Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


நீர்வழித்தடங்களின் ஆக்கிரமிப்பு கணக்கெடுப்பு...ஆரம்பம் சென்னை முழுவதும் விரைவில் அதிரடி இடிப்பு?

Posted: 19 Dec 2015 06:23 AM PST

சென்னையில், கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து, ரகசிய கணக்கெடுப்பை, நீர்வளத் துறை துவங்கியுள்ளது.சமீபத்தில் கொட்டிய மழையால், அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சென்னை நகரம் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்தது. அதிகப்படியான மழைப்பொழிவு மட்டுமின்றி, நீர்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளே, இதற்கு காரணம் என தெரியவந்தது.

உத்தரவு:
எனவே, இந்த நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, உயர் நீதிமன்றம், அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ...

ஆட்சியிலும் கட்சியிலும் ஏன் இந்த அவலம்?

Posted: 19 Dec 2015 06:34 AM PST

அ.தி.மு.க.,வில் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரமும், முக்கியத்துவமும் கொடுக்கப்படாததால் தான், ஆட்சி நிர்வாகத்தில் மிகப் பெரிய சங்கடங்களை சந்தித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஆட்சி மற்றும் கட்சி நிர்வாகங்களில், அ.தி.மு.க., சமீப காலமாக கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.குறிப்பாக, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாதம் ஒன்றில் நடராஜன் என்பவரின் கருத்து, போன் மூலம் கேட்கப்பட்டு, அது ஒளிபரப்பானது. அப்படி ஒளிபரப்பான போது, நடராஜன் என்பவர் படத்துக்கு பதிலாக, முன்னாள் டி.ஜி.பி.,யும், அ.தி.மு.க.,காரருமான நட்ராஜின் படமும் ...

பொது சேவை சட்டம் அமல்படுத்தப்படுமா?

Posted: 19 Dec 2015 06:47 AM PST

தமிழகத்தில், பொது சேவை பெறும் உரிமைச்சட்டம் அமல்படுத்தப்படுமா என, கேள்வி எழுந்துள்ளது. பீஹாரில் நிதிஷ்குமாரின் வெற்றிக்கு, இச்சட்டம் கொண்டு வந்தது ஓர் காரணம். சட்டசபை தேர்தல் வாக்குறுதியில், இதை அறிவிக்க கட்சியினர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.கடந்த, 2011ம் ஆண்டு உருவாக்கப்பட்ட, பொது சேவை உரிமைச்சட்டத்தை பொறுத்தவரை, அரசுத் துறைகளில், மக்கள் கேட்கும் ஆவணங்களை, குறிப்பிட்ட நாட்களுக்குள் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காதபட்சத்தில், அத்துறை அதிகாரிக்கு, 250 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் ஆர்வம்இதன் மூலம் லஞ்சம் இல்லாத அரசு அமையும். ...

பறிமுதலாகும் கடத்தல் தங்கம்காணாமல் போகும் மர்மம்

Posted: 19 Dec 2015 07:06 AM PST

புதுடில்லி: டில்லி, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும் கடத்தல் தங்கம், மாயமாகி விடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, சுங்க இலாகா அதிகாரி ஒருவர் கூறியதாவது:டில்லி விமான நிலைய சுங்கத்துறை கிடங்கில், கடத்தல் பேர்வழிகளிடம் பறிமுதல் செய்த, 300 கோடி ரூபாய் மதிப்பிலான, 1,000 கிலோ தங்கம் உள்ளதாக ஆவணங்கள் கூறுகின்றன. ஆனால், ஆராய்ந்து பார்த்தால், அதில் எத்தனை கிலோ, போலி தங்கம் என்பது, வெளிச்சத்திற்கு வரும். வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும், சொக்கத் தங்கத்தை, 'சுருட்டி' விட்டு, ...

நடப்பு கூட்டத்தொடரில் ஜி.எஸ்.டி., மசோதா...நிறைவேறாது காங்கிரஸ் மீது அருண் ஜெட்லி குற்றச்சாட்டு

Posted: 19 Dec 2015 07:45 AM PST

புதுடில்லி,:சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேற தாமதம் ஆவதற்கு, காங்., உள் நோக்கமே காரணம்,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். ராஜ்யசபாவில், காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக, நடப்பு கூட்டத் தொடரில், ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேறுவதற்கான வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. நாடு முழுவதும், ஒரே மாதிரியான, சரக்கு மற்றும் சேவை வரியை நிர்ணயிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக உருவாக்கப்பட்ட, ஜி.எஸ்.டி., மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசுக்கு, ராஜ்யசபாவில் போதிய பலம் இல்லாததால், இம்மசோதா நிறைவேறுவதில் ...

ராணுவத்தில் 'பாராசூட்' இல்லை சி.ஏ.ஜி., அறிக்கையில் 'பகீர்'

Posted: 19 Dec 2015 07:47 AM PST

புதுடில்லி:'கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, மிகவும் அவசியமான, நவீன, 'சி.எப்.எப்.' பாராசூட்டுகள் இல்லாமல், இந்திய ராணுவம் இயங்கி வருகிறது' என, சி.ஏ.ஜி., என, அழைக்கப்படும், மத்திய கணக்கு தணிக்கை அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பார்லி.,யில் தாக்கல் செய்த அறிக்கை விவரம்: முக்கிய ராணுவ திட்டங்களை கச்சிதமாக நிறைவேற்ற, சி.எப்.எப்., பாராசூட்டுகள் மிகவும் அவசியம். இவை, இந்திய ராணுவத்தைச் சேர்ந்த, பாராசூட் சிறப்பு படையினரின் வெற்றிகரமான பணிகளுக்கு, மிகவும் முக்கியமானது. அப்படிப்பட்ட, மிக முக்கியமான பாராசூட் இல்லாமல், 10 ஆண்டுகளுக்கும் ...

'அவசர முடிவு எடுக்காதீர்': விஜயகாந்திடம் பா.ஜ., கெஞ்சல்

Posted: 19 Dec 2015 08:46 AM PST

'கூட்டணி விஷயத்தில், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு,மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவுரை வழங்கியுள்ளார்.கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில், தே.மு.தி.க., போட்டியிட்டது.இந்நிலையில், 'மக்கள் நல கூட்டணியில், விஜயகாந்த் இணைய வேண்டும்' என, அக்கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதற்கேற்ப விஜயகாந்த் அளித்த பேட்டியில், 'அ.தி.மு.க., - தி.மு.க.,வை விட, மக்கள் நலக் கூட்டணியின் கொள்கை சிறப்பானது; திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வராமல் தடுப்பதே, என் குறிக்கோள்' என்றார்.இதனால்,மக்கள் நலக் ...

'காட்ஸ்' ஒப்பந்தத்தில் கையெழுத்திடாதீர்!

Posted: 19 Dec 2015 08:48 AM PST

சென்னை:'உயர்கல்வியை சீர்குலைக்கும், 'காட்ஸ்' ஒப்பந்த்தில், இந்தியா கையெழுத்திடக் கூடாது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை:உலக வர்த்தக அமைப்பு உறுப்பு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்கும், 10வது மாநாடு, கென்யா தலைநகரில் நடந்து வருகிறது. சேவைத் துறையில் வர்த்தகம் பற்றிய, 'காட்ஸ்' ஒப்பந்தத்தில், கையெழுத்திட வேண்டிய அபாயம், இந்தியாவுக்கு உள்ளது. இந்த உடன்படிக்கை யால், உயர் கல்வியில் வெளிநாடுகளின் ஆதிக்கம் அதிகரிக்கும்.இந்தியாவில் உள்ள, பல்கலைக் கழக மானியக் குழு, உயர் கல்வி ...

அசரமாட்டேன்: டில்லி கோர்ட்டில் ஆஜரான சோனியா ஆவேசம்

Posted: 19 Dec 2015 09:54 AM PST

புதுடில்லி:நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, 'நேஷனல் ஹெரால்டு' வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா, துணை தலைவர் ராகுல் உள்ளிட்டோருக்கு, டில்லி கோர்ட், நேற்று, ஜாமின் வழங்கியது. ''மோடி அரசின் அச்சுறுத்தல்கள் எதற்கும் பயப்பட மாட்டேன்; அசர மாட்டேன்,'' என, சோனியா ஆவேசமாக கூறினார்.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் துவங்கப்பட்டது, 'நேஷனல் ஹெரால்டு' என்ற பத்திரிகை. மோசமான நிர்வாகம் மற்றும் குறைந்த விற்பனையால், 2008ல், இந்த பத்திரிகை மூடப்பட்டது. இந்த நிறுவனம் வாங்கிய, 90 கோடி ரூபாய் கடனை அடைத்து, அதற்கு பதிலாக, அந்த ...

தையல் கடை முதலாளியாகிறான் கற்பழிப்பு குற்றவாளி

Posted: 19 Dec 2015 11:03 AM PST

புதுடில்லி:டில்லியில், மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், இன்று விடுவிக்கப்பட உள்ள இளங்குற்றவாளிக்கு, தையல் கலை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த, 2012ல், ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஆறு பேர் கைதாகினர். அவர்களில் ஒருவரான, இளங்குற்றவாளி, கோர்ட் உத்தரவு படி, மூன்று ஆண்டுகள் சிறார் காப்பகத்தில் அடைக்கப்பட்டு, இன்று விடுவிக்கப்பட உள்ளான்.
இருவிதமான திட்டம்: சிறார் கோர்ட் உத்தரவு படி, மாவட்ட குழந்தை நலன் பாதுகாப்பு அதிகாரி தலைமையில், அமைக்கப்பட்ட மேலாண்மை குழு, இளங்குற்றவாளியின் எதிர்கால ...

சிறுவன் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நள்ளிரவில் அப்பீல்

Posted: 19 Dec 2015 11:53 AM PST

புதுடில்லி : டில்லியில், மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், விடுவிக்கப்பட உள்ள இளங்குற்றவாளி விடுதலையை எதிர்த்து, டில்லி மகளிர் ஆணையம் சார்பில் நள்ளிரவில் சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது கடந்த, 2012ல், ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், ஆறு பேர் கைதாகினர். அவர்களில் ஒருவரான, இளங்குற்றவாளி, கோர்ட் உத்தரவு படி, மூன்று ஆண்டுகள் சிறார் காப்பகத்தில் அடைக்கப்பட்டு, இன்று ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™