Tamil Star |
| காணாமல் போன 25 வயது பெண்ணை தேடும் நடவடிக்கை தொடர்கிறது Posted: 23 Jan 2016 08:39 AM PST
தனீஷா பிரவுன் என்ற 25 வயதுப் பெண்ணையே கடந்த பத்து நாட்களாக காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 12ஆம் திகதி இரவு 10.30ற்கு பின்னர் குறித்த பெண்ணைக் காணவில்லை என காவல்த்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டை அடுத்து, தரை, நீர், ஆகாயம் என அனைத்து மார்க்கமாகவும் அவரை தேடும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டிருந்த போதிலும், இதுவரை அவர் தொடர்பிலான எந்தவித தகவல்களும் கிடைக்காத நிலையில், தரை மார்க்கமான தேடுதல்களை மீண்டும் தீவிரப்படுத்தவுள்ளதாக யோர்க் பிராந்திய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். மக்கவுன் வீதி மற்றும் காசில்மோர் அவனியூ பகுதியில் உள்ள தனது உறவினரின் வீட்டிலிருந்த அந்த பெண், கடந்த 12ஆம் திகதி இரவு 10.30 அளவில காற்றுவாங்கி வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றிருந்தார் என்றும், பின்னர் அவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினரிடம் தகவல் வெளியிட்ட அந்த நபர், அந்த பெண்ணைக் கண்ட போது அவர் போதிய குளிர் ஆடைகளை அணிந்திருக்கவில்லை எனவும், பிரச்சினைகள் எதுவும் இல்லையே என அவரிடம் கேட்டபோது, தான் ஒரு பயணத்தை தொடங்கியுள்ளதாக அந்த பெண் பதிலளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். The post காணாமல் போன 25 வயது பெண்ணை தேடும் நடவடிக்கை தொடர்கிறது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

மார்க்கம் பகுதியில் காணாமல் போன பெண்ணைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன