Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


கடுமையான குளிரை எதிர்கொண்டுள்ள அட்லான்டிக் கனடா பிராந்தியங்கள்

Posted: 17 Jan 2016 11:02 AM PST

Extreme_cold_grips_-_01172016

Extreme_cold_grips_-_01172016அட்லான்டிக் கனடாவின் பல்வேறு பிராந்தியங்கள் கடுமையான குளிரை எதிர்கொண்டு்ள்ளன.

மனிட்டோபா, சாஸ்காச்சுவான் மற்றும் கிழக்கு அல்பேர்ட்டா பிராந்தியங்களில் குளிரின் அளவு உறைநிலைக்கும் கீழே 40 பாகை வரையில் பதிவாகியுள்ளது.

இதனால் கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் அந்த பகுதிகளுக்கு தீவிர குளிர் எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

சாஸ்காட்டூட், றெஜீனா, பிறின்ஸ் எட்வேர்ட்ட உள்ளிட்ட ஸ்காஸ்காச்சுவானின் தென் பிராந்தியங்களில் குளிரின் அளவு உறைநிலைக்கு கீழ் 40 பாகை செல்சியஸ் வரையில் உணரப்படும் என தெரிவித்துள்ளது.

சாஸ்காச்சுவானின் தென் பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த வேறுபாடு காரணமாக ஆட்டிக் துருவ வட்டார குளிர் அந்த பகுதி நோக்கி நகர்ந்துள்ளதாக வானிலை அவதானிகள் தெரிவித்துள்ளனர்.Extreme_cold_grips_-_01172016

அதேபோன்றே மனிட்டோபாவிலும் உறைநிலைக்கு கீழே 45 பாகை செல்சியஸ் வரையிலான குளிருடன் கூடிய காற்று மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என சுற்றுச் சூழல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

அத்துடன் இவ்வாறான தீவிர குளிர் இந்த வார இறுதி முழுவதும் தொடரும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமைகளை கவனத்தில் கொண்டு உரிய அவதானத்துடன் இருந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

The post கடுமையான குளிரை எதிர்கொண்டுள்ள அட்லான்டிக் கனடா பிராந்தியங்கள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்தோனேசிய தாக்குதலில் கொல்லப்படட கனேடியரின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது

Posted: 17 Jan 2016 10:53 AM PST

Canadian_killed__in_Indonesia_-_01172016

Canadian_killed__in_Indonesia_-_01172016கடந்த வியாழக்கிழமை இந்தோனேசியாவின் தலைநகர் யாகத்தாவில் ஐ.எஸ் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பினர் தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டை நடாத்தியிருந்தனர்.

இதில் ஏழு பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களுள் கனேடியர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் உயிரிழந்த கனேடியர் அடையாளம் காயப்பட்டு அவரின் விபரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட அவர் கியூபெக் மாநிலத்தில் வசித்த தஹார் அமீர் ஒவாலி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் பல வருடங்களுக்கு முன்னர் அல்ஜீரியாவில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்திருந்தார் என்றும், இரட்டைக் குடியுரிமையுடன் கியூபெக்கின் லவால்(Laval) பகுதியில் வாழ்ந்து வந்தார் என்றும் மொனறியலுக்கான அல்ஜீரிய தூதரகம் விபரம் வெளியிட்டுள்ளது.Canadian_killed__in_Indonesia_-_01172016

கியூபெக்கிலும் இந்தோனேசியாவிலும் அவர் மாறிமாறி வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு ஐந்து பிள்ளைகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

The post இந்தோனேசிய தாக்குதலில் கொல்லப்படட கனேடியரின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

முட்டைகோஸ் வழங்கும் சத்துக்கள் என்னென்ன?

Posted: 17 Jan 2016 06:46 AM PST

y

yபல அடுக்கு இதழ்களைக் கொண்ட முட்டைகோஸில் குறைந்த கொழுப்பு அளவே உள்ளது.

தயோசயனேட்(Thiocyanate), கார்பினால்(Carbinol), லுடின்(Leutin), ஸிசாந்தின், சல்பராபேன்(Sulforaphane), இசோதயோ சயனேட்(Isothiocyanate) போன்ற ரசாயன மூலக்கூறுகள் முட்டைக்கோஸில் உள்ளது.

100 கிராம் முட்டைகோஸில் 25 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.

இவை பல்வேறு உடற்செயல்களில் பங்கெடுக்கின்றன. குறிப்பாக நோய் எதிர்ப் பொருட்களாக செயல்படுகின்றன.

மார்பகம், தொண்டை, குடற் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படும். கெட்ட கொழுப்புகளை குறைக்கும்.

முக்கியமான நோய் எதிர்ப்பொருளான ' விட்டமின் சி', முட்டைகோஸில் மிகுந்துள்ளது. 100 கிராம் கோஸில் 36.6 மில்லிகிராம் ' விட்டமின் சி' கிடைக்கிறது. தொடர்ச்சியாக விட்டமின் சி உடலில் சேர்த்துக் கொள்வது அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும்.y

விட்டமின் பி-5, விட்டமின் பி-6, விட்டமின் பி-1 போன்ற அத்தியாவசிய விட்டமின்களும் முட்டைகோஸில் நிறைந்துள்ளது. இவை உணர்வுக்கும், இதர உடற்செயல்பாட்டிற்கும் உறுதுணை செய்யக்கூடியவை.

பொட்டாசியம், மாங்கனீசு, இரும்பு, மக்னீசியம் போன்ற தாது உப்புக்கள் முட்டைகோஸில் உள்ளது. பொட்டாசியம் உடற்செல்கள் மற்றும் சருமம் வளவளப்புடன் இருக்க துணை செய்யும்.

இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பங்கெடுக்கும். மாங்கனீசு, நோய் எதிர்ப்பு நொதிகள் செயல்பட துணைக் காரணியாக விளங்கும். இரும்புத் தாது, சிவப்பு ரத்த செல்கள் உருவாக்கத்தில் பங்கெடுக்கிறது.

முட்டைகோஸில் 'விட்டமின் கே', நிறைய அளவில் உள்ளது. எலும்பு வளர்ச்சிதை மாற்றத்தில் இது பங்கெடுக்கும். அல்சீமர் மற்றும் நரம்பு வியாதிகளின் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றலும் ' விட்டமின் கே' -விற்கு உண்டு.

The post முட்டைகோஸ் வழங்கும் சத்துக்கள் என்னென்ன? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

தேங்காய்ப் பாலின் மகத்துவம்!

Posted: 17 Jan 2016 06:42 AM PST

h

hகுழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன.

தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும்.

தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.

வயிற்றுப்புண்கள்

அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

வைரஸ் எதிர்ப்பு

தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை, வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது.h

தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.

ஆண்மைப் பெருக்கி

முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் உள்ள விட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.

குழந்தை சிவப்பு நிறமாக

குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி

கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

The post தேங்காய்ப் பாலின் மகத்துவம்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™