Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


நேதாஜியை பிரிட்டைன் அரசு போர்க்குற்றவாளியாக அறிவிக்கவில்லை: புதிய தகவல்

Posted: 23 Jan 2016 10:44 PM PST

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசை போர்க்குற்றவாளியாக பிரிட்டிஷ் அரசு அறிவிக்கவில்லை என தெரியவந்துள்ளது நேதாஜி சுபாஷ் சந்திர போசின் மர்ம மறைவு தொடர்பாக மத்திய

திருப்பதி கோவிலில் வேத மகோற்சவம்: முதல் முறையாக இன்று நடக்கிறது

Posted: 23 Jan 2016 10:34 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமியின்போது கருடசேவை உற்சவம் நடப்பது வழக்கம். அப்போது உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்க கருடவாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்குமாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆனால் இந்த ஆண்டு, முதல் முறையாக பவுர்ணமி கருடசேவையின் போது

அரசியல் சதியால் ஆட்சியை கவிழ்க்க முடியாது: உம்மன்சாண்டி கருத்து

Posted: 23 Jan 2016 09:47 PM PST

மந்திரி பாபு ராஜினாமா பற்றி முதல்-மந்திரி உம்மன்சாண்டி கூறியதாவது:- மந்திரி பாபு அனுப்பிய ராஜினாமா கடிதம் கிடைத்துள்ளது. இதுபற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சில அரசியல்வாதிகள், சமூக விரோதிகள் வேண்டுமென்றே சதி செய்துள்ளனர். அவர்கள் சதியால் முதலில் மந்திரி மாணி ராஜினாமா செய்தார். இப்போது மந்திரி பாபு ராஜினாமா செய்துள்ளார்.

லஞ்சம் வாங்கியதாக நிரூபித்தால் தண்டனையை அனுபவிக்க தயார்: ராஜினாமா செய்த பாபு பேட்டி

Posted: 23 Jan 2016 09:43 PM PST

கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது. கேரளாவில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த உம்மன்சாண்டி நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன் அடிப்படையில் கேரளாவில் மதுபார்கள் மூடப்பட்டு வருகிறது. இதற்கிடையே அவரது மந்திரிசபையில் நிதி மந்திரியாக இருந்த மாணி பார் உரிமையாளர்களிடம் லஞ்சம் பெற்றதாக புகார்

ரபேல் ஒப்பந்தம் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது: பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே பேட்டி

Posted: 23 Jan 2016 09:41 PM PST

இந்தியாவிற்கு போர்விமானங்களை பிரான்ஸ் விற்பனை செய்யும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள ரபேல் ஒப்பந்தம் சரியான பாதையில் சென்றுகொண்டிருப்பதாகவும், இருந்தபோதும், அதில் தொழில்நுட்ப பணிகள் நடைபெற வேண்டியிருப்பதால், ஒப்பந்தம் கையெழுத்தாக இன்னும் சில

ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் 7 பேர் உடல் நிலை பாதிப்பு: ஆஸ்பத்திரியில் அனுமதி

Posted: 23 Jan 2016 09:37 PM PST

ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் சஸ்பெண்டு செய்யப்பட்ட தலித் மாணவர் ரோகித் பெவமுலா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மத்திய மந்திரிகள் பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிருதி ராணி கொடுத்த

கஜூராஹோவில் உள்ள நிர்வாண சிலைகளுக்கு புடவை கட்டி விடும் நாளுக்காக காத்திருக்கிறேன்: நயன்தாரா சாகல் ஆவேசம்

Posted: 23 Jan 2016 09:15 PM PST

இந்தியாவில் அதிகரித்து வரும் சகிப்பின்மை குறித்து கருத்துக் கூறி முதன் முதலாக சாகித்ய அகாடமி விருதை திருப்பியளித்தவர் எழுத்தாளர் நயன்தாரா சாகல். இவரைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் தங்கள் சாகித்ய அகாடமி விருதை திருப்பியளிக்க முடிவு செய்தனர்.

நேதாஜியை போர்க் குற்றவாளி என்பதா?: ரகசிய கோப்பில் சர்ச்சையை கிளப்பும் நேருவின் கடிதத்துக்கு பா.ஜ.க. கண்டனம்

Posted: 23 Jan 2016 09:08 PM PST

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் மர்ம மறைவு தொடர்பாக மத்திய அரசின் காப்பகத்தில் இருந்த நூறு ரகசிய கோப்புகளை நேதாஜியின் பிறந்தநாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். மத்திய அரசுக்கு சொந்தமான ஆவண காப்பகத்திடம் தற்போது

சிறுவர்களை மனித வெடிகுண்டாக மாற்றி, குடியரசு தினவிழாவில் பிரதமர் மோடியை கொல்ல ஐ.எஸ். தீவிரவாதிகள் பகீர் திட்டம்

Posted: 23 Jan 2016 08:42 PM PST

தலைநகர் டெல்லி மற்றும் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைநகரில் வரும் 26-ந்தேதி குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்த கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

சிறுபிள்ளைத்தனமாக சீட்டை மாற்றிக் கொண்ட 70 பயணிகளை இறக்கி விட்டுச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ்

Posted: 23 Jan 2016 08:30 PM PST

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ராய்ப்பூர் செல்லும் விமானத்தில் 70 பயணிகள் சிறுபிள்ளைத்தனமாக தங்கள் இஷ்டத்திற்கு இருக்கைகளில் அமர்ந்ததால் ஏற்பட்ட தகராறையடுத்து அவர்கள் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர்.

சுதந்திர போராட்ட தலைவர்களின் புகழை கெடுக்க முயற்சி: மோடி அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

Posted: 23 Jan 2016 06:46 PM PST

சுதந்திர போராட்டத் தலைவர் நேதாஜி தொடர்பான 100 ரகசிய ஆவணங்களை பிரதமர் மோடி நேற்று டெல்லியில் வெளியிட்டார். இந்த ஆவணம் ஒன்றில் 1945-ம் ஆண்டு இங்கிலாந்து பிரதமர் பதவி வகித்த கிளமெண்ட் அட்லிக்கு காங்கிரஸ் சார்பில் மறைந்த பிரதமர் ஜவகர்லால் நேரு எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றும் இடம்பெற்று இருந்தது.

ரோகித் தற்கொலை விவகாரம்: நிவாரணத் தொகை ரூ.8 லட்சத்தை வாங்க குடும்பத்தினர் மறுப்பு

Posted: 23 Jan 2016 09:42 AM PST

ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அமைப்புகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ரோகித் வெமுலா உள்பட 5 தலித் சமுதாயத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதில் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்டதால் இந்த

ரெயிலில் தம்பதியிடம் அநாகரீகமாக நடந்த எம்.எல்.ஏ.வை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தது ஐக்கிய ஜனதா தளம்

Posted: 23 Jan 2016 07:09 AM PST

பீகாரில் ரெயிலில் பயணம் செய்த தம்பதியிடம் அநாகரீகமான முறையில் நடந்துகொண்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ., கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். அசாம் தலைநகர் கவுகாத்தியில் இருந்து கடந்த 17-ம் தேதி டெல்லிக்கு புறப்பட்டு வந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இந்தர்பால் சிங் பெடி என்பவர் தன் மனைவியுடன் வந்து கொண்டிருந்தார். அந்த ரெயில் பீகார்

மதுபார் ஊழல் வழக்கில் கேரள மாநில கலால்துறை மந்திரி ராஜினாமா

Posted: 23 Jan 2016 06:46 AM PST

கேரளாவில் மதுபார் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கலால்துறை மந்திரி பாபு இன்று ராஜினாமா செய்தார். கேரளாவில் முழு மதுவிலக்கை அமுல்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்கட்டமாக மாநிலத்தில் உள்ள மதுபான பார்கள் மூடப்பட்டன. இதற்கு மதுபார் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மதுபார்களை திறக்க பல்வேறு

சீனாவின் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் அரியானாவில் ரூ.6750 கோடி முதலீடு செய்ய ஒப்புதல்

Posted: 23 Jan 2016 04:52 AM PST

அரியானா மாநிலத்தில் 6750 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு சீனாவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. இந்தியாவின் அரியானா மாநிலம் பெரிய அளவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதல்வர் மனோகர் லால் கத்தார் தலைமையிலான குழு சீனாவின் ஷாங்காய் நகருக்கு வந்துள்ளது. ஷாங்காயில் தொழிலதிபர்கள்

இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே கண்ணிவெடி: பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து அழித்தனர்

Posted: 23 Jan 2016 03:32 AM PST

பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய தீவிரவாதிகள் பதான்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்தியதையடுத்து எல்லைப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லை அருகே எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள ரோந்து சென்றனர். அப்போது, சர்வதேச எல்லையின்

போராட்டத்தை கைவிடுங்கள்: ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மத்திய மந்திரி வேண்டுகோள்

Posted: 23 Jan 2016 03:02 AM PST

ஐதராபாத்தில் போராட்டம் நடத்தி வரும் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள், தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறும்படி மத்திய மனித வளத்துறை இணை மந்திரி உபேந்திர குஷ்வாகா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அமைப்புகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ரோகித் வெமுலா உள்பட 5 தலித்

பாலிவுட்டில் சகிப்பின்மை இல்லை: இலக்கிய விழாவில் நடிகை கஜோல் பேச்சு

Posted: 23 Jan 2016 02:38 AM PST

நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து வருவதாக பரவலாக குற்றச்சாட்டு கூறப்பட்டு, இதுதொடர்பான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் பாலிவுட்டில் அதுபோன்று எதுவும் இல்லை என்று நடிகை கஜோல் தெரிவித்தார்.

நேதாஜியின் மகளுக்கு 1964-ம் ஆண்டுவரை ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் அனுப்பப்பட்டது: ரகசிய கோப்பில் தகவல்

Posted: 23 Jan 2016 02:24 AM PST

நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் திடீர் மறைவு தொடர்பாக இன்று வெளியாகியுள்ள ரகசிய கோப்புகளில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் ஒருகோப்பில், ஜெர்மனியில் வாழ்ந்துவந்த

நேதாஜிக்கு தேசத்தந்தை பட்டம் அளிக்கப்பட வேண்டும்: மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

Posted: 23 Jan 2016 01:53 AM PST

இந்திய விடுதலைக்கு ஆயுதப் போராட்டத்தின் மூலம் வித்திட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு 'தேசத்தந்தை' என்ற பட்டம் அளிக்கப்பட வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™