மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ரூ.40 கோடி மதிப்புள்ள நிலத்தை நடிகைக்கு வெறும் 70 ஆயிரம் ரூபாய்க்கு வாரிவழங்கிய மராட்டிய அரசு
- டெல்லி மாநகராட்சியில் 13 வார்டுகளில் இடைத்தேர்தல்: ஐகோர்ட்டு உத்தரவு
- தனியார் ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் நர்சுகளுக்கு சம்பளம் நிர்ணயம் செய்ய குழு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- திருவனந்தபுரம் அருகே மாந்திரீகம் செய்வதாக கூறி வாலிபரை கட்டிப்போட்டு சித்ரவதை: 2 மந்திரவாதிகள் கைது
- மும்பை ரெயில் கழிப்பறைக்குள் வெடிகுண்டு: பயணிகள் பீதி
- 30 அடிநீள ராட்சத திமிங்கலம் - மும்பையில் கரை ஒதுங்கியது
- ஆந்திராவில் 3 வயது சிறுமியை தெரு நாய்கள் கடித்து குதறி கொன்ற கொடூரம்
- 125–வது பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் உருவம் பொறித்த 10 ரூபாய் நாணயம் வருகிறது: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
- திருப்பதியில் 20 தமிழர்கள் சுட்டுக்கொலை: ஆந்திரா விசாரணை குழுவுக்கு ஐதராபாத் ஐகோர்ட்டு கண்டனம்
- காஷ்மீரில் புதிய ஆட்சி அமையுமா?: முதல்–மந்திரி இல்லத்தை மெகபூபா காலிசெய்தார்
- பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா: ஜெயா பச்சன் தொடங்கி வைத்தார்
- சத்தியவேடு அருகே செம்மர கடத்திய தமிழக வியாபாரி கைது
- விஜிலன்ஸ் கோர்ட்டு உத்தரவை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் இன்று அப்பீல்: உம்மன்சாண்டி பேட்டி
- ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் பாராளுமன்றக்குழு ஆய்வு செய்ய திட்டம்
- கார் விபத்து வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் சல்மான் கான் கேவியட் மனு
- அரசு மீது ஊழல் புகார்கள்: கேரளாவில் ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ. ராஜினாமா
- சி.பி.எஸ்.இ. பள்ளி கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தீர்ப்பு
- தமிழக வெள்ள சேத நிலவரம்: மத்திய குழு அறிக்கை தாக்கல்
- உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் மூன்று இந்தியர்கள்: முகேஷ் அம்பானிக்கு 27-வது இடம்
- பிரதமர் பதவிக்கு ஒருபோதும் ஆசைப்பட்டது இல்லை: பிரணாப் முகர்ஜி
| ரூ.40 கோடி மதிப்புள்ள நிலத்தை நடிகைக்கு வெறும் 70 ஆயிரம் ரூபாய்க்கு வாரிவழங்கிய மராட்டிய அரசு Posted: 28 Jan 2016 11:01 PM PST மராட்டிய மாநிலத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியின் விளைவாக நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து இறந்துள்ளனர். பல லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் இழப்புக்கு போதிய நிவாரணம் வழங்கவேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் வருகின்றனர். இந்நிலையில் ரூ.40 கோடி மதிப்புள்ள நிலத்தை நடிகைக்கு வெறும் 70 ஆயிரம் ரூபாய்க்கு வாரிவழங்கிய மராட்டிய |
| டெல்லி மாநகராட்சியில் 13 வார்டுகளில் இடைத்தேர்தல்: ஐகோர்ட்டு உத்தரவு Posted: 28 Jan 2016 10:54 PM PST டெல்லி மாநகராட்சியில் 13 வார்டுகள் காலியாக உள்ளன. எனவே அவற்றுக்கு இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. |
| Posted: 28 Jan 2016 10:42 PM PST தனியார் ஆஸ்பத்திரி நர்சுகளுக்கு சம்பளம் நிர்ணயம் செய்ய குழு அமைத்து சட்டம் இயற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் தனியார் ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் நர்சுகளுக்கு குறைந்த பட்ச சம்பளம் நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. |
| திருவனந்தபுரம் அருகே மாந்திரீகம் செய்வதாக கூறி வாலிபரை கட்டிப்போட்டு சித்ரவதை: 2 மந்திரவாதிகள் கைது Posted: 28 Jan 2016 10:36 PM PST திருவனந்தபுரம் அருகே பாலராமபுரம் பகுதியை சேர்ந்த ஒரு 23 வயது வாலிபருக்கு மனநோய் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை அளிக்க அவர்கள் சென்னையில் உள்ள தங்கள் உறவினர் ஒருவர் உதவியை நாடினார்கள். அந்த உறவினர் சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த மாந்திரீகம் செய்யும் சதீஷ்குமார் (வயது 28), மொய்தீன்கான் (23) ஆகியோரை அணுகி இதுபற்றி கூறினார். அவர்களும் தாங்கள் மாந்திரீகம் செய்து குணப்படுத்தி விடுவதாக கூறி உள்ளனர். |
| மும்பை ரெயில் கழிப்பறைக்குள் வெடிகுண்டு: பயணிகள் பீதி Posted: 28 Jan 2016 10:31 PM PST உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து மும்பை நோக்கி வந்த மஹாநகரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் கழிப்பறைக்குள் கிடந்த டைம் பாம்ப் ரக வெடிகுண்டினால் பயணிகள் பெரும் பீதிக்குள்ளாகினர். வாரணாசி நகரில் இருந்து அலகாபாத் வழியாக வந்த அந்த ரெயில் |
| 30 அடிநீள ராட்சத திமிங்கலம் - மும்பையில் கரை ஒதுங்கியது Posted: 28 Jan 2016 10:13 PM PST மும்பையில் உள்ள ஜுஹு கடற்கரையில் 30 அடிநீளம் கொண்ட ராட்சத திமிங்கலம் பிணமாக கரை ஒதுங்கியது. இதுதொடர்பாக, பொதுமக்கள் அளித்த தகவலையடுத்து விரைந்துவந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் திமிங்கலத்தின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தினர், சமீபத்தில் திருச்செந்தூர் அருகே சுமார் 250 |
| ஆந்திராவில் 3 வயது சிறுமியை தெரு நாய்கள் கடித்து குதறி கொன்ற கொடூரம் Posted: 28 Jan 2016 09:13 PM PST ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் வேமுலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த தம்பதிகள் வெங்கேஷ்வரலு – வெங்கட்ரமணா. இவர்களுக்கு 5 வயதில் மகனும், 3 வயதில் அனனியா என்ற மகளும் உள்ளனர். வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி அனனியா திடீரென மாயமானாள். பெற்றோர்கள் பல மணி நேரம் தேடினார்கள். இறுதியில் வயல்வெளியில் சிறுமி அனனியா பிணமாக கிடந்தாள். அவள் உடல் |
| Posted: 28 Jan 2016 09:06 PM PST அம்பேத்கரின் 125–வது பிறந்த நாளையொட்டி அவரது உருவம் பொறித்த 10 ரூபாய் நாணயம் வெளியிடப்பட உள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– சட்ட மேதை அம்பேத்கரின் 125–வது ஆண்டு பிறந்த நாளையொட்டி அவரது உருவம் பொறித்த 10 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு தயாரித்து வருகிறது |
| திருப்பதியில் 20 தமிழர்கள் சுட்டுக்கொலை: ஆந்திரா விசாரணை குழுவுக்கு ஐதராபாத் ஐகோர்ட்டு கண்டனம் Posted: 28 Jan 2016 08:59 PM PST திருப்பதி சேஷாசல மலை வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்தல்காரர்கள் மீது ஆந்திர போலீசார் நடத்திய என்கவுண்டரில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் அப்பாவி கூலித் தொழிலாளர்கள் என்றும் அவர்கள் திட்டமிட்டு கொல்லப்பட்டு உள்ளார்கள் என்றும் பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தினார்கள். |
| காஷ்மீரில் புதிய ஆட்சி அமையுமா?: முதல்–மந்திரி இல்லத்தை மெகபூபா காலிசெய்தார் Posted: 28 Jan 2016 08:58 PM PST ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 10 மாதங்களாக பி.டி.பி – பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. பி.டி.பி. நிறுவனர் முப்தி முகமது சயீத் முதல் முந்திரியாக இருந்தார். இந்த நிலையில் கடந்த 7–ந்தேதி முதல்–மந்திரி முப்தி முகமது சயீத் மரணம் அடைந்தார். இதையடுத்து பி.டி.பி. கட்சித் தலைவரான அவரது மகள் மெகபூபா முப்தி அடுத்த முதல்வராக பதவி ஏற்பார் என்று எதிர் |
| பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா: ஜெயா பச்சன் தொடங்கி வைத்தார் Posted: 28 Jan 2016 08:50 PM PST கர்நாடக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை, கர்நாடக திரைப்பட அகாடமி, கர்நாடக சினிமா வர்த்தக சபை ஆகியவை சார்பில் 8-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் நேற்று மாலை தொடங்கியது. இந்த விழாவுக்கு முதல்-மந்திரி சித்தராமையா தலைமை தாங்கினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை ஜெயா பச்சன் கலந்து கொண்டு திரைப்பட விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:- மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை |
| சத்தியவேடு அருகே செம்மர கடத்திய தமிழக வியாபாரி கைது Posted: 28 Jan 2016 08:49 PM PST ஸ்ரீகாளஹஸ்தி அடுத்த சத்தியவேடு வனத்துறை அதிகாரி மணிகண்டேஸ்வரன் தலைமையில் வரதய்யபாளையம் மண்டலம் கடூர் பகுதியில் வனத்துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒருவர் பிளாஸ்டிக் பொருட்களுடன் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். |
| விஜிலன்ஸ் கோர்ட்டு உத்தரவை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் இன்று அப்பீல்: உம்மன்சாண்டி பேட்டி Posted: 28 Jan 2016 08:44 PM PST கேரளாவில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்ததாக பெண் தொழில் அதிபர் சரிதாநாயர், அவரது முன்னாள் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன், நடிகை ஷாலுமேனன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். |
| ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் பாராளுமன்றக்குழு ஆய்வு செய்ய திட்டம் Posted: 28 Jan 2016 07:22 PM PST ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த ரோகித் வெமுலா என்ற தலித் மாணவர் தற்கொலை செய்த நிலையில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் முன்னேற்றத்துக்கான பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. |
| கார் விபத்து வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் சல்மான் கான் கேவியட் மனு Posted: 28 Jan 2016 07:04 PM PST இந்தி நடிகர் சல்மான் கான் கடந்த 2002-ம் ஆண்டு மும்பையில், குடிபோதையில் கார் ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்தினார். இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 4 பேர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கில், சல்மான் கானை மும்பை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு விடுவித்தது. இதை எதிர்த்து மராட்டிய அரசு மேல்முறையீடு |
| அரசு மீது ஊழல் புகார்கள்: கேரளாவில் ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ. ராஜினாமா Posted: 28 Jan 2016 06:37 PM PST கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசுக்கு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆதரவு அளித்து வருகிறது. இந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. கோவூர் குஞ்சுமோன், நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் என்.சக்தனிடம் நேரில் ஒப்படைத்தார். |
| சி.பி.எஸ்.இ. பள்ளி கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தீர்ப்பு Posted: 28 Jan 2016 06:32 PM PST தமிழ்நாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. தனியார் பள்ளிக் கட்டணங்களை ஒழுங்கு முறைப்படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவும் தனியார் பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்ணயித்தது. இதை எதிர்த்து 6 ஆயிரத்து 400 பள்ளிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த |
| தமிழக வெள்ள சேத நிலவரம்: மத்திய குழு அறிக்கை தாக்கல் Posted: 28 Jan 2016 06:29 PM PST தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த வடகிழக்கு பருவ மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. இதையடுத்து தமிழக வெள்ள சேதத்தை பார்வையிட மத்திய உள்துறை இணை செயலாளர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையில் 8 பேர் கொண்ட குழு வந்தது. |
| உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் மூன்று இந்தியர்கள்: முகேஷ் அம்பானிக்கு 27-வது இடம் Posted: 28 Jan 2016 06:10 PM PST வெல்த்-எக்ஸ் மற்றும் பிஸினஸ் இன்சைடர் ஆகிய வணிக வலைதளங்கள் 50 உலக பெரும் பணக்காரர்கள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளன. இந்த பட்டியலில் பில் கேட்ஸ் முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 27-வது இடத்தில் இருக்கிறார். |
| பிரதமர் பதவிக்கு ஒருபோதும் ஆசைப்பட்டது இல்லை: பிரணாப் முகர்ஜி Posted: 28 Jan 2016 04:33 PM PST ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் ''கொந்தளிப்பான ஆண்டு 1980-96'' என்ற தலைப்பில் ஏற்கனவே சுயசரிதையை எழுதி வெளியிட்டுள்ளார். அதன் 2-ம் பாகம் வெளியீட்டு நிகழ்ச்சி ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்தது. இதனை துணை |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |