Tamil News | Online Tamil News |
- பதன்கோட்டில் நேற்றும் தேடுதல் வேட்டை
- மீண்டும் பா.ஜ., தேசிய தலைவராகிறார் அமித் ஷா: மாநில நிர்வாகிகள் பட்டியலில் விரைவில் மாற்றம்
- 'வட கிழக்கு மாநிலங்களுக்கு ஆபத்து': தேசிய பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் எச்சரிக்கை
- அனைவர் முதுகிலும்'அம்மா ஸ்டிக்கர்'
- கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி தந்தவை போலி நிறுவனங்கள்'
- ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தியது வடகொரியா: அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அலறல்
- சேலம் கலெக்டர் ஆபீசுக்குள் கட்டில், மெத்தை
- கறுப்பு பண புதிய சட்டத்தால் ரூ.2,428 கோடி வசூல்
- தமிழகம் முழுவதும் 1.90 கோடி குடும்பங்களுக்கு அரசு பரிசு: பொங்கல் கொண்டாட அரிசி, சர்க்கரை, கரும்புடன் 100 ரூபாய்
- 'ஏர் - இந்தியா' நிறுவனம் மீது அமெரிக்க பல்கலை புகார்
| பதன்கோட்டில் நேற்றும் தேடுதல் வேட்டை Posted: 06 Jan 2016 07:02 AM PST பதன்கோட், :பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளான, பதன்கோட் விமானப் படை தளத்தில், பாதுகாப்பு படையினர் நேற்றும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கடந்த, 2ம் தேதி, பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படை தளத்துக்குள் புகுந்து, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கர வாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், பாதுகாப்பு படையினர் ஏழு பேர் உயிரிழந்தனர்; தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஆறு பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மூன்று நாட்களுக்கு பின், நேற்று முன்தினம் இந்த சண்டை முடிவுக்கு வந்தது. முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, விமானப் படை தளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ... |
| மீண்டும் பா.ஜ., தேசிய தலைவராகிறார் அமித் ஷா: மாநில நிர்வாகிகள் பட்டியலில் விரைவில் மாற்றம் Posted: 06 Jan 2016 08:15 AM PST புதுடில்லி: 'பா.ஜ., தேசிய தலைவராக, அமித் ஷா, மீண்டும் தேர்வுசெய்யப்படுவார்' என, தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு முன், கட்சியின் மாநில நிர்வாகிகள் பட்டியலில், அதிரடியானமாற்றங்களை மேற்கொள்ள, அமித் ஷா திட்டமிட்டுள்ளார்.பா.ஜ., தேசிய தலைவரான அமித் ஷாவின் பதவி காலம், வரும், 23ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிர மடைந்துள்ளன. இன்னும் ஒரு சில மாதங்களில், தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கட்சிக்கு புதிய தலைவரை நியமிப்பது, சரியாக இருக்காது என, ... |
| 'வட கிழக்கு மாநிலங்களுக்கு ஆபத்து': தேசிய பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் எச்சரிக்கை Posted: 06 Jan 2016 08:19 AM PST புதுடில்லி :'நாட்டின் வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் இமயமலை பகுதி யில் கடுமையான நிலநடுக்கம் ஏற்படலாம்' என, மத்திய உள்துறை அமைச்சகத்தின், தேசிய பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.இமயமலை அடிவாரத்தில் உள்ள, அருணாச்சல பிரதேச மாநில தலைநகர் இடாநகரில், மத்திய உள்துறை அமைச்சகத்தின், தேசிய பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் கூட்டம் நடந்தது. அதில், மலைப்பிரதேச கட்டுமான நிபுணர்களும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இமயமலை பகுதியில் ஏற்படவுள்ள அதிபயங்கர நிலநடுக்கம் குறித்தும், அதை சமாளிப்பது குறித்தும் ... |
| அனைவர் முதுகிலும்'அம்மா ஸ்டிக்கர்' Posted: 06 Jan 2016 09:13 AM PST சென்னை:தப்பித் தவறி, 2016ல்,அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், சாலையில் போவோர், வருவோரையெல்லாம் பிடித்து நிறுத்தி, அவர்கள் முதுகில் ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை ஒட்டி அனுப்பி விடுவர் தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தனியாரிடமிருந்து மின்சாரத்தை கூடுதல் விலை கொடுத்து வாங்கியதால், மின்சார வாரியத்தின் இழப்பு, 94 ஆயிரத்து, 400 கோடி ரூபாயை எட்டி விட்டது.வருடந்தோறும் பெரும் இழப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒரே வாரியம், தமிழக மின் வாரியம் மட்டும் தான்.ஆனால், அ.தி.மு.க., பொதுக்குழுவில்,'முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தை மின் ... |
| கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி தந்தவை போலி நிறுவனங்கள்' Posted: 06 Jan 2016 09:18 AM PST புதுடில்லி: 'தி.மு.க.,வால் நடத்தப்படும் கலைஞர், 'டிவி'க்கு, குஸேகான் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் நிறுவனம் மூலமாக, 200 கோடி ரூபாய் பணம் கைமாறிய விவகாரத்தில் உண்மை தன்மை இல்லை' என, அமலாக்க இயக்ககம் கூறியுள்ளது. '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் இறுதிக்கட்ட விவாதங்கள், சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி ஓ.பி.ஷைனி முன் நடந்து வருகின்றன. அமலாக்க இயக்ககம் தொடர்ந்த, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பான விசாரணையில், அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் நேற்று வாதிட்டதாவது:தி.மு.க.,வால் நடத்தப்படும் கலைஞர், 'டிவி'க்கு, குஸேகான் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் நிறுவனம், ... |
| ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தியது வடகொரியா: அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அலறல் Posted: 06 Jan 2016 09:29 AM PST சியோல்: ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா, அதிக சக்தி வாய்ந்த, ஹைட்ரஜன் குண்டு சோதனையை, வெற்றிகரமாக நிகழ்த்தி சாதனை படைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு, அமெரிக்கா, ஜப்பான் உட்பட, பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அண்டை நாடான தென்கொரியா மற்றும் உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிரான போக்கை, வடகொரியா கடைபிடித்து வருகிறது. அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில், வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன், அடிக்கடி அறிக்கைகள் வெளியிட்டு, பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறார். கடந்த டிசம்பரில், ஹைட்ரஜன் குண்டு உருவாக்கும் முயற்சியில் ... |
| சேலம் கலெக்டர் ஆபீசுக்குள் கட்டில், மெத்தை Posted: 06 Jan 2016 09:39 AM PST சேலம்: சேலம் மாவட்ட கலெக்டர், தன் அறையில், புதிதாக கட்டில், மெத்தை, தலையணை வாங்கி போட்டுள்ளார். அரசு விதிகளை மீறி அவர் செயல்படுவதாக ஊழியர்கள் குற்றஞ்சாட்டினர். சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத். இவர் ஏற்கனவே, சிவகங்கை, விழுப்புரம் மாவட்ட கலெக்டராக இருந்துள்ளார்.அதிகாரியாக இருந்தபோதும், அவருடைய சமீபத்திய செயல்பாடுகளால், அ.தி.மு.க.,வின் தீவிர விசுவாசி என்பது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது.'அம்மா உத்தரவின்பேரில் மழை பெய்துள்ளது' என,பேட்டியளித்து, மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.சேலம், அரசு மருத்துவமனையில் நடந்த, எய்ட்ஸ் தின ரத்த தான முகாமில், 'அம்மா' ... |
| கறுப்பு பண புதிய சட்டத்தால் ரூ.2,428 கோடி வசூல் Posted: 06 Jan 2016 09:40 AM PST புதுடில்லி: கறுப்பு பணம் தொடர்பான புதிய சட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் செய்துள்ள டிபாசிட்கள் மற்றும் சொத்துகள் பற்றிய விவரங்களை தெரிவித்த, 644 பேரிடமிருந்து, வரி மற்றும் அபராதமாக, 2,428 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.வாய்ப்பு: கறுப்பு பண புழக்கத்தை ஒடுக்கும் வகையில், 'கறுப்பு பணம் (மறைக்கப்பட்ட வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்து) மற்றும் வரி விதிப்பு சட்டம் - 2015'ஐ, 2015 ஜூலை, 1ல் மத்திய அரசு அமல்படுத்தியது. இச்சட்டப்படி, வெளிநாட்டில் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் மற்றும் சொத்துகள் வாங்கியவர்கள், அதுகுறித்த தகவலை தாமாக முன்வந்துதெரிவிக்க, ... |
| Posted: 06 Jan 2016 10:41 AM PST சென்னை:'பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் அரிசி வாங்கும் குடும்பங்களுக்கு, பொங்கல் பரிசு பை வழங்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு பையில், அரிசி, சர்க்கரை, கரும்புடன், 100 ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும். இதனால் அரசுக்கு, 318 கோடி ரூபாய் செலவு ஏற்படும்; 1.91 கோடி குடும்பங்கள் பயன்பெறும். முந்தைய தி.மு.க., ஆட்சியில், பொங்கல் பண்டிகையின் போது, அரை கிலோ பச்சரிசி, அரை கிலோ வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை, பாசிப்பருப்பு ஆகியவை வழங்கப்பட்டன. அடுத்து, 2011ல், அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், 1 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை, 100 ... |
| 'ஏர் - இந்தியா' நிறுவனம் மீது அமெரிக்க பல்கலை புகார் Posted: 06 Jan 2016 01:45 PM PST வாஷிங்டன் : அமெரிக்காவில், கறுப்புப் பட்டியலில் இடம் பெற்ற பல்கலைக்கழகம், திருப்பி அனுப்பப்பட்ட மாணவர்களையும், 'ஏர் - இந்தியா' விமான நிறுவனத்தையும், இதுவரை நடந்த குழப்பங்களுக்கு காரணமாக, குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணத்தில், இரு பல்கலைக்கழகங்களை, அந்நாட்டு அரசு கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த விவரம் தெரியாமல், அந்த பல்கலைக் கழகங்களில் சேரச் சென்ற, ஆந்திராவைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.இந்நிலையில், சர்ச்சைக்குரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 07,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |