மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- டெல்லியில் இறைச்சிக்காக கடத்தப்பட்ட மாடுகள் சிறைபிடிப்பு
- ரோகித் வெமுலா தலித் தான் - சுஷ்மா சுவராஜ் கருத்துக்கு எஸ்.சி/எஸ்.டி ஆணையம் பதிலடி
- கனிமொழி – ஆ.ராசா ஆஜர்: 2ஜி வழக்கில் இறுதி வாதம் தொடங்கியது
- இந்தியாவில் செல்போன் உற்பத்தி, ஸ்மார்ட் போன் விற்பனை 10 கோடியை கடந்துள்ளது: மத்திய மந்திரி பெருமிதம்
- ஆந்திராவில் விடுதியின் மாடியில் இருந்து குதித்த என்ஜினீயரிங் மாணவி சாவு: ஊழியர்கள் மீது பெற்றோர் புகார்
- டெட்டாலை போல், சிறுநீர் சிறந்த கிருமி நாசினி: லல்லுபிரசாத் தகவல்
- விருந்தில் ரசம் இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன்
- ஆந்திர முதல்-மந்திரி உறுதி அளித்ததை அடுத்து இடஒதுக்கீடு போராட்டத்தை கைவிட்டனர் காபு இன மக்கள்
- மத்திய சுற்றுலா வளர்ச்சி துறை மூலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் ரூ.100 கோடியில் வளர்ச்சி பணி
- வீட்டை விட்டு வெளியேறி, ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடியை காப்பாற்றிய புகைப்படக் கலைஞர்
- கொச்சியில் காங்கிரஸ் கூட்ட மேடை சரிந்து கட்சி நிர்வாகிகள் காயம்: மாநில தலைவர் சுதீரன் தப்பினார்
- ஓரின சேர்க்கை தொடர்பான வழக்கு: மத்திய அரசின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
- கொல்கத்தா விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் வந்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் கைது
- மனதைப் பிழியும் சோகம்: கற்பழிக்கப்பட்டு சிகிச்சை பெற வந்த இடத்தில் காவலாளியால் மீண்டும் சின்னாபின்னமாக்கப்பட்ட சிறுமி
- அருணாசலப்பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாராணை
- மாநிலத்தின் வளர்ச்சியில் சித்தராமையா அக்கறை செலுத்தவில்லை: மத்திய மந்திரி சதானந்தகவுடா குற்றச்சாட்டு
- கறை படிந்தவர்களை மந்திரிசபையில் இருந்து நீக்குங்கள்: சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவு
- காஷ்மீரில் புதிய அரசு அமைப்பது பற்றி கட்சி தலைவர்களுடன் மெகபூபா முக்கிய ஆலோசனை
- இடஒதுக்கீடு கோரி போராட்டம்: ஆந்திராவில் ரெயில், போலீஸ் நிலையத்துக்கு தீவைப்பு
- கொடிய குற்ற வழக்குகளில் சிறார் வயது குறைப்பை எதிர்த்து பொது நல வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
| டெல்லியில் இறைச்சிக்காக கடத்தப்பட்ட மாடுகள் சிறைபிடிப்பு Posted: 31 Jan 2016 11:05 PM PST பஞ்சாப் மாநிலத்தில் இருந்து டெல்லி வழியாக உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு இறைச்சிக்காக லாரிகளில் மாடுகள் ரகசியமாக கடத்தப்படுகின்றன. இதை தடுக்க வேண்டும் என்று பசுவதை தடுப்பு ஆர்வலர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று மாலை இது |
| ரோகித் வெமுலா தலித் தான் - சுஷ்மா சுவராஜ் கருத்துக்கு எஸ்.சி/எஸ்.டி ஆணையம் பதிலடி Posted: 31 Jan 2016 10:46 PM PST தெலுங்கானாவில் ஐதராபாத் மத்திய பல்கலையில் படித்து வந்த தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ரோஹித் வெமுலா என்ற மாணவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இது தொடர்பாக, பல்கலையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தபோது விடுதியில் உள்ள நண்பர் அறையில் ரோஹித் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் |
| கனிமொழி – ஆ.ராசா ஆஜர்: 2ஜி வழக்கில் இறுதி வாதம் தொடங்கியது Posted: 31 Jan 2016 10:37 PM PST 2ஜி வழக்கில் இன்று குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பு சார்பில் இறுதி வாதம் தொடங்கியது. முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஆ.ராசா 2007–ம் ஆண்டு முதல் 2009–ம் ஆண்டு தகவல் தொடர்புத் துறை மந்திரியாக இருந்தபோது தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் |
| இந்தியாவில் செல்போன் உற்பத்தி, ஸ்மார்ட் போன் விற்பனை 10 கோடியை கடந்துள்ளது: மத்திய மந்திரி பெருமிதம் Posted: 31 Jan 2016 10:06 PM PST தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி ஏற்பட்ட பின்னர் 15 புதிய கைபேசி தொழிற்சாலைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டதால் நாட்டில் கைபேசி உற்பத்தி பத்து கோடியை கடந்துள்ளதாக மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். |
| Posted: 31 Jan 2016 10:03 PM PST ஐதராபாத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் தலித் மாணவர் ரோகித் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் குண்டூரில் கல்லூரி விடுதி 4–வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. |
| டெட்டாலை போல், சிறுநீர் சிறந்த கிருமி நாசினி: லல்லுபிரசாத் தகவல் Posted: 31 Jan 2016 09:44 PM PST பீகார் மாநிலம் பாட்னாவில் ஹோமியோபதி அறிவியல் மாநாட்டில் முன்னாள் முதல்– மந்திரியும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லல்லுபிரசாத் யாதவ் உரையாற்றினார். அவர் பேசும்போது கூறியதாவது:– ஹோமியோபதி மருத்துவ முறையில் ஒவ்வொரு நோயையும் குணப்படுத்த முடியும். இதில் பக்க விளைவுகள் கிடையாது. ஆனால் ஆங்கில முறை |
| விருந்தில் ரசம் இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன் Posted: 31 Jan 2016 09:34 PM PST கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்த குனிக்கல் பகுதியைச் சேர்ந்த பிரகாசம்– சவுபாக்கியம்மா தம்பதி மகள் சவுமியா. இவருக்கும் ஸ்ரீராமபுரம் திம்மையம்மா மகன் ராஜுவுக்கு குனிக்கல் கிராமத்தில் நேற்று திருமணம் நடப்பதாக இருந்தது. திருமணத்துக்கு முதல் நாள் இரவு திருமண வரவேற்பு விருந்து நடந்தது. |
| ஆந்திர முதல்-மந்திரி உறுதி அளித்ததை அடுத்து இடஒதுக்கீடு போராட்டத்தை கைவிட்டனர் காபு இன மக்கள் Posted: 31 Jan 2016 08:59 PM PST ஆந்திர மாநிலத்தில் காபு, பலிகா, தெலகா ஆகிய சாதிகளைச் சேர்ந்தவர்கள் கணிசமானோர் உள்ளனர். தான் ஆட்சிக்கு வந்தால், அந்த சாதிகளுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்தார். ஆனால், சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆன பிறகும், இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. |
| மத்திய சுற்றுலா வளர்ச்சி துறை மூலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் ரூ.100 கோடியில் வளர்ச்சி பணி Posted: 31 Jan 2016 08:39 PM PST பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையின் போது திரளான பக்தர்கள் சபரிமலையில் திரண்டு சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்வார்கள். ஆண்டுக்கு ஆண்டு சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து |
| Posted: 31 Jan 2016 08:32 PM PST பெற்றோர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடியின் உயிர்களை புகைப்படக் கலைஞர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் தெரியவந்துள்ளது. மராட்டிய மாநில தலைநகர் மும்பையின் புறநகர் பகுதியான பிவாண்டி |
| கொச்சியில் காங்கிரஸ் கூட்ட மேடை சரிந்து கட்சி நிர்வாகிகள் காயம்: மாநில தலைவர் சுதீரன் தப்பினார் Posted: 31 Jan 2016 08:17 PM PST கேரளாவில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. விரைவில் கேரள சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான ஊழல் புகார்கள் எழுந்துள்ளதால் கட்சியை பலப்படுத்தவும் மீண்டும் ஆட்சியில் அமர்த்தவும் |
| ஓரின சேர்க்கை தொடர்பான வழக்கு: மத்திய அரசின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை Posted: 31 Jan 2016 08:06 PM PST வயது வந்தவர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டால், அது குற்றம் ஆகாது என்று கடந்த 2009-ம் ஆண்டு டெல்லி ஐகோர்ட்டின் அப்போதைய தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. |
| கொல்கத்தா விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் வந்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் கைது Posted: 31 Jan 2016 07:52 PM PST கொல்கத்தா விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் வந்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்குவங்க மாநிலம் துர்காபூர் ஜில்லா பரிஷாத் பகுதி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் நரேன் சக்ரபோர்தி. இவர் பண்டாபெஷ்வர் பகுதி தலைவராகவும் உள்ளார். |
| Posted: 31 Jan 2016 07:41 PM PST ஜார்கண்ட் மாநிலம், சிங்பம் மாவட்டம் பர்சுதி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி சில நாட்களுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த ஒருவனால் கற்பழிக்கப்பட்டாள். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமியை பரிசோதனைக்காகவும், சிகிச்சைக்காகவும் |
| அருணாசலப்பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாராணை Posted: 31 Jan 2016 07:34 PM PST அருணாசலபிரதேச மாநிலத்தில் நபம் துகி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதல் மந்திரி நபம் துகியின் நடவடிக்கையில் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் தனி அணியாக செயல்பட தொடங்கினர். பின்னர் அவர்கள் பா.ஜ.க மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் உதவியுடன் நபம் துகியை முதல் மந்திரி பதவியில் இருந்து நீக்குவதாகவும் அறிவித்தனர். |
| மாநிலத்தின் வளர்ச்சியில் சித்தராமையா அக்கறை செலுத்தவில்லை: மத்திய மந்திரி சதானந்தகவுடா குற்றச்சாட்டு Posted: 31 Jan 2016 07:18 PM PST பெங்களூரு ஹெப்பால் தொகுதி இடைத்தேர்தலையொட்டி பா.ஜனதா சார்பில் பிரசாரம் நேற்று தொடங்கப்பட்டது. இதில் மத்திய சட்டத்துறை மந்திரி சதானந்தகவுடா கலந்து கொண்டு பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பேசியதாவது:- |
| கறை படிந்தவர்களை மந்திரிசபையில் இருந்து நீக்குங்கள்: சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவு Posted: 31 Jan 2016 07:14 PM PST தொழிலாளர் நலத்துறை மந்திரி பரமேஸ்வர் நாயக் மீது பெண் போலீஸ் அதிகாரியை மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. மேலும் அவர் மந்திரியின் பரிந்துரைக்கு வளைந்து கொடுக்காததால் பணி இடமாறுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மந்திரி பேசிய பேச்சு அடங்கிய வீடியோ காட்சிகள் மாநிலம் மற்றும் தேசிய அளவில் செய்தி |
| காஷ்மீரில் புதிய அரசு அமைப்பது பற்றி கட்சி தலைவர்களுடன் மெகபூபா முக்கிய ஆலோசனை Posted: 31 Jan 2016 06:54 PM PST காஷ்மீரில் முப்தி முகமது சயீத் தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி, பாரதீய ஜனதா கூட்டணி அரசு செயல்பட்டு வந்தது. ஆனால் 80-வது பிறந்த நாளை கொண்டாட இருந்த நிலையில், முதல்-மந்திரி முப்தி முகமது சயீத் உடல்நலக்குறைவால் திடீரென கடந்த மாதம் 7-ந் தேதி மரணம் அடைந்தார். |
| இடஒதுக்கீடு கோரி போராட்டம்: ஆந்திராவில் ரெயில், போலீஸ் நிலையத்துக்கு தீவைப்பு Posted: 31 Jan 2016 06:10 PM PST ஆந்திர மாநிலத்தில் காபு, பலிகா, தெலகா ஆகிய சாதிகளைச் சேர்ந்தவர்கள் கணிசமானோர் உள்ளனர். தான் ஆட்சிக்கு வந்தால், அந்த சாதிகளுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்தார். அதனால், அவருக்கு அந்த சாதி மக்கள் ஆதரவு அளித்தனர். |
| கொடிய குற்ற வழக்குகளில் சிறார் வயது குறைப்பை எதிர்த்து பொது நல வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் Posted: 31 Jan 2016 05:50 PM PST நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று, டெல்லி துணை மருத்துவ மாணவி நிர்பயா என்ற ஜோதிசிங், கும்பல் கற்பழிப்புக்கு ஆளாகி கொல்லப்பட்ட வழக்கு. இந்த வழக்கில் குற்றவாளிகளில் ஒருவன், இளஞ்சிறார் என்ற நிலையில், 3 ஆண்டு சிறைத்தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டது. சிறார் நீதிச்சட்டம், |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |