Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


சோஸ் பிரியரா நீங்கள்? விளைவுகளை தெரிந்துகொள்ளுங்கள்

Posted: 30 Dec 2015 07:10 PM PST

jl

jlசோஸ் என்றாலே சாப்பாட்டு பிரியர்கள் அதற்கேற்ற உணவுகளை தயார் செய்துவைத்துவிட்டு சாப்பிடுவதற்கு தயாராகிவிடுவார்கள்.

சோஸ் வகைகளில் உள்ள விளைவுகள் பற்றி மருத்துவர்கள் பலமுறை எடுத்துரைத்தாலும் அதனை கேட்டு மக்கள் திருந்தியபாடில்லை.

தக்காளி சோஸ் , ரெட் சில்லி அல்லது கிரீன் சில்லி சோஸ் . என கலர் கலரான சோஸ்களும், விதவிதமான உணவுகளையும் பார்க்கும்போது, சாப்பிடத்தான் தோன்றும்.

ஆனால், அதனை அளவோடு சாப்பிட்டால் பரவாயில்லை, தினந்தோறும் எடுத்துக்கொண்டால் தான் அதிகமான பக்கவிளைவுகள் உடலில் ஏற்படும்.

எல்லா சோஸ்களிலும் எண்ணெய், சர்க்கரை, புளிப்பு சுவைக்காக வினிகர் சேர்க்கிறார்கள். மேயனைஸ் சோஸில் முட்டையின் மஞ்சள்கரு, வினிகர், சர்க்கரை, உப்பு, கொஞ்சம் மைதா சேர்த்து தயாரிக்கிறார்கள்.

நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக பதப்படுத்தும் பொருட்களை சேர்க்கிறார்கள். இவை அதிக கலோரி கொண்டவை. இதனால் கரையாத கெட்ட கொழுப்புகள் உடலில் சேர்ந்து பருமன் பிரச்சனையை ஏற்படுத்தும்.jl

ரெட் சில்லி சோஸ், கிரீன் சில்லி சோஸ் போன்றவற்றையும் அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது. சிவப்பு மிளகாய் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது.

பர்கர் தயாரிக்கும் போதே அதிக அளவு சோஸ் சேர்த்துதான் செய்கிறார்கள். சுவைக்கு அடிமையானவர்கள் மேலும் அதிக சோஸை ஊற்றி அதில் பர்கரைத் தொட்டு சாப்பிடுகிறார்கள்.

மேலும், சூடான சோஸ்ஸினை சாப்பிடும்போது, நாக்கு மற்றும் உணவுக்குழாயில் எரிச்சல் ஏற்படும்.

அதுமட்டுமின்றி அல்சர் பிரச்சனைகள், மேலும் உங்கள் உடல் வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு தூங்குவதற்கு சிரமம் ஏற்படும்.

இது உடல்நலத்தை எளிதில் கெடுத்துவிடும். சோஸ் உணவுக்கு தேவையில்லாத ஒன்று. சுவையைத் தவிர அதில் எந்த சத்துகளும் இல்லை.

அதனால் இதனை தவிர்ப்பதே நல்லது.

The post சோஸ் பிரியரா நீங்கள்? விளைவுகளை தெரிந்துகொள்ளுங்கள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வேகமாக உடல் எடையை குறைக்க உதவும் 10 பழங்கள்!

Posted: 30 Dec 2015 07:03 PM PST

1

1சர்க்கரைச்சத்துகள் இருப்பதால் எவ்வித பக்கவிளைகளையும் ஏற்படுத்தாமல் விரைவில் உடல் எடையை குறைக்க உதவும்.

நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறீர்கள் என்றால், டயட் என்கிற பெயரில் உங்கள் உடலநலன்களை கெடுத்துக்கொள்ளாமல், ஆரோக்கியமான பாதையில், வேகமாக உடல் எடையை குறைப்பதற்கு சிலவகை பழங்கள் உதவுகிறது.

அவகேடா

ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்துள்ள அவகேடாவில், உயர் அளவில் மோனோசாட்சுரேட் ஒலிக் ஆசிட்(Monounsaturated oleic acid) மற்றும் தண்ணீர் நிறைந்துள்ளது.

மேலும் டெஸ்ட்ரோஸ்டிரான்(Testosterone) ஹார்மோன் உற்பத்திக்கு உதவுகிறது, இந்த ஹார்மோன் கொழுப்பினை குறைக்க உதவுகிறது.2

தர்பூசணி

தர்பூசணியில், மலச்சிக்கல், தோல் நோய்கள் மற்றும் எடை குறைத்தல் போன்றவற்றிற்கு உதவுகிறது, ஏனெனில் இதில் தண்ணீர் மற்றும் இயற்கை முறையிலேயே குறைவான கலோரி உள்ளது.

தினமும் தர்பூசணி பழம் சாப்பிட்டால், ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் தசைகளில் ஏற்படும வேதனைகளை குறைக்கிறது.3

பேரிக்காய்

பேரிக்காயில் நிறைந்துள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் பசியின்மை பிரச்சனைக்கு தீர்வு தருவதோடு மட்டுமல்லாமல், செரிமானம் சிறந்த முறையில் நடைபெறும், மேலும் எவ்வித உணவுகள் எடுத்தாலும், இதனை சாப்பிடுவதன் மூலம் ஒட்டுமொத்த செரிமானத்திற்கும் உதவுகிறது.4

பீச் பழம்

குடலினை சுத்தப்படும் பணியினை செய்யும் பீச் பழத்தில் உள்ள phenolic வயிற்றில் சதைபோடுவதை தடுக்க உதவுகிறது.6

ஸ்ட்ராபெரி

ஸ்ட்ராபெரி பழம் லெப்டின் மற்றும் adiponectin ஹார்மோன் உற்பத்திற்கு உதவுகிறது, இந்த இரு ஹார்மோன்களும் வளர்சிதை மாற்றத்தை அதிகப்பதோடு மட்டுமல்லாமல் கொழுப்பினையும் எரிக்க உதவுகிறது.

மேலும், இதில் உள்ள anti-inflammatory என்சைம், நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது திசுக்கள் சேதமடைந்துவிட்டால், அதனை குணப்படுத்த உதவுகிறது, மேலும் உடல் எடை குறைக்கவும் உதவுகிறது.7

எலுமிச்சை

எலுமிச்சை பழத்தில் விட்டமின சி மற்றும் சிட்ரிக் ஆசிட் மற்றும் நார்ச்சத்து நிறைந்து உள்ளது, இது மலச்சிக்கல், அஜீரணக்கோளாறு மற்றும் உடல் பருமன் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.8

ஆப்ரிகாட்

ஆப்ரிகாட் பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால், அது உடல் எடையை குறைக்க உதவுகிறது.9

மாதுளம்பழம்

மாதுளம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளதால், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது, இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற உதவுகிறது.10-

ப்ளாக்பெரிஸ்

இதில் நார்ச்சத்து மற்றும் விட்டமின் சி உள்ளது, இந்த பழத்தினை சாப்பிடுவதால், ஆற்றல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், செரிமானப்பிரச்சனைகளுக்கும் தீர்வு தருகிறது.1

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் விட்டமின் சி உள்ளது, மேலும் இது கொலாஜன் உற்பத்திக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், இதில் உள்ள புரதம் இளமை தோற்றத்தை தடுக்கிறது.

மேலும், நீர்ச்சத்து, நார்ச்சத்து மற்றும் விட்டமின் சத்துக்கள் உள்ளதால், சருமத்தைன மென்மையாக்குவதோடு மட்டுமல்லாமல், உங்கள் உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கும்.12

The post வேகமாக உடல் எடையை குறைக்க உதவும் 10 பழங்கள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

விமான சிப்பந்தி மீது தாக்குதல் – மீண்டும் ரொரன்ரோ திரும்பிய விமானம்

Posted: 30 Dec 2015 09:49 AM PST

Flight_diverted_back_to_Toronto2

Flight_diverted_back_to_Toronto2ரொரன்ரோவில் இருந்து இந்தியாவின் புதுடெல்லி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த எயர் கனடா விமானம் ஒன்றினல், பயணி ஒருவர் விமான பணியாளரை தாக்கிய சம்பவத்தினை அடுத்து விமானம் இன்று அதிகாலையில் மீண்டும் ரொரன்ரோ பியர்சன் அனைத்துலக விமானநிலையத்திற்கு திரும்பியதாக பீல் பிராந்திய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் இருந்த பயணி ஒருவர் விமான பணியாளரை தாக்கியதோடு மட்டுமின்றி, மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதனை அடுத்து, இன்று அதிகாலை 12.42 அளவில் விமானத்தினை மீண்டும் ரொரன்ரோவுக்கு திருப்புவதான முடிவு எடுக்கப்பட்டதாக காவல்த்துறையினர் இன்று காலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

அதனை அடுத்து எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி பாதுகாப்பாக விமானம் பியர்சன் அனைத்துலக விமானநிலையத்தில் தரையிறங்கியதாகவும், தாக்குதலுக்கு உள்ளான விமான சிப்பந்திக்கு மருத்துவ சிகிக்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

விமானத்தில் மூர்க்கத்தனமாக நடந்துகொண்ட அல்பேர்ட்டாவைச் சேர்ந்த 47 வயதான ஜாஸ்கரன் சித்து என்பவரைக் கைது செய்த காவல்த்துறையினர், அவர்மீது தாக்குதல் மற்றும் விமானத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நடந்துகொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளதுடன், இன்று அவரை நீதிமன்றில் நிறுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.Flight_diverted_back_to_Toronto2

குறித்த அந்த விமானம் முன்னதாக செவ்வாய்க்கிழமை காலையிலேயே புறப்பட வேண்டியிருந்த போதிலும், மோசமான வானிலை காரணமாக புறப்பாடு பிற்போடப்பட்ட நிலையில், தாமதமாக புறப்பட்ட விமானம் மீண்டும் இவ்வாறானதொரு சம்பவம் காரணமாக இரண்டாவது தடவையும் பயணத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இன்று மதியம் விமானம் மீண்டும் டெல்லி நோக்கி புறப்படும் எனவும் கூறப்படுகிறது.

The post விமான சிப்பந்தி மீது தாக்குதல் – மீண்டும் ரொரன்ரோ திரும்பிய விமானம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

அட்லான்டிக் கனடாவில் கடுமையான பனிப்புயல்

Posted: 30 Dec 2015 09:41 AM PST

winter_storm_-_1230

winter_storm_-_1230அட்லான்டிக் கனடா கடந்த சில நாட்களில் கடுமையான பனிப்புயல் தாக்கங்களை எதிர்கொண்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களில் அட்லான்டிக் கனடாவை இரண்டு தடவை கடுமையான பனிப்புயல் தாக்கியுள்ளது.

நேற்று இரவு வரையில் நோவா ஸ்கொட்ஷியாவின் பெரும்பாகம் மற்றும் நியூ பிரவுன்ஸ்விக்கின் தென்கிழக்கு பிராந்தியங்களில் 25 சென்ரிமீட்டர் வரையிலான பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அனுமானிக்கப்படுகிறது.

பனிப்புயல் காரணமாக விமானப் போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டதாகவும், ஹலிஃபெக்ஸ் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானப் பயணங்களில் தாமதங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.winter_storm_-_1230

அத்துடன் சில பகுதிகளில் நடாத்த ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகள் பனிப்புயல் காரணமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பத்துக்கும் அதிகமான வீதி விபத்துக்கள் நோவா ஸ்கொட்ஷியாவில் பதிவாகியுள்ளதாக கனேடிய மத்திய காவல்த்துறையினரும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இவற்றுள் நேற்று பிற்பகல இரண்டு மணியளவில், நோவா ஸ்கொட்ஷியாவின் பிரஞ்சு ஆற்றுக்கு அருகே, நெடுஞ்சாலை 104இல் ஏற்பட்ட விபத்து மிகவும் மோசமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட அந்த விபத்தில் மோசமான காயங்களுக்கு உள்ளான ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டிருந்தனர்.

The post அட்லான்டிக் கனடாவில் கடுமையான பனிப்புயல் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரிட்டிஸ் கொலம்பியாவில் இலேசான நில நடுக்கம்

Posted: 30 Dec 2015 09:30 AM PST

earthquake_-_1230

earthquake_-_1230பிரிட்டிஸ் கொலம்பியாவில் நேற்று இரவு இலேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு 11.39 அளவில் அதன் அதிர்வுகள் உணரப்பட்டதாகவும், தெற்கு பிரிட்டிஸ் கொலம்பியாவின் விக்டோரியா நகருக்கு வடக்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக கனேடிய இயற்கைவள துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் 4.8 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் அவதான நிலையம் அறிவித்துள்ளது.

அதேவேளை குறித்த அந்த பகுதியை அண்டிய பிராந்தியங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக அங்கு வசிக்கும் மக்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த நிலநடுக்கத்தினால் பொதுமக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டதான முறைப்பாடுகள் எவையும் வெளியாகவில்லை.earthquake_-_1230

உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் எவரும் காயமடைந்திருக்க மாட்டார்கள் என நம்புவதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த தமது மின்வினியோக பொறிமுறைகளுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பிரிட்டிஸ் கொலம்பிய மின்வாரியமும் தெரிவித்துள்ளது.

The post பிரிட்டிஸ் கொலம்பியாவில் இலேசான நில நடுக்கம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™