Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அவசர சட்டம் இயற்றுங்க: ஜெ.,க்கு நீதிபதி கட்ஜு ஆலோசனை

Posted: 05 Jan 2016 07:25 AM PST

'தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த, மாநில அரசே அவசர சட்டம் இயற்றலாம்' என, முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு, 69, யோசனை தெரிவித்துள்ளார்.

2007ல் தடை...:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த, 2007ல் தடை விதிக்கப்பட்டது. எனினும், தமிழக அரசு பிறப்பித்த சட்டத்தால், தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில், விலங்குகள் நல ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, ஜல்லிக்கட்டு போட்டிக்கு, 2014ல் தடை விதிக்கப் பட்டது; 2015ல் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. இதனால், தென் மாவட்டங்களில் ...

நரேந்திர மோடியிடம் பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் உறுதி: பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பாராம்

Posted: 05 Jan 2016 08:21 AM PST

புதுடில்லி: பதன்கோட் விமானப்படை தளம் மீதான தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுப்பதாகவும், இதுதொடர்பான அனைத்து தகவல்களையும், இந்தியாவுக்கு அளிக்க தயாராக இருப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோடியிடம், பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் உறுதி அளித்துள்ளார்.பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள இந்திய விமானப் படை தளத்திற்குள், 2ம் தேதி அதிகாலை புகுந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள், கடுமையாக தாக்குதல் நடத்தினர்; இதில், பாதுகாப்பு படையினர் ஏழு பேர் உயிரிழந்தனர். அதேநேரத்தில், பாதுகாப்பு படையினரின் பதிலடியில், நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட ...

சட்டசபை தேர்தல் பிரசாரம் அ.தி.மு.க., இன்று துவக்கம்

Posted: 05 Jan 2016 08:50 AM PST

தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், அ.தி.மு.க., சார்பில், இன்று காலை, 8:15 மணிக்கு, தேர்தல் பிரசாரம் துவக்கப்படுகிறது. தமிழக சட்டசபையின் பதவி காலம், மே மாதம் நிறைவு பெறுகிறது. எனவே, மார்ச் மாதம் துவக்கத்தில், தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த லோக்சபா தேர்தலின் போது, மற்ற கட்சிகள் கூட்டணி குறித்து முடிவு எடுப்பதற்கு முன், முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். அதே பாணியில், சட்டசபை தேர்தல் பணிகளை துவக்க, அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது.வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து, அவர்களிடம், அ.தி.மு.க., அரசின் ...

கோவில்களில் ஆடை கட்டுப்பாடு: கலக்கும் வெளிநாட்டு பயணிகள்

Posted: 05 Jan 2016 09:14 AM PST

திருச்சி: தமிழக கோவில்களில் அமலுக்கு வந்த, ஆடை கட்டுப்பாடு குறித்து வாத பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. ஆனால், முக்கிய கோவில்களுக்கு வெளிநாட்டு பயணிகள் வேஷ்டி, சேலை அணிந்து வருவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்களுக்குள் செல்வோருக்கு, ஆடை கட்டுப்பாடு விதித்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை சமீபத்தில் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து, புத்தாண்டு முதல், தமிழகத்தில் உள்ள, 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில், ஆடை கட்டுப்பாட்டு விதிமுறைகளை, இந்து சமய அறநிலையத்துறை அமல்படுத்தியது. இதையடுத்து, கோவில்கள் முன், ஆடை ...

மின்னல் வேகத்தில் மத்திய குழுவினர்

Posted: 05 Jan 2016 09:29 AM PST

வெள்ள சேதங்களை மதிப்பிட வந்துள்ள மத்திய குழுவினர், நேற்று பகல், 2:00 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் இருந்து புறப்பட்டனர். மதிய உணவுக்கு பின், மாலை, 4:10 மணிக்கு, மயிலாப்பூர் சென்றனர்; சிவசாமி சாலையில், நவம்பர் மாதம் ஏற்பட்ட பள்ளத்தை ஆய்வு செய்தனர்.* மாலை, 6:00 மணிக்கு, வளசரவாக்கம் சுரேஷ் நகருக்கு சென்றனர். சேத விவரத்தை, மாநகராட்சி அதிகாரிகள் விளக்கினர்; பொது மக்களை சந்திக்கவில்லை* விருகம்பாக்கம் வேம்புலியம்மன் கோவில் தெரு, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி. இங்கும் மக்களை சந்திக்காமல், தனியார் பொறியியல் கல்லுாரியில் வைக்கப்பட்டிருந்த, வெள்ள பாதிப்பு ...

'செம்பரம்பாக்கம் திறப்புக்கு நீதி விசாரணை வேண்டும்': கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம்

Posted: 05 Jan 2016 09:30 AM PST

சென்னை, செம்பரம்பாக்கம் ஏரி, முன்னறிவிப்பின்றி திறக்கப்பட்டது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி, சென்னை, சேப்பாக்கத்தில் நேற்று, தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில், கட்சித் தலைவர் கருணாநிதி, பொதுச் செயலர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின், மகளிர் அணி மாநில செயலர் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், 'செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து, அ.தி.மு.க., அரசு விளக்கம் அளிக்க வேண்டும்; நீதி விசாரணை நடத்த வேண்டும்; பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் பாகுபாடின்றி வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும்' என, கோரிக்கை ...

அண்ணா பல்கலை தேர்வு: 'அம்மா' பெயரில் கேள்வி

Posted: 05 Jan 2016 09:41 AM PST

அண்ணா பல்கலையில், பி.இ., மற்றும் பி.டெக்., மாணவர்களுக்கு, மழையால், 'செமஸ்டர்' தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு, தற்போது நடந்து வருகின்றன. இதில், இரு தினங்களுக்கு முன், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப மாணவர்களுக்கு, குறியீடு மற்றும் இணைய பாதுகாப்பு குறித்த, 'கிரிப்டோக்ராபி' மற்றும், 'நெட்வொர்க் செக்யூரிட்டி' என்ற பாடத்தேர்வு நடந்தது. இந்த பாடத்தை, கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் எழுதினர். மொத்தம், 100 மதிப்பெண்களுக்கான இந்த தேர்வில், முதல்கேள்வியே மாணவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.இரண்டு மதிப்பெண்களுக்கான அந்த ...

'பேனர்' விவகாரத்தில் அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

Posted: 05 Jan 2016 09:54 AM PST

சென்னை:அ.தி.மு.க., பொதுக்குழுவுக்காக வைக்கப்பட்ட, 'பேனர், டிஜிட்டல் பேனர்'களில், 290க்கு விண்ணப்பித்த ஒரே நாளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டில் மட்டும், விண்ணப்பித்து எத்தனை நாட்களுக்குள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை தாக்கல் செய்யும்படி, அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.சென்னை, திருவான்மியூர், ராமச்சந்திரா மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில், 2015, டிச., 31ம் தேதி, அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. கல்வி வளாகத்தில் பொதுக்குழு கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து, 'டிராபிக்' ராமசாமி, சட்டப் பஞ்சாயத்து இயக்கம் ...

பிளஸ் 2வுக்கு பொதுத்தேர்வு மார்ச் 4ம் தேதி துவக்கம்: வழக்கத்தை விட முன்னதாக 10ம் வகுப்புக்கு ஆரம்பம்

Posted: 05 Jan 2016 10:54 AM PST

சென்னை: பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை நேற்று வெளியானது. பிளஸ் 2 தேர்வு, மார்ச், 4ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு, மார்ச், 15ம் தேதியும் துவங்குகிறது. பிளஸ் 2 தேர்வு, வழக்கம் போல், மார்ச் முதல் வாரத்தில், 4ம் தேதி துவங்கி, ஏப்ரல், 1ல் முடிகிறது. 10ம் வகுப்புக்கு, வழக்கத்தை விட முன்கூட்டியே, மார்ச், 15ல் தேர்வு துவங்கி, ஏப்., 13ல் முடிகிறது. ஒவ்வொரு தேர்வுக்கும், பல நாள் இடைவெளி அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு அட்டவணையை, அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி நேற்று வெளியிட்டார்.தமிழ் கட்டாயம்: 10ம் வகுப்புக்கு மட்டும், சிறுபான்மை மொழி ...

பூகம்பம் பாதித்த மணிப்பூரில் மீட்புப்பணி தீவிரம்

Posted: 05 Jan 2016 11:02 AM PST

இம்பால் : பூகம்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், மீட்புப்பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

மணிப்பூர், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில், நேற்று முன்தினம் அதிகாலை, ரிக்டர் அளவில், 6.8 புள்ளியுடன் கடும் பூகம்பம் ஏற்பட்டது. பூகம்பம் மையம் கொண்ட மாநிலமான மணிப்பூரில், கட்டட இடிபாடுகளில் சிக்கி, எட்டு பேர் பலியாகினர்; 88 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இவர்களில், 33 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்நிலையில், இரண்டாம் நாளாக நேற்றும், தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள், ...

இந்திய மாணவர்களிடம் கை விலங்கிட்டு விசாரணை

Posted: 05 Jan 2016 02:02 PM PST

ஐதராபாத் : அமெரிக்காவில், கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சேர முயன்ற மாணவர்கள், கை விலங்கிட்டு விசாரிக்கப்பட்ட கொடூரம், அம்பலமாகி உள்ளது.

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில், நாட்டிலேயே அதிகமாக, ஆந்திராவைச் சேர்ந்த மாணவர்கள் சேர்ந்து படித்து வருகின்றனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இரு பல்கலைக்கழகங்களில் முறைகேடுகள் நடப்பதாக கூறி, அந்நாட்டு அரசு அவற்றை கறுப்புப்பட்டியலில், சேர்த்துள்ளது.இந்த விவரம் தெரியாமல், அப்பல்கலைக்கழகங்களில் சேர, அமெரிக்காவுக்கு சென்ற, நுாற்றுக்கணக்கான ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™