Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “உயிர் ஆபத்தான வழக்கு, அச்சப்படாதே ...” plus 16 more

Tamilwin Latest News: “உயிர் ஆபத்தான வழக்கு, அச்சப்படாதே ...” plus 16 more

Link to Lankasri

உயிர் ஆபத்தான வழக்கு, அச்சப்படாதே ...

Posted: 19 Dec 2015 04:50 PM PST

செம்மணி புதைகுழி வழக்கிற்கு நான் சென்ற போது, சைக்கிளில் சென்று கொண்டிருந்த என் ஆசானிடம் ஆசீர்வாதம் வாங்குபோது இது ஆபத்தான வழக்கு. அச்சப்படாதே கடமையை செய். ஆபத்து வரும் தான். ஆனால் கடவுள் இருக்கிறான் என எனது ஆசான் தெரிவித்தார் என்று கண் கலங்கி அழுதார் யாழ். உயர் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்.

சீன நிறுவனம் இணங்கினால் ...

Posted: 19 Dec 2015 04:08 PM PST

சீன நிறுவனம் இணங்கினால் போட்சிட்டி நிர்மாணத்தை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சஜித்தை நீக்குமாறு ரணிலுக்கு ...

Posted: 19 Dec 2015 03:58 PM PST

சஜித் பிரேமதாஸவை கட்சியின் உதவி தலைவர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

மூதூர் தொண்டு நிறுவன ஊழியர்கள் ...

Posted: 19 Dec 2015 03:51 PM PST

மூதூரில் 17 தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் மற்றும் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை தொடர்பான விசாரணைகளுக்கு, இராணுவத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்காமை காரணமாக தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சியின் உறுதிமொழிகளை ...

Posted: 19 Dec 2015 03:47 PM PST

நல்லாட்சி அரசாங்கம் மக்கள் வழங்கிய ஒருவருட உறுதிமொழிகள் தொடர்பில் ஞாபகமூட்டும் வகையில் ஜேவிபி எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதியன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

ஜனவரிக்கு முன்னர் சஜின் வாஸுக்கு ...

Posted: 19 Dec 2015 03:43 PM PST

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன மற்றும் துறைமுக அதிகாரசபையின் முன்னாள் தலைவர் பிரியத் பந்து விக்கிரம ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவுள்ளார்.

லசந்த விக்கிரமதுங்கவின் குறிப்பு ...

Posted: 19 Dec 2015 03:41 PM PST

சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் குறிப்பு புத்தகம் தொலைந்தமை தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை என்று முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜெயந்த விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.

தாஜூதீனின் மரணம் தொடர்பில் ...

Posted: 19 Dec 2015 03:39 PM PST

முன்னாள் ரக்பி வீரர் தாஜூதீனின் மரணம் தொடர்பில் தாஜூதீனின் தரப்பில் வாக்குமூலம் வழங்க முன்வந்த சாட்சி ஒருவரை காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் விடுதலைப் புலிகளுக்கு ...

Posted: 19 Dec 2015 01:50 PM PST

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கொழும்பில் இரண்டு பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் இருப்பதாக புலனாய்வுத்துறையினரை மேற்கோள் காட்டி திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு ...

Posted: 19 Dec 2015 01:09 PM PST

மேல் மாகாணத்தில் விசேட டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எங்கே போகிறது மேற்கிந்திய தீவுகள் ...

Posted: 19 Dec 2015 05:44 AM PST

மேற்கிந்திய தீவுகள் அணியை வலுப்படுத்த சர்வதேச கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மைக்கேல் கிளார்க் கோரிக்கை விடுத்துள்ளார்.

கழற்றிவிடப்படும் யுவராஜ் சிங், ...

Posted: 19 Dec 2015 04:35 AM PST

ஐபிஎல் தொடரில் யுவராஜ் சிங், தினேஷ் கார்த்திக் மற்றும் ஸ்டெய்ன் ஆகியோர் அந்தந்த அணிகளில் இருந்து கழற்றிவிடப்படுவார்கள் என்று தெரிகிறது.

பவுல்ட் ஆகியும் ஆட்டமிழக்காத ...

Posted: 19 Dec 2015 12:09 AM PST

இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி ஹாமில்டன் மைதானத்தில் நடந்து வருகிறது.

கங்குலியின் சிக்ஸ் பேக்கை ...

Posted: 18 Dec 2015 11:42 PM PST

நாட்வெஸ்ட் தொடரில் இங்கிலாந்தை லாட்சில் வீழ்த்தியது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் மனம் திறந்து பேசியுள்ளார்.

ஷமீரா மிரட்டல் பந்துவீச்சு: 2வது ...

Posted: 18 Dec 2015 10:49 PM PST

இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது.

ஹேரத், குஷால் பெரேராவை அணுகிய ...

Posted: 18 Dec 2015 09:51 PM PST

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது சூதாட்ட தரகர்கள் இலங்கை வீரர்களான குஷால் பெரேரா மற்றும் ஹேரத்தை அணுகியது தற்போது தெரிய வந்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் ...

Posted: 18 Dec 2015 09:01 PM PST

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு இலங்கை அணியில் நுவான் குலசேகரா சேர்க்கப்பட்டுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™