணையைத் தொடங்கியது சிபிசிஐடி

Posted: 30 Jan 2016 12:23 PM PST

எஸ்விஎஸ் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சனிக்கிழமை விசாரணையைத் தொடங்கிய விழுப்புரம் சிபிசிஐடி போலீஸார், வழக்கின் முதல் தகவல் அறிக்கையை விழுப்புரம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

நகையை பறித்து சென்றவரின் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு: உறவினர்கள் மறியல்

Posted: 30 Jan 2016 12:23 PM PST

பெரம்பலூர் அருகேயுள்ள கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைமாணிக்கம் மனைவி வேம்பு (47). இவர், வெள்ளிக்கிழமை மாலை அதே கிராமத்தில் உள்ள வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

ஜெருசலேம் புனிதப் பயணம்: நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

Posted: 30 Jan 2016 12:22 PM PST

கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் தமிழக அரசின் ரூ. 20 ஆயிரம் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்றார் ஆட்சியர் க. நந்தகுமார்.

"கல்வி ஒவ்வொருவரின் உயர்வுக்கும் முக்கியம்'

Posted: 30 Jan 2016 12:22 PM PST

கல்வி ஒவ்வொருவரின் உயர்வுக்கும் முக்கியம் என்றார் ஆட்சியர் எ.சரவணவேல்ராஜ்.

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

Posted: 30 Jan 2016 12:21 PM PST

அரியலூர் அருகே பல்வேறு குற்றவழக்கில் தொடர்புடையவர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

அரியலூரில் மறியலில் ஈடுபட்ட 318 ஆசிரியர்கள் கைது

Posted: 30 Jan 2016 12:20 PM PST

பதிவுமூப்பு அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, அரியலூர் சார் ஆட்சியர் அலுவலகம் எதிரே சனிக்கிழமை மறியலில் ஈடுபட முயன்ற ஜாக்டோ அமைப்பினர் (தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு) 318 பேர் கைது செய்யப்பட்டனர்.

வணிக வரித் துறையின் புதிய அலுவலகத்தை பார்வையிட்ட ஆட்சியர்

Posted: 30 Jan 2016 12:20 PM PST

அரியலூர் மாவட்டத்தில் வாலாஜ நகரில் புதிதாக கட்டப்பட்ட வணிக வரித் துறையின் அலுவலகத்தை முதல்வர் ஜெயலலிதா, சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

கீழகொளத்தூரில் புதிய ரேஷன் கடை திறப்பு

Posted: 30 Jan 2016 12:19 PM PST

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள கீழகொளத்தூரில் புதிய நியாய விலைக்கடையை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் சனிக்கிழமை திறந்துவைத்து பொருள்களை விநியோகித்தார்.

அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த த.வா.க. பிரமுகர் கைது

Posted: 30 Jan 2016 12:18 PM PST

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே அனுமதியில்லாமல் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

அழைப்பிதழ் கொடுக்க சென்றவர் லாரி மோதி சாவு

Posted: 30 Jan 2016 12:18 PM PST

ஜயங்கொண்டம் அருகே மகளின் மஞ்சள்நீராட்டு விழா அழைப்பிதழ் கொடுக்க சென்றவர் லாரி மோதி உயிரிழந்தார்.

எறிபந்து போட்டி: வாங்கல் அரசு பெண்கள் பள்ளி முதலிடம்

Posted: 30 Jan 2016 12:17 PM PST

முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கரூர் சட்டப்பேரவைத் தொகுதி சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான எறிபந்துப் போட்டியில் வாங்கல் அரசு பெண்கள் பள்ளி முதலிடம் பிடித்தது.

கரூர் நகராட்சி வார்டுகளில் ஆய்வு

Posted: 30 Jan 2016 12:16 PM PST

கரூர் நகராட்சிக்குட்பட்ட 37,38-வது வார்டு பகுதிகளில் நகராட்சித் துறையின் மூலம் பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கேற்ப மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை ஆய்வு மேற்கொண்டார்.

கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வழங்க வலியுறுத்தல்

Posted: 30 Jan 2016 12:16 PM PST

கரும்புக்கான கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ. 4,000 என உயர்த்தி வழங்க வேண்டும் என கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற வீர முத்திரையர் சங்க செயற்குழுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மறியல்: ஜேக்டோ அமைப்பினர் 425 பேர் கைது

Posted: 30 Jan 2016 12:15 PM PST

கரூரில் மறியலில் ஈடுபட்ட ஜேக்டோ அமைப்பினர் 425 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

குடியரசு நாளில் பணி:  நிறுவனங்கள் மீது நடவடிக்கை

Posted: 30 Jan 2016 12:15 PM PST

குடியரசு தினத்தன்று தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்கள் மீது கரூர் தொழிலாளர்கள் ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பைக் மோதி முதியவர் பலி

Posted: 30 Jan 2016 12:14 PM PST

கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகேயுள்ள காட்டுமுன்னூரைச் சேர்ந்தவர் சித்தப்பகவுண்டர் (75). இவர் வெள்ளிக்கிழமை மாலை அங்குள்ள கடைவீதிக்கு சைக்கிளில் சென்றபோது எதிரே ஈரோடு பெருந்துறை ரோட்டைச் சேர்ந்த கவின்குமார்(29) என்பவர் ஓட்டி வந்த பைக் மோதி இறந்தார்.

குமாரசாமி பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் கருத்தரங்கு

Posted: 30 Jan 2016 12:14 PM PST

கரூர் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியில் அறிவியல் மற்றும் மானுடவியல் துறை சார்பில் கணிதத்தில் புள்ளியியல் மற்றும் எண்முறை என்ற தலைப்பிலும், ஆங்கிலத்தில் தொழில்முறை எழுத்துப் பயன்பாடு என்ற தலைப்பிலும் தேசியளவிலான கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த வார கலாரசிகன்

Posted: 30 Jan 2016 12:13 PM PST

நீதிபதி ராமசுப்பிரமணியனின் "சொல் வேட்டை' புத்தக வெளியீட்டு விழாவிற்கும், மதுரை செந்தமிழ்க் கல்லூரி விழாவுக்கும் சென்றவாரம் மதுரைக்குச் சென்றிருந்தபோது, எழுத்தாளர் ஹேமலதா பாலசுப்பிரமணியத்தைப் பார்க்க வேண்டும் என்கிற விருப்பம் மட்டும் நிறைவேறவில்லை.

அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாடு

Posted: 30 Jan 2016 12:11 PM PST

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கான ஆயத்த மாநாடு கரூரில் சனிக்கிழமை நடைபெற்றது

கண்ணகிக்கு முன்னோடி

Posted: 30 Jan 2016 12:11 PM PST

கரூருக்கு வைகோ இன்று வருகை

Posted: 30 Jan 2016 12:10 PM PST

கரூருக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ ஞாயிற்றுக்கிழமை (31-ம் தேதி) வருகிறார்.

தமாகா சார்பில் மதுக் கொள்கைக்கு எதிராக உறுதியேற்பு

Posted: 30 Jan 2016 12:10 PM PST

அண்ணல் காந்தியடிகளின் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட தமாகா இளைஞரணி சார்பில் சனிக்கிழமை மதுக்கொள்கைக்கு எதிராக உறுதிமொழியேற்கப்பட்டது.

"முழு சுகாதாரம் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்'

Posted: 30 Jan 2016 12:09 PM PST

பெண்கள், குழந்தைகள் உடல் ஆரோக்கியப் பாதுகாப்பில் மருத்துவர்களின் பங்கு மிகவும் அவசியம் என்றார் மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை.

இரு ஆவணங்கள்

Posted: 30 Jan 2016 12:09 PM PST

அதிக எண்ணிக்கையில் நூல்கள் எழுதி அறியப்படாது போன ஆய்வாளர்களுக்கு நடுவில் தம் ஓரிரு நூல்கள் வழி காலங்கடந்து நிலைபெறுபவர்கள் சிலர்.

அதிமுக சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கபடி, கோகோ போட்டிகள்

Posted: 30 Jan 2016 12:08 PM PST

முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் மாவட்ட அதிமுக சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கபடி, கோ கோ மற்றும் கைப்பந்துப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்

Posted: 30 Jan 2016 12:07 PM PST

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் குழுக் கூட்டம் வெள்ளிகிழமை நடைபெற்றது.

முதுகுளத்தூரில் குமரி அனந்தன் நடைப்பயணம்

Posted: 30 Jan 2016 12:07 PM PST

மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி நடைப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் தலைமையிலான குழுவினர், சனிக்கிழமை முதுகுளத்தூர் வந்தடைந்தனர்.

வாலி, திரெளபதியை மூக்கரிந்த கதை!

Posted: 30 Jan 2016 12:06 PM PST

விக்கிரம சோழன் தமிழ் மீதும் தமிழ்ப் புலவர்கள் மீதும் பெரும் பற்றுக்கொண்டு ஆதரித்தவன்.

கண் தான விழிப்புணர்வு முகாம்

Posted: 30 Jan 2016 12:06 PM PST

அரவிந்த் கண் வங்கி மற்றும் ஐ டொனேஷன் ஏசி டிரஸ்ட் இணைந்து, தேவகோட்டை தே பிரித்தோ பள்ளியிலும், இன்ஃபான்ட் ஜீசஸ் பள்ளியிலும் கண் தான விழிப்புணர்வு முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின.

விலையில்லா ஆடுகளுக்கு இலவச நோய் தடுப்பு மருத்துவ முகாம்

Posted: 30 Jan 2016 12:06 PM PST

முதுகுளத்தூர் அருகே பேரையூர் ஊராட்சியில், தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட ஆடுகளுக்கு இலவச நோய் தடுப்பு மருத்துவ சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

பரமக்குடி பள்ளி ஆண்டு விழா: மாணவிக்கு உதவி ஆட்சியர் நினைவுப் பரிசு

Posted: 30 Jan 2016 12:05 PM PST

பரமக்குடி கே.ஜே. கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியின் 35ஆவது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சொல் தேடல் - 45

Posted: 30 Jan 2016 12:05 PM PST

1973-ஆம் ஆண்டு. மார்லென் பிராண்டோ என்னும் புகழ்வாய்ந்த நடிகரைப் பல்வேறு கோணங்களில் படம் பிடிப்பதற்காக Ron Galella என்பவர் நாளெல்லாம் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்.

பரமக்குடியில் பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கு: இருவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது

Posted: 30 Jan 2016 12:04 PM PST

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பா.ஜ.க. பிரமுகரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகளில் இருவரை, போலீஸார் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தனர்.

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

Posted: 30 Jan 2016 12:03 PM PST

திருவாடானையில் சட்ட விழிப்புணர்வு கழகம் சார்பில், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி, விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

துபை கடல் பகுதியில் தமிழக மீனவர் மாயம்: மீட்டுத் தர உறவினர்கள் கோரிக்கை

Posted: 30 Jan 2016 12:03 PM PST

துபை கடல் பகுதியில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி மாயமான திருப்பாலைக்குடி மீனவரை மீட்டுத் தர, உறவினர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேவகோட்டையில் மாநில கால்பந்து போட்டி: மதுரை செயின்ட் மேரீஸ் பள்ளி சாம்பியன்

Posted: 30 Jan 2016 12:02 PM PST

தேவகோட்டை தே பிரித்தோ பள்ளியில் நடைபெற்ற மாநில கால்பந்து போட்டியில், மதுரை செயின்ட் மேரீஸ் பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 

பரமக்குடியில் மதுக்கூட ஊழியர் வெட்டிக் கொலை

Posted: 30 Jan 2016 12:02 PM PST

பரமக்குடி வைகை நகர் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு மதுக்கூடத்தில் வேலைபார்த்து விட்டு, வீட்டுக்குச் சென்றவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.

கீழக்கரை கல்லூரியில் பயிற்சி பட்டறை

Posted: 30 Jan 2016 12:01 PM PST

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில், தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம், கனடா இந்தியா கூட்டு பயிலக திட்டத்தின் கீழ் இயங்கும் மாணவர்கள் சேவை அமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு சார்பாக, நேர்முகத் தேர்வு நுட்பங்கள் என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் மாணவர் அறிவியல் பேரவை உதயம்: ஆண்டுக்கு 200 இளம் விஞ்ஞானிகளை உருவாக்க முடிவு

Posted: 30 Jan 2016 12:01 PM PST

ராமநாதபுரம் அருகே சத்திரக்குடி பள்ளியில் சனிக்கிழமை தொடங்கப்பட்ட மாணவர் அறிவியல் பேரவையின் மூலம், ஆண்டுக்கு 200 இளம் விஞ்ஞானிகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக, இஸ்ரோ அமைப்பின் முன்னாள் பொது மேலாளர் சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.

5 நாள்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற ராமேசுவரம் மீனவர்கள்

Posted: 30 Jan 2016 12:00 PM PST

ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 5 நாள்களாக ஈடுபட்டு வந்த வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று, சனிக்கிழமை காலை கடலுக்குச் சென்றனர்.

திரிகடுகம்: நல்லாதனார்

Posted: 30 Jan 2016 12:00 PM PST

வெல்வது வேண்டி வெகுண்டுரைக்கும் நோன்பிலியும் இல்லது காமுற் றிருப்பானுங் -கல்வி செவிக்குற்றம் பார்த்திருப் பானுமிவ் மூவர் உமிக்குற்றிக் கைவருந்து வார். (பாடல்-28)

பெண்ணிடம் சங்கிலி திருட்டு

Posted: 30 Jan 2016 12:00 PM PST

திருவாடானை தாலுகா, கோடனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூவலிங்கம். இவரது மனைவி ஆனந்தவள்ளி (58) வெள்ளிக்கிழமை திருவாடானை கோயிலுக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவர் அணிந்திருந்த 11.5 பவுன் தங்கச் சங்கிலியைக் காணவில்லையாம். ஆனந்தவள்ளி அளித்த புகாரின்பேரில், திருவாடானை போலீஸார்  விசாரித்து வருகின்றனர்.

பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

Posted: 30 Jan 2016 11:59 AM PST

திருவாடானை தாலுகா, அருவத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி வசந்தா (49). நடராஜனின் தம்பி மணி (50). இவர், சனிக்கிழமை வயலில் கதிர் அறுக்கும்போது, நடராஜனின் வயலிலும் அறுவடை செய்துள்ளார்.

ராமநாதபுரத்தில் கேரம் விளையாட்டுக்கு ரூ.25 லட்சத்தில் உள்விளையாட்டரங்கம்: ஆட்சியர்

Posted: 30 Jan 2016 11:59 AM PST

ராமநாதபுரத்தில் கேரம் விளையாட்டுக்கு உள்விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டு வருவதாக, மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் தெரிவித்தார்.

"குடும்ப அட்டைகளை இந்தாண்டு இறுதி வரை பயன்படுத்தலாம்'

Posted: 30 Jan 2016 11:58 AM PST

2015 டிசம்பர் 31 வரை நடைமுறையிலிருந்த குடும்ப அட்டைகள், 2016 டிசம்பர் 31ஆம் தேதி வரை செல்லும் வகையில் கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடிகள் அமைக்க எதிர்ப்பு: பிப்.11 வரை பணியை நிறுத்த முடிவு

Posted: 30 Jan 2016 11:57 AM PST

சிவகங்கை மாவட்டத்தில் பூவந்தி, காளையார்கோவில் ஆகிய இடங்களில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்கான சாவடிகள் அமைக்கும் பணிகளை, பிப்ரவரி 11ஆம் தேதி வரை நிறுத்திவைக்க கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம், சிவகங்கையில் "ஜாக்டோ' அமைப்பினர் சாலை மறியல்

Posted: 30 Jan 2016 11:57 AM PST

ராமநாதபுரத்தில் ஜாக்டோ அமைப்பினர் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டதால், 185 பெண்கள் உள்பட 439 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

அழகிரி பிறந்தநாள்: ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

Posted: 30 Jan 2016 11:56 AM PST

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் மதுரையில் பல்வேறு இடங்களில் இனிப்புகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கி சனிக்கிழமை கொண்டாடினர்.

மதுரையில் ஆசிரியர்கள் மறியல்: 700 பேர் கைது

Posted: 30 Jan 2016 11:55 AM PST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் மறியலில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியர்கள் 700 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

பதிவு எண் மாற்றிய காரில் வந்த சிறைக் காவலரின் கணவர் ஓட்டம்

Posted: 30 Jan 2016 11:53 AM PST

மதுரையில் பதிவெண்ணை மாற்றி காரில் வலம் வந்த சிறைக் காவலரின் கணவர் போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓடி விட்டார்.

இலங்கையில் முதலீடு செய்ய தமிழக தொழிலதிபர்களுக்கு அழைப்பு

Posted: 30 Jan 2016 11:53 AM PST

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தொழில் தொடங்க வருமாறு தமிழக தொழிலதிபர்களுக்கு, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

அருப்புக்கோட்டை அருகே ஆபத்தான சாலை வளைவு: தடுப்புச் சுவர் அமைக்கப்படுமா?

Posted: 30 Jan 2016 11:53 AM PST

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி கிராமத்திலுள்ள ஆபத்தான சாலை வளைவில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாத்தூர் அருகே கல்குவாரியில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு

Posted: 30 Jan 2016 11:52 AM PST

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சனிக்கிழமை கல்குவாரியில் தவறி விழுந்து 2 பள்ளி மாணவர்கள் இறந்தனர்.

குஜராத் பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பியது ஏன்?

Posted: 30 Jan 2016 11:51 AM PST

குஜராத் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட அந்த மாநிலத்தின் பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவில் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான பிரிவுகளில் முரண்பாடுகள் காணப்பட்டதையடுத்து, அந்த மசோதாவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திருப்பி அனுப்பியதாகத் தெரிய வந்துள்ளது.

விஸ்வநத்தத்தில் சுகாதார நிலைய கட்டடத்துக்கு அடிக்கல்

Posted: 30 Jan 2016 11:50 AM PST

சிவகாசி வட்டம், விஸ்வநத்தத்தில் சனிக்கிழமை ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

பதான்கோட் தாக்குதல் சம்பவத்தால் அமைதிப் பேச்சுக்குப் பாதிப்பு

Posted: 30 Jan 2016 11:50 AM PST

பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தால், இந்தியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வருத்தம் தெரிவித்தார்.

பிப்.15இல் விருதுநகரில் இருசக்கர வாகனம் ஏலம்

Posted: 30 Jan 2016 11:50 AM PST

விருதுநகர் அரசு தானியங்கி பணிமனை சார்பில் பிப்ரவரி 15ஆம் தேதி இருசக்கர வாகனம் ஏலம் விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

Posted: 30 Jan 2016 11:49 AM PST

அருப்புக்கோட்டை அருகே சனிக்கிழமை இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர் அரசு மருத்துவமனையில் தொழுநோய் ஒழிப்பு தினம்

Posted: 30 Jan 2016 11:48 AM PST

தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தையொட்டி  சனிக்கிழமை விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் தலைமையில் மருத்துவர்கள், அரசு அலுவலர்கள், செவிலியர்கள், பள்ளி மாணவ, மாணவியர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

கூடங்குளம் முதல் அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடக்கம்

Posted: 30 Jan 2016 11:48 AM PST

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் முதல் அணுஉலையில் சனிக்கிழமை முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. சில தினங்களில் முழு திறனை எட்டும் என வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்தார்.

தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா

Posted: 30 Jan 2016 11:47 AM PST

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜி.எஸ். இந்து மேல்நிலைப் பள்ளியில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபட்சவின் மகன் கைது

Posted: 30 Jan 2016 11:47 AM PST

சட்டவிரோதப் பணபரிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரின்பேரில், இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்சவின் மகன் யோஷித ராஜபட்ச உள்பட 5 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

விருதுநகரில் மறியலுக்கு முயன்ற 778 ஆசிரியர்கள் கைது

Posted: 30 Jan 2016 11:46 AM PST

விருதுநகர் மாவட்ட ஜாக்டோ அமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தி மறியல் செய்ய முயன்ற 778 ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர்.

வறுமையை ஒழிக்க பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க வேண்டும்: அருண் ஜேட்லி

Posted: 30 Jan 2016 11:45 AM PST

இந்தியப் பொருளாதாரம் மிகவும் அதிகமான வளர்ச்சி விகிதத்தை அடைந்தால் மட்டுமே வறுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

பெண் காவலருக்கு வரதட்சணை கொடுமை: 4 பேர் மீது வழக்கு

Posted: 30 Jan 2016 11:45 AM PST

சிவகாசியில் தனி ஆயுதப்படையில் பணிபுரியும் பெண் காவலரிடம் வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது மாமனார், மாமியார் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர் அருகே டிராக்டர் குடிநீரால் பொதுமக்கள் அவதி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Posted: 30 Jan 2016 11:44 AM PST

விருதுநகர் அருகே ரோசல்பட்டி ஊராட்சியில் டிராக்டரில் விற்பனை செய்யப்படும் குடிநீரால் பல்வேறு உபாதைகளால் அவதிப்படும் பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

விஷம் குடித்த மாணவி மருத்துவமனையில் சாவு

Posted: 30 Jan 2016 11:43 AM PST

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விஷம் குடித்த ஆசிரியர் பயிற்சி மாணவி மருத்துவமனையில் சனிக்கிழமை இறந்தார்.

மதத்தை பயங்கரவாதிகள் கேடயமாக பயன்படுத்துகிறார்கள்: நக்வி

Posted: 30 Jan 2016 11:43 AM PST

மதத்தை பயங்கரவாதிகள் தங்களைப் பாதுகாக்கும் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சரும், பாஜக முக்கியத் தலைவருமான முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

ராஜபாளையம் அருகே விஷம் குடித்து ஒருவர் தற்கொலை

Posted: 30 Jan 2016 11:43 AM PST

ராஜபாளையம் அருகே வெள்ளிக்கிழமை ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

விருதுநகரில் அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியவர் கைது

Posted: 30 Jan 2016 11:42 AM PST

விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

சிற்றுந்தில் பணம் திருட்டு: ஒருவர் கைது

Posted: 30 Jan 2016 11:42 AM PST

சிவகாசியில் வெள்ளிக்கிழமை சிற்றுந்தில் பயணியிடம் பணத்தை திருடியதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை பெருநகர மாநகராட்சியானது

Posted: 30 Jan 2016 11:42 AM PST

மாநகரை ஒட்டியுள்ள உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து, சென்னை பெருநகர மாநகராட்சியாக மாற்றப்பட்டது.

சிவகாசி

Posted: 30 Jan 2016 11:41 AM PST

ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் பணியாளர்களுக்கு மனித நேயப் பயிற்சி

Posted: 30 Jan 2016 11:41 AM PST

தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் உத்தரவுப்படி கோயில் பணியாளர்களுக்கான இரு நாள் மனித நேயப் பயிற்சி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெற்றது.

ராஜபாளையம் பேரவைத் தொகுதியில் இன்று புதிய வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்

Posted: 30 Jan 2016 11:40 AM PST

புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கை மற்றும் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெற ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி முழுவதும் 257 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

சிவகாசியில் பயிற்சி முகாம்

Posted: 30 Jan 2016 11:40 AM PST

சிவகாசி இளம் தொழில் முனைவோர் பயிற்சி பள்ளி சார்பில் வெள்ளிக்கிழமை சமூக வலைதளங்கள் மூலம் சிறு மற்றும் குறுந்தொழிலை செய்வது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

அரசு இ-சேவை மையத்தில் மின்கட்டணம் செலுத்தும் வசதி: ஆட்சியர்

Posted: 30 Jan 2016 11:40 AM PST

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் செயல்படும் அரசு இ-சேவை மையங்களில் மின்கட்டணம் செலுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமன் தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™