Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


கெஜ்ரிவால் மீது மை வீசிய இளம் பெண் கைது

Posted: 17 Jan 2016 11:42 PM PST

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மை வீசிய இளம் பெண் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். டெல்லியில் அளவுக்கு அதிகமாக உள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் டெல்லி மாநில அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு அங்கமாக ஒற்றைப்படை எண்கள் கொண்ட

ஜல்லிக்கட்டுக்கு தடை: சீராய்வு மனுக்கள் 21–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

Posted: 17 Jan 2016 11:36 PM PST

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து இருந்தது. இந்த தடையை நீக்கும் வகையில் மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்தது.

மேற்கு வங்கத்தில் சமையல் எண்ணெய் ஆலையில் தீ விபத்து

Posted: 17 Jan 2016 11:28 PM PST

மேற்கு வங்க மாநிலத்தின் சண்டிடாலா பகுதியில் உள்ள சமையல் எண்ணெய் தயாரிக்கும் ஆலையில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் 10 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இந்த தீவிபத்தினால் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்த உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. விபத்து குறித்த மேலதிக விவரங்கள்

ஐந்து மாத கைக்குழந்தை உட்பட கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 6 பேர் பரிதாப பலி

Posted: 17 Jan 2016 11:23 PM PST

ஆந்திர மாநிலத்தில் நடந்த கொடூரமான சாலை விபத்தில் ஐந்து மாத குழந்தை உட்பட கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்னூல் மாவட்டத்தில் மல்லெபள்ளி என்ற கிராமத்தில் இன்று காலை அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று பாலத்தின் மீது பயங்கர

ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் அருகே துப்பாக்கிச் சூடு: லூதியானாவில் பரபரப்பு

Posted: 17 Jan 2016 10:40 PM PST

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தினருகே இன்று அதிகாலை 6.30 மணியளவில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

ஜெ.இ.இ. நுழைவுத் தேர்வில் மாற்றம்: ஐ.ஐ.டி.யில் சேருவதற்கு புதிய தகுதி தேர்வு - மத்திய அரசு திட்டம்

Posted: 17 Jan 2016 10:34 PM PST

ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு தற்போது ஜெ.இ.இ. எனப்படும் இணை நுழைவுத் தேர்வு மூலம் மாணவ–மாணவிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த தேர்வு ஜெ.இ.இ. மெயின் தேர்வு மற்றும் ஜெ.இ.இ. அட்வான்ஸ் எனப்படும் 2 பிரிவுகளாக நடத்தப்படுகிறது.

தீயாய் பரவும் தாக்குதல் வீடியோ: ராஜஸ்தான் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது நடவடிக்கை

Posted: 17 Jan 2016 10:09 PM PST

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்கோரா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், பா.ஜ.க தலைவருமான கன்வார் லால் மீனா, சமூக செயற்பாட்டாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ இணையத்தில் பரவியதைடுத்து அவர் மீது முதற்கட்ட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அருணா ராய் மற்றும் நிகில் டே ஆகிய செயற்பாட்டாளர்களின் தலைமையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஜனநாயக நடைமுறைகளை

முனைவர் பட்டப்படிப்பு படித்துவந்த தலித் மாணவர் தற்கொலை: மாணவர்கள் போராட்டத்தால் ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு

Posted: 17 Jan 2016 09:34 PM PST

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற தலித் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பை நிறைவு செய்த ஆய்வு மாணவரான வெர்முலா ரோகித், அந்த பல்கலைக்கழகத்தில்

சபரிமலை சன்னிதானத்தில் மிரண்டு ஓடிய யானை மிதித்து பெண் பக்தர் பலி - இன்னொருவர் படுகாயம்

Posted: 17 Jan 2016 09:32 PM PST

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை முடிந்து தற்போது படிபூஜைகள் நடந்து வருகிறது. தங்க ஆபரணங்களுடன் ஜொலிக்கும் அய்யப்பனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் மலையில் குவிந்துள்ளனர். நேற்று மாளிகைபுரத்தம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக சபரிமலை சன்னிதானத்தில் மலையின் கீழ் ஸ்ரீகிருஷ்ணர் கோவில் யானை வல்லபன் அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்தது.

மணிப்பூர் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி

Posted: 17 Jan 2016 09:19 PM PST

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 11–ந் தேதி உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இம்பால் தெற்கு, தவ்பால், இம்பால் கிழக்கு, பிஸ்னுப்பூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 18 நகரசபை, 8 நகர பஞ்சாயத்துக்களில் ஓட்டுப்பதிவு நடந்தது.

ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகள் அணிந்து சுற்றும் வடமாநில சாமியார்

Posted: 17 Jan 2016 09:09 PM PST

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அரித்துவார் நகரம், இந்தியாவில் உள்ள முக்தி தரும் 7 புனித நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கங்கை நதி அரித்துவார் மாவட்டத்தில்தான் முதன் முதலாக இந்திய கங்கை சமவெளிக்குள் நுழைகிறது. கருடன் அமிர்தம் எடுத்து சென்ற போது அரித்துவாரில் உள்ள கங்கையில் சிந்தியதாக கருதப்படுவதால் இங்கு நடைபெறும் கும்பமேளா தனித்துவம்

இளம்பெண்ணை தாக்கிய இந்தி நடிகர் மீது வழக்குபதிவு

Posted: 17 Jan 2016 09:02 PM PST

மும்பையில் இளம்பெண்ணை தாக்கிய இந்தி நடிகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தி நடிகர் நவாஸுத்தின் சித்திக் தனது குடும்பத்துடன் மும்பை அந்தேரி மேற்கு வெர்சோவா யாரிரோடு, ஜே.என்.கே. சொசைட்டி கட்டிடத்தில் வசித்து வருகிறார். சமீபத்தில் வெளியான சல்மான்கானின் 'பஜ்ரங்கி

திருவனந்தபுரம் அருகே காட்டுக்குள் இறந்து கிடந்த தாய் யானையை பார்த்து பிளிறி அழுத குட்டியானை

Posted: 17 Jan 2016 08:57 PM PST

திருவனந்தபுரத்தை அடுத்த விதுரையில் அடர்ந்த காட்டுப்பகுதி உள்ளது. இங்கு ஏராளமான ஆதிவாசி இனத்தவர் வசிக்கிறார்கள். நேற்று காலையில் காட்டுப்பகுதியில் இருந்து யானையின் பிளிறல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இதனால் ஆதிவாசி ஒருவர் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சென்று பார்த்தார். அங்கு யானை ஒன்று இறந்து கிடந்தது.

மோடி நாளை அசாம் பயணம்: தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்

Posted: 17 Jan 2016 08:38 PM PST

அசாம் மாநிலத்தில் தருண் கோகோய் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. வரும் மே மாதம் அங்கு காங்கிரசின் 5 ஆண்டு முடிகிறது. இதையடுத்து ஏப்ரல், மே மாதங்களில் அங்கு தேர்தல் நடைபெற உள்ளது. அசாமில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக உள்ளது. இதற்காக சோனியாவும், ராகுலும் அங்கு பல

சத்தீஸ்கரில் திருந்திய நக்சலைட்களுக்கு போலீஸ் வேலையுடன் அதிகாரிகள் தலைமையில் திருமணம் நடந்தது

Posted: 17 Jan 2016 08:32 PM PST

மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர். பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள்

தொடர் விடுமுறை எதிரொலி: திருப்பதியில் குவிந்த பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

Posted: 17 Jan 2016 08:11 PM PST

தொடர் விடுமுறை வந்ததால், திருமலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதனால், ஏழுமலையானை தரிசிக்க 10 மணி நேரம் காத்திருந்தனர். புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக, தினந்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்

வருமான வரி செலுத்துவோருக்கு இந்த மாத இறுதிக்குள் ரூ.1,148 கோடி திருப்பி வழங்கப்படும்

Posted: 17 Jan 2016 04:28 PM PST

வருமான வரி செலுத்துவோரின் குறைகளை களையவும், அவர்களை மேலும் திருப்திபடுத்தவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி நேர்மையாக வரிசெலுத்துவோர் கூடுதலாக செலுத்திய பணத்தை திருப்பி அளிக்கும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

மின்சாரம், டீசலில் இயங்கும் ரெயில் என்ஜின்: இந்தியாவில் தயாரிக்க முடிவு

Posted: 17 Jan 2016 04:06 PM PST

இந்திய ரெயில்வே துறையில் தற்போது 52 சதவீதம் டீசல் என்ஜின்கள் பயன்படுத்தப்படுகிறது. ரெயில்களின் வேகத்தை அதிகப்படுத்தி, பயண நேரத்தை குறைக்க டீசல் என்ஜின்கள் படிப்படியாக மின்சார என்ஜின்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய வகையில் ஒரே என்ஜினை இந்தியாவில் முதன் முறையாக தயாரிக்க ரெயில்வே துறை முடிவு செய்துள்ள

பாரதிய ஜனதாவுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும்: லாலுபிரசாத் வற்புறுத்தல்

Posted: 17 Jan 2016 03:45 PM PST

ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட லாலுபிரசாத் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 56 அங்குல மார்பு என்னிடம் இருக்கிறது என்று முன்பு நீங்கள் (மோடி) பெருமிதத்துடன் கூறினீர்கள். எல்லைக்கு அப்பால் இருந்து யாராவது

குடியரசு தின விழா பாதுகாப்பு பற்றி டெல்லியில் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை

Posted: 17 Jan 2016 02:43 PM PST

குடியரசு தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ். பஸ்சி தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் மாநில போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™