ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மழைவெள்ளம் !
- வரலாற்றில் இன்று - ஜனவரி
- மறுபிரவேசம் !
- கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்!
- மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :(
- தலைமுறை இடைவெளி
- இந்த வார சினிமா செய்திகள் - தொடர் பதிவு
- நான் வரைந்த ஓவியங்கள்
- மகா பெரியவா
- பிறந்த தினம் 7th Janu -Banu---வாழ்த்தலாம் வாங்க
- ஈகரை எழுத்துக்களை பெரிதாக்குவது எப்படி?
- மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், …
- எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்
- 'இதுவும் பழகிப் போகும்' என்பதே வாழ்க்கைக்குப் பொருந்துகிறது!
- சல்லிக்கட்டும் உலக அரசியலும்
- வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
- சசியின் குட்டி கவிதைகள்
- காற்றால் இயங்கும் வாகனத்தை கண்டுபிடித்த பேருந்து ஓட்டுநர்
- சிவ தாண்டவம்
- என்னை கவர்ந்த குறும்படங்கள்
- விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர்
- வருகிறது பயங்கர நிலநடுக்கம்: இமயமலை, வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆபத்து!
- ஆன்மா
- தமிழ் மின்னூல்கள் தரவிறக்கம்
- காதல் ஈர்ப்பு விசை
- நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
- அரசியல்............
- அண்ணா பல்கலை தேர்வு 'அம்மா' பெயரில் கேள்வி
- மாநில சிலம்ப போட்டி: திண்டுக்கல் வீராங்கனை வெற்றி
- ப்ளஸ் 2 , 10 ம் வகுப்பு - தேர்வு கால அட்டவணை
| Posted: 06 Jan 2016 11:04 AM PST ![]() |
| Posted: 06 Jan 2016 10:55 AM PST ![]() |
| Posted: 06 Jan 2016 10:55 AM PST பெயர்: பூர்ணகுரு சொந்த ஊர்: சென்னை ஆண்/பெண்: ஆண் (பெண்ணியம் கலந்த ஆண் என கூறினால் ஏதும் தவறோ ? ஈகரையை அறிந்த விதம்: வலைத்தளம் மூலமாக பொழுதுபோக்கு: தமிழில் கிறுக்குவது தொழில்: அலுவலகம் மேலும் என்னைப் பற்றி: அக்கறையுடன் சர்க்கரையாய் கவியுரைக்கும் கதைதரிக்கும் உரைதிரிக்கும் ... |
| கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்! Posted: 06 Jan 2016 10:44 AM PST தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்களுக்குள் செல்வோருக்கு, ஆடை கட்டுப்பாடு விதித்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை சமீபத்தில் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து, புத்தாண்டு முதல், தமிழகத்தில் உள்ள, 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில், ஆடை கட்டுப்பாட்டு விதிமுறைகளை, இந்து சமய அறநிலையத்துறை அமல்படுத்தியது. இதையடுத்து, கோவில்கள் முன், ஆடை கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. ஆடை கட்டுப்பாடு அமலுக்கு வந்த முதல் நாளான புத்தாண்டு தினத்தன்று, தடை விதிக்கப்பட்ட ஆடைகள் அணிந்து கோவிலுக்கு ... |
| மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Posted: 06 Jan 2016 10:20 AM PST புதுடில்லி: நலிவடைந்த, எச்.எம்.டி., வாட்சஸ் உட்பட, மூன்று பொதுத்துறை நிறுவனங்களை மூட, டில்லியில், பிரதமர் மோடி தலைமையில், நடைபெற்ற, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பெங்களூரில் உள்ள, எச்.எம்.டி., வாட்சஸ், ஜம்முவில் உள்ள எச்.எம்.டி., சினார் வாட்சஸ், ஐதராபாத்தை சேர்ந்த, எச்.எம்.டி., பியரிங்ஸ் என, மூன்று நிறுவனங்கள் மூடப்பட உள்ளன. இந்நிறுவனங்களைச் சேர்ந்த, 1,000 தொழிலாளர்கள், 2007ம் ஆண்டு ஊதிய விகிதத்தின் கீழ், தங்களது விருப்ப ஓய்வூதிய திட்ட சலுகைகளை ... |
| Posted: 06 Jan 2016 09:08 AM PST தலைமுறை இடைவெளி கருக்கலிலே கண்விழித்து தெருவினிலே கோலமிட்டு பருவமகள் புத்தாண்டை வருகவென வரவேற்பாள் - அன்று கைப்பேசியில் கண்விழித்து முகநூலில் முத்தமிட்டு வாட்ஸ்ஹாப்பில் புத்தாண்டை வருகவென வரவேற்பாள் - இன்று பருவமதன் பயன்பெறவே திருமணமும் செய்துகொண்டு இருவர்நாம் ஒருவராகி பெருமையுடன் வாழ்ந்திடுவோம் - அன்று பிடித்திருந்தால் ப்ரெண்டாக பிரியாமல் இணைந்திடுவோம் முடிச்சின்றி தம்பதியாய் முழுமையாய் வாழ்ந்திடுவோம் - இன்று புத்தாடைதனை உடுத்தி சிற்றாடைதனை திருத்தி ... |
| இந்த வார சினிமா செய்திகள் - தொடர் பதிவு Posted: 06 Jan 2016 09:03 AM PST - - - * 'முண்டாசுப்பட்டி' போல் 2015ல் தான் நடித்த எந்தப் படமும் ஹிட் ஆகவில்லை என்ற வருத்தம் நந்திதாவுக்கு! 2016ல் ரீலீஸ் ஆக இப்போதே 3 படங்கள் கைவசம் இருக்க, இது ஹிட் ஆண்டாக அமைய வேண்டும் என்பதற்கு முன்னோட்டமாக புது போட்டோ ஷூட் செய்திருக்கிறாராம்...! - |
| Posted: 06 Jan 2016 08:51 AM PST ![]() ![]() |
| Posted: 06 Jan 2016 08:46 AM PST மகா பெரியவா காலுக்கு கீழே உள்ள மூலிகை! பெரியவாளுடைய அனுக்ரஹத்தை அனுபவிக்காதவர்களே கிடையாது! ஜாதி, மதம், இனம், மொழி எதுவுமே, யாருக்குமே பெரியவாளிடம் வருவதற்கு ஒரு தடையாக இருந்ததில்லை. ஒரு வைஷ்ணவ குடும்பம்பத்தை சேர்ந்தவர்கள் பெரியவாளிடம் மிகுந்த பக்தி பூண்டிருந்தார்கள். ஆனாலும், அவர்களுடைய ப்ராரப்தம், குடும்பத்தில் தொடர்ந்து ஒரே கஷ்டங்கள். அவர்களுக்குத் தெரிந்த ஒரு தீக்ஷதர் சொன்ன பரிஹாரத்தால், குத்துவிளக்கில் ஸரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதியை ஆவாஹனம் பண்ணி நித்யம் பூஜை பண்ணிக்கொண்டு வந்தாள் ... |
| பிறந்த தினம் 7th Janu -Banu---வாழ்த்தலாம் வாங்க Posted: 06 Jan 2016 08:24 AM PST இனிய பிறந்த தின வாழ்த்துகள் , பானு ! அமைதியானவர் , மதியானவர் மதியத்தில் வந்து மனதினிக்கும் பின்னூட்டம் இடுபவர் கருத்து வேறுபாடு இவரிடமில்லையெனும் , கருத்திற்கு வேறுபாடு எவரிடமும் இல்லை . நற்பதில் பதிவிடும் நாற்பது இவருக்கே சொந்தம் இன்று போல் இனிய உலகம் இவருடன் என்றும் இருக்க மனம் கனிந்த வாழ்த்துகள் ரமணியன்] |
| ஈகரை எழுத்துக்களை பெரிதாக்குவது எப்படி? Posted: 06 Jan 2016 07:12 AM PST ஈகரை எழுத்துக்கள் திடீர் என்று மிகவும் சிறியதாகத் தோன்றுகிறது. அதை பெரியதாக மாற்றுவது எப்படி? |
| மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … Posted: 06 Jan 2016 07:01 AM PST @indirajithguru மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், குயவன் உண்டியலின் வாயை அத்தனை சிறிதாகப் படைக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே! – ——————————————– – @thoatta என்னத்த காலண்டர் அடிக்கிறாங்களோ? அரசு விடுமுறை போடுறாங்க, மதப் பண்டிகை விடுமுறைகளை போடுறாங்க, டாஸ்மாக் விடுமுறை தினங்கள போடுறாங்களா? – ———————————————- – அதிகபட்சம் 10 சொற்களுக்கு மேல் எதையும் படிக்கவோ கேட்கவோ பொறுமை இல்லாத ஒரு தலைமுறையைக் கண்டு நான் பயப்படுகிறேன். – – மனுஷ்ய புத்திரன் – ——————————————– – ஒரு ... |
| எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் Posted: 06 Jan 2016 06:55 AM PST தெருவோரம் ஒரு மாமரம் அதன் அடியில் வீழ்ந்து கிடக்கிறது ஒரு மாங்கனி... எடுத்துக்கொள்ள மனம் எத்தனிக்கிறது,.. அறிவெனும் சனியன் இடைபுகுந்து வாதாடுகிறது... நண்பர்களே கூறுங்கள் இது சிறுபிள்ளைத்தனமா... இல்லை, சில்லறைத்தனமா... |
| 'இதுவும் பழகிப் போகும்' என்பதே வாழ்க்கைக்குப் பொருந்துகிறது! Posted: 06 Jan 2016 06:45 AM PST @kopitha11 'இதுவும் கடந்து போகும்' என்பதை விட, 'இதுவும் பழகிப் போகும்' என்பதே வாழ்க்கைக்குப் பொருந்துகிறது! - ------------------------------------ நியாயப்படி பார்த்தா... வெள்ளத்தில் சிக்கிய 'தமிழக அரசை' போர்க்கால அடிப்படையில் மீட்ட சிம்புவிற்கு இந்த ஆண்டின் சிறந்த பாடகர்-பாடலாசிரியர் விருது கொடுத்து தமிழக அரசு கெளரவிச்சிருக்கணும்! # ஒரே ஒரு பாட்டுல தமிழ்நாட்டுல வெள்ளம் வந்ததையே மறக்கடிச்சிட்டீங்களேய்யா... - குமரேஷ் சுப்ரமணியம் - -------------------------------------- - பீப் ... |
| Posted: 06 Jan 2016 06:24 AM PST இந்த பதிவு சற்றே பெரிதாக இருக்கும், ஆனால் இதன் முடிவில் தமிழர்கள் சந்திக்கப்போகும் பேராபத்தினை நிச்சயம் உணர்வீர்கள். ஆகையால் சிறிது நேரம் ஒதுக்கி கண்டிப்பாக படிக்கவும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் அடிப்படை உணவான பால் இரண்டு வகைப்படும் (2 types of protein); இவை A1 மற்றும் A2 என்று வகையருக்கப்படுகிறது. உலகிலுள்ள அனைத்து பாலூட்டிகளும் இயற்கையாக A2 வகை பாலையே சுரக்கின்றன. மனிதனின் தாய்பாலும் இந்த A2 வகை பால் தான். இயற்கையாக A2 வகை பாலை தான் மனிதர்களால் செரிக்க இயலும். ஆகவே நம் முன்னோர்கள் இதே வகை ... |
| Posted: 06 Jan 2016 06:22 AM PST வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு sabavadivelu@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! மணிமேகலைப் பிரசுரம், 7 (ப.எண். 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை – 600 017. போன் : 044 24342926, பக்கம் : 100, விலை : ரூ. 60 ***** கவிதை உறவு இலக்கியத் திங்களிதழின் ஆசிரியர் கலைமாமனி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் அணிந்துரை, அழகுரை. நூல் எனும் மகுடத்தில் பதித்த வைரக்கல்லாக ஒளிர்கின்றது. நூலின் தலைப்பே மனிதநேயம் ... |
| Posted: 06 Jan 2016 05:14 AM PST விரக்தியில் இருந்தேன் வெளியே வந்தாய் சன்னியாசி ஆனேன்!! _____________________________ மறைத்தாய் முகம்தனை மரமானேன்!! ________-_____-_- காய்ந்த சருகாய் காணப்பட்டேன் புன்னகைத்தாய் மலர்ந்தேன்!!!! _----___-________-----_- கரம்பிடிப்பாயா? கைக்கெட்டா தூரத்தில் காகித பூவாய் நான்!! ____-----________ வார்த்தைகளால் அல்ல வலி உன் மௌனத்தால்!! |
| காற்றால் இயங்கும் வாகனத்தை கண்டுபிடித்த பேருந்து ஓட்டுநர் Posted: 06 Jan 2016 04:56 AM PST - காற்றால் இயங்கும் வாகனத்தை ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர் கண்டறிந்துள்ளார். – ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் டேவிட்ராஜா. இவர் ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிகிறார். – இவர் வாகனங்களின் பழைய உதிரி பாகங்களை வெல்டிங் மூலம் இணைத்து அதில் 2 காற்றுக் கலன்கள் (டேங்கர்), ஒரு அழுத்தக்கலன் (கம்ப்ரஷர்), ஒரு கியர் பாக்ஸ் ஆகியவற்றைப் பொருத்தி, காற்றால் இயங்கும் ஒரு வாகனத்தை கண்டு பிடித்துள்ளார். – சுமார் ரூ. 9 லட்சம் செலவில் ... |
| Posted: 06 Jan 2016 04:31 AM PST : ஜூன் 18 2004 அன்று ஜெனீவாவில் உள்ள அணுத்துகள் ஆராய்சி மையத்தில் சிவதாண்டவ சிலை நிறுவப்பட்டது. பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் இயக்கத்தின் அழகிய குறியீட்டு வெளிப்பாடாக இயற்பியலாளர் சிவதாண்டவத்தை கருதுகின்றனர். மீச்சிறிய அணுவினுள் இருக்கும் இயக்கங்களையும் மிகப் பிரம்மாண்டமான எண்ணிலடங்கா தாராமண்டலங்களின் இயக்கங்களையும் காண்கின்றனர் அறிவியலாளர், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இயக்கம். சுழல்கள். வீச்சுக்கள் குமிழிகளென எழுந்து கரையும் பொருண்மையும் ஆற்றலும் ஒன்றோடொன்று தந்நிலை ... |
| Posted: 06 Jan 2016 03:53 AM PST என்னை கவர்ந்த குறும்படங்கள் மனம்கவர்ந்த, பிடித்த, குறும்படங்கள் பதிவிடுங்கள் This posting includes an audio/video/photo media file: Download Now |
| விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர் Posted: 06 Jan 2016 03:24 AM PST - உனது ஆடையையும் எனது ஆடையையும் அருகருகே காய வைத்திருக்கிறாயே ! இரண்டும் காய்வதை விட்டு விட்டு விளையாடிக் கொண்டிருப்பதைப் பார் ! – ———————————– |
| வருகிறது பயங்கர நிலநடுக்கம்: இமயமலை, வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆபத்து! Posted: 06 Jan 2016 02:43 AM PST புதுடில்லி : இமயமலை பகுதியில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் இயற்கை நேரிடம் மேலாண்மை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நிலநடுக்கம் 8.2 அல்லது அதற்கு மேல் இருக்கக் கூடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். புவி அமைப்பின் அடிப்படையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக சமீப காலமாக இமயமலையை ஒட்டிய பகுதிகளில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. 2011 ல் சிக்கிமில் ஏற்பட்ட 6.9 அளவிலான நிலநடுக்கம், 2015ல் நேபாளத்தில் ஏற்பட்ட 7.3 அளவிலான நிலநடுக்கம், சமீபத்தில் மணிப்பூரில் ... |
| Posted: 05 Jan 2016 11:54 PM PST ஆன்மா இறந்து போனவர்களுடைய ஆன்மாவை யாராலும் எவ்வகையிலும் சாந்திப் படுத்த முடியாது. |
| Posted: 05 Jan 2016 07:39 PM PST 1.100 kodi roopai vairam---Indira soundarajan நூறு கோடி ரூபாய் வைரம் 2.6961—sujathaa 3.Analai kaayum ambulikal---Is அனலாய் காயும் அம்புலிகள் 4.Athirsta Kaatru----Is அதிர்ஷ்ட காற்று 5.Athu mattum Ragasiyam---Is அது மட்டும் ரகசியம் இந்திரா சௌந்தரராஜன் தொகுப்பு .... download link:- http://downloads.ziddu.com/download/25085731/Tamil_ebooks_part_11.rar.html |
| Posted: 05 Jan 2016 07:16 PM PST - புவி ஈர்ப்பு விசை எனக்கு தெரியவில்லை ஆனால் நீ என்னை ஈர்ப்பதால் கனவில் கூட உன்னை நோக்கி ஓடி வந்து விடுகிறேனே! இது காதல் ஈர்ப்பு விசையா..? – ========================== செ.தெய்வமணி – |
| நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு Posted: 05 Jan 2016 07:01 PM PST ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன் |
| Posted: 05 Jan 2016 05:10 PM PST சுப்பு : என்ன அப்பு நாட்டில் சட்டத்தை மதிப்பதே இல்லை .காவல்துறை இருந்தும் களவு நடக்காமல் இல்லை, ஊழல் ஒழிப்பு துறை இருந்தும் ஊழல் நடைபெறாமல்இல்லை, லஞ்ச ஒழிப்பு துறை இருந்தும் லஞ்சம் ஒழியவில்லை இதெல்லாம் இல்லாத ஆட்சி யாரால் நடத்தமுடியும் நினைக்கிற.... அப்பு : என்ன சுப்பு இப்படி கேட்டிட்ட மனசாட்சியே இல்லாம எல்லா தவறையும் துணிச்சலா செய்கிறார்களே..!!!இதெற்கெல்லாம் முற்று புள்ளி வைக்க அரசியல் கட்சிங்க ஆட்சி நடத்தக்கூடாதுங்க ......திறமைக்கு வேலை என்ற நிலைவரனுங்க...நீங்களே ..சொல்லுங்க சுப்பு...... |
| அண்ணா பல்கலை தேர்வு 'அம்மா' பெயரில் கேள்வி Posted: 05 Jan 2016 04:31 PM PST - அண்ணா பல்கலையில், பி.இ., மற்றும் பி.டெக்., மாணவர்களுக்கு, மழையால், 'செமஸ்டர்' தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு, தற்போது நடந்து வருகின்றன. இதில், இரு தினங்களுக்கு முன், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப மாணவர்களுக்கு, குறியீடு மற்றும் இணைய பாதுகாப்பு குறித்த, 'கிரிப்டோக்ராபி' மற்றும், 'நெட்வொர்க் செக்யூரிட்டி' என்ற பாடத்தேர்வு நடந்தது. - இந்த பாடத்தை, கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் எழுதினர். மொத்தம், 100 மதிப்பெண்களுக்கான இந்த தேர்வில், முதல்கேள்வியே ... |
| மாநில சிலம்ப போட்டி: திண்டுக்கல் வீராங்கனை வெற்றி Posted: 05 Jan 2016 04:26 PM PST - திண்டுக்கல்: மாநில அளவிலான சிலம்ப போட்டியில் திண்டுக்கல்லைச் சேர்ந்த வீராங்கனை பூஜா தங்கம் வென்று சாதனை புரிந்துள்ளார். திண்டுக்கல் மங்களபுரத்தை சேர்ந்த பொறியியல் கல்லுாரி மாணவி பூஜா. திருச்சியிலுள்ள கேர் பொறியியல் கல்லுாரியில் பி.ஆர்க்., 2ம் ஆண்டு படித்து வருகிறார். தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம், திருச்சி மாவட்ட சிலம்பாட்ட கழகம், பெல் நிறுவனம் சார்பில், திருச்சியில் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. இதில் மாணவி பூஜா பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார். மாவட்ட சிலம்பம் கழகத்தின் ... |
| ப்ளஸ் 2 , 10 ம் வகுப்பு - தேர்வு கால அட்டவணை Posted: 05 Jan 2016 04:20 PM PST - - தினமலர் |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



