Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


இஸ்ரோ அனுப்பிய ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-இ செயற்கைகோள் வெற்றிகரமாக விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டது

Posted: 19 Jan 2016 10:12 PM PST

கடல் ஆராய்ச்சிக்காக இன்று 'இஸ்ரோ' அனுப்பிய ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-இ செயற்கைகோள் வெற்றிகரமாக விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'இஸ்ரோ', செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான

காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நீடிப்பு

Posted: 19 Jan 2016 10:03 PM PST

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் தொடர் அத்துமீறல், இந்தியாவுக்குள் ஊடுருவி நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு, எல்லை வழியாக ஊடுருவத் துடிக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சதி வேலை ஆகியவற்றை முறியடிப்பதற்காக கடுமையாக போராடிவரும் இந்திய

சட்டசபை தேர்தல் கூட்டணி: இளங்கோவன் தலைமையில் இன்று ராகுல் காந்தியுடன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை

Posted: 19 Jan 2016 08:24 PM PST

தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு எந்நேரத்திலும் வெளியாகலாம் என்ற நிலையில் கூட்டணி அமைப்பதற்கான காய்நகர்த்தல்களை மாநில மற்றும் தேசிய அரசியல் கட்சிகள் வெளிப்படையாகவும், ரகசியமாகவும் நடத்தி வருகின்றன.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட்

Posted: 19 Jan 2016 08:10 PM PST

கடல்சார்ந்த ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-இ என்ற செயற்கைகோளுடன் இஸ்ரோ அனுப்பிய பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட் இன்று ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'இஸ்ரோ',

ஐதராபாத் மாணவர் தற்கொலை சம்பவம்: டி.லிட் பட்டத்தை திருப்பிக்கொடுக்க எழுத்தாளர் முடிவு

Posted: 19 Jan 2016 07:19 PM PST

ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த 'தலித்' மாணவர் ரோகித் வெமுலா, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் அச்சுறுத்தல்: முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை பலப்படுத்துங்கள் - மத்திய அரசு எச்சரிக்கை

Posted: 19 Jan 2016 06:50 PM PST

மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு வேண்டுகோள் அனுப்பியுள்ளது. அதில், பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத இயக்கங்களான ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா போன்றவை குடியரசு தினவிழாவையொட்டி இந்தியாவில் முக்கிய பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுப்பிரிவு மூலம்

மத்திய மந்திரிகள் நீக்கம் இல்லை: பா.ஜனதா திட்டவட்டம்

Posted: 19 Jan 2016 06:04 PM PST

ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. படித்து வந்த தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்டதற்கு மத்திய மந்திரி பண்டாரு தத்தாத்ரேயாதான் காரணம் என்று கூறி அந்த பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்த காங்கிரஸ்

பீகார் 10-ம் வகுப்பு தேர்வில் காப்பி அடிக்கும் மாணவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம், பெற்றோர்களுக்கு சிறை

Posted: 19 Jan 2016 04:41 PM PST

பீகாரில் 10-ம் வகுப்பு தேர்வில் காப்பி அடிக்கும் மாணவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் உதவிசெய்யும் பெற்றோர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. பீகாரில் 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த வருடம் மார்ச் 17–ந் தேதி தொடங்கி நடைபெற்றது. அப்போது தேர்வு அறையில் பரீட்சை

ஆன்லைன் ரெயில் டிக்கெட் - ஏஜெண்டுகளை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை

Posted: 19 Jan 2016 04:23 PM PST

ரெயில்வே முன்பதிவு மையங்களில் மட்டுமின்றி, இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளம் மூலமாக ஆன்லைனில் ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. உண்மையான பயணி ஒருவர், தன் குடும்பத்தினர் பற்றிய விவரங்களை பூர்த்தி செய்து, வங்கி பரிவர்த்தனையை முடித்து டிக்கெட் எடுக்க குறைந்தபட்சம் 35 நொடிகள் ஆகிவிடும்.

ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி தே.மு.தி.க. வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்

Posted: 19 Jan 2016 03:50 PM PST

தமிழ்நாட்டில் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு மத்திய அரசு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி அறிவிக்கை வெளியிட்டது. ஆனால் இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இந்திய விலங்குகள் நல வாரியம், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு

டெல்லி செங்கோட்டை தாக்குதல்: தூக்குதண்டனை கைதியின் மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு ஏற்பு

Posted: 19 Jan 2016 03:10 PM PST

2000-ம் ஆண்டு டெல்லி செங்கோட்டையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் உயிர் இழந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி முகமது ஆரிப்புக்கு விசாரணை கோர்ட்டு தூக்குதண்டனை விதித்தது. டெல்லி ஐகோர்ட்டும் தண்டனையை உறுதி செய்தது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம்

சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசு தரப்பில் முக்கிய அம்சங்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்

Posted: 19 Jan 2016 02:47 PM PST

சொத்து குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்பட 4 பேரை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மற்றும் தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

பிரதமர் மோடி மற்றும் மனோகர் பாரிக்கருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் கடிதம்

Posted: 19 Jan 2016 02:42 PM PST

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மனோகர் பாரிக்கருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளின் மிரட்டல் கடிதத்தால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. ஈராக், சிரியாவில் முக்கிய நகரங்களை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள், உலகமெங்கும் கால் பதித்து வருகிறார்கள்.

மும்பை அரசு விருந்தினர் மாளிகையில் ராகுல்காந்தி தங்குவதற்கு அனுமதி மறுப்பா?

Posted: 19 Jan 2016 02:39 PM PST

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி கடந்த 15 மற்றும் 16-ந் தேதிகளில் மும்பையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அந்த இரண்டு நாட்களும் மும்பை 'சயாத்ரி' மாளிகையில் (அரசு விருந்தினர் மாளிகை) ராகுல்காந்தி தங்குவதற்கு அனுமதி கேட்டு மும்பை காங்கிரஸ் கட்சி சார்பில் மராட்டிய மாநில அரசிடம் கோரிக்கை விடப்பட்டது.

பதான்கோட் தீவிரவாதத் தாக்குதலை தடுத்திருக்கலாம்: காஷ்மீர் ஆளுநர்

Posted: 19 Jan 2016 01:44 PM PST

பஞ்சாப் மாநிலம், பதான்கோட்டில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலை முன்கூட்டியே தடுத்திருக்க முடியும் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என்.வோரா தெரிவித்துள்ளார். நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் " பஞ்சாபிலுள்ள

மத்திய அரசின் சார்பில் சென்னையில் தேசிய முதியோர் மருத்துவ மையம்

Posted: 19 Jan 2016 01:39 PM PST

நாட்டில் உள்ள முதியோரின் நலன்களைப் பேணும் வகையில் சென்னையில் உள்ள சென்னை மருத்துவக்கல்லூரி (எம்.எம்.சி.), மற்றும் டெல்லியில் உள்ள அகில இந்திய விஞ்ஞான மருத்துவக்கழகம் (எய்ம்ஸ்) ஆகியவற்றில் தேசிய முதியோர் மருத்துவ மையம் அமைக்கப்படுகிறது.

தலித் மாணவர் தற்கொலை விவகாரம்: சொந்த கட்சிக்கு எச்சரிக்கைவிடுக்கும் பா.ஜ.க. மூத்த தலைவர்

Posted: 19 Jan 2016 11:42 AM PST

தலித் மாணவர் தற்கொலை விவகாரத்தில் முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினருமான சஞ்சய் பஸ்வான் தான் சார்ந்துள்ள கட்சியை வெளிப்படையாக விமர்சித்துள்ளார். ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் அறிவியல் தொழில் நுட்பம் மற்றும்

உலகிலேயே தேயிலை உற்பத்தியில் இந்தியா 2-வது இடம் - இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 8.67% அதிகரிப்பு

Posted: 19 Jan 2016 10:54 AM PST

உலக அளவில் தேயிலையை அதிக அளவில் உற்பத்தி செய்யும் 2-வது நாடாக இந்தியா உள்ளது. எகிப்து, பாகிஸ்தான், பிரிட்டன் நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து சிடிசி கிரேடு தேயிலை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதேபோல், ஈராக், ஈரான் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு ஆர்தோடக்ஸ் ரக தேயிலையும் ஏற்றுமதியாகி வருகிறது.

கெஜ்ரிவால் மீது மை வீச்சிய பெண் சிறையில் அடைப்பு

Posted: 19 Jan 2016 10:12 AM PST

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது மை வீசிய பெண் 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லியில் அளவுக்கு அதிகமாக உள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் டெல்லி மாநில அரசு தீவிர முயற்சி

அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-வது இடம் - கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2.36 லட்சம்

Posted: 19 Jan 2016 08:59 AM PST

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அதிகளவில் கோடீஸ்வரர்களை கொண்ட நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டிற்கான ஆசியா பசிபிக் வெல்த் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இதில், ஒரு மில்லியன்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™