Tamil Star |
- ஈற்ரோபிக்கோவில் பேருந்து மோதியதில் பெண் படுகாயம்
- ஈரான் மீதான தடை நீக்கம்: நட்பு நாடுகள் வரவேற்பு
- கனடாவில்(Zika)வைரஸ் தொற்று
- குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக்கூடாத உணவுகள்!
- எதற்காக நண்டு சாப்பிட வேண்டும்? 10 காரணங்கள்
| ஈற்ரோபிக்கோவில் பேருந்து மோதியதில் பெண் படுகாயம் Posted: 28 Jan 2016 07:13 PM PST
படுகாயமடைந்த அந்த பெண்ணை உடனடியகா மருத்தவமனையில் சேர்த்துள்ளதாக ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். Poplar அவனியூ மற்றும் மேற்கு Dundas வீதியில் காலை 9.30 மணிக்கு சற்று முன்னராக இந்த விபத்து சம்பவதித்துள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்ட அந்த பெண் உணர்வற்ற நிலையில் இருந்ததாகவும், எனினும் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சுவாசித்துக்கொண்டிருந்தார் என்றும் அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு காவல்த்துறையினரும் பிரசன்னமாகியிருந்ததுடன், விபத்தை அடுத்து அந்த பகுதியினூடான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. The post ஈற்ரோபிக்கோவில் பேருந்து மோதியதில் பெண் படுகாயம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஈரான் மீதான தடை நீக்கம்: நட்பு நாடுகள் வரவேற்பு Posted: 28 Jan 2016 07:10 PM PST
மேற்குலக சக்திவாய்ந்த நாடுகளுடன் வரலாற்று முக்கியத்துவம் மிக்க அணுசக்தி உடன்பாட்டை ஈரான் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறு ஈரான் உடன்பாடு செய்துகொண்டுள்ள நிலையில், முன்னைய பழமைவாதக் கட்சி அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட ஈரான் மீதான தடைகள் பலனற்றவை தற்போது தமது லிபரல் அரசாங்கம் நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அறிப்பு குறித்து மேற்குலக நாடுகள் சிலவற்றின் இராஜதந்திரிகள் அதிருப்தி வெளியிட்டுள்ள போதிலும், வேறு சில நாடுகளின் மூத்த இராஜதந்திரிகள் இது தொடர்பில் வரவேற்பு வெளியிட்டுள்ளனர். முன்னைய அரசாங்கம் இந்த விடயத்தினை சந்தேகக் கண் கொண்டு நோக்கிவந்த நிலையில், தற்போதய லிபரல் அரசாங்கம் அதனை சாதகமான வழியில் அணுகியுள்ளதாக கனடாவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இது ஐரோப்பாவுககும் மிகப்பெரும் வெற்றியாக அமைவதாகவும், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இது தொடர்பில் கனேடிய அதிகாரிகளுடன் தொடர்ச்சியான தொடர்புகளை பேணி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். The post ஈரான் மீதான தடை நீக்கம்: நட்பு நாடுகள் வரவேற்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 28 Jan 2016 11:24 AM PST
இந்த மாத முற்பகுதியில் எல் சல்வடோரிலிருந்து நாடு திரும்பிய பிரிட்டிஸ் கொலம்பியாவைச் சேர்ந்த ஒருவருக்கும்,அதனைத் தொடர்ந்து கொலம்பியாவில் இருந்து நாடு திரும்பிய மற்றொரு பிரிட்டிஸ் கொலம்பிய வாசிக்கும் இந்த நோயத் தொற்று ஏற்பட்டிருந்ததாக பொதுச் சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுதியிருந்தனர். எனினும் இருவரும் அந்த நோய்த் தாக்கத்திலிருந்து மீண்டுவிட்டதாகவும் சுகாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் மூன்றாவது நபராக அல்பேர்ட்டாவில் ஒருவர் இந்த நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலம், எந்த நாட்டில் இருந்து அந்த நோயைக் கொண்டுவந்தார் என்பது குறித்தோ,அவரின் தற்போதய நிலைமை குறித்தோ தெளிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை. மகற்பேற்றின் போது பாதிப்பினை ஏற்படுத்தும் இந்த வைரஸ் தொற்று, பிரேசியல் உட்பட பல்வேறு நாடுகளிலும் தற்போது அச்சத்தினை ஏற்படுத்திவரும் நிலையி்ல், கனடாவினுள் அது நுளைந்துள்ளமை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்த நோயத் தொற்றுச் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் அதிகம் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் பொதுச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். The post கனடாவில்(Zika)வைரஸ் தொற்று appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக்கூடாத உணவுகள்! Posted: 28 Jan 2016 07:05 AM PST
ஏனெனில், அந்த உணவுப்பொருட்கள் சில நேரங்களில் அழுகிவிடும் என்பதால் சமையலுக்கு பயன்படுத்த முடியாமல் போய்விடும். வெங்காயம் வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும் நான் வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்த பிறகு அதனை காற்றோட்டமாக வைக்க வேண்டும். பூண்டு பூண்டை எப்போதுமே குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது பூரணம் பிடிக்க ஆரம்பித்துவிடும். அதனை காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்கலாம். உருளைக் கிழங்கு உருளைக் கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பாலீதீன் பையில் வைக்கக் கூடாது. தேன் உலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான். ஆனால், நாம் இப்போது கடைகளில் வாங்கப்படும் தேன், பல வித பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. எனினும், தேனை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பராமரிக்கக் கூடாது. வாழைப்பழம் வாழைப்பழத்தை குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும். எனவே வாழைப் பழத்தை வைக்காதீர்கள். முலாம்பழம் கடையில் இருந்து முழுதாக வாங்கி வந்த முலாம்பழத்தை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால், முலாம் பழத்தில் இருக்கும் சில சத்துக்களை பழம் இழந்து விடுகிறது. ஆனால், நறுக்கிய முலாம்பழத்தை டப்பாவிலோ பாலிதீன் பையிலோ போட்டு குளிர்சாதனப்பெட்டியில் வைக்கலாம். இதேபோல, அன்னாசி, கிவி பழம், பிலம் பழம், மாங்காய் போன்றவற்றையும் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக் கூடாது. The post குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக்கூடாத உணவுகள்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| எதற்காக நண்டு சாப்பிட வேண்டும்? 10 காரணங்கள் Posted: 28 Jan 2016 07:01 AM PST
மீன், இறால், கணவாய், நண்டு என கடல் வகை உணவுகளில் வாரத்திறகு ஒருமுறையாவது சாப்பிடுங்கள். இதில் ஒன்றான நண்டினை சாப்பிடுவதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. நண்டில் உள்ள சத்துக்கள் புரோட்டின், ஒமேகா 3 பேட்டி ஆசிட், செலினீயம், விட்டமின் பி2, காப்பர் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன. மேலும் இதில் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் மிகவும் குறைவு. மருத்துவ பயன்கள் 1. நண்டில் அதிக அளவிலான புரோட்டின் சத்துக்கள் இருப்பதால், அனைத்து வயதினரும் இதனை சாப்பிடுவது நல்லது, ஏனெனில் தசைகளின் சீரமைப்புக்கு உதவுகிறது. 2. அதிக அளவிலான மினரல்ஸ், விட்டமின் மற்றும் குறைந்த அளவிலான கொழுப்பு இருப்பதால் இதய நோய்களிலிருந்து காக்கிறது, மேலும் மூளைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. 3. நண்டு சாப்பிடுவதன் மூலம் மனிதர்களின் நடவடிக்கையில் மாறுபாடுகள் ஏற்படும் என சில ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். 4. உடலில் உள்ள திசுக்கள் மற்றும் செல்களில் ஏற்படும் சேதத்தினை தடுக்க இதில் உள்ள செலீனியம் சத்து உதவுகிறது. 5. இதில் உள்ள ரிபோபிளேவின் சத்து, ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது,மேலும் கண்கள், தோல் மற்றும் நரம்பு மண்டல செயல்பாட்டினையும் ஊக்குவிக்கிறது. 6. பருக்கள் இருந்தால், நண்டுகளை சாப்பிடுங்கள். ஏனெனில் நண்டில் உள்ள ஜிங்க், எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும். இதனால் முகப்பருக்கள் ஏற்படுவது தடுக்கப்படும். 7.கர்ப்பிணிகள் நண்டு சாப்பிடக்கூடாது. ஆனால் கருத்தரிக்க நினைக்கும் பெண்களுக்கு ஃபோலேட் மிகவும் இன்றியமையாதது. இந்த சத்து காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்தாலும், நண்டில் அதிகமாகவே உள்ளது. எனவே இதனை கருத்தரிக்க நினைக்கும் போது அவ்வப்போது எடுத்து வந்தால், குழந்தைகளுக்கு நல்லது. 8.இதில் உள்ள மினரல் சத்துக்கள் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. 9. இதில் கனிமச்சத்தான பாஸ்பரஸ் நிறைந்துள்ளது, நாம் உண்ணும் உணவை ஆற்றலாக மாற்றுகிறது. 10. சிறுநீரக செயல்பாடு சரியான முறையில் நடப்பதற்கு உதவுகிறது.
நண்டு சூப் 1. நண்டின் கால்களை ஒடித்து அதன் மேல் பகுதியில் நீக்கி மஞ்சள்தூள் போட்டுக் கழுவிக் கொள்ள வேண்டும். 2. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கறிவேப்பிலை,வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு, தக்காளியை வதக்கி கொள்ள வேண்டும். 3. வதக்கியதும் அதில் நண்டைப் போட்டுத் தேவையான நீர் விட்டு வேக வைக்க வேண்டும். 4. வெந்ததும் நண்டைத் தனியே எடுத்து விடுங்கள். மைதாவை நீரில் கரைத்துக் கொதிக்கும் கலவையில் ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி சூடாக பரிமாறலாம். காய்கறி சேர்த்துக்கொள்ள வேண்டுமென்றால் சேர்த்துக்கொள்ளுங்கள். பயன்கள் நண்டு சூப் மிகவும் சுவையான சூப், மேலும் இது உடலுக்கு நல்ல தெம்பு தருகிறது. ஜலதோஷம் உள்ளிட்ட பல பிரச்சனைக்களுக்கு சிறந்த நிவாரிணியாக செயல்படும்.
The post எதற்காக நண்டு சாப்பிட வேண்டும்? 10 காரணங்கள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

ஈற்ரோபிக்கோ பகுதியில் பேருந்து ஒன்று மோதியதில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
ஈரான் மீது விதித்திருந்த தடைகளில் ஒரு தொகுதியை நீக்கப்போவதாக கனடா வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு கனடாவின் சில நட்பு நாடுகள் வரவேற்புத் தெரிவித்துள்ளன.
கற்பிணிகளைத் தாக்கி பிறக்கம் குழந்தைகளில் பாதிப்பை காட்டும் (Zika)வைரஸ் தொற்று கனடாவில் மூன்று பேரிடம் காணப்பட்டுள்ளது.
குளிர்சாதனப்பெட்டியில் சில உணவுப் பொருட்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
மட்டன், சிக்கன் உணவுகளை விட கடல் உணவுகளில் சத்துக்கள் அதிகம் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.