Tamil Star |
- கியூபெக் பயங்கரவாதத்திற்கு அடிபணியாது – கியூபெக் மாகாண முதல்வர்
- பயங்கரவாதக் குற்றச்சாட்டிலிருந்து கனேடியர் ஒருவரை விடுவித்தது ஐக்கிய அரபு சிற்றரசு
- ஈற்றோபிக்கோ பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் மருத்துவமனையில்
- ஐ.எஸ் தொடர்பான பாரிஸ் கூட்டத்தில் கலந்துகொள்ள கனடாவிற்கு அழைப்பில்லை
- உடல் உஷ்ணத்தை தணிக்கும் சின்ன வெங்காயம்
- வயிற்றுப் புண், பல் வலியை குணப்படுத்தும் கொய்யா இலைகள்
| கியூபெக் பயங்கரவாதத்திற்கு அடிபணியாது – கியூபெக் மாகாண முதல்வர் Posted: 19 Jan 2016 08:49 PM PST
கடந்த வியாழக்கிழமை இந்தோனேசியாவின் தலைநகர் யகாத்தாவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒருவரும், வெள்ளிக்கிழமை மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான பெர்கீனா ஃபாசோவில் இடம்பெற்ற தாக்குதலில் 6 பேரும் உயிரிழந்தனர். இந்த நிலையிலேயே பயங்கரவாதத் தாக்குதல் குறித்து கமது கண்டனைத்தை வெளியிட்ட கியூபெக்கின் முதல்வர், கியூபெக் பயங்கரவாதத்திற்கு அடிபணியாது என்றும் கூறியுள்ளார். கியூபெக் நகரில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய கியூபெக் முதல்வர யகார்த்தாவிலும்,பெர்கீனா ஃபாசோவிலும் இடம்பெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட ஆறு கியுபெக் வாசிகளையும் நினைவுகூர்ந்துள்ளார். யகார்த்தாவில் உயிரிழந்த அமீர் குவாலி, செவிப்புலனற்றோருக்கு உதவும் துறையில் ஒரு சிறந்த நிபுனர் என்பதுடன், ஒரு குடும்பத் தலைவர் என்பதையும், பலநாடுகளுக்கும் சென்று உதவி தேவைப்படுவோருக்கு உதவிகளை வழங்குவதில் விரும்பம் கொண்டவர் எனவும் கியூபெக் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார். The post கியூபெக் பயங்கரவாதத்திற்கு அடிபணியாது – கியூபெக் மாகாண முதல்வர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பயங்கரவாதக் குற்றச்சாட்டிலிருந்து கனேடியர் ஒருவரை விடுவித்தது ஐக்கிய அரபு சிற்றரசு Posted: 19 Jan 2016 08:45 PM PST
சாலிம் அலராடி என்ற அந்த கனேடியர் ஐக்கிய அரபு இராட்சிய அதிகாரிகளால் ஒருவருடத்திற்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தார். பயங்கரவாத அமைப்புக்கு நிதி வழங்கியமை, பயங்கரவாத அமைப்புக்கு உதவியமை, பயங்கரவாத அமைப்புடன் சேர்ந்து இயங்கியமை ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்ததுடன், கடந்த ஒருவருடத்திற்கு மேலாக அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இதேவேளை தடுத்து வைத்திருப்பதற்கான காரணம் நீண்டகாலமாக அவரின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்படவி்லை என்றும், அவர் சிறையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், ஐக்கிய அரசு சிற்றரசு மீது குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டிருந்தன. இது தொடர்பில் அந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் நேற்று வழக்கு விசாரணை நடைபெற்றிருந்தது. எனினும் நேற்றைய இந்த விசாரணைகளில் கலந்துகொள்ள தனக்கோ, தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியரின் உறவினருக்கோ அனுமதி வழங்கப்படவில்லை என தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அதேவேளை குறித்த கனேடியருடன் மேலும் இரண்டு அமெரிக்கர்களும் இந்த வழக்கில விசாரிக்கப்பட்டுவரும் நிலையில், ஐக்கிய அரசு சிற்றரசுக்கான கனேடிய தூதுவரும், அமெரிக்காவின் இரண்டு இராஜதந்திரிகளும் இந்த வழக்கு விசாரணையை அவதானித்ததாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார். இந்த நிலையிலேயே குறித்த கனேடியர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுககளில் இருந்து அவரை மீது ஐக்கிய அரபு சிற்றரசு விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. The post பயங்கரவாதக் குற்றச்சாட்டிலிருந்து கனேடியர் ஒருவரை விடுவித்தது ஐக்கிய அரபு சிற்றரசு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஈற்றோபிக்கோ பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் மருத்துவமனையில் Posted: 19 Jan 2016 04:46 PM PST
Lake Shore Boulevard மற்றும் 11வது வீதி என்பவற்றுக்கு அருகில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆபத்தான காயங்களுக்க உள்ளான ஒருவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் காவல்த்துறையினர் தகவல் வெளியிடுகையில், குறித்த சம்பவம் இடம்பெற்ற அடுக்குமாடிக் குடியிருப்பின் அடித் தளத்தில் குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் அவதியுற்றிருந்தார் என தெரிவித்துள்ளனர். காயமடைந்த 20 வயது மதிக்கத் தக்க அந்த இளைஞன் உடனடியாகவே மருத்துவமனைக்கு கொண்டு செல்லபடப்டடிருந்தார் என அவசர மருத்துவப் பிரிவினர் கூறியுள்ளனர். எனினும் இந்த துப்பாக்கிச் சூட்டு் சம்பவம் தொடர்பிலான சந்தேக நபர் குறித்த தகவல்கள் எதனையும் காவல்த்துறையினர் வெளியிடவில்லை. இந்த நிலையில் பகுதியில் உள்ள கண்காணிப்புப் கருவியில் பதிவானவற்றை ஆராய்வதற்கு காவல்த்த்தறை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் தகவல்கள் எதுவும் தெரிந்தால் காவல்த்துறையினருக்கு அல்லது குற்த்தத் தடுப்புப் பிரிவினருக்கு தெரிவிக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. The post ஈற்றோபிக்கோ பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் மருத்துவமனையில் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐ.எஸ் தொடர்பான பாரிஸ் கூட்டத்தில் கலந்துகொள்ள கனடாவிற்கு அழைப்பில்லை Posted: 19 Jan 2016 09:13 AM PST
பல நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்துகொள்ளும் அந்த கூட்டத்திற்கு கனடாவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நாளை புதன்கிழமை இடம்பெறவுள்ள குறித்த கூட்டத்தில் கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் கலந்துகொள்ளவில்லை என்பதை கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் Harjit Sajjan அவர்களின் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு எதிரான தாக்குதல்களில் இருந்து கனேடியப் போர் விமானங்கள் மீட்டுக்கொள்ளப்படுகின்றமைக்கும், தற்போது பாரிசில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள கனடாவிற்கு அழைப்பு விடுக்கப்படாமைக்கும் எத்தகைய தொடர்பு இல்லை என்றும் கனடாவின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாளை நடைபெறவுள்ள அந்த கூட்டத்தில் அமெரிக்கா, பிரித்தானியா, யேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் கனேடிய வெளியுறவு அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் கருத்து வெளியிடுகையில், குறித்த இந்த ஏழு நாடுகளும் அடிக்கடி கூடிக் கலந்துரையாடுவது வழமையான ஒன்று என்றும், அது ஆச்சரியமான விடயம் அல்ல எனவும் கருத்து வெளியிட்டுள்ளார். எனினும் இந்த முறை அந்த நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர் என்பது மட்டுமே வேறுபாடானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பலமான ஒரு கூட்டணி நாடாக கனடாவை கருதாத நிலை ஏற்பட்டமையே இதற்கு காரணம் என பழமைவாதக் கட்சியின் பாதுகாப்புத் துறை விமர்சகர் ஜேம்ஸ் பேசன் கூறியுள்ளார். The post ஐ.எஸ் தொடர்பான பாரிஸ் கூட்டத்தில் கலந்துகொள்ள கனடாவிற்கு அழைப்பில்லை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| உடல் உஷ்ணத்தை தணிக்கும் சின்ன வெங்காயம் Posted: 19 Jan 2016 06:56 AM PST
நீர்க்கடுப்பால் பாதிக்கப்பட்ட நபர்கள் ஒரு சிறிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்றுவிடும். இதேபோன்று வெயில் காலத்தில் உடலில் கட்டிகள் தோன்றும், இதற்கு, சிறிய வெங்காயத்தை நசுக்கி, சாறு பிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் வெகு விரைவில் நிவாரணம் கிடைக்கும். உடல் சூட்டால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிறிய வெங்காயத்தை துண்டுகளாக்கி பசு நெய்யில் வதக்கிச் சாப்பிட்டால் உடல் சூடு தணியும். வெங்காயத்துடன் வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். வெங்காய சாற்றை மோரில் கலந்து குடித்தால், இருமல் குறையும். வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச்சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வந்தால் பல்வலி, ஈறுவலி குறையும். வெங்காயச் சாற்றையும், தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால், சீதபேதி நிற்கும். வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும். வெங்காயத்தில் குறைந்த கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயம் சாப்பிடலாம். வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும். தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் 3 வேளை சாப்பிட்டால் நுரையீரல் சுத்தமாகும். தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து, வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இருதுண்டாக நறுக்கி தேய்த்த்தால் முடி வளரும். The post உடல் உஷ்ணத்தை தணிக்கும் சின்ன வெங்காயம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வயிற்றுப் புண், பல் வலியை குணப்படுத்தும் கொய்யா இலைகள் Posted: 19 Jan 2016 06:51 AM PST
மேலும் இதில் பாலிஃபீனால்கள், கரோட்டினாய்டுகள், ப்ளேவோனாய்டுகள் மற்றும் டானின்கள் இருப்பதால், பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் 30 கிராம் கொய்யா இலையை, ஒரு கையளவு அரிசி மாவுடன் சேர்த்து 1-2 டம்ளர் நீரில் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வர வயிற்றுப்போக்கிற்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். செரிமான பிரச்சனை இருந்தால் கொய்யா இலையின் டீயை குடித்தால் செரிமான நொதிகள் தூண்டப்பட்டு செரிமானம் நடைபெறும். கொய்யா மரத்தின் இளம், புதுக் கிளைகளின் இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். நீரிழிவு நோய் இருப்பவர்கள் கொய்யா இலையைக் கொண்டு டீ தயாரித்து குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம். அதிலும் இந்த டீயை தொடர்ந்து 12 வாரங்கள் குடித்து வந்தால் இரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம். ஆராய்ச்சி ஒன்றில் தொடர்ந்து மூன்று மாதங்கள் கொய்யா இலை டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் குறைந்து நல்ல கொழுப்புக்களின் அளவு பராமரிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. கொய்யா இலைகளை கொதி நீரில் போட்டு கஷாயமாக்கிக் குடித்தால், உதிரப் போக்கு தடைபடும். மேலும் கொய்யா இலை கஷாயத்தை தினமும் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தைராய்டு சுரப்பு சமநிலைக்கு வரும். கொய்யாப் பழம் மலச்சிக்கலைப் போக்கும். கொய்யா இலை கஷாயம் வாந்தி-பேதியைத் தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் கொய்யா இலையைக் காய்ச்சி கொப்பளிக்கலாம். கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகின்றன. கொய்யா இலைகளை வாயில் போட்டு மென்றால், வயிற்றுப் புண், பல் வலி நீங்கும். The post வயிற்றுப் புண், பல் வலியை குணப்படுத்தும் கொய்யா இலைகள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

கியூபெக் பயங்கரவாதத்திற்கு அடிபணியாது என கியூபெக் மாகாண முதல்வர் பிலிப் கோலியாட் தெரிவித்துள்ளார்.
கனேடியர் ஒருவர் மீதான பயங்கரவாதக் குற்றச்சாட்டை ஐக்கிய அரபு சிற்றரசு விடுவித்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று செவ்வாய்கிழமை அதிகாலையில் ஈற்ரோபிக்கோ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அனைத்து வகையான சமையலிலும் முக்கிய இடம்பிடித்துள்ளது வெங்காயம்.
கொய்யா இலையில் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளதால் வயிறு மற்றும் பல் சம்மந்தமான பிரச்னைகளுக்கு மருந்தாகிறது.