Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பிறப்புத் துறப்பு.

Posted: 18 Jan 2016 01:04 PM PST

பிறப்புத் துறப்பு உயர்ந்தவன் தாழ்ந்தவன் உண்மையில் எப்படி? உருவத்தாலா? என்றால் இல்லை உள்ளத்தால்தான் உயர்வும் தாழ்வும். பருவத்தாலா? என்றால் இல்லை பழக்கத்தால்தான் உயர்வும் தாழ்வும் கருவின் மூலமா? என்றால் இல்லை கர்மத்தின் மூலமே உயர்வும் தாழ்வும். பிறப்பைத் துறப்பாய் செயலில் சிறப்பாய் ச.சந்திரசேகரன்

கள்ளினும் காமம் பெரிது

Posted: 18 Jan 2016 12:46 PM PST

சிவந்த நிறம் உனக்கு இல்லையென்றாலும் நீ தொட்டால் ஒட்டிக்கொள்ளும் கருஞ்சாந்து நிறமல்ல ! அண்ணாந்து பார்க்கும் உயரம் இல்லையென்றாலும் நீ குனிந்து பார்க்கும் அளவுக்குக் குட்டையல்ல ! சுசீலாவின் குரல் உனக்கு இல்லையென்றாலும் மீண்டும் கேட்கத் தூண்டும் சுகந்தமான குரல் உனக்கு ! மருண்டு நோக்கும் மானின் விழிகள் இல்லையென்றாலும் கண்டவுடன்  இழுக்கும் காந்த விழிகள் உனக்கு ! முத்துப்பற்கள் உனக்கு இல்லையென்றாலும் பார்த்தவரைப் பரவசமாக்கும் பச்சரிசிப் பல்வரிசை உனக்கு ! அன்னத்தின் நடை உனக்கு ...

தாயின் அன்பு

Posted: 18 Jan 2016 11:01 AM PST

மனதை மயக்கும்  சிரிப்பு அக்குழந்தையிடம்  இல்லை!  அழகு குழந்தை  ஆண்டவன் கொஞ்சம்  கோவத்தில் படைத்து  விட்டான் போலும்!  மூளையில் கோளாறு  முகம் பார்த்து  சிரிக்க மறுக்கும் குழந்தை!  தாயோ  முகமதையே பார்த்து  உச்சி முகர்ந்திடுவாள்!  கண்கள் நேரிடையாக  பார்க்க தெரியாத குழந்தை!  தாயோ  கண்ணார கண்களையே  நோக்கிடுவாள்!  கைப்பிடிக்க தெரியா குழந்தை!  தாய் அவளோ கைதனையே  தன் குழந்தைக்கு  தந்திடுவாள்!  கால் தடுமாறும் குழந்தை  தாய் அவளோ  ஊன்று கோலாய்  உடனிருப்பாள்!  காலங்கள் ...

மின்னஞ்சலில் மின்னியது

Posted: 18 Jan 2016 10:46 AM PST

மின்னஞ்சலில் மின்னியது

மின்னஞ்சலில் மின்னிய செய்தி .



கனவுகள் கலையாது
திட்டங்கள் சிதறாது
விதியும் விளையாடாது
விரும்பியதும் கிட்டிடும்
.
.
.
.
.
உனையே நீ
நம்பினால் மட்டுமே .

(ஆங்கிலத்தில் வந்த quote ,
கவிதை உருவில் ........ரமணியன் )

குழந்தை தூக்கி எறிநத கைப்பேசி

Posted: 18 Jan 2016 08:42 AM PST

குழந்தை தூக்கி எறிநத கைப்பேசி குழந்தை ஏன் தூக்கிப்போட்டது கைப்பேசியை? அப்பா சொன்னார் : குழந்தைக்கு என்ன தெரியும்? குழந்தைன்னா அப்படித்தான் இருக்கும். அம்மா சொன்னார்: அவன் விளையாடுற பொம்மைப்போல கைக்கு அடக்கமா இல்லை அதனால்தான். மனைவி சொன்னாள்: எது கையில் கிடைத்தாலும் தூக்கி வீசுவதே அவன் இயல்பு. நான் நினைத்தேன்: வளர்ந்து பொருளின் மதிப்பு புரியும்போது தூக்கிப்போட மாட்டான். குழந்தை மனதுக்குள் நினைத்தது: இனிமே Whatsapp facebook twitter இல்லை.   அப்பா, நான் அழுதா ஒழுங்கா ...

(நிஜம் ) காணும் பொங்கல்

Posted: 18 Jan 2016 08:25 AM PST

(நிஜம் ) காணும் பொங்கல் - எந்தன் கவிதை

வாட்ஸ்ஹேப்பில் வணக்கம் சொல்லும் வாலிப நெஞ்சங்களே
வாருங்கள் நிஜம் காண்போம்
காணும் பொங்கல்
நிஜம் காணும் பொங்கல்
உறவினரை உண்மையாய் காணும் பொங்கல்
நண்பர்களின் நலமறிய காணும் பொங்கல்
கூகுள் வரைபடத்தில் காணாமல் கண்ட கண்டங்களை நிஜமாய் காணும் பொங்கல்
இதுதான் காணும் பொங்கல்
கண்டு களிப்புறும் பொங்கல்
ச.சந்திரசேகரன்

சென்னை மாணவர் ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ--சி.ஏ. இறுதி தேர்வில் சாதனை

Posted: 18 Jan 2016 04:42 AM PST

சி.ஏ. இறுதி தேர்வில் சென்னை மாணவர் ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். சி.ஏ. எனப்படும் கணக்கு தணிக்கையாளர் படிப்புக்கான தேர்வை இந்திய கணக்கு தணிக்கையாளர் நிறுவனம் நடத்தி வருகிறது. சிஏ இறுதி தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்டன. இந்த நிலையில், தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதன்படி, சென்னையைச் சேர்ந்த ஆர். ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவர் 800-க்கு 595 மதிப்பெண் ...

மாயம் 20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை

Posted: 18 Jan 2016 12:35 AM PST

மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை அதிகாரிகள் அதிர்ச்சி தமிழக அரசின் நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவைகள் நிறுவன பெயரில் பொதுத்துறை வங்கி ஒன்றில், 'நிரந்தர வைப்புத் தொகை' என அழைக்கப்படும் 'பிக்சட் டிபாசிட்'டில் போடப்பட்ட 23 கோடியில் 20 கோடி ரூபாயை நான்கு பேர் மிகவும் லாவகமாக வேறு வங்கிக்கு மாற்றி அபகரித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியானது குறிப்பிட்ட நோக்கத்துக்கு பயன்படுத்தப்படும் வகையில், பொதுத்துறை வங்கிகளில் ...

காசி மட தலைவர் முக்தியடைந்தார்

Posted: 17 Jan 2016 11:02 PM PST

-
ஹரித்துவார் :
ஸ்ரீ காசி மடத்தின் தலைவர் சுதீந்திரநாத் தீர்த்த சுவாமிஜி(92)
சனிக்கிழமை(ஜன.,16) நள்ளிரவு 1.15 மணிக்கு
ஹரித்துவாரில் உள்ள வியாசர் ஆசிரமத்தில் முக்தியடைந்தார்.

அவர் கடந்த 1949ம் ஆண்டில் காசி மட தலைவராக பொறுப்பேற்றிருந்தார்.
-
-------------------

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Posted: 17 Jan 2016 06:35 PM PST

µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு

µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை


µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி

"குடியரசுதின நாளில் கொல்வோம் " அன்னா ஹசாரேவுக்குமா மிரட்டல் ?

Posted: 17 Jan 2016 05:35 PM PST

புதுடில்லி: காந்தியவாதியான சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருவதுடன் அவருக்கான பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது . ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி நாடு முழுவதும் பெரும் உணர்வலையை எழுப்பியவர் அன்னா ஹசாரே. அறவழியில் நடந்த இவரின் போராட்டத்திற்கு பணிந்து காங்கிரஸ் அரசு லோக்பால் மசோதா கொண்டு வர முன் வந்து பார்லிமென்ட்டில் தாக்கல் செய்தது . போராட்டம் நடத்தும் நேரத்தில் ...

பதவியை நம்பி தொழிலை மறந்து விடாதே!

Posted: 17 Jan 2016 05:29 PM PST

- - சுறுசுறுப்பு, அர்ப்பணிப்பு என்றால் அது சூர்யாதான். சொந்த பேனரில் சோஷியல் சர்வீஸ், மற்றவர்களுக்கு மசாலா அதிரடி என்று தயாரிப்பாளரின் மனம் நோகாமல் தன் மார்க்கெட்டை படத்துக்குப் படம் எவரெஸ்ட்டில் ஏற்றி வருபவர் - 24 முடிந்த கையோடு எஸ்.3 இன்ட்ரோவில் மிரட்டிக் கொண்டிருப்பவரை ஒரு மென்மையான தருணத்தில் சந்தித்தோம்... - 24 பட அனுபவம் எப்படி இருக்கு? - இந்த மாதிரி ஸ்கிரிப்ட் கிடைக்கறது ரொம்ப அபூர்வம். சயின்ஸ் அண்ட் த்ரில்லர்ன்னு எல்லா அம்சங்களும் பொருந்தி இருக்கு. இது பாகுபலி, ...

பித்தப் பூக்கள்...!!

Posted: 17 Jan 2016 04:43 PM PST

காதல் கா கசம்….!!
1.
அண்டா கா கசம் அபு கா கசம்
அன்பு கா கசம் காதல் கா கசம்
திறந்திடு சீசே..
இப்பொழுது என்னிடம்
ஒப்படைத்திடு
அவளை என் வசம்.
2.
பாதுகாப்பாக இதய லாக்கரில்
பூட்டி வைத்திருக்கிறாயே
உன் தங்கம்
மீட்டுவிட்டாயா? அல்லது
எவருக்கேனும் கோட்டை
விட்டு விட்டாயா?
உருகி உருகி
வேறு நகையானதோ?
உன் சொ ( ந்த ) க்க தங்கம்.
*


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™