Tamil News | Online Tamil News |
- அனைத்து நாடுகளிலும் தனிநபர் வருமானத்தில் வேறுபாடு அதிகரிப்பு: உலக பொருளாதார அமைப்பு அறிக்கையில் தகவல்
- ஈரான் விவகாரத்தில் இந்தியாவுக்கு 'ஜாக்பாட்'
- மருந்து சோதனைக்கும் சிக்கல் விலங்குகளை பயன்படுத்த எதிர்ப்பு
- சோம்நாத் கோவில் தங்கத்தை குறிவைக்கும் மத்திய அரசு
- நீர்நிலைகளில் கட்டுமானம் கலெக்டர்களுக்கு உத்தரவு
- அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் கோர்ட்டில் கருணாநிதி... ஆஜர்!
- தமிழக சட்டசபை நாளை கூடுகிறது கருணாநிதி, பங்கேற்பாரா?
- 20ம் தேதி முதல் விருப்ப மனு முதல்வர் ஜெ., அறிவிப்பு
- கேரள மார்க்சிஸ்ட் கட்சியில் 'கதகளி'அச்சு - பினராயி விஜயன் 'ஆட்டம்'
- பரம்பிக்குளத்திலும் கேரளா கெடுபிடி: தமிழக அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு
- கடந்த டிசம்பரில் ஏற்றுமதி ரொம்ப 'வீக்'
| Posted: 18 Jan 2016 08:22 AM PST டாவோஸ்: இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றிலும், வருமானத்தில் ஏற்றமும், தாழ்வும், வேறுபாடு வீதமும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 62 தனிநபர்களின் வசம் உள்ள சொத்துகள், உலக மக்கள்தொகையில், 50 சதவீதம் பேரிடம் உள்ள சொத்துக்கு சமமாக உள்ளது என்பது போன்ற பல விவரங்களை, உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் அறிக்கையாக வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில், உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர மாநாடு, இன்று துவங்கி, 23ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், உலக நாடுகளின் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்க ... |
| ஈரான் விவகாரத்தில் இந்தியாவுக்கு 'ஜாக்பாட்' Posted: 18 Jan 2016 08:23 AM PST புதுடில்லி:அணு ஆயுத திட்டங்களை, ஈரான் கைவிட சம்மதித்ததால், அதன் மீதான பொருளாதார தடைகளை, உலக நாடுகள் தளர்த்தியுள்ளன. இந்த அதிரடி திருப்பத்தால், இந்தியாவுக்கு பிரகாசமான புதிய வாய்ப்புகள் உருவாகி உள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வந்த ஈரான், அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டதால், அந்த நாட்டின் மீது, பல்வேறு நாடுகள் பொருளாதார தடை விதித்தன. இது தொடர்பாக, நீண்ட காலமாக நடந்த பேச்சு வார்த்தையை தொடர்ந்து, அணு ஆயுத திட்டங்க ளை கைவிட, ஈரான் சம்மதித்துஉள்ளது.இதையடுத்து, அந்த நாட்டுக்கு விதித்த தடைகளை, அமெரிக்கா ... |
| மருந்து சோதனைக்கும் சிக்கல் விலங்குகளை பயன்படுத்த எதிர்ப்பு Posted: 18 Jan 2016 08:30 AM PST புதுடில்லி: ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக களமிறங்கிய விலங்குகள் நல அமைப்பான 'பீட்டா', அடுத்த அதிரடியாக, பூச்சிக்கொல்லி மருந்துகளை சோதனை செய்ய, விலங்குகளை அதிக அளவில் பயன்படுத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 'பீட்டா இந்தியா' அமைப்பினர் கூறியதாவது: பயிர்களுக்கான பூச்சிக்கொல்லி மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்கள், அவற்றில், உடலுக்கு கேடு விளைவிக்கும், ரசாயன அளவை சோதனை செய்ய, விலங்குகளை பயன்படுத்துகின்றன. இதில், எலிகள், பன்றிகள், பறவைகள் என, பல உயிரினங்கள் பலியாகின்றன. 'சோதனைக்கு பயன்படுத்தப்படும் விலங்குகளின் எண்ணிக் ... |
| சோம்நாத் கோவில் தங்கத்தை குறிவைக்கும் மத்திய அரசு Posted: 18 Jan 2016 08:43 AM PST ஆமதாபாத் :மத்திய அரசின், தங்கத்தை பணமாக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய, குஜராத்தில் உள்ள பிரசித்தி பெற்ற, சோம்நாத் கோவில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. தங்கத்தை, வங்கிகளில், 'டிபாசிட்' செய்து, அதற்கான வட்டியை பெறும் திட்டம், தங்கத்தை பணமாக்கும் திட்டம் என, அழைக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, சமீபத்தில், இந்த திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்துக்கு, மக்களிடையே, போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என, தகவல் வெளியானது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அறங்காவலர்களாக உள்ள, குஜராத் மாநிலத்தில் உள்ள ... |
| நீர்நிலைகளில் கட்டுமானம் கலெக்டர்களுக்கு உத்தரவு Posted: 18 Jan 2016 09:25 AM PST சென்னை:'நீர்நிலைகளில், எந்த கட்டுமானமும் மேற்கொள்ள அனுமதிக்கவில்லை என விரிவான மனு தாக்கல் செய்ய வேண்டும்' என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஈரோடு மாவட்டம், பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நல சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ' கதிரம்பட்டி கிராமத்தில் பெரும்பள்ள ஓடை உள்ளது. இதிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கில்,உயர் நீதிமன்றம் 2009ல் உத்தரவு பிறப்பித்தது. ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பெரும்பள்ள ஓடையை துார்வாரவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் ... |
| அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் கோர்ட்டில் கருணாநிதி... ஆஜர்! Posted: 18 Jan 2016 09:45 AM PST தமிழக அரசு தொடர்ந்த அவதுாறு வழக்கு விசாரணைக்காக, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று ஆஜரானார். பின், நிருபர்களை சந்தித்த அவர், ''அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்,'' என, மீண்டும் வேண்டுகோள் விடுத்தார். 'நான்கு ஆண்டுகளில் ஜெயலலிதா சாதித்தது என்ன?' என்ற தலைப்பில், தி.மு.க., பத்திரிகையான, 'முரசொலி'யில், கட்சித் தலைவர் கருணாநிதி, 2015 நவம்பரில் கட்டுரை எழுதியிருந்தார். இந்தக் கட்டுரை, முதல்வரின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறி, கருணாநிதி, முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோர் மீது, ஜெயலலிதா சார்பில், மாநகர அரசு ... |
| தமிழக சட்டசபை நாளை கூடுகிறது கருணாநிதி, பங்கேற்பாரா? Posted: 18 Jan 2016 10:09 AM PST தமிழக சட்டசபை நாளை கூடுகிறது; இக்கூட்டத்தொடரில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பங்கேற்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில், விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டம் நாளை கூடுகிறது. காலை 10:30 மணிக்கு, கவர்னர் ரோசையா உரை நிகழ்த்துகிறார். அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், தி.மு.க., தலைவர் கருணாநிதி, சட்டசபைக்குவரவில்லை.'சட்டசபையில் தன் இருக்கைக்கு வந்து செல்ல, போதிய வசதி செய்து கொடுத்தால், சபைக்கு வர தயார்' என, கருணாநிதி அறிவித்திருந்தார். அரசு போதிய வசதி செய்து தராததால், சபைக்கு வரவில்லை என, தி.மு.க.,வினர் ... |
| 20ம் தேதி முதல் விருப்ப மனு முதல்வர் ஜெ., அறிவிப்பு Posted: 18 Jan 2016 11:10 AM PST சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.,வினரிடம் இருந்து, நாளை முதல் விருப்ப மனு பெறப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலின் போது, அனைத்து கட்சிகளுக்கும் முன்பாக, தனித்து போட்டி என, அ.தி.மு.க., அறிவித்தது. மற்ற கட்சிகள் கூட்டணியை முடிவு செய்யும் முன், வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை வெளியீடு முடித்து, முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை, முதல்வர் ஜெயலலிதா துவக்கினார். அதே பாணியில், சட்ட சபை தேர்தலையும் சந்திக்க அவர் முடிவெடுத்துள்ளார். அதன்படி, சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட ... |
| கேரள மார்க்சிஸ்ட் கட்சியில் 'கதகளி'அச்சு - பினராயி விஜயன் 'ஆட்டம்' Posted: 18 Jan 2016 11:14 AM PST திருவனந்தபுரம்,: சட்டசபை தேர்தலை விரைவில் சந்திக்க உள்ள கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில், முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கும், கட்சியின் மூத்த தலைவர் பினராயி விஜயனுக்கும் இடையே, கடும் போட்டி நிலவுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு, கேரளா, திரிபுரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே செல்வாக்கு உள்ளது. கேரளாவில், காங்கிரசும், மார்க்சிஸ்ட் கட்சியும், மாறி மாறி, ஆட்சிக்கு வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், அடுத்த சில மாதங்களில் இங்கு, சட்டசபை ... |
| பரம்பிக்குளத்திலும் கேரளா கெடுபிடி: தமிழக அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு Posted: 18 Jan 2016 11:24 AM PST முல்லைப் பெரியாறு, சிறுவாணி அணைகளுக்கு தமிழக அதிகாரிகள் செல்ல, கெடுபிடி செய்வதை போல, பரம்பிக்குளம் அணைக்குச் செல்லவும், கேரள வனத்துறையினர் கெடுபிடி செய்கின்றனர். பரம்பிக்குளம் அணை மற்றும் துணை மண் அணைகளான துாணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய அணைகள், கேரள வனப்பகுதியில் அமைந்துள்ளன. இவற்றை, தமிழக பொதுப்பணித் துறையினர் பராமரிக்கின்றனர். இந்த வனப்பகுதிக்கு, தமிழக வனப்பகுதியைக் கடந்துதான் செல்ல வேண்டும்.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, டாப்ஸ்லிப் வனச்சரகத்தைக் கடந்து, பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்துக்கு, ஆண்டு முழுவதும் ... |
| கடந்த டிசம்பரில் ஏற்றுமதி ரொம்ப 'வீக்' Posted: 18 Jan 2016 02:18 PM PST
புதுடில்லி: நாட்டின் ஏற்றுமதி, தொடர்ந்து, 13வது மாதமாக, டிசம்பரில், 14.75 சதவீதம் பின்னடைவை சந்தித்து, 1.46 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது. உலக நாடுகளில் பெட்ரோலியம், பொறியியல், வேளாண் விளை பொருட்கள், நவரத்தினங்கள், தங்க நகைகள் உள்ளிட்டவற்றுக்கான தேவை குறைந்துள்ளதால், இந்தியாவின் ஏற்றுமதி சரிவை சந்தித்து வருகிறது. டிசம்பரில், அரிசி, முந்திரி, எண்ணெய் புண்ணாக்கு, எண்ணெய் வித்துக்கள், கடல் உணவுப் பொருட்கள், தோல் பொருட்கள், பருத்தி நுாலிழை, ஜவுளி ஆகியவற்றின் ஏற்றுமதியும் குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டில், ஏப்., - டிச., ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 19,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |