Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


டெல்லியில் துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம்: தெருவை பெருக்கி சுத்தம் செய்த ஆம் ஆத்மி

Posted: 30 Jan 2016 10:48 PM PST

டெல்லி மாநகராட்சியில் சுமார் 1.50 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து 1.50 லட்சம் ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். துப்புரவு தொழிலாளர்களும் வேலை செய்வதை புறக்கணித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களது போராட்டம் இன்று 5–வது நாளை எட்டியுள்ளது.

பாராளுமன்ற பட்ஜெட்டில் புதிய ரெயில்கள் அறிவிப்பு வராது: அதிகாரிகள் தகவல்

Posted: 30 Jan 2016 10:32 PM PST

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 23–ந்தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 29–ந்தேதி பொது பட்ஜெட் தாக்களாகும் என்று தெரிகிறது. ரெயில் பட்ஜெட் 26 அல்லது 27–ந்தேதி தாக்கலாக வாய்ப்புள்ளது. ரெயில்வே பட்ஜெட்டை தயாரிக்கும் பணியில் மத்திய மந்திரி சுரேஷ்பிரபு

லாக்அப்பில் கைதி மரணம்: 4 போலீசாருக்கு ஏழாண்டு சிறை

Posted: 30 Jan 2016 10:22 PM PST

திருட்டு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட காவல் நிலையத்தில் வாலிபர் விசாரணையின்போது மரணமடைந்த சம்பவத்தில் நான்கு போலீசாருக்கு ஏழாண்டு சிறை தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருப்பதி கோவில் பட்ஜெட் ரூ.2,678 கோடி: லட்டு–சேவை கட்டணம் உயர்வு இல்லை

Posted: 30 Jan 2016 10:22 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் கூட்டம் தலைவர் சகலவாடா கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் 2016–17–ம் ஆண்டு பட்ஜெட்டுக்கு ரூ.2678 கோடியை தேவஸ்தானம் ஒதுக்கி அறிவிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டை விட ரூ.148 கோடி அதிகமாகும். கடந்த ஆண்டு (2015–16) ரூ.1348 கோடியே ஒதுக்கப்பட்டது.

திருப்பதியில் இன்று காலை ரூ.40 லட்சம் செம்மரம் கடத்தல்: திருவண்ணாமலை வாலிபர் கைது

Posted: 30 Jan 2016 09:55 PM PST

திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் கும்பலின் நடமாட்டம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதற்கு அங்கு விளையும் செம்மரங்களுக்கு சர்வதேச சந்தையில் கிடைக்கும் விலைமதிப்பே காரணம். செம்மரக் கடத்தலை தடுக்க ஆந்திர அரசு பல்வேறு நடவடிக்கைகளை

திருப்பதி கோவில் உண்டியலில் ரூ.4 கோடி மதிப்பில் வைரம் பதித்த தங்க கால்பந்து: மராட்டிய பக்தர் காணிக்கை

Posted: 30 Jan 2016 09:13 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் காணிக்கை தினந்தோறும் எண்ணப்படுவது உண்டு. வியாழக்கிழமை பக்தர்கள் செலுத்திய காணிக்கையை அதிகாரிகள் கணக்கிட்டனர். உண்டியலில் வைரம் பதித்த ரூ.2½ கிலோ எடை கொண்ட தங்க கால்பந்து காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்தது. மராட்டிய மாநில பக்தர் ஒருவர்

காஷ்மீரில் பனிப்பாறை சரிவில் சிக்கி மதரசா மாணவன் பலி

Posted: 30 Jan 2016 08:49 PM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பனிப்பாறை சரிந்து விழுந்ததில் 15 வயது மதரசா மாணவன் பரிதாபமாக பலியானான். இங்குள்ள குப்வாரா மாவட்டம் மச்சில் பகுதியில் கடந்த இருநாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. இங்குள்ள இந்திய எல்லைக்கோட்டுப் பகுதி அருகே சுமார் நான்கடி உயரத்துக்கு பனி

பார் ஊழலில் ராஜினாமா: மீண்டும் மந்திரி பதவியை ஏற்கமாட்டேன் - மாணி திட்டவட்ட அறிவிப்பு

Posted: 30 Jan 2016 08:42 PM PST

கேரளாவில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த முதல்–மந்திரி உம்மன்சாண்டி நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன் அடிப்படையில் மது பார்கள் மூடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மது பார்களை மீண்டும் திறக்க ஏற்பாடு செய்வதாக கூறி உம்மன்சாண்டி மந்திரி சபையில் மந்திரிகளாக இருந்த கே.எம்.மாணி, பாபு

தொழுநோயாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை - வீடு கட்ட ரூ.3 லட்சம் கடன்: உ.பி. அரசின் புதிய திட்டம்

Posted: 30 Jan 2016 08:31 PM PST

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் உதவித்தொகையுடன் வீடு கட்ட மூன்று லட்சம் ரூபாய் கடனுதவியும் வழங்கும் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி அரசின் புதிய திட்டத்துக்கு உ.பி. கவர்னர் ராம் நாயக் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் வானொலியில் உரையாற்றுகிறார்

Posted: 30 Jan 2016 08:08 PM PST

வானொலி வாயிலாக நாட்டு மக்களுடன் 'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலமாக உரை நிகழ்த்தும் பிரதமர் நரேந்திர மோடியின் 16-வது வானொலி உரை இன்று காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

உ.பி. சிறையில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை

Posted: 30 Jan 2016 07:47 PM PST

உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் நகரில் உள்ள சிறைச்சாலைக்குள் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹேமமாலினிக்கு குறைந்த விலையில் நிலம் ஒதுக்கியதாக சர்ச்சை: விதிமுறை மீறல் இல்லை என பாஜக விளக்கம்

Posted: 30 Jan 2016 07:39 PM PST

பிரபல நடிகையும், பாரதீய ஜனதா எம்.பி.யும் ஆன ஹேமமாலினிக்கு மும்பை புறநகர் ஓஷிவாரா பகுதியில் நடன பள்ளி அமைப்பதற்காக, 2 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் காலி மனை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய இந்த நிலத்தை, வெறும் ரூ.75

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி உயர்வு

Posted: 30 Jan 2016 07:26 PM PST

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு அடைந்து வருவதால், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதை பயன்படுத்தி, அவற்றின் மீதான உற்பத்தி வரியை உயர்த்துவதை மத்திய அரசு வழக்கமாக கொண்டுள்ளது.

தேவ்னார் குப்பை கிடங்கில் தீ விபத்து - புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி: விசாரணைக்கு முதல்-மந்திரி உத்தரவு

Posted: 30 Jan 2016 06:56 PM PST

கோவண்டி அருகே உள்ள தேவ்னார் குப்பை கிடங்கில் 3 இடங்களில் கடந்த 28-ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து குப்பை கிடங்கில் இருந்து வெளியேறிய புகையால் கோவண்டி, செம்பூர், காட்கோபர் ஆகிய பகுதிகள் புகை மண்டலமானது. இந்தநிலையில் 3-வது நாளாக நேற்று வரை தொடர்ந்து குப்பை கிடங்கில் இருந்து புகை அதிகளவில் வெளியேறி வருகிறது.

பெண் தொழில் முனைவோருக்கு தனிச்சந்தை: சுஷ்மா சுவராஜ் பேச்சு

Posted: 30 Jan 2016 06:53 PM PST

மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் மும்பை வந்தார். இந்த நிலையில், காட்கோபரில் மகளிர் சுயநிதி குழுவை சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட பெண்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

கி.வீரமணி சமூகநீதி விருதுக்கு: பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தேர்வு

Posted: 30 Jan 2016 05:30 PM PST

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச பெரியார் அமைப்பு, ஆண்டு தோறும் சமுதாயத்தில் நலிவடைந்த மற்றும் ஒதுக்கப்பட்டவர்களின் மேம்பாட்டுக்காக செயல்படும் தனிநபர் மற்றும் அமைப்புகளுக்கு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெயரில், 'கி.வீரமணி சமூகநீதி விருது' வழங்கி வருகிறது. அந்தவகையில் நடப்பாண்டு பீகார்

பீகாரில் மாவோயிஸ்டு தளபதி சுட்டுக்கொலை

Posted: 30 Jan 2016 04:59 PM PST

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் சர்க்கா பாதர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட அடர்ந்த காட்டுப் பகுதியில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து உள்ளூர் போலீசாரும், துணை ராணுவத்தினரும் அங்கு விரைந்தனர். தங்களை சுற்றி வளைப்பதை அறிந்த

ஊழல் வழக்கில் சிக்கிய கேரள மந்திரி பாபு ராஜினாமா வாபஸ்

Posted: 30 Jan 2016 04:47 PM PST

கேரளாவில் மது 'பார்' உரிமங்களை புதுப்பிக்க ரூ.10 கோடி லஞ்சம் வாங்கியதாக கேரள கலால் மந்திரி பாபு மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு ஊழல் தடுப்பு போலீசாருக்கு திருச்சூர் ஊழல் தடுப்பு கோர்ட்டு, சமீபத்தில் உத்தரவிட்டது. உடனே அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

முழுக்க முழுக்க ஐபோன் கேமராவிலேயே படம்பிடிக்கப்பட்ட இந்திய திருமணம்: அசத்தல் வீடியோ

Posted: 30 Jan 2016 04:30 PM PST

கெனான், நிக்கான் டி.எஸ்.எல்.ஆர் போன்ற கேமராக்களைக் கொண்டு திருமணத்திற்கு புகைப்படம் எடுக்கும் போட்டோகிராபர்களே இரு வீட்டாரிடமும் சிக்கி சின்னாபின்னமாகும் நிலையில், முழுக்க முழுக்க ஐபோனில் உள்ள கேமராவைக் கொண்டே ஒரு போட்டோகிராபர் திருமண விழா முழுவதையும் புகைப்படம் எடுத்திருக்கிறார் என்றால் அது

இந்திரா காந்திக்கு ஏற்பட்டதுதான் மோடி அரசுக்கும்: யஷ்வந்த் சின்ஹா

Posted: 30 Jan 2016 04:04 PM PST

நெருக்கடி நிலைக்குப் பிறகு நடந்த தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வியடைந்ததைப் போலவே தற்போதைய நரேந்திர மோடி தலைமையிலான அரசும் தோல்வியடையும் என்று பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™