மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- குடியரசு தினத்தில் டெல்லியில் நாசவேலைக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி
- ஹர்திக் படேல் மீது ஜனவரி 8-ம் தேதிக்கு முன் குற்றப்பத்திரிகை தாக்கல்
- ஒருகோப்பை தேனீருக்கு பதான்கோட்டில் ஏழு வீரர்கள் பலியா?: நவாஸ் ஷெரிப்புடனான மோடியின் சந்திப்பை கிண்டல் அடிக்கும் சிவசேனா
- மகரவிளக்கு பூஜையையொட்டி பறக்கும் காமிரா மூலம் சபரிமலையில் பாதுகாப்பு பணி
- பதான்கோட் விமானப்படை தளத்தில் 4–வது நாளாக தேடுதல் வேட்டை: தேசிய புலனாய்வு அதிகாரிகள் பார்வையிட்டனர்
- 92 வயதிலும் அபிநயம் பிடித்து பரதமாடும் அற்புதப்பாட்டி: வைரல் வீடியோ
- தீவிரவாத தாக்குதல் நடந்த பதான்கோட் விமானத்தளத்துக்கு ராணுவ மந்திரி மனோகர் பரிக்கர் விரைகிறார்
- கோரிக்கை வலியுறுத்தி பேனர் காட்டிய பத்திரிகையாளர்களுக்கு சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை
- தீவிரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் கேரள ராணுவ அதிகாரி உடல் சொந்த ஊரில் தகனம்
- புதிய தலைநகரம் அமைப்பதற்கு பள்ளி மாணவர்களிடமும் நன்கொடை வசூலிக்கும் ஆந்திர அரசு
- திருப்பதி கோவிலில் லட்டு திருடிய 7 ஊழியர்கள் கைது
- பதான்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ அதிகாரி குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதி: சித்தராமையா அறிவிப்பு
- மாகிம் குடிசைப்பகுதியில் பயங்கர தீ விபத்து: 40 வீடுகள் எரிந்து நாசம்
- 2ஜி ஸ்பெக்ட்ரம்: அமலாக்க பிரிவு தொடர்ந்த வழக்கில் இறுதி வாதம் தொடங்கியது
- சட்டம் அனுமதித்தால் கற்பழிப்பு குற்றவாளிகளை சுட்டுக்கொல்ல ஆசை: டெல்லி போலீஸ் கமிஷனர்
- பதான்கோட் தாக்குதல் சம்பவம்: விசாரணை நடத்த ராணுவ மந்திரி உத்தரவு
- வட மாநிலங்களில் நிலநடுக்கத்துக்கு 12 பேர் பலி: சோனியாகாந்தி இரங்கல்
- சம்பிரதாயத்தை மீறி தந்தையின் சவப்பெட்டியை சுமந்த மகள்
- இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு கவலை தருகிறது: சோனியா காந்தி
- இந்தியா முழுவதும் 40 ஆயிரம் வை-பை ஹாட்ஸ்பாட்டுகளை நிறுவுகிறது பி.எஸ்.என்.எல்
| குடியரசு தினத்தில் டெல்லியில் நாசவேலைக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி Posted: 04 Jan 2016 10:37 PM PST பஞ்சாப் மாநிலம் பதான் கோட் விமானப்படை தளத்தை பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கிய சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 3 நாட்கள் நடந்த துப்பாக்கி சண்டையில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் தரப்பில் 7 பேர் வீரமரணம் அடைந்தனர். |
| ஹர்திக் படேல் மீது ஜனவரி 8-ம் தேதிக்கு முன் குற்றப்பத்திரிகை தாக்கல் Posted: 04 Jan 2016 10:33 PM PST குஜராத்தில் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த படேல்கள், எங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (OBC) சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இல்லையென்றால் இடஒதுக்கீட்டு முறையையே ஒழிக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு 22 வயது இளைஞரான ஹர்திக் படேல் தலைமை வகித்து வருகிறார். |
| Posted: 04 Jan 2016 10:16 PM PST பாகிஸ்தானுக்கு கடந்த மாதம் திடீரென சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு அந்நாட்டின் பிரதமரை சந்தித்ததுடன் அவருடன் சேர்ந்து விருந்துண்டதை பா.ஜ.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா கடுமையாக எதிர்த்து வருகின்றது. |
| மகரவிளக்கு பூஜையையொட்டி பறக்கும் காமிரா மூலம் சபரிமலையில் பாதுகாப்பு பணி Posted: 04 Jan 2016 10:13 PM PST சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அய்யப்பனுக்கு விசேஷ பூஜைகள் நடந்து வருகிறது. வருகிற 15–ந்தேதி பகல் 12.30 மணிக்கு மகரவிளக்கு பூஜை நடக்கிறது. இதனால் சபரிமலையில் பக்தர்கள் அலைமோதுகிறார்கள். மகர விளக்கு பூஜையையொட்டி வருகிற 12–ந்தேதி எரிமேலியில் பிரசித்திப் பெற்ற பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடக்கிறது. அம்பலபுழை, ஆலங்காடு பக்தர்கள் தனித்தனியாக பேட்டை துள்ள |
| பதான்கோட் விமானப்படை தளத்தில் 4–வது நாளாக தேடுதல் வேட்டை: தேசிய புலனாய்வு அதிகாரிகள் பார்வையிட்டனர் Posted: 04 Jan 2016 10:08 PM PST பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படைக்குள் ஊடுருவிய தீவிரவாதிகள் அங்கு பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தினர். முதல் நாள் நடந்த துப்பாக்கி சண்டையில் 4 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையானரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். நேற்று முன்தினம் மீண்டும் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடும் சத்தம் |
| 92 வயதிலும் அபிநயம் பிடித்து பரதமாடும் அற்புதப்பாட்டி: வைரல் வீடியோ Posted: 04 Jan 2016 09:51 PM PST மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு உட்பட இந்தியா மற்றும் வெளிநாட்டு ரசிகர்கள் பலரை தன் பரதக் கலையால் கட்டிப்போட்ட பரத நாட்டியக் கலைஞர் பானுமதி ராவ். அரங்கக் கலைஞராகவும் தன் திறமையை பறைசாற்றிய இவர், கடந்த டிசம்பர் 4-ம் தேதி 92-வது வயதில் |
| தீவிரவாத தாக்குதல் நடந்த பதான்கோட் விமானத்தளத்துக்கு ராணுவ மந்திரி மனோகர் பரிக்கர் விரைகிறார் Posted: 04 Jan 2016 09:40 PM PST பஞ்சாப் மாநிலம், பதான்கோட்டில் உள்ள விமானப்படைத் தளத்தின்மீது தாக்குதல் நடத்த வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகளில் இதுவரை 5 பேர் கொல்லபட்டுள்ளனர். தீவிரவாதிகளை தீர்த்துக்கட்டும் கடமையில் ஈடுபட்ட இந்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 7 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். அங்கு பதுங்கி இருக்கும் அல்லது கொல்லப்பட்ட மேலும் ஒரு |
| கோரிக்கை வலியுறுத்தி பேனர் காட்டிய பத்திரிகையாளர்களுக்கு சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை Posted: 04 Jan 2016 09:31 PM PST ஆந்திர மாநிலம் ஒங்கோல் ராயவரத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது பத்திரிகையாளர்கள் தங்களின் சுகாதார அட்டைக்கு அரசு நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம் சாட்டி கோரிக்கை அடங்கிய பதாதைகளை தூக்கி பிடித்தப்படி நின்றனர். |
| தீவிரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் கேரள ராணுவ அதிகாரி உடல் சொந்த ஊரில் தகனம் Posted: 04 Jan 2016 09:25 PM PST பஞ்சாப் மாநிலத்தில் பதான்கோட் விமான படை தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்திய ராணுவ வீரர்கள் திறமையாக செயல்பட்டு இந்த தாக்குதலை முறியடித்து தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். தீவிரவாதிகள் வேட்டையில் தேசிய பாதுகாப்பு படை வீரர் லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன்குமார் (வயது 34) என்பவரும் வீர மரணம் அடைந்தார். |
| புதிய தலைநகரம் அமைப்பதற்கு பள்ளி மாணவர்களிடமும் நன்கொடை வசூலிக்கும் ஆந்திர அரசு Posted: 04 Jan 2016 09:15 PM PST ஆந்திராவின் புதிய தலைநகர் குண்டூர் அருகே அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்தது. சிங்கப்பூர் போல புதிய தலைநகர் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படும் என்று முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்து உள்ளார். இதற்காக |
| திருப்பதி கோவிலில் லட்டு திருடிய 7 ஊழியர்கள் கைது Posted: 04 Jan 2016 08:57 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு தலா ரூ.25 கட்டணத்தில் கூடுதலாக 4 லட்டுகள் வழங்கப்படுகிறது. இதற்காக 23 லட்டு கவுன்டர்கள் செயல்பட்டு வருகிறது. கோவில் ஊழியர்கள் ஏழுமலையானை கர சேவகர்கள் உதவியுடன் லட்டுகளை விநியோகித்து வருகிறார்கள். புத்தாண்டு தினத்தில் பக்தர்கள் |
| Posted: 04 Jan 2016 07:25 PM PST பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ அதிகாரி உடலுக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் ராணுவ அதிகாரி குடும்பத்திற்கு நிவாரண நிதியாக ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்று சித்தராமையா அறிவித்தார். |
| மாகிம் குடிசைப்பகுதியில் பயங்கர தீ விபத்து: 40 வீடுகள் எரிந்து நாசம் Posted: 04 Jan 2016 07:14 PM PST மும்பை மாகிம் ரெயில்நிலையத்தையொட்டி மேற்கு பகுதியில் உள்ள ரகேஜா ஆஸ்பத்திரி அருகில் நாயா நகர் குடிசைப்பகுதி உள்ளது. இங்கு சுமார் 50 ஆயிரம் குடிசை வீடுகள் உள்ளன. இதில், நேற்று காலை 10.30 மணியளவில் சயான்-மாகிம் லிங்க் ரோட்டிற்கு கீழ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்தது. |
| 2ஜி ஸ்பெக்ட்ரம்: அமலாக்க பிரிவு தொடர்ந்த வழக்கில் இறுதி வாதம் தொடங்கியது Posted: 04 Jan 2016 06:59 PM PST 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்றதற்காக ஆதாயம் தேடித்தரும் வகையில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி முறைகேடாக கைமாறியதாக மத்திய அமலாக்க பிரிவினர் கடந்த ஏப்ரல் 25-ந் தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனி கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். |
| சட்டம் அனுமதித்தால் கற்பழிப்பு குற்றவாளிகளை சுட்டுக்கொல்ல ஆசை: டெல்லி போலீஸ் கமிஷனர் Posted: 04 Jan 2016 06:58 PM PST கற்பழிப்பு குற்றவாளிகளை சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்ல டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பஸ்சி விருப்பம் தெரிவித்துள்ளார். புத்தாண்டு பிறப்பையொட்டி, நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது இப்படி கூறினார். அவர் மேலும் கூறியதாவது:- |
| பதான்கோட் தாக்குதல் சம்பவம்: விசாரணை நடத்த ராணுவ மந்திரி உத்தரவு Posted: 04 Jan 2016 06:46 PM PST பதன்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு விமானப்படை தளபதி அரூப் ராஹாவுக்கு ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் உத்தரவிட்டு உள்ளார். விமானப்படை தளத்தில் இருந்த பாதுகாப்பு குறைபாடுகள், இதுபோன்ற குறைபாடுகளை தடுக்க |
| வட மாநிலங்களில் நிலநடுக்கத்துக்கு 12 பேர் பலி: சோனியாகாந்தி இரங்கல் Posted: 04 Jan 2016 06:30 PM PST மணிப்பூர் மாநிலம், தமங்லாங் மாவட்டத்தை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் நேற்று காலை 4.35 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. இதன் தாக்கம் அசாமிலும், பீகாரிலும் கடுமையாக உணரப்பட்டது. |
| சம்பிரதாயத்தை மீறி தந்தையின் சவப்பெட்டியை சுமந்த மகள் Posted: 04 Jan 2016 06:11 PM PST பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தள தாக்குதலில் பலியான பாதுகாப்பு படையினரில் மேஜர் பதே சிங் என்ற ராணுவ அதிகாரியும் அடங்குவார். அவரது உடல் தகனம், குர்தாஸ்பூரில் நடைபெற்றது. அப்போது, ஆசிரியையான பதே சிங்கின் மகள் மது, அவரது உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை தகன மேடைவரை தோளில் சுமந்து சென்றார். |
| இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு கவலை தருகிறது: சோனியா காந்தி Posted: 04 Jan 2016 01:25 PM PST உள்நாட்டு பாதுகாப்பு நிலவரம் கவலை தரும் வகையில் இருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். பதான்கோட் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேசிய சோனியா காந்தி " இது போன்ற தீவிரவாத |
| இந்தியா முழுவதும் 40 ஆயிரம் வை-பை ஹாட்ஸ்பாட்டுகளை நிறுவுகிறது பி.எஸ்.என்.எல் Posted: 04 Jan 2016 12:37 PM PST பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நாடு முழுவதும் 40 ஆயிரம் வை-பை ஹாட் ஸ்பாட்டுகளை நிறுவ உள்ளதாக அறிவித்துள்ளது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |