Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


Garden District பகுதியில் தீ சம்பவம் – யாருக்கும் காயமில்லை

Posted: 04 Jan 2016 08:19 PM PST

kj

kjரொரன்ரோவின் Garden District பகுதியில் இன்று அதிகாலை பற்றிக் கொண்ட தீ மாலையில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள நிலையில், அந்த தீ சம்பவம்வத்தில் யாரும் காயமடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jarvis வீதி மற்றும் Carlton வீதிப் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்று இன்று அதிகாலை ஐந்து மணியளவில் தீ பற்றிக்கொண்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு தாம் விரைந்தபோது, வீட்டின் இரண்டாம் மாடியில் தீ பரவியதாக ரொரன்ரோ தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.kj

அப்போது கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் இருந்து பெருமளவு புகை வெளியேறியவாறு காணப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். தீயணைப்புப் படையினர் இன்று நாள் முழுவதிலும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போதிலும், பிற்பகல் 4.30 மணியவிலேயே தீ முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் எவரும் காயமடைந்ததான முறைப்பாடுகள் எவையும் கிடைக்கவில்லை எனவும் , தீப்பரவல் ஏற்பட்ட சமயம் அங்கு எவரும் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

The post Garden District பகுதியில் தீ சம்பவம் – யாருக்கும் காயமில்லை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சவுதி அரேபியாவில் 47 சிரச்சேதம் செய்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு கனடா கண்டனம்

Posted: 04 Jan 2016 12:57 PM PST

uy

uyசவுதி அரேபியா அரசாங்கம் 47 பேருக்கு சிரச்சேதம் செய்து மரண தண்டனை நிறைவேற்றியிருந்தமைக்கு கனடாவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கனடாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்டீஃபன் டியோன் (Stephane Dion)நேற்றைய தினம் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் கனடா வெளியிட்ட கண்டன அறிக்கையில், மனித உரிமைகளை பாதுகாத்து மதித்து நடப்பதுடன், அமைதியான மரியாதையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், நீதித்துறை நடைமுறைகளில் நியாயமான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் சவூதி அரேபிய அரசாஙகத்தினை கனடா கேட்டுக்கொண்டுள்ளது.

சவூதி அரேபிய அரசாங்கத்தினால் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட 47 பேரில் ஷியா மதத்தலைவர் ஒருவர் அடங்குவதாகவும், அதனால் அந்த பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவிவரும் பதற்றத்தினை மேலும் தீவிரப்படுத்தக் கூடும் என கனடா கரிசனை கொண்டுள்ளதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்டீஃபன் டியோன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை சவுதி அரேபியா, ஈரான் இடையேயான மீள் இணக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ள கனேடிய வெளியுறவு அமைச்சர், சவூதி அரேபியா மற்றும் ஈரான் நாட்டுத் தலைவர்களும் அதிகாரிகளும் அந்த வட்டாரத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தினை தணிக்க உதவ வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதனை அடுத்து ஈரானில் உள்ள சவுதி தூதரகத்தை ஆர்ப்பாட்டக்காரர் தாக்கியிருந்தனர். அவற்றின் தொடர்ச்சியாக ஈரானுடனான தனது ராஜதந்திர உறவுகளை துண்டித்துக் கொள்வதாக சவூதி அரேபியா அறிவித்துள்ள நிலையில், கனேடிய வெளியுறவு அமைச்சர் இந்த வேண்டுகோலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post சவுதி அரேபியாவில் 47 சிரச்சேதம் செய்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு கனடா கண்டனம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

மது அற்ற பண்பாட்டினை ஏற்படுத்தும் நல்வாழ்வுத் திட்டத்தை முன்னெடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சேய்மஸ் ஓ’றீகன்

Posted: 04 Jan 2016 12:07 PM PST

o

oமது அற்ற பண்பாட்டினை ஏற்படுத்தும் நல்வாழ்வுத் திட்டத்தை முன்னெடுக்கப் போவதாக புதிதாக லிபரல் கட்சியின் கீழ் தெரிவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினருமான சேய்மஸ் ஓ'றீகன்(Seamus O'Regan) தெரிவித்துள்ளார்.

இந்த மாத இறுதியில நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக தனது தேர்தல் தொகுதிக்கு சென்று நாடாளுமன்ற உறுப்பினராக தனது கடமைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்த அவர், மது அற்ற பண்பாட்டினை ஏற்படுத்துதல் என்ற கொள்கையின் அடிப்படையிலேயே தான் நாடாளுமன்றில் நுளைந்ததாகவும் விளக்கமளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் கடந்த வார இறுதியில் இருந்து குறித்த இந்த நலவாழ்வுத் திட்டத்தின் அடிப்படையில் செயலாற்ற ஆரம்பித்துள்ளதாகவும் முன்னாள் ஊடகவியலாளருமான அவர் கூறியுள்ளார்.

குடிப் பழக்கத்தின நிறுத்துவதற்கான திட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும், மது இல்லாத பண்பாட்டினை ஏற்படுத்த முயற்சிக்கப் போவதாகவும் குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை நேற்றைய தினம் தனது சமூக வலைத்தளத்தின் ஊடாக அவர் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடுமுறைக் காலத்தில் இவ்வாறான வேலைத் திட்டத்தில் செயற்பட ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த மது விலக்கு திட்டம் தொடர்பில் வெளியிடுவதற்கு பல்வேறு தகவல்கள் உள்ள போதிலும், அதனை சரியான முறையில் திட்டமிட்டு முடிக்கும் வரையிலும் இரகசியம் காக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகவியலாளருமான சேய்மஸ் ஓ'றீகனின்(Seamus O'Regan) எடுத்துள்ள இந்த முயற்சிக்கு தனது ஆதரவும் இருக்கும் என பிரதமர் ஜஸ்டின் ரூடோவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post மது அற்ற பண்பாட்டினை ஏற்படுத்தும் நல்வாழ்வுத் திட்டத்தை முன்னெடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சேய்மஸ் ஓ’றீகன் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™