Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

துடிப்பான காவலர்களே சென்னைக்குத் தேவை:காவல்துறை ஆணையர்

Posted:

துடிப்பான காவலர்களே சென்னைக்குத் தேவை என்றும், மற்றவர்களுக்கு வேண்டுமானால் தாமே பணியிட மாற்றம் பெற்றுத் தருவதாகவும் அதிரடியாகக் கூறியுள்ளார் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன்.


Read more ...

மழை வெள்ள பாதிப்புக் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள மத்தியக் குழு நாளை வருகை:ஜெயலலிதா

Posted:

மழை வெள்ள பாதிப்புக் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள மத்தியக் குழு மீண்டும் நாளை சென்னை வரவுள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


Read more ...

இந்தியா-பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சு வார்த்தையில் சிக்கல்

Posted:

இந்தியா-பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர்கள் தரப்புப் பேச்சுவார்த்தை நடைப்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

அரசினை யாரும் விமர்சிக்கலாம் தூற்றலாம்; நாங்கள் பயணத்தை நிறுத்த மாட்டோம்: ரணில் விக்ரமசிங்க

Posted:

“அரசாங்கத்தினை யாரும் விமர்சிக்கலாம், தூற்றலாம். ஆனால், எங்களது பயணத்தை நிறுத்த மாட்டோம்” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

அணு உலைகள் விரிவாக்கம் வேண்டாம்:உதய குமார்

Posted:

கூடங்குளம் அணுமின் நிலையம், சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையம் இவற்றில் அணு உலைகல் விரிவாக்கம் வேண்டாம் என்று உதயகுமார் கோரிக்கை வைத்துள்ளார்.


Read more ...

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் மசோதாவுக்கு பிரணாப் ஒப்புதல்

Posted:

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட 5 மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.


Read more ...

கிரிக்கெட் வாரிய செயல்பாடுகள் சீர்த்திருத்தப் பரிந்துரை தாக்கல்: நீதிபதி லோதா

Posted:

கிரிக்கெட் வாரிய செயல்பாடுகள் சீர்த்திருத்தப் பரிந்துரை தொடர்பான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி லோதா தலைமையிலான குழு இன்று தாக்கல் செய்துள்ளது.


Read more ...

மணிப்பூர் உள்ளிட்ட வட மாநிலங்களில் பயங்கர நில நடுக்கம்

Posted:

மணிப்பூர் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று அதிகாலை பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Read more ...

மாலை நேரத்து மயக்கம் விமர்சனம்

Posted:

நடமாடும் ‘மைண்டு’ வைத்தியராக இருந்து, தள்ளாடும் குடும்ப வாழ்க்கைக்கு புத்தி சொல்லியிருக்கிறார் செல்வராகவன்!


Read more ...

பதான் கோட் விமானப்படை தளத்தில் தொடரும் துப்பாக்கிச் சண்டை!

Posted:

பதான் கோட் விமானப்படை தளத்தில் கடந்த 48 மணி நேரமாக இடைவிடாமல் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது. 


Read more ...

சிம்பு அப்பா பாடும் சிவபுராணம்

Posted:

தன் மகன் சிம்புவுக்கு எதிராக வழக்கு போட்ட ஒவ்வொரு கட்சித் தலைமைக்கும் போன் போட்டு பேசி வருகிறார் டி.ராஜேந்தர்.


Read more ...

பீகார் அரசில் லாலு பிரசாத் தலையீடு அதிகரிப்பு(?)

Posted:

பீகார் அரசில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் தலையீடு அதிகம் உள்ளது என்று சர்ச்சை எழுந்துள்ளது. 


Read more ...

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து; அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு!

Posted:

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை திடீர்த் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவ மனையில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். 


Read more ...

பராக் ஒபாமா விரைவில் கியூபா பயணம்!

Posted:

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயமொன்றை மேற்கொண்டு விரைவில் கியூபா செல்லவுள்ளார். 


Read more ...

பாகிஸ்தான் பிரதமர் இன்று இலங்கை விஜயம்!

Posted:

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை இலங்கை வருகின்றார். 


Read more ...

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் 36 இலங்கையர்கள் இணைவு: பாதுகாப்புச் செயலாளர்

Posted:

ஐ.எஸ். (இஸ்லாமி அரசு (IS- Islamic State)) தீவிரவாத அமைப்பில் இதுவரை 36 இலங்கையர்கள் இணைந்து கொண்டிருக்கலாம் என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். 


Read more ...

ஆயுர்வேத வைத்தியத்துக்கு தேவையான கஞ்சா, அபினை பாதுகாக்க அரசு முயற்சி: ராஜித சேனாரத்ன

Posted:

ஆயுதர்வேத வைத்தியத்துறைக்கு அவசியமான மருந்துப் பொருட்களான கஞ்சா மற்றும் அபின் பற்றாக்குறையைப் போக்குவது மற்றும் அதனைப் பாதுகாப்பது தொடர்பில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 


Read more ...

‘இது சிங்களவர்களின் நாடு’ என்பவர்கள் பௌத்த தரிசனம் குறித்து சிந்திக்க வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

Posted:

‘இலங்கை சிங்களவர்களின் ஒரே நாடு’ என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் பௌத்த தரிசனம் காண்பிக்கும் ‘அனைத்து இன- மத மக்களும் சமமானவர்கள்’ என்கிற விடயம் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார். 


Read more ...

அல்ப்ஸைக் குடைந்து...

Posted:

ஜப்பான் நாட்டின் செய்கன் சுரங்கப்பாதை ( Seikan Tunnel)  இந்த ஆண்டில், உலகின் நீளமான போக்குவரத்துச் சுரங்கப்பாதை எனும் தன்னுடைய சிறப்பினை, சுவிற்சர்லாந்தின் அல்ப்ஸ் ட்ரான்ஸ் போக்குவரத்துப் பாதையில் அமையும் 57 கீலோ மீற்றர்கள் நீளமான சென் கொத்தார்டோ ( San Gottardo ) சுரங்கத்திடம் விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும்.


Read more ...

2016 இல் சினிமா : ஒரு முன் பார்வை!

Posted:

2016 இல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பாலிவூட் & ஹாலிவூட் திரைப்படங்கள் பற்றிய தொகுப்பு இது. 


Read more ...

இசைஞானியின் "பாருருவாய" : வரிகளும், அதன் அர்த்தமும்!

Posted:

இசைஞானி இளையராஜாவின் இசையில், பாலாவின் "தாரை தப்பட்டை" திரைப்படத்திற்காக வெளிவந்திருக்கும் "பாருருவாய" பாடல் இப்போது தமிழ் உலகெங்கும் மிகப் பிரபலமான பாடல். ஆனால், இந்தப் பாடலின் வரிகள் தூய தமிழ் இலக்கிய சொற்பதங்களாக இருப்பதால், அதைப் பிரித்து பொருள் தேடுவதென்பது பல பேருக்கு அவ்வளவு இலகுவானதல்ல.  இதே கடினத்துடன், நானும் இப்பாடலின் வரிகளையும், அதன் அர்த்தத்தையும் புரிந்து கொள்ளவும் கூகிள் செய்தேன்.


Read more ...

த.தே.கூ சரியான பாதையில் பயணிக்காவிடில் எதிர்காலத்தில் புதிய கட்சி உருவாகலாம்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியான பாதையில் பயணிக்காவிடில், தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக புதிய கட்சியொன்று உருவாகலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

அழகு குட்டிச் செல்லம் - விமர்சனம்

Posted:

குழந்தைகளை வைத்துக் கொண்டு பெரியவர்களுக்காக கதை பண்ணுகிற பொறுப்பு, எவ்வளவு கனமானது! அந்த வெயிட்டை தனது தலையில் ஏற்றிக் கொண்டு, மிக லேசான சுமையை ரசிகர்களின் தலையில் இறக்கி வைத்திருக்கிறார் டைரக்டர் சார்லஸ்! படத்திற்குள் குட்டி குட்டியாய் சில நீதிக்கதைகள்! ஒவ்வொன்றும் அதன் இயல்போடு நீந்தி கிளைமாக்சில் சங்கமம் ஆவதுதான் திரைக்கதையின் கெட்டிக்காரத்தனம்!

குட்டிகள் என்ன பண்ணியிருக்கிறார்கள் பார்ப்போம்-

அது ஒரு கிறிஸ்தவப் பள்ளி. கல்வியை இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கும் அந்த பள்ளிக்கு ஒரு சிக்கல். அந்த வருடத்தோடு கிறிஸ்தவ அமைப்பு தரும் உதவித் தொகை நிறுத்தப்படுவதாக ஒரு ஷாக் தகவல்! அதை சமாளிக்கும் விதத்தில் ஆண்டு விழாவுக்கு வாடிகனிலிருந்து வரும் கார்டினலின் கவனம் ஈர்க்க ஒரு டிராமா ஏற்பாடு பண்ணுகிறார் பள்ளி தலைமை பாதிரியார். வேறொன்றுமில்லை... ஆண்டாண்டு காலமாக நடத்தப்பட்டு வரும் இயேசு பிறப்பு நாடகம்தான் அது. “நாங்க புதுசா ட்ரை பண்றோம்” என்று ஒரு குழந்தைகள் கோஷ்டியும், “பழைய டிராமாவையே நாங்க நடத்துறோம்” என்று வேறொரு குழந்தைகள் கோஷ்டியும் மல்லுக்கு நிற்க, “எங்க டிராமாவுல குழந்தை ஏசுவுக்கு பதிலாக நிஜக்குழந்தையே வரும்” என்கிறது புதுமை கோஷ்டி. அட.. என்று ஆச்சர்யமாகும் பாதிரியார் நாடக பொறுப்பை இவர்களிடம் ஒப்படைக்க, இவர்கள் பார்த்து வைத்திருந்த குழந்தை சரியாக டிராமா நடக்கும் நாளுக்கு முன் வேறு ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது.

குழந்தை வேண்டுமே? தவியாய் தவிக்கும் அவர்களுக்கு குப்பை தொட்டியில் ஒரு குழந்தை கிடைக்க, அதை கடத்துகிறார்கள். குப்பை தொட்டிக் குழந்தையை தேடி அதன் பெற்றோரும் போலீசும் வர, டிராமா நல்லபடியாக நடந்ததா? கார்டினல் மனம் குளிர்ந்ததா? என்பது க்ளைமாக்ஸ்.

ஒரு கதம்பத்தை இணைக்கும் நார்தான் மேற்படி கதை. அதில் கட்டப்பட்டிருக்கும் பூக்களின் மணம் வேறு வேறு. மூன்று பெண் குழந்தைகள் பிறந்த பின்பும், ஒரு ஆண் குழந்தைக்காக முயன்று முயன்று மனைவியை பிள்ளை பெறும் இயந்திரமாக்கும் கருணாஸ் பகுதி ஒன்று. அதில்தான் எத்தனையெத்தனை நேர்த்தி. நாலாவதும் பெண்ணாக பிறக்க, அதை குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு வரும் மனைவியை, போட்டு சாத்தும் கருணாஸ் நிஜத்திலேயே வலியெடுக்க உதைக்கிறார். ஐயோ பாவம் அவரது மனைவி. அவ்வளவு தத்ரூபமான நடிப்பு அவரிடம்.

இளம் வயது ஸ்பரிசத்தில் தன்னையே தொலைத்துவிடும் அந்த செஸ் வீரங்கனை கிருஷா, தன்னை ஏமாற்றிவிட்டு போனவனின் நினைவுகளோடு வைராக்கியத்துடன் பிள்ளை பெற்று உலக சாம்பியனான அவனையே செஸ்சில் வென்று நிற்பது கைதட்டலுக்குரிய எபிசோட்! இவளுக்கும் கருணாஸ் பேமிலிக்கும் ஒரு கனெக்ஷன் கொடுத்து கதையை சுபமாக முடிக்கும் இயக்குனருக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ்.

மற்றொரு பிராமணக்குடும்பம், அவர்கள் வீட்டு கணவன் மனைவி பிரச்சனை. இன்னொரு ஈழத்தம்பதி. அவர்களின் குழந்தை இழப்பு என்று சற்றே அலுப்பூட்டுகிற குடும்ப கதைகளும் படத்தில் இருப்பதால் சட்டென்று விசு கால டிராமாவுக்கு தள்ளப்படுகிறது படம். நல்லவேளை... விரைவில் சுதாரித்துக் கொள்கிறார் இயக்குனர்.

அநாதை ஆசிரமம் நடத்திவரும் முருக பக்தர் தம்பி ராமய்யாவின் கேரக்டர் படத்தில் ஓங்கி தாங்கி நிற்கிறது. மிக சரியாக அதை பயன்படுத்திக் கொள்கிறார் அவரும். தம்பியின் அறிமுக காட்சியே அசத்தல்! வினோதினி, கருணாஸ், ரித்விகா, அகில், மற்றும் படத்தில் நடித்த அத்தனை குட்டீஸ்களுக்கும் பாராட்டுகள்.

டிராமா நடக்கும்போதே குழந்தை காணாமல் போய்விட, குழந்தைகள் அதை சமாளிக்கும் காட்சிகளும், கார்டினல் அந்த குழந்தையை ஏசுவாகவே நினைத்து கை கூப்பி வணங்கும் காட்சியையும் அவ்வளவு நேர பதற்றத்துக்கு போடப்பட்ட அருமருந்தாக எண்ணி கைதட்டி மகிழ்கிறது தியேட்டர்.

வேத்சங்கர் சுகவனத்தின் இசையில் பாடல்களில் அவ்வளவு இனிமை. மென்மை. சுகம். பின்னணி இசையிலும் பிரித்து மேய்ந்திருக்கிறார்.

படத்திற்குள் நாடகம் என்பதால், படமும் ஆங்காங்கே நாடகம் போல நகர்கிறது. எடிட்டிங்கில் கொஞ்சம் கை வைத்து தவிர்த்திருக்கலாம். மற்றபடி ‘கொஞ்ச வேண்டிய’ குட்டிச்செல்லம்தான்!

 


- 4தமிழ்மீடியாவிற்காக: ஆர்.எஸ்.அந்தணன்


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™