Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


லட்சியவாதிகளை விட பிராக்டிகலாக இருப்பவர்களே ஜெயிக்கிறார்கள்..!

Posted: 05 Jan 2016 03:36 PM PST

சொந்தக்காரும் சொந்தக்காரரும்

Posted: 05 Jan 2016 02:08 PM PST

சொந்தக்காரும் சொந்தக்காரரும் சொந்தக்கார் வாங்கிடவே சொந்தக்கார் வைத்துள்ள சொந்தக்காரரிடம் சென்று சொந்தக்கார் வாங்கிய சொந்த அனுபவம் பற்றி கேட்கச் சென்றேன் சொந்தக்கார் வைத்துள்ள சொந்தக்காரர், என்னை சொந்தக்கார் இல்லாததால் சொந்தக்காரர் இல்லையென சொல்லாமல் சொல்லி சொந்தக்கார் ஏறி சொல்லாமல் சென்றுவிட்டார் ச. சந்திரசேகரன்

தெய்வம்

Posted: 05 Jan 2016 02:04 PM PST

தெய்வம் வளர்ந்திடும் மரங்களும் தெய்வம்  -அதில் உதிர்ந்திடும் பழங்களும் தெய்வம் மலர்ந்திடும் மலர்களும் தெய்வம்  -அதில் மணந்திடும் மணங்களும் தெய்வம் பாடிடும் குயில்களும் தெய்வம் –அங்கே ஆடிடும் மயில்களும் தெய்வம் சூழ்ந்திடும் மேகங்கள் தெய்வம் –குளிரில் ஆழ்ந்திடும் தேகங்கள் தெய்வம் இசைந்திடும் வண்டுகள் தெய்வம் –அதற்கு அசைந்திடும் பூச்செண்டுகள் தெய்வம் பொழிந்திடும் மழையும் தெய்வம் –அதில் நனைந்திடும் இலையும் தெய்வம் இசைக்கின்ற ராகங்கள் தெய்வம் –உடலில் இருக்கின்ற பாகங்கள் ...

உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன காரணம்?

Posted: 05 Jan 2016 10:14 AM PST


-
உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன
காரணம்?
-
அடிதான்..!!
-
-----------------------------------------------------------------------------
வி.ரேவதி

செந்தில் குமாரும் குட்டிகவிதைகளும்

Posted: 05 Jan 2016 09:03 AM PST

ஏக்கங்கள் இப்படியும் இருக்கலாம்...??? இன்னும் ஒருமுறை இவ்வுலகில் அவதரிக்க வேண்டும் புத்தரே என் நிழலில் அமர்ந்து ஞானம் பெற ஞாலத்தில் எவருளர்...?? போதிமரம் இருவரிகளால் மனிதர்களின் வாழ்க்கை நெறியை வகுத்து கொடுத்த வள்ளுவரே உன் கரவிரல்களுக்குள் என்று அகப்படுவேன்..?? எழுத்தாணி அனுதினமும் ஆயிரம்பேர் வந்துபோனாலும் அந்த கரிகால் பெருவளத்தானின் அடிச்சுவடு இன்னொரு முறை இங்கு படுமா...?? கல்லணை பெருவுடையாரை கட்டிஎழுப்பிய பெரிய மனதுடையார் ராஜராஜனே என்னை ராஜ்ஜியம் பண்ண  என்றாவது ...

வாயால் வடை சுட்டவர் தன் வாயால் வடை சட்டியில் வீழ்ந்தார்

Posted: 05 Jan 2016 08:25 AM PST

பேச்சுதான் அரசியலுக்கு மூலதனம். 'பேசிப்பேசியே ஆட்சியை பிடித்தார்கள்' என திராவிடர் இயக்கத்தை சொல்வார்கள். ஆனால் இன்று மேடைப்பேச்சு சுவாரஸ்யம் இழந்து விட்டது. இதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது பல மணி நேரம் காத்திருந்து மேடைப்பேச்சை ரசித்து கேட்ட தலைமுறை இப்போது ஓய்ந்து விட்டது. மற்றொன்று கொள்கையை பற்றி பேசிய மேடைகள் எல்லாம் இப்போது கட்சித்தலைமையை வரம்புக்கு மீறி புகழ்வது, எதிர்கட்சிகளை அளவு கடந்து விமர்சிப்பதுமாக மாறி விட்டது. தமிழகத்தில் பேச இப்போது ஆட்களில்லை. இருக்கும் சிலரும் கட்சியின் உத்தரவுக்கிணங்க ...

எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு

Posted: 05 Jan 2016 08:23 AM PST

Good Governance: Who Is Responsible? என்கிற Upali Cooray எழுதிய கட்டுரை ஒன்று கொழும்பு ரெலிலிகிராப் இணைய இதழில் மார்ச் 11, 2015 அன்று வெளியாகியிருந்தது.  அதில் கிமு 205 முதல் கிமு 161 வரை அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்ட எலார (எல்லாளன் என்று தமிழில் நாம் அழைக்கும் மன்னன் மகாவம்சத்தில் எலார என்றே குறிப்பிடப்படுகின்றான்) என்ற சோழ மன்னன் தன் அரண்மனையில் அவனிடம் நீதி வேண்டிவருவோர் ஒலிக்கவிடவேண்டிய மணி ஒன்றினை பேணியதாகவும், மன்னனின் மகன் சென்ற தேரால் ஏற்றப்பட்டு கன்று ஒன்று கொல்லப்பட்டதாயும், நீதிவேண்டி ...

மிஸ் தன்னம்பிக்கை

Posted: 05 Jan 2016 08:11 AM PST

- "வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் நடுவுல இறகு மாதிரி ஒரு மெல்லிய கோடு இருக்குன்னு சொல்வாங்க. அந்தக் கோட்டுக்கு நான் வெச்சிருக்கிற பேர் - நம்பிக்கை. நான் உயிரோடு இருக்கிறதுக்கும் உங்ககிட்ட பேசுறதுக்கும் அந்த நம்பிக்கைதான் காரணம்!" - - மம்தா மோகன்தாஸ் - (இரண்டு வருடங்களாக மார்பகப் புற்று நோயோடு போராடி மீண்டு வந்து இருக்கும் மிஸ் தன்னம்பிக்கை.)

அன்பே கடவுள் - தெய்வீக புகைப்படங்கள்

Posted: 05 Jan 2016 08:09 AM PST


-

விழிகள் – கவிதை

Posted: 05 Jan 2016 07:59 AM PST

– அன்பேதான் எங்கெங்கும் இறை – நீ ஆணவத்தை முடிந்தவரைக் குறை! – இன்னலிலும் துவளாமல் இரு – நீ ஈவதனால் வரும் பயனே திரு! – உழைப்பதனால் வரும் உயர்வே நிலை – நீ ஊக்கத்தால் வரும் துயரைக் குலை! – எண்ணத்தில் பிறர் நலமே நாடு! – நாட்டை ஏற்றுவது உலகில் உன் பாடு! – ஊனமற்ற முடிவை நீ எடு – நல்ல ஒற்றுமைப் பயிரெங்கும் நடு! – ஓதற்கில்லை உலகில் ஓர் இணை! – நம் ஔவையாரின் வாக்கே நல் துணை! – இஃதெல்லாம் உனையுயர்த்தும் வழிகள் -நீயே இந்நாட்டின் உண்மையான விழிகள்! – —————————- -பாவலர் அ.உசேன் தேன்பலா ...

அமெரிக்காவில் துப்பாக்கி உரிம விதிகளை இறுக்க ஒபாமா நடவடிக்கை

Posted: 05 Jan 2016 06:48 AM PST

ஈகரை விதிமுறைகளின் படி பதிவுகளில் வேறு தளங்களின் இணைப்பு கொடுப்பது தவறாகும் அமெரிக்காவில் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு மக்களுக்கு இருந்துவரும் உரிமையை கட்டுப்படுத்துவது தொடர்பான அதிபர் ஒபாமாவின் திட்டங்கள் பற்றி அவரது அலுவலகமான வெள்ளை மாளிகை விவரம் வெளியிட்டுள்ளது. துப்பாக்கி விற்பவர்கள் அனைவரும் அதற்காக தங்களைப் பதிவுசெய்துகொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றும், துப்பாக்கி வாங்க வருபவர்களைப் பற்றி பரிசோதனைகள் செய்த பிறகு தான் அவர்களிடம் விற்க வேண்டும் என்றும் புதிய விதிகள் கொண்டுவரப்படவிருப்பதாகத் ...

ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் கவிஞர் ஞா.சந்திரன் !

Posted: 05 Jan 2016 06:29 AM PST

ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் கவிஞர் ஞா.சந்திரன் ! முதுநிலைத் தமிழாசிரியர், புனித மரியன்னை மேல் நிலைப் பள்ளி , மதுரை . வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-17. பக்கங்கள் : 154, விலை : ரூ. 100 . 044-24342810. vanathipathippakam@gmail. ஹைக்கூ தேனீ கவிஞர் இரா. இரவி! ஹைக்கூ என்றவுடன் நினைவுக்கு வருபவர் கவிஞர் இரா. இரவி அவர்கள் .உழைத்துக் கொண்டே இருக்கும் உன்னத மனிதர் ;நட்புக்கு இலக்கணமானவர் ;எதார்த்தமான ...

முகங்களும் பாவனைகளும்

Posted: 05 Jan 2016 05:46 AM PST



அனுமந்தபுரம். செங்கல்பட்டு

குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின்

Posted: 05 Jan 2016 03:24 AM PST

திருக்குறள் உரையை சிறுவர் பாடல்களாக
உருவாக்கியுள்ளார் ஆசி.கண்ணம்பிரத்தினம் அவர்கள்
-
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள் - நூலிலிருந்து
ஒரு சிலவற்றை இங்கு பதிகிறேன்...
-

முன்னேறு கண்ணு – நடிகை சச்சுவுடன் சிநேக சந்திப்பு

Posted: 05 Jan 2016 03:01 AM PST

- மங்கையர் மலர் வாசகர் சிறப்பிதழுக்காக வாசகப் பிரமுகர் என்ற வகையில் யாரைச் சந்திக்கலாம் என்று யோசித்தபோது, ஒட்டு மொத்தமாக அனைவரது நினைவிலுமே நிழலாடிய முகம் – இன்று சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் விளம்பர பாட்டி (ஸாரி, ஆன்ட்டி) சச்சுதான். நம் வாசகிகளுக்கு ஏற்கெனவே பரிச்சயமானவர் சச்சு என்பதாலும், அவர் மங்கையர் மலரின் வாசகி என்பதாலும் அவரைத் தொடர்பு கொள்வது எளிதாயிற்று 2009- 2010ல் தொடர்ந்து 12 அத்தியாயங்கள் (அப்போது மங்கையர் மலர் மாத இதழாக மலர்ந்து கொண்டிருந்தது) ரோஜா ...

ஆக்ஷன் ஹீரோக்களின் அவஸ்தை

Posted: 05 Jan 2016 02:42 AM PST

'பியூட்டி போதும். இனி பெர்ஃபார்மன்ஸ் தான் முக்கியம்' என புது ரூட்டில் ஜூட் விட்டிருக்கும் அனுஷ்காவை விரட்டிப் பிடித்தோம். முதலில் சினிமா எனக்குப் பிடிபடவில்லை. சினிமா வாசனை நுழையாத குடும்பத்தில் பிறந்து வந்ததால் அந்த வேலை முதலில் கடினமாகத் தெரிந்தது. என்னை சினிமாவுக்கு அழைத்து வந்த நாகார்ஜூனா காரு சினிமாவில் உள்ள நெளிவு சுளிவுகளை எடுத்துச் சொல்லி புரிய வைத்தார். இப்ப பக்குவமும் பிடிப்பும் வந்துவிட்டது படபடவென பாஸ்டையும் பிரஸண்டையும் கொட்டியவரிடம் ஃபியூச்சரைப் பற்றிய கேள்வியை ...

கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள்

Posted: 05 Jan 2016 02:38 AM PST

பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள் கொஞ்சம் கருப்பு. அவனுக்கு ஏனோ அவளை பிடிக்கவில்லை மனைவியை வெறுத்தான். படுக்கையை விட்டு தள்ளிவைத்தான். என்னதான் தன் கனவன் தன்னை வெறுத்தாலும் அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் வைத்திருந்தாள்.இப்படிதான் ஒருநாள். ஏன் என்னை வெறுக்கின்றீர்கள்! நான் உங்கள் மனைவி. உங்களை காதலிக்கின்றேன்! அது ஏன் உங்களுக்கு புரியவில்லை!! என்று அவள் சொல்ல இவன் ஒன்றும் சொல்லாமல் சென்றுவிடுகிறான். ...

ஒய்யார ஒகாபி!

Posted: 05 Jan 2016 02:38 AM PST

- ஆப்ரிக்கக் காடுகளில் மட்டுமே காணப்படும் தனிச்சிறப்பான விலங்குதான் ஒகாபி. பார்ப்பதற்கு வரிக்குதிரை போல் தோற்ற மளிக்கும் ஒகாபி, ஒட்டகச்சிவிங்கியின் நெருங்கிய உறவாகும். ஒகாபி பற்றிய சுவையான தகவல்கள் சில: சாக்லெட் வண்ணத்தில் அழுத்தமான காவி நிற உடலுடன், பின்புறமும், முன்னங்கால்களிலும் வரிக்குதிரை போல கோடுகளுடன், சிறிய கழுத்துடைய ஒட்டகச்சிவிங்கி போல் தோற்றமளிக்கும் காட்டு விலங்குதான் ஒகாபி. இது ஆப்ரிக்காவின் காங்கோ நாட்டுக் காடுகளில் அதிகம் காணப்படுகிறது. — ஒட்டகச்சிவிங்கியின் மூதாதையர்களில் ...

மனதில் விழுந்த கீறல் !

Posted: 05 Jan 2016 02:37 AM PST

ராகவன் எப்பொழுதுமே மனைவியை பெயர் சொல்லி கூப்பிட்டதில்லை ,அவனுடைய அப்பா அவனிடம் சொன்னதெல்லாம் இதுதான் , 'நீ அவளை பெயர் சொல்லிக் கூப்பிட்டயானால் அவளுக்கு நீ தாசனாகப் போயி விடுவாய்'. இது ராகவன் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. - என்றும் அவன் மனைவி சுபத்ரா அவனை பொறுத்த வரை , 'ஏய்' , 'உன்னைத்தான்' , 'டி' 'இவளே' இது தான் அவளுடைய் ஐடென்டிடி . அவன் அப்பா போயி முப்பது வருடம் ஆனாலும் பொண்டாட்டியை பேர் சொல்லாமலே நாப்பது வருஷம் அவளுடன் குப்பை கொட்டி விட்டான். - திடீரென்று நேத்திக்கு அவள் மயக்கம் போட்டு ...

வில்லி எஃபெக்ட் வீட்டில் ரிஃப்ளெக்ட்!

Posted: 05 Jan 2016 02:30 AM PST

- வில்லிகள் தான் சின்னத்திரையில் இன்று வி.ஐ.பி.க்கள். வில்லி சரியில்லன்னா சீரியல் ஃப்ளாப். இந்த சீக்ரெட்டைத் தெரிஞ்சுகிட்ட ரேகாகுமார் அழகான வில்லி! ஷூட்டிங் கேப்பில் அவர் சொன்ன சுயபுராணம்… – * கர்நாடகாவுல இன்னிக்கு ஹாய் ஸ்ரீலஷ்மின்னுதான் கிட்ட வருவாங்க. அங்க முதல் சீரியல் மாயமிருசாவுல கேரக்டர் பெயர் அது. தமிழ்நாட்டுல அண்ணி யாரேங்கிறாங்க. என்னோட ஒரிஜினல் பேரு ரேகாகுமார். எனக்கே மறந்துடும் போல! – * பதினேழு வருஷத்துக்கு முன்னாடி கன்னட இண்டஸ்ட்ரியில ஸ்டார்ட் ஆன பயணம், மலையாளம், தெலுங்கு ...

எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி

Posted: 05 Jan 2016 02:29 AM PST

செம்பரம்பாக்கம் தண்ணீரை தாறுமாறாகத் திறந்துவிட்டதுதான், பெரு வெள்ளத்தில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் மூழ்கிபோகக் காரணம். இது அரசாங்கத்தின் தோல்வி' என்று சொல்லி தி.மு.க சார்பில் ஜனவரி 5-ம் தேதி மாபெரும் போராட்டத்துக்கு தீவிரமாகிவிட்டார் தமிழினத் தலைவர் கருணாநிதி. இவரை முந்திக்கொண்டு கறுப்பு எம்.ஜி.ஆர். போராட்டங்களை நடத்தி முடித்தேவிட்டார். இதேபோல... சிவப்பு காந்தி, பச்சை மண்டேலா, மஞ்சள் சே குவேரா, காவி படேல் என்று மற்ற மற்ற கட்சி தலைகளும் தங்களின் சக்திக்கேற்ப காரணத்தை உருவாக்கிக் ...

கதாநாயகியை விட தோழிகள் அழகா இருக்காங்களே...!

Posted: 05 Jan 2016 02:28 AM PST

சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம்

Posted: 05 Jan 2016 01:58 AM PST

சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் வானத்தில் வட்டநிலா வந்து சிரிக்கும் -அந்த நேரத்தில் சுட்ட மணல் குளிர்ந்திருக்கும் நிலவொளியில் மணல்வெளியில் பூத்துமணக்கும் -அந்த வாண்டுகள் கை கோர்க்கும் கபடியாட்டம் இதங்குளிரில் கலகலப்பில் மக்கள் கூட்டம் -அங்கே ஈந்தும் கரங்கள் இருந்திருப்பதை இரவு காட்டும் இனியவார்த்தை தேன்பாகாய் காதில் இனிக்கும் -அந்த இன்பமான காட்சிகளும் காணக்கிடைக்கும் கூட்டத்தில் ஓட்டத்தில் குதூகலிப்போம் -மணல் தோட்டத்தில் நீரோட்டத்தில் ஓடிபிடிப்போம் தோல்விகளும் ...

பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்!

Posted: 05 Jan 2016 01:21 AM PST

அன்பு தம்பி செந்திலின் வேண்டுகோளின்படி இந்த பதிவு பிரார்த்தனைகூடம் பகுதிக்கு நகர்த்தபடுகிறது, இந்த செய்தியை படிக்கும் அனைவரும் ஒரு வினாடியாவது நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்யும் இந்த மாவீரர்களுக்கு தங்களின் பிரார்த்தனைகளை செய்யுமாறு கேட்டுகொள்கிறோம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், பஞ்சாப் மாநிலம் பதன் கோட்டில் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களில், ஹரியானா மாநிலம் அம்பாலாவைச் சேர்ந்த இளம் வீரர் குருசேவக்சிங்கும் ஒருவர். 'திருமணமாகி 45 நாட்களிலேயே தாய்நாட்டுக்காக தன் உயிரை அர்ப்பணித்த ...

ஒரு பெண் குழந்தை உள்ளவர்களுக்கு மட்டும்

Posted: 05 Jan 2016 01:10 AM PST

பெண் குழந்தை வைத்திருப்பவர்கள் இந்த வருடம் செய்ய வேண்டிய சடங்கு !!! (ஒரு பெண் குழந்தை இருப்பவர்கள் வீட்டில் மட்டும்) 2016 பிறந்த நேரம் பெண்களுக்கு அவ்வளவு நன்மையான நேரமாக அமையவில்லை என சான்றோர்கள் சிலர் கணித்துள்ளனர். முக்கியமாக ஒரு பெண் மட்டும் இருக்கும் இல்லங்களில் பெண்களின் நலன், வீட்டின் அமைதி, பண வரவு, சுப காரியங்களில் சில இன்னல்கள் மற்றும் தாமதங்கள் ஏற்படலாம். இதற்கு பரிகாரம் உண்டாம் : பெண்ணைப் பெற்றோர் ஒன்பது பேரிடம் ஒரு ரூபாய் நாணயத்தை யாசகம் பெறவேண்டும். யாசகம் பெற்ற ஒன்பது ரூபாய் ...

திருவண்ணாமலை கிரிவலம்.

Posted: 05 Jan 2016 12:43 AM PST

அண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் ஐம்பூதத் தலங்களில் அக்னித் தலமாகும். இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மாவிற்கும், திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என சண்டை மூண்ட பொழுது, யார் தன்னுடைய அடியையும், முடியையும் காணுகிறார்களோ அவர்களே பெரியவர் என்று சிவபெருமான் நீண்ட நெருப்புத் தண்டாக காட்சியளித்தார். இவ்வடிவம் லிங்கோத்பவர் என்று அழைக்கப்படுகிறது. இவ்வடிவின் ...

மறை பொருள் ஞானம் (occultism)

Posted: 05 Jan 2016 12:38 AM PST

மறை பொருள் ஞானம் (occultism) Spirit Art தியானம் செய்யும் பொழுது மனக்கண்ணில் தோன்றிய அகக் காட்சிகளை இங்கே பதிவு செய்து இருக்கிறேன். அகக் காட்சிகளுக்கு கூடுமானவரை பொருத்தமான தலைப்பு இட்டு இருக்கிறேன் வாழ்க வளமுடன் மரணம் இல்லா பெருவாழ்வு--- சாகாக்கல்வி.

அனுமந்தபுரம் காணொளிகள், சாமி ஆட்டம்,அருள்வாக்கு, திருஷ்டி கழிப்பு முதலியன.

Posted: 05 Jan 2016 12:32 AM PST

அனுமந்தபுரம் சாமி ஆட்டம்

This posting includes an audio/video/photo media file: Download Now

கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

Posted: 05 Jan 2016 12:27 AM PST

கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். இங்குள்ள சிவனின் பெயர் கபாலீசுவரர் (சுருக்கமாக கபாலி) என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது. இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது. இந்து தொன்மவியல்படி இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ளப் ...

டெஸ்லா என்ற விஞ்ஞானி

Posted: 05 Jan 2016 12:06 AM PST

'தாமஸ் ஆல்வா எடிசன், 'தன் மின்சார சாதனங்களை விற்க, உலகின் பல்வேறு இடங்களில் கிளைகள் அமைத்திருந்தார் எடிசன். செர்பியா நாட்டுக் கிளையில், டெஸ்லா என்ற விஞ்ஞானி வேலை செய்து வந்தார். அவர் எடிசனை சந்தித்து, எடிசன் கண்டுபிடித்திருந்த டைனமோக்களில் பல முன்னேற்றங்களை செய்து தருவதாக கூறினார். - 'அவர் திறமைசாலி என்பதை உணர்ந்த எடிசன், அவர் கூறும் மாற்றங்களை செய்ய நீண்ட காலம் பிடிக்கும்; அவ்வளவு நாள் அவருக்கு சம்பளம் தருவது வீண் என நினைத்து, 'முதலில் நீங்கள் கூறும் மாற்றங்களை செய்து முடியுங்கள்; ...

மயக்க மருந்து - சில தகவல்கள்

Posted: 05 Jan 2016 12:03 AM PST

- அறுவை சிகிச்சையின் போது, மயக்கம் உண்டாக்க, வாயுவாக அல்லது ஊசி மருந்தாக மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. நீண்ட நேரம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தால், உடல் முழுவதும் உணர்ச்சி இழக்கச் செய்து, மயக்கம் உண்டாகும்படி மயக்க மருந்து கொடுக்க வேண்டும். இடுப்பில், தண்டுவடத்தில் ஊசி மூலம் மயக்க மருந்து செலுத்தினால், இடுப்பிற்குக் கீழ் உணர்ச்சியற்றுப் போகும். இது தவிர கை மற்றும் கால் விரல்களில் மட்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தால், இம்மயக்க மருந்தை, அப்பகுதிகளில் மட்டும் ...

மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை.

Posted: 05 Jan 2016 12:00 AM PST

ஓய்வு பெற்ற, உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், பின்னாளில் சட்ட மொழி பெயர்ப்புத் துறை தலைவராக பதவி வகித்தார். அப்போது, அவர் சொன்னது: - ஷேக்ஸ்பியரின், 'கிங்லியர்' நூலை மொழி பெயர்க்கும் போது, எனக்கு விசித்திரமான அனுபவம் ஏற்பட்டது. இளவரசி கார்லியா இறந்து விட்டாள்; அவளுடைய பிரேதத்தை தூக்கிக் கொண்டு ஓடுகிறான் அரசன், லியர். அவனுக்கு, தன் அருமை மகள் இறந்திருக்க மாட்டாள் என்ற சந்தேகம், உள் மனதில் எழுகிறது. - உடனே, தன் வீரர்களிடம், 'ஒரு கண்ணாடியை கொண்டு வாருங்கள்... அவள் மூக்குக்கு எதிரே ...

வாட்ஸ் அப் - பல்சுவை - தொடர்பதிவு

Posted: 04 Jan 2016 11:41 PM PST


-

-

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Posted: 04 Jan 2016 10:49 PM PST

µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு

µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை


µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி

வெள்ள நிவாரண உதவி தொடக்கம்:

Posted: 04 Jan 2016 04:53 PM PST

மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் முதல் கட்டமாக, 14 லட்சம் குடும்பங்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் நிவாரண நிதி செவ்வாய்க்கிழமை (ஜனவரி 5) அளிக்கப்படுகிறது. மேலும், 30.42 லட்சம் பேருக்கு விலையில்லா வேட்டி, சேலை, 10 கிலோ அரிசியும் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படுகிறது. - சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், நலத் திட்ட உதவிகள் வழங்குவதை முதல்வர் ஜெயலலிதா தொடக்கிவைத்தார். - வெள்ள பாதிப்பால் குடிசைகளை இழந்த குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரமும், நிரந்தர ...

தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Posted: 04 Jan 2016 04:48 PM PST

புத்தாண்டு பிறப்பு: ஆளுநர் ரோசய்யாவின் வாழ்த்துச் செய்தி - உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது: வான வேடிக்கையுடன் கொண்டாட்டம் - - ஆக்லாந்து நாட்டின் ஸ்கை டவரில் வான வேடிக்கைகள் வெடித்தும், அனிமேஷன்கள் செய்தும் ஏராளமான பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடினர். - -------------------------------------- - An estimated 1.6 million people gathered for New Year fireworks in Sydney. -

திருமந்திரம் விளக்கப்படங்கள்

Posted: 04 Jan 2016 04:32 PM PST

திருமந்திரம் நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள்   அதனால்தானோ  என்னவோ திருமூலர்  தமிழில்  திருமந்திரத்தை  எழுதி  உள்ளார் திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™