Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


டவுண்ரவுனில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி, ஐந்து பேர் காயம்

Posted: 31 Jan 2016 08:43 AM PST

downtown_shooting_-_01312016

downtown_shooting_-_01312016Chinatownனில் உள்ள உணவகம் ஒன்றுக்கு வெளியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

இதனை ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Spadina அவனியூ மற்றும் Nassau வீதிக்கு அருகில் அதிகாலை 3.15 மணியளவில் New Ho King இற்கு வெளியில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக காவல்த்துறையினர் கூறியுள்ளனர்.

அவசர மருத்துவப் பிரிவினரின் தகவலின் பிரகாரம் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளான இருவர் அவசர மருத்துவ வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தனர் என்றும், அவர்களில் ஒருவருக்கு உயிராபத்தான காயம் ஏற்பட்டிருந்தது என்றும், மற்றைய நபரும் மோசமான காயங்கள் காரணமாக ஆபத்தான நிலையில் இருந்தார் என்றும் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை ஒரு ஆண் நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.downtown_shooting_-_01312016

இதேவேளை சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு நபர் தனது சொந்த வாகனத்திலேயே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார் என்றும், அவரின் நிலைமை தொடர்பில் தற்போதைக்கு எதுவும் தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் காயமடைந்த மேலும் இருவருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை வழங்கப்பட்டதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.

அதேநேரம் இந்த சம்பவம் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் 416-808-1400 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post டவுண்ரவுனில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி, ஐந்து பேர் காயம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

நோவா ஸ்கொட்ஷியாவில் பனிப்புயல் – மின்சாரம் இன்றி மக்கள் அவதி

Posted: 31 Jan 2016 08:17 AM PST

storm_in_Nova_Scotia_-_01312016

storm_in_Nova_Scotia_-_01312016நோவா ஸ்கொட்ஷியாவை கடுமையான பனிப்புயல் தாக்கியுள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான நோவா ஸ்கொட்ஷியா மக்கள் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர்.

மின்சாரம் இல்லாமையால் மாகாணத்தின் கேப் பிரெட்டனில் இருந்து தெற்கு கரையோரம் வையான 16 இற்கும் அதிகமான சமூகத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 43,3000 நோவா ஸ்கொட்ஷியா மின் நுகர்வாளர்கள் ஒளியின்றி நேற்றைய இரவைக் கழித்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்வாரியப் பேச்சாளர் ஒருவர் பிராந்தியத்திற்கான மின் விநியோகம் குறித்து விளக்கமளித்த போது, இந்த பனிப்புயலின் தாக்கத்தினால் ஒரு சந்தர்ப்பத்தில் 67,000 பேருக்கு மின் விநியோகம் இல்லாமல் போனதாக தெரிவித்துள்ளார்.

எனினும் மின்வாரியப் பணியாளர்களின் முயற்சியால் மின் விநியோகங்கள் சீர் செய்யப்பட்டு இந்த எண்ணிக்கை குறைவடைந்து வருவதாகவும் அவர் விபரித்துள்ளார்.

அதேவேளை மின்வாரியத்தின் இணையத் தளத்தில் இன்னமும் 11,500 நுகர்வோர் மின் விநியோகம் இன்றி இருப்பதாக குறி்ப்பிடப்பட்டுள்ளது.storm_in_Nova_Scotia_-_01312016

அத்துடன் சிலருக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு வரையில் மின் வினியோகம் கிடைப்பதற்கான சாத்தியம் குறைவாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களிலும் பெருமளவான பனி தேங்கியுள்ளதுடன், மரக்கிளைகளும் முறிந்து வீழ்ந்துள்ளமையால், திருத்த வேலைகளை மேற்கொள்வதில் ஊழியர்கள் பலத்த சிரமத்தினை எதிர்நோக்க வருவதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

The post நோவா ஸ்கொட்ஷியாவில் பனிப்புயல் – மின்சாரம் இன்றி மக்கள் அவதி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

அகதிகளுக்கு தற்காலிக தங்குமிட உதவிகளை தனியார் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் மறுப்பு

Posted: 31 Jan 2016 08:03 AM PST

Syrian_refugees_stay_in_hotels_-_20160131

Syrian_refugees_stay_in_hotels_-_20160131அரசாங்கத்தின் அனுசரனையுடன் கனடாவுக்குள் அழைத்துவரப்பட்டுள்ள அகதிகளுக்கு தனியாரின் உதவியின் கீழ் தற்காலிக தங்குமிட உதவி வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கனேடிய அரசாங்கத்தின் அனுசரணையில் அழைத்தவரப்பட்டுள்ள அகதிகள் பலர் தற்போது விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அவர்களை தற்காலிகமாக தனியாரின் தங்குமிடங்களுக்கு அனுப்பும் திட்டத்தினை ஒன்ராறியோ மாகாண அரசாங்கம் முன்வைத்திருந்தது.

ஒன்ராறியோக அரசாங்கத்தின் இந்த திட்டம் சிறந்ததாக தோன்றுகின்ற அதேவேளை, அவ்வாறான முன்மொழிபுகள் பாரிய அளவில் காணப்படுவதனை அரசாங்கம் கணிப்பிட்டுள்ளதாக மத்திய குடிவரவுத் துறை அமைச்சர் ஜோன் மக்கலம் தெரிவித்துள்ளார்.

எனினும் தற்காலிகமாக தனியாரின் இடங்களில் தங்கவைக்கப்பட்டாலும் அகதிகள் மீண்டும் இடம்மாறவேண்டிய நிலை ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர், அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.Syrian_refugees_stay_in_hotels_-_20160131

அரசாங்கம் தனது பொறுப்பில் அழைத்துவந்த அகதிகளுக்கான தேவைகளை நிறைவுசெய்யும் கட்டுப்பட்டினை கொண்டுள்ள நிலையில், அதனை நிறைவேற்றும் எனவும், நாட்டுக்கு வந்து சேர்ந்துள்ள அகதிகளை கையாளும் விவகாரத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் சிறந்த முறையிலேயே இடம்பெற்று வருவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

அரசாங்கத்தினால் அழைத்துவரப்பட்டவர்களுக்கு தற்காலிகமாக தங்குமிடம் வழங்கும் நடைமுறையினை ஏற்றுக்கொள்ள முடியாது என்கின்ற போதிலும், அகதிகளை பொறுப்பேற்றுக் கொள்ளும் உதவியினை வழங்க முன்வருமாறு அனைத்துக் கனேடியர்களையும் கோருவதாகவும் மத்திய குடிவரவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

The post அகதிகளுக்கு தற்காலிக தங்குமிட உதவிகளை தனியார் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் மறுப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

டூர்ஹாம் பிராந்தியத்தில் வீட்டில் தாக்குதலுக்கு உள்ளான நபர் உயிரிழப்பு

Posted: 31 Jan 2016 07:11 AM PST

j

jஒரு வாரத்தின் முன்னர் ஒசாவாவில் வாடகை அறையில் தாக்குதலுக்கு உள்ளான 19 வயது நபர், நேற்று சனிக்கிழமை உயிரிழந்து விட்டார் என டூர்ஹாம் பிராந்தியக் காவல்த்துறையினா தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி அதிகாலை 3.20 மணியளவில் நபர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார் என தகவல் அறிந்ததை அடுத்து, ஒசாவாவின் Cedar வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு சென்றிருந்தாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அங்கு தாக்குதலுக்கு உட்பட்டிருந்த குறித்த நபரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனமதித்ததுடன், பின்னர் அவர் அங்கிரருந்து ரொரன்ரோ மத்திய சுகாதார மையத்திற்கு அனுப்பப்பட்டிருந்தார் என கூறப்பட்டு்ள்ளது.

இந்த நிலையிலேயே அவரிற்கு ஏற்பட்டிருந்த காயம் காரணமாக அவர் நேற்று சனிக்கிழமை உயிரிழந்து விட்டார் என தெரிவிக்கப்படுகிறது.j

உளிரிழந்த நபர் Tehganni Lewis என காவல்த்துறையினர் அடையாம் கண்டுள்ளனர். அடுத்து சில நாட்களில் அவரின் பிரேதப் பரிசோதனை இடம்பெறும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

டூர்ஹாம் பிராந்தியத்தில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள முதல் முதல் வீட்டு உயிழப்புச் சம்பவம் இது என்று காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை இந்த சம்பவம் தொடர்பில தகவல் தெரிந்தவர்கள் காவல்த்துறையினரை அல்லது குற்றத்தடுப்புப் பிரிவினரைத் தொடர்பு கொள்ளுமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post டூர்ஹாம் பிராந்தியத்தில் வீட்டில் தாக்குதலுக்கு உள்ளான நபர் உயிரிழப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

முள்ளங்கி கீரை சாப்பிடலாமா?

Posted: 31 Jan 2016 07:02 AM PST

yu

yuமுள்ளங்கியைப் போல அதன் கீரையும் சத்துக்கள் மிகுந்தது.

முள்ளங்கி மட்டுமல்லாமல், அதன் இலை, தண்டுகள், விதை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்ட‌வை.

சத்துக்கள்

கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், விட்டமின் A,B,C முதலியவையும் இதில் அதிகம் உள்ளன.

இதன் கிழங்குப் பகுதியில் இருப்பதைவிட‌ ஆறு மடங்கு விட்டமின் C இதன் கீரைகளில் இருக்கிறது.

100 கிராம் கீரையில் சுமார் 28 கலோரிகள் கிடைக்கிறது. இதில் 90 சதவீதம் மாவுச் சத்தும், 0.7 சதவீதம் நார்ச்சத்தும் உள்ளன.

புரோட்டீன், சுண்ணாம்புச் சத்து மற்றும் இரும்புச் சத்துக்களும் இதில் அடங்கியுள்ளன.jh

பயன்கள்

* முள்ளங்கிக் கீரையை சமைக்காமல் மெல்லிய துண்டுகளாக்கி பச்சையாக சாலட் போலவும் சாப்பிடலாம்.

* முள்ளங்கிக் கிழங்கைப் போன்றே அதன் கீரையும் இரைப்பைக் கோளாறுகள், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், மூலக்கடுப்பு, மஞ்சள் காமாலை போன்றவைகளையும் குணப்படுத்துகின்றன.

* நீரிழிவு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக உள்ளது.

* மலச்சிக்கலைக் குணப்படுத்தும் ஆற்றல் இந்தக் கீரைக்கு உண்டு.

* முள்ளங்கிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும். வைட்டமின் பற்றாக்குறைகளும் நீங்கும்.

* முள்ள‌ங்கிக் கீரையின் சாற்றை 5 அல்லது 6 டீஸ்பூன் அளவு எடுத்து, 3 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்துவிடும். சிறுநீர்ப்பை வீக்கம் இருந்தாலும் குணமாகும். சிறுநீரகக் கற்கள் இருப்பவர்கள் கீரை சாப்பிட விரும்பினால், முள்ளங்கிக் கீரையை மட்டும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.yu

* சிறுநீர் சரியாக பிரியாமல் இருப்பவர்கள் ஒரு ஸ்பூன் பார்லியை முள்ளங்கிக் கீரையுடன் சேர்த்து வேகவைத்துச் சாப்பிட்டால் நீர்க்கட்டு நீங்கி சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

* ஒரு கைப்பிடி அளவு முள்ளங்கிக் கீரையில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து வேகவைத்து, தொடர்ந்து மூன்று நாட்கள் காலை, மாலை உண்டு வர நீர் அடைப்பு தொல்லை தீரும்.

The post முள்ளங்கி கீரை சாப்பிடலாமா? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கைக்குதல் அரிசி சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

Posted: 31 Jan 2016 06:51 AM PST

jh

jhகைக்குத்தல் அரிசி ஊட்டச்சத்து நிறைந்த முக்கிய உணவாகும்.

இதில் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்துள்ளதால் வெள்ளை அரிசியைக்காட்டிலும் கைக்குத்தல் அரிசியானது அதிக சுகாதார பலன்களை கொண்டது.

கைக்குத்தல் அரிசியின் பதப்படுத்தலில் அதன் மேல்தோல் மட்டுமே நீக்கப்படுவதால் அதன் தன்மை குறையாமல் முழுதானியமாக இருக்கின்றது.

இதன் முழுதன்மையினால் நமது உடலில் அர்டீரியல் பிளேக் உருவாக்குவதிலும் இதய நோய்கள் வாராமல் தடுப்பது மற்றும் அதிக இரத்தகொழுப்பையும் கட்டுப்படுத்தும்.

தற்போது வெளிவந்துள்ள ஆராய்ச்சிகளின் படி, கைக்குத்தல் அரிசியில் அதிக ஆண்டி ஆக்சிடன்ட்கள் தன்மை நிறைந்துள்ளது என உறுதிபடுத்தியுள்ளனர்.

இதில் உள்ள பைடோநியூட்ரியன்ட்கள் அதன் முழுதன்மையை தக்கவைகின்றன. கைக்குத்தல் அரிசியில் உள்ள ஆண்டி ஆக்சிடன்ட்கள் நோய்களை வராமல் தடுத்து வயது மூப்படைதலையும் மெதுவாக்குகின்றது.

கைக்குத்தல் அரிசியில் நிறைந்துள்ள மக்னீஷியம் நமது உடலில் குளுகோஸ் இன்சுலின் சுரக்கும் நொதிகள் போன்ற 300 மேலான நொதிகள் உருவாக்க உதவுகின்றது.

பதப்படுத்தப்பட்ட அரிசி மற்றும் தானியங்கள் தரும் கார்போஹைட்ரேட்டுகளை காட்டிலும் கைக்குத்தல் அரிசியில் நிறைந்துள்ள கார்போஹைட்ரேட்டுகள் நமது உடலுக்கு மிகவும் நல்லது.

கைக்குத்தல் அரிசியில் மெக்னீஷியம் நிறைந்துள்ளதால் நமது நரம்புகளையும் சதைகளையும் சீராக்குவதற்கும் கால்சியம் தன்மையை சமன் செய்வதற்கும் உதவுகின்றது.jh

மக்னீஷியம் மற்றும் கால்சியம் நமது எலும்புகளுக்கு இன்றியமையாதது. நமது உடலில் மூன்றில் இரண்டு பங்கு மக்னீஷியம் எலும்புகளில் உள்ளது.

கைக்குத்தல் அரிசியில் இயற்கை சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது குழந்தைகளுக்கு மிகவும் சிறந்த முதல் உணவாக இருக்கின்றது.

வளர்ந்து வரும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவு தேவைப்படும். கைக்குத்தல் அரிசியானது குழந்தைகளிடையே ஆஸ்துமா நோயை 50% வரை கட்டுப்படுத்தியுள்ளது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

The post கைக்குதல் அரிசி சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™