Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மத்திய அரசு அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

Posted: 06 Jan 2016 01:32 PM PST

சென்னை திருவான்மியூரில் மத்திய அரசு அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேருந்தில் பெண்ணிடம் ரூ.10 ஆயிரம் திருட்டு

Posted: 06 Jan 2016 01:31 PM PST

அப்போது அதில் இருந்த ரூ.10 ஆயிரம் திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர், தலைமைச் செயலக

புழல் சிறையில் எம்எல்ஏவை சந்திக்க விஜயகாந்துக்கு அனுமதி மறுப்பு

Posted: 06 Jan 2016 01:30 PM PST

விருகம்பாக்கம் எம்எல்ஏவை சந்திக்க புழல் சிறைக்கு சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட அக்கட்சி எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஜன.12-இல் திமுக இளைஞரணி கூட்டம்

Posted: 06 Jan 2016 01:30 PM PST

திமுக இளைஞரணியின் மாநகர, மாவட்ட, மாநில அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கூட்டம் ஜனவரி 12-ஆம் தேதி,

டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி சாவு

Posted: 06 Jan 2016 01:29 PM PST

மருத்துவமனையில் சிறுமிக்கு எலைசா பரிசோதனை மேற்கொண்டதில் டெங்கு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

டி.ஜி.பி. அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

Posted: 06 Jan 2016 01:28 PM PST

தமிழகத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

சுற்றுலா, தொழில் பொருள்காட்சி திறப்பு ஒத்திவைப்பு

Posted: 06 Jan 2016 01:28 PM PST

சென்னை தீவுத்திடலில் 42-ஆவது சுற்றுலா, தொழில் பொருள்காட்சிக்கான அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் பொருள்காட்சி

எழும்பூர் - ஹெளரா இடையே சிறப்பு ரயில்

Posted: 06 Jan 2016 01:25 PM PST

சென்னை எழும்பூர் - ஹெளரா இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சி.எஸ்.ஐ. கதீட்ரல் 200-ஆவது ஆண்டு விழா

Posted: 06 Jan 2016 01:25 PM PST

சென்னை கோபாலபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ பேராயம் செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் ஆலயத்தின் 200-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இஸ்கான் பொன்விழா: ஜன.14 இல் ஜகன்நாதர் ரத யாத்திரை

Posted: 06 Jan 2016 01:24 PM PST

சென்னையில், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான் அமைப்பு) சார்பில் ஜனவரி 14-இல் ஸ்ரீ ஜகன்நாத ரத யாத்திரை நடைபெற உள்ளது.

பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிக்க வேண்டும்: முதல்வரிடம் தாயார் கோரிக்கை மனு

Posted: 06 Jan 2016 01:23 PM PST

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள தனது மகன் பேரறிவாளன் உள்பட

பொதுமக்களின் முயற்சியால் பொலிவு பெறும் பெருங்குடி ஏரி

Posted: 06 Jan 2016 01:21 PM PST

சென்னை சோழிங்கநல்லூர் அருகே உள்ள பெருங்குடி ஏரியை பொலிவு பெறச் செய்யும் பணியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த

பொதுத் தேர்வு: இன்று முதல் 104-இல் உளவியல் ஆலோசனை

Posted: 06 Jan 2016 01:18 PM PST

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 104 தொலைபேசி சேவை மூலம் வியாழக்கிழமை முதல் உளவியல்

வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்

Posted: 06 Jan 2016 01:17 PM PST

தமிழகம் உள்பட நாடு முழுவதும் 3.5 லட்சம் வங்கி ஊழியர்கள் வெள்ளிக்கிழமை (ஜன.8) ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

1.91 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு!

Posted: 06 Jan 2016 01:16 PM PST

பொங்கல் பண்டிகையை ஒட்டி, ரூ.100 ரொக்கத்துடன் கூடிய சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ஹைட்ரஜன் குண்டு: வடகொரியா சோதனை

Posted: 06 Jan 2016 01:15 PM PST

வட கொரியா, முதல் முறையாக ஹைட்ரஜன் வெடிகுண்டை பூமிக்கு அடியில் வெற்றிகரமாக பரிசோதனை செய்ததாக புதன்கிழமை அறிவித்தது.

பயங்கரவாதிகள் மீண்டும் ஊடுருவல்? பஞ்சாபில் தேடுதல் வேட்டை

Posted: 06 Jan 2016 01:10 PM PST

பஞ்சாப் மாநிலம், பதான்கோட்டில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் முடிவடைந்துள்ள நிலையில், குருதாஸ்பூர் மாவட்டத்துக்குள்பட்ட

அரசு நிர்ணயித்த ஆட்டோ கட்டணம்: பொன்னேரியில் முறைப்படுத்தக் கோரிக்கை

Posted: 06 Jan 2016 12:26 PM PST

அரசு நிர்ணயித்த ஆட்டோ கட்டணத்தை பொன்னேரி பகுதியிலும் முறைப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருமலையில் பக்தர்களுக்காக புதிய வசதிகள்: விரைவில் அமல்

Posted: 06 Jan 2016 12:25 PM PST

திருமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் விரைவில் புதிய முறைகளை அமல்படுத்த உள்ளது.

பழவேற்காடு ஏரியில் பாதுகாப்பற்ற படகுப் பயணம் தடுக்கப்படுமா?

Posted: 06 Jan 2016 12:23 PM PST

பழவேற்காடு வரும் சுற்றுலாப் பயணிகளை படகில் ஏற்றிச் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பதி உண்டியல் காணிக்கை ரூ. 2.87 கோடி

Posted: 06 Jan 2016 12:20 PM PST

திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தபின் உண்டியலில் காணிக்கையை செலுத்துவது வழக்கம்.

கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்று சிறப்பு முகாம்

Posted: 06 Jan 2016 12:19 PM PST

கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான சிறப்பு முகாம் சென்னையில் வியாழக்கிழமை (ஜன.7) நடைபெறுகிறது.

காஞ்சி மகா பெரியவரின் பிருந்தாவனத்தில் ஆராதனை மஹோத்ஸவம் கோலாகலம்

Posted: 06 Jan 2016 12:18 PM PST

காஞ்சிபுரம் சங்கர மடத்தில், மகா பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பிருந்தாவனத்தில்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் குட்டி ஈன்றது நீர்யானை

Posted: 06 Jan 2016 12:17 PM PST

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நீர்யானை குட்டி ஈன்றது. இதனையடுத்து உயிரியல் பூங்காவில் நீர் யானைகளின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.

திருநங்கைகளுக்கு விரைவில் புதிய குடியிருப்புகள்

Posted: 06 Jan 2016 12:15 PM PST

சென்னையில் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் திருநங்கைகளுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் புதிய வீடுகள் கட்டித் தரப்படவிருக்கிறது.

விபத்து நஷ்டஈடு - மக்கள் படும்பாடு

Posted: 06 Jan 2016 12:05 PM PST

சாலை விபத்து வழக்குகளில் சிக்குண்டு, தவித்து கவலையுறும் குடும்பங்களின் விபத்து நஷ்டஈடு வழக்குகளில் ஏற்படக்கூடிய

தேவை சாதுர்யமான சேவை!

Posted: 06 Jan 2016 12:03 PM PST

உள்நாட்டு பாதுகாப்பு மிக முக்கியமானது. நாட்டின் முன்னேற்றம் பாதுகாப்பின்றி அமையாது. சட்டம், ஒழுங்கு அரசியல் சாசனத்தில்

சரியான நேரம், சரியான கேள்வி!

Posted: 06 Jan 2016 12:00 PM PST

ஒரே அலுவலகத்தில் பணி புரியும் நண்பர்கள் மூன்று அல்லது நான்கு பேராக வாடகை மகிழுந்துகளில் (கால் டாக்ஸி) செல்வதும், கட்டணத்தைப் பகிர்ந்துகொள்வதுமான நடைமுறை தற்போது நகரங்களில் அதிகரித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணம், பல வாடகை மகிழுந்து நிறுவனங்கள் செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டாலே வீடு தேடி வரும் நிலை உருவாகிவிட்டது. இத்தகைய வாடகை மகிழுந்துகளின் கட்டணம், ஆட்டோக்காரர்களின் கட்டணத்தைக் காட்டிலும் குறைவாக இருக்கிறது.

கம்பராமாயண போட்டிகளில் வெற்றிபெற்றோர் விவரம்

Posted: 06 Jan 2016 11:58 AM PST

காரைக்குடி கம்பன்கழக கம்பராமாயணம் பேச்சுப்போட்டி, ஒப்பித்தல் போட்டிகளில் வெற்றிபெற்ற  மாணவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மானாமதுரையில் அதிமுக அலுவலகம் திறப்பு

Posted: 06 Jan 2016 11:58 AM PST

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அதிமுக கட்சி அலுவலகம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

தமிழக மீனவர்களை இந்தியர்களாகக் கருதவில்லை: மத்திய அரசு மீது ஜி.கே. மணி குற்றச்சாட்டு

Posted: 06 Jan 2016 11:57 AM PST

தமிழக மீனவர்களை மத்திய அரசு இந்தியர்களாகவே கருதுவதில்லை என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.

சிவகங்கை சிறுமி பாலியல் வழக்கு: எஸ்ஐ உள்பட 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

Posted: 06 Jan 2016 11:56 AM PST

சிவகங்கை சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டர், அரசுப் பேருந்து நடத்துநர் உள்பட 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சிவகங்கை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம்

Posted: 06 Jan 2016 11:56 AM PST

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாக்களில் வெள்ளிக்கிழமை (ஜன. 8) அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி தெரிவித்துள்ளார்.

தொண்டி கடற்கரையில் மீன் சந்தை திறப்பு

Posted: 06 Jan 2016 11:55 AM PST

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரையில் புதிதாக கட்டப்பட்ட தினசரி மீன் சந்தை புதன்கிழமைத் திறக்கப்பட்டது.

இராக், சிரியாவில் மூன்றிலொரு பகுதியை ஐ.எஸ். இழந்துவிட்டது

Posted: 06 Jan 2016 11:54 AM PST

இராக்கிலும், சிரியாவிலும் தங்கள் கட்டுப்பாட்டிலிருந்த மூன்றில் ஒரு பகுதி நிலப் பரப்பை இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள்

பயறுவகைப் பயிர்களுக்கு நிவாரணம்: விவசாயிகள் கோரிக்கை

Posted: 06 Jan 2016 11:54 AM PST

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயறுவகைப் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐரோப்பிய யூனியன் விவகாரத்தில் மனசாட்சிப்படி வாக்களிக்கலாம்

Posted: 06 Jan 2016 11:53 AM PST

ஐரோப்பிய யூனியன் அமைப்பில் பிரிட்டன் தொடர்ந்து இடம் பெறுவது குறித்த பொது வாக்கெடுப்பில், அந்த நாட்டு அமைச்சர்கள் தங்கள்

இன்னும் ஆபத்து நிறைந்த பகுதியாகவே ஆப்கன் உள்ளது

Posted: 06 Jan 2016 11:52 AM PST

ஹெல்மந்த் மாகாணத்தில் அமெரிக்க வீரர் ஒருவர் பயங்கரவாதிகளால் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓரினச் சேர்க்கையாளர் திருமணம்: முதல் முறையாக சீனா அங்கீகாரம்

Posted: 06 Jan 2016 11:52 AM PST

சீனாவில் முதல் முறையாக ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கி அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

Posted: 06 Jan 2016 11:52 AM PST

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே, பூட்டிக்கிடந்த வீட்டில், மர்ம நபர்கள் புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றுள்ளது புதன்கிழமை தெரியவந்தது.

ஜமாத் கட்சித் தலைவருக்குத் தூக்கு: உறுதி செய்தது வங்கதேச உச்ச நீதிமன்றம்

Posted: 06 Jan 2016 11:51 AM PST

வங்கதேச விடுதலைப் போராட்டத்தின்போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஜமாத்-இ-இஸ்லாமி கட்சித் தலைவர் மோதியுர் ரகுமான்

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு திறக்கப்பட்ட வைகைத் தண்ணீர் மானாமதுரை வந்தது

Posted: 06 Jan 2016 11:51 AM PST

ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்கு, வைகையாற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் புதன்கிழமை மானாமதுரையைக் கடந்து சென்றது.

மர்ம அஞ்சல்: ஜெர்மனி பிரதமர் அலுவலகம் மூடல்

Posted: 06 Jan 2016 11:50 AM PST

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலின் அலுவலகத்துக்கு அஞ்சல் மூலம் சந்தேகத்துக்கிடமான பொருள்கள் புதன்கிழமை வந்ததையடுத்து,

ஆயுதக் கட்டுப்பாடு: ஒபாமாவுக்கு குடியரசுக் கட்சியினர் எதிர்ப்பு

Posted: 06 Jan 2016 11:50 AM PST

அமெரிக்காவில் பொதுமக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கும் அதிபர் ஒபாமாவின் முடிவுக்கு

விஷம் குடித்து விவசாயி சாவு

Posted: 06 Jan 2016 11:50 AM PST

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புதுக்குடியில் குடும்பத் தகராறு காரணமாக விவசாயி விஷம் குடித்து விவசாயி உயிரிழந்தார்.

தென்னைக்கு இசைவான ஊடுபயிர் கோகோ!

Posted: 06 Jan 2016 11:49 AM PST

திருநெல்வேலி: "சாக்லேட் மரம்' என அழைக்கப்படும் கோகோ-வை, தென்னைக்கு இசைவான ஊடுபயிராக சாகுபடி செய்து பயனடையலாம் என

காரைக்குடி

Posted: 06 Jan 2016 11:48 AM PST

வரதட்சணை கொடுமை: கணவர் உள்பட 8 பேர் மீது வழக்கு

Posted: 06 Jan 2016 11:48 AM PST

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக அவரது கணவர் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

வெண்டை சாகுபடி: 45 நாளில் அள்ளித்தரும் மகசூல்

Posted: 06 Jan 2016 11:48 AM PST

திருநெல்வேலி: தொழில்நுட்ப முறைகளை விவசாயிகள் முழுமையாகக் கடைப்பிடித்து, 45 நாளில் மகசூல் தரும் வெண்டை சாகுபடி

பாம்பன் தூக்குப் பாலத்தில் தண்டவாளம் சீரமைப்பு

Posted: 06 Jan 2016 11:48 AM PST

பாம்பன் தூக்குப்பாலத்தில் கடல்நீர் அரிப்பால் பாதிக்கப்பட்ட தண்டவாளத்தை சீரமைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

பார்த்திபனூர் அருகே நிலமோசடி: 9 பேர் மீது வழக்கு

Posted: 06 Jan 2016 11:47 AM PST

ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் அருகே மோசுகுடி கிராமத்தைச் சேர்ந்தவரின் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த 9 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தேசிய மகளிர் பூப்பந்தாட்டப் போட்டி: 2ஆவது முறையாக தமிழக அணி சாம்பியன்

Posted: 06 Jan 2016 11:46 AM PST

தருமபுரியில் நடைபெற்ற தேசிய அளவிலான மகளிர் பூப்பந்தாட்டப் போட்டியில், இரண்டாவது முறையாக தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

மணல் கடத்தியவர் மீது மோசடி வழக்கு

Posted: 06 Jan 2016 11:46 AM PST

பார்த்திபனூர் அருகே லாரியில் மணல் கடத்தியவர் மீது போலீஸார் புதன்கிழமை மோசடி வழக்குப்பதிவு செய்தனர்.

குருசடைத்தீவில் தரை தட்டி நின்ற படகு மீட்பு

Posted: 06 Jan 2016 11:46 AM PST

மண்டபம் பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்று கடல் சீற்றத்தில் சிக்கி குருசடைத்தீவு பகுதியில் மணலில் தரை தட்டி நின்ற மீனவரின் படகை போலீஸார் புதன்கிழமை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

துப்பாக்கி சுடுதல்: புதிய உலக சாதனையுடன் தங்கம் வென்றார் அபூர்வி

Posted: 06 Jan 2016 11:45 AM PST

ஸ்வீடிஷ் கோப்பை கிராண்ட் ஃப்ரீ போட்டியில் பங்கேற்ற இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அபூர்வி சந்தேலா செவ்வாய்க்கிழமை

அதிமுக அரசின் சாதனை விளக்கப் பேரணி

Posted: 06 Jan 2016 11:45 AM PST

ராமநாதபுரத்தில் அதிமுக அரசின் கடந்த நான்கு ஆண்டுகால சாதனைகளை விளக்கும் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

Posted: 06 Jan 2016 11:44 AM PST

ராமநாதபுரத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலரை வேறு பணியிடங்களுக்கு மாற்றி எஸ்.பி. என்.மணிவண்ணன் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சச்சினைப் போல விளையாட விரும்பினேன்: சேவாக்

Posted: 06 Jan 2016 11:44 AM PST

"இந்திய அணியில் இணைந்தபோது சச்சின் டெண்டுல்கரைப் போன்று பேட்டிங் செய்ய விரும்பினேன். ஆனால், அவரைப் போன்று

வருவாய்த்துறையினர் இன்று தற்செயல் விடுப்பு போராட்டம்

Posted: 06 Jan 2016 11:44 AM PST

ராமநாதபுத்தில் தமிழக வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.

சிட்னி டெஸ்ட்: 4ஆவது நாளிலும் விளையாடியது மழை

Posted: 06 Jan 2016 11:44 AM PST

ஆஸ்திரேலியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டியின் 4ஆவது நாளான புதன்கிழமையும் வீரர்களுக்கு ஓய்வு அளித்து மழையே விளையாடியது.

பிரணவுக்கு உதவித் தொகை: எம்சிஏ

Posted: 06 Jan 2016 11:43 AM PST

1009 ரன்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ள மும்பை பள்ளி மாணவர் பிரணவ் தனவாடேவுக்கு 5 ஆண்டுகளுக்கு,

ஆவியூர், முத்துராமலிங்கபுரத்தில் ஜனவரி 07 மின்தடை

Posted: 06 Jan 2016 11:43 AM PST

ஆவியூர் துணை மின்நிலையப் பகுதிகளான ஆவியூர், காரியாபட்டி, புல்வாய்கரை, அரசகுளம்,குறண்டி, மாங்குளம், கரிசல்குளம்,கம்பிக்குடி, முஷ்டக்குறிச்சி,திம்மாபுரம்,அ.முக்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், முத்துராமலிங்கபுரம் துணை மின்நிலையப் பகுதிகளான கல்லூரணி, சவ்வாசுபுரம்,ஆலடிபட்டி, எம்.ரெட்டியாபட்டி, வீரசோழன், நரிக்குடி, பரளச்சி, பூலாங்கால்,தும்முசின்னம்பட்டி, செட்டிகுளம்,தெப்பலாக்கரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (ஜன.7) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழக அருப்புக்கோட்டை கோட்ட செயற்பொறியாளர் எஸ்.ராமமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் விடுபட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி: சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்

Posted: 06 Jan 2016 11:42 AM PST

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 வயதுக்கு உள்பட்ட விடுபட்ட குழந்தைகளுக்கு 8 வகை நோய்களை தடுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞர் கைது

Posted: 06 Jan 2016 11:41 AM PST

ராஜபாளையம் அருகே அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

நகைப் பறிப்பு வழக்கு: 2 பெண்களுக்கு 3 ஆண்டு சிறை

Posted: 06 Jan 2016 11:41 AM PST

விருதுநகரில் மூதாட்டியிடம் நகையை பறித்துச் சென்ற 2 பெண்களுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து விருதுநகர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

"லோதா குழு பரிந்துரைகளை அமலாக்கம் செய்ய வேண்டும்'

Posted: 06 Jan 2016 11:40 AM PST

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) மாற்றியமைப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான

அருப்புக்கோட்டையில் வேன்-பைக் மோதல்: 4 பேர் காயம்

Posted: 06 Jan 2016 11:40 AM PST

அருப்புக்கோட்டை புறவழிச் சாலையில் புதன்கிழமை மோட்டார் சைக்கிளுடன் வேன் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

பள்ளியில் திருப்பாவை விழா

Posted: 06 Jan 2016 11:39 AM PST

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில், லிங்கா குளோபல் பள்ளியில் புதன்கிழமை திருப்பாவை விழா நடைபெற்றது.

கிராண்ட்ஸ்லாமில் ஆட வேண்டும்

Posted: 06 Jan 2016 11:39 AM PST

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒரு பகுதியாக புதன்கிழமை இளம் டென்னிஸ் வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

நியாயவிலைக் கடை இடமாற்றம்: அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பெண்கள் போராட்டம்

Posted: 06 Jan 2016 11:38 AM PST

அருப்புக் கோட்டை 36ஆவது வார்டு பகுதி பெண்கள்  நியாயவிலைக் கடையை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முன் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜபாளையத்தில் பயனாளிகளுக்கு இலவச வேஷ்டி, சேலை வழங்கல்

Posted: 06 Jan 2016 11:37 AM PST

ராஜபாளையம் வட்டத்தில் பொங்கலையொட்டி தமிழக அரசின் விலையில்லா வேஷ்டி,சேலைகள் புதன்கிழமை முதல் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

நான்குவழிச் சாலையில் தானியங்களை உலர வைக்கும் விவசாயிகள்: சத்திரரெட்டியபட்டியில் உலர்களம் அமைக்கப்படுமா?

Posted: 06 Jan 2016 11:36 AM PST

விருதுநகர் அருகே சத்திரரெட்டியபட்டியில் உலர்களம் இல்லாததால் நான்குவழிச் சாலை அணுகு சாலையில் தானியங்களை உலர வைக்கும் விவசாயிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இங்கு உலர்களம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இணையதள வழி கல்வியில் பொறியியல் கல்லூரி மாணவர் சாதனை

Posted: 06 Jan 2016 11:35 AM PST

இணையதள வழி கல்வியில் சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர் சாதனை படைத்துள்ளார் என அக்கல்லூரி முதல்வர் பி.ஜி.விஷ்ணுராம் தெரிவித்துள்ளார்.

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

Posted: 06 Jan 2016 11:35 AM PST

சிவகாசி இன்ஸ்டிடியூட் ஆப் பிரிண்டிங் டெக்னாலஜி பாலிடெக்னிக்கின் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் புதன்கிழமை பாலிடெக்னிக்கில் உள்ள மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கிருஷ்ணன்கோவிலில் ஜன.11இல் பாவை விழா தொடக்கம்

Posted: 06 Jan 2016 11:35 AM PST

கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். கல்வி அறக்கட்டளை, வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் திருப்பாவை-திருவெம்பாவை விழா இம்மாதம் 11 முதல் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பேச்சுப் போட்டி: சிவகாசி கல்லூரி மாணவி முதலிடம்

Posted: 06 Jan 2016 11:35 AM PST

விருதுநகர் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில், நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கிடையிலான பேச்சுப் போட்டியில் சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி மாணவி எம்.திவ்யா முதலிடம் பெற்றுள்ளார் என அக்கல்லூரி முதல்வர் சீ.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சிவகாசி

Posted: 06 Jan 2016 11:35 AM PST

காலிறுதியில் வாவ்ரிங்கா, கோரிச்

Posted: 06 Jan 2016 11:35 AM PST

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா, போட்டித் தரவரிசையில்

சாத்தூரில் அதிமுக சாதனை விளக்கப் பேரணி

Posted: 06 Jan 2016 11:33 AM PST

சாத்தூரில் ஜெயலலிதா பேரவை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்கப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டத்தில் கடன் வழங்க மறுக்கும் வங்கிகளால் ஏழை மக்கள் தவிப்பு

Posted: 06 Jan 2016 11:32 AM PST

விருதுநகர் மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு புதிய தொழில் தொடங்க வங்கிகள் கடன் வழங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

"மன்மோகன் சிங்கை தேர்வு செய்தும் அஸ்ஸாம் பலனடையவில்லை'

Posted: 06 Jan 2016 11:31 AM PST

முந்தைய பிரதமர் மன்மோகன் சிங்கை மாநிலங்களவை எம்.பி.யாக இரண்டு முறை தேர்வு செய்த அஸ்ஸாம் மாநிலத்துக்கு எந்தப் பலனும்

பைக் மீது கார் மோதி ஒருவர் சாவு

Posted: 06 Jan 2016 11:31 AM PST

அருப்புக்கோட்டை அருகே பைக் மீது கார் மோதி ஒருவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

ரயில் நிலையங்களில் "ரயில் நீர்' மட்டுமே விற்பனை செய்வது ஏன்?

Posted: 06 Jan 2016 11:31 AM PST

ரயில் நிலையங்களில் "ரயில் நீர்' என்ற குடிநீர் புட்டிகளை மட்டுமே விற்பனை செய்ய அனுமதித்தது ஏன்? என்று இந்திய ரயில்வே துறைக்கு

அனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது: டிராக்டர் பறிமுதல்

Posted: 06 Jan 2016 11:30 AM PST

சிவகாசி அருகே அனுமதியின்றி மணல் அள்ளியவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து, டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.

நக்ஸல் பாதிப்புள்ள மாநிலங்களுக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு

Posted: 06 Jan 2016 11:30 AM PST

நக்ஸலைட் தீவிரவாத இயக்கத்தினரால் பாதிக்கப்பட்டுள்ள 7 மாநிலங்களில் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காகவும்,

சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை: மகாராஷ்டிர அரசு ஒப்புதல்

Posted: 06 Jan 2016 11:29 AM PST

மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள

விருதுநகரில் வரதட்சணை கொடுமை: 8 பேர் மீது வழக்கு

Posted: 06 Jan 2016 11:29 AM PST

வரதட்சணை கேட்டு இருவேறு சம்பவங்களில் 2 பெண்களை கொடுமைப்படுத்தியதாக 8 பேர் மீது புதன்கிழமை விருதுநகர் மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய திருச்சி ஆயுதப்படை காவலர் சிகிச்சை பலனின்றி இறந்தார்

Posted: 06 Jan 2016 11:29 AM PST

மணப்பாறையில் நடந்த விபத்தில் சிக்கி காயமடைந்த காவலர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.

இருசக்கர வாகனம் திருட்டு: 2 பேர் கைது

Posted: 06 Jan 2016 11:29 AM PST

இருசக்கர வாகனத்தை திருடியதாக 2 பேரை புதன்கிழமை தேனி போலீஸார் கைது செய்தனர்.

நாளை 11 வட்டங்களிலும் அம்மா திட்டம் முகாம்

Posted: 06 Jan 2016 11:28 AM PST

திருச்சி மாவட்டத்தில் 11 வட்டங்களிலும் அம்மா திட்டம் முகாம் வெள்ளிக்கிழமை (ஜன.8) நடைபெறுகிறது.

"பதான்கோட் சண்டையில் உயிரிழந்த வீரர் நிரஞ்சனின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம்'

Posted: 06 Jan 2016 11:28 AM PST

பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமானப்படை தளத்தில் வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது

ரயில் பாதை பராமரிப்பு பணிகளால் திருச்சி, காரைக்குடி இடையிலான பயணிகள் ரயில்கள் தாற்காலிக ரத்து

Posted: 06 Jan 2016 11:28 AM PST

ரயில்பாதை பராமரிப்பு காரங்களால், திருச்சி-மானாமதுரை மற்றும் திருச்சி-காரைக்குடி இடையிலான பயணிகள் ரயில்கள் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

கூட்டுறவு சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 06 Jan 2016 11:28 AM PST

தேனியில் தமிழ்நாடு மாநில பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் புதன்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காவல் துறையில் மகளிரின் முக்கியத்துவம் உறுதி செய்யப்படும்

Posted: 06 Jan 2016 11:28 AM PST

காவல்துறை, துணை ராணுவத்தில் மகளிருக்கான முக்கியத்துவம் உறுதிசெய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

குவாரியில் 1000 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்: 2 பேர் கைது

Posted: 06 Jan 2016 11:27 AM PST

வத்தலகுண்டு அருகே குவாரியில் அனுமதியில்லாமல் வைத்திருந்த 1000 ஜெலட்டின்குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு, 2 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு குறித்துப் பேச காங்கிரசுக்கு உரிமை இல்லை:தமிழிசை செளந்தரராஜன்

Posted: 06 Jan 2016 11:27 AM PST

ஜல்லிக்கட்டு குறித்துப் பேச காங்கிரஸ் கட்சிக்கு உரிமை இல்லை என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

கருப்புப் பண விவகாரம்: 644 பேரிடம் ரூ.2,428 கோடி வரி வசூலிப்பு

Posted: 06 Jan 2016 11:27 AM PST

கருப்புப் பணம் குறித்து தகவல் தெரிவித்த 644 பேரிடம் இருந்து ரூ.2,428 கோடியை வரி மற்றும் அபராதமாக மத்திய அரசு வசூலித்துள்ளது.

அமைச்சர் வருகை ரத்தால் தள்ளி வைக்கப்பட்ட விழா

Posted: 06 Jan 2016 11:27 AM PST

அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் கூட்டுச் சாலை அருகே புதன்கிழமை நடைபெற இருந்த அரிகலபாடி ஆரம்ப சுகாதார நிலைய அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் வருகை ரத்தானதால் வியாழக்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது.

கொடைக்கானலில் கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை மீட்பு

Posted: 06 Jan 2016 11:27 AM PST

கொடைக்கானலில் புதன்கிழமை கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமையை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.

ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் 9 இல் அனுமன் ஜயந்தி விழா

Posted: 06 Jan 2016 11:26 AM PST

ஆம்பூர் கிருஷ்ணாபுரம் அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் அனுமன் ஜயந்தி விழா ஜன.9-ஆம் தேதி நடைபெற உள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™