Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


கெஜ்ரிவாலுக்கு எதிராக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட 270 பேர் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து போராட்டம்

Posted: 30 Dec 2015 10:16 PM PST

அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பான ஆவணத்தில் கையெழுத்திட மறுத்த இரண்டு அதிகாரிகளை டெல்லி மாநில அரசு சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து டெல்லியில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட முக்கிய அதிகாரிகள் பலர் இன்று வேலை விடுப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் யஷ்பால் கார்ஜ் என்பவர் சட்டத்துறை

திருப்பதியில் புத்தாண்டு தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடுகள்: பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

Posted: 30 Dec 2015 10:12 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 1–ம்தேதி ஆங்கில வருட பிறப்பையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு வருவார்கள் என்பதால் சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அன்னபிரசாதம் சுகாதாரம், பொறியாளர்கள், விஜிலென்ஸ் கல்யாண கட்டா உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

தெலுங்கானா மேல்–சபை தேர்தல்: சந்திரசேகரராவ் கட்சி 10 இடங்களை கைப்பற்றியது

Posted: 30 Dec 2015 09:51 PM PST

தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற மேல்–சபையில் காலியாகும் 12 இடங்களுக்கு கடந்த 27–ந்தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் முதல்–மந்திரி சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமதி கட்சி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் தனித்தனியாக வேட்பாளரை நிறுத்தியது. 12 இடங்களில் 6 இடங்களில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமதி கட்சி

காஷ்மீரில் விடிய விடிய தேடுதல் வேட்டை: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Posted: 30 Dec 2015 08:16 PM PST

காஷ்மீரில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் (RR) மற்றும் சிறப்பு அதிரடி படையினர் (SOG) இணைந்து நேற்று விடிய விடிய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருளைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் தப்பிக்க வாய்ப்புள்ள மொகல்லா ஹார்போரா என்ற பகுதியை சுற்றி வளைத்த ராணுவத்தினர் அதிகாலை

மேல்-சபை தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சி அளிக்கிறது: சித்தராமையா பேட்டி

Posted: 30 Dec 2015 08:05 PM PST

கர்நாடக மேல்-சபை தேர்தல் முடிவுகள் குறித்து முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வாக்காளர்கள் காங்கிரசை ஆதரித்து ஓட்டுப்போட்டு உள்ளனர். அதன் காரணமாக எங்கள் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. வாக்காளர்கள் அறிவாளிகள். அவர்கள் சிந்தித்து ஓட்டுப்போட்டுள்ளனர். எங்கள் கட்சியை வெ

பொதுமக்களிடம் போலீசார் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: மந்திரி பரமேஸ்வர் எச்சரிக்கை

Posted: 30 Dec 2015 08:01 PM PST

பெங்களூருவில் நேற்று உயர் போலீஸ் அதிகாரிகளுடன் மந்திரி பரமேஸ்வர் ஆலோசனை நடத்தினார். இதில், மாநில போலீஸ் டி.ஜி.பி. ஓம்பிரகாஷ், பெங்களூரு போலீஸ் கமிஷனர் என்.எஸ்.மேகரிக், கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் ஹரிசேகரன், பிரதாப் ரெட்டி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மந்திரி பரமேஸ்வர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உலகளவில் கவனிக்கத்தக்க நகரமாக பெங்களூரு இருக்கிறது. இங்கு அனைத்து மதம், மொழியினரும், வெளிமாநிலம், வெளிநாட்டை சேர்ந்தவர்களும் வசிக்கிறார்கள். கிறிஸ்துமஸ், மீலாதுநபி, அனுமன் ஜெயந்தி ஓரிரு

அரசியலை விட்டு விலக மாட்டேன்: ஈசுவரப்பா

Posted: 30 Dec 2015 07:58 PM PST

கர்நாடக மேல்-சபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு பிரசாரத்தின் போது பா.ஜனதாவின் முக்கிய தலைவரான ஈசுவரப்பா, இந்த தேர்தலில் பா.ஜனதாவை விட காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றால் அரசியலில் இருந்து விலகி விடுவேன் என்று கூறினார். இந்த கருத்தில் அவர் இறுதி வரை உறுதியாக இருந்தார். இந்த நிலையில் மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் பெற்ற வெற்றியில் பா.ஜனதா பாதியை கூட பெறவில்லை. எனவே, ஈசுவரப்பா தனது சொல்லுக்கு மதிப்பளிக்க வே

பிரீமியர் பேட்மிண்டன் தொடக்க விழாவில் கலந்து கொள்ள விஜயகாந்த் 2-ந்தேதி மும்பை வருகை

Posted: 30 Dec 2015 07:51 PM PST

2016-ம் ஆண்டுக்கான பிரீமியர் பேட்மிண்டன் போட்டி டெல்லி, மும்பை, பெங்களூரு, லக்னோ, ஐதராபாத் நகரங்களில் அடுத்த மாதம் நடக்கிறது. இந்த போட்டியில் சென்னை ஸ்மாசர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், ஐதராபாத் ஹண்டர்ஸ், டெல்லி அக்கர்ஸ், பெங்களூரு டாப்கன்ஸ், அவாதே வாரியர்ஸ் ஆகிய 6 அணிகள் மோதுகின்றன. பிரீமியர் பேட்மிண்டன் போட்டி தொடக்க விழா ஜனவரி 2-

மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறப்பு

Posted: 30 Dec 2015 07:40 PM PST

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கோவில் நடை, கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. 41-வது நாள் (ஒரு மண்டலம்) நிறைவடைந்ததையொட்டி மண்டல பூஜை விழா கடந்த 27-ந் தேதி சிறப்பாக நடந்தது.அப்போது தங்க அங்கி அணிந்து, பொன்னொளியில் ஜொலித்த சுவாமி அய்யப்பனை பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர். அன்றைய தினம் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மண்டல பூஜை விழா நிறைவு பெற்றது. அதன் பின்னர் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்ட

அமிர்தசரஸ் நகரில் பேருந்து மோதி விபத்து: 9 பேர் பலி, பலர் படுகாயம்

Posted: 30 Dec 2015 07:18 PM PST

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் தனியார் பேருந்து ஒன்று அதிகப்படியான தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற மோட்டார் வாகனத்தின் பின்புறம் மோதியதில் 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். அமிர்தசரஸ் நகருக்கு 15 கி.மீ தொலைவில் உள்ள மெக்தா என்ற கிராமத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட இந்த விபத்தால் அப்பகுதியில்

இந்த ஆண்டின் கடைசி டூடுல் மூலம் கலர்புல் புத்தாண்டு வாழ்த்து சொன்ன கூகுள்

Posted: 30 Dec 2015 07:04 PM PST

கூகுள் தனது டூடுல் சேவை மூலமாக உலகின் தலை சிறந்த மனிதர்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை வித்தியாசமான படங்களின் மூலமாக ஆண்டு முழுவதும் கொண்டாடி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் கடைசி தினமான இன்று, கிளையில் உள்ள பல வண்ணப்பறவைகள் புத்தாண்டுக்காக காத்திருப்பது போல் அனிமேஷன்

கர்நாடக மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி: 13 தொகுதிகளை கைப்பற்றியது

Posted: 30 Dec 2015 06:30 PM PST

கர்நாடக மேல்-சபையில் காலியாகும் 25 இடங்களுக்கு கடந்த 27-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 125 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 99 சதவீத வாக்குகள் அதாவது சுமார் 1 லட்சத்து 6 ஆயிரம் ஓட்டுகள் பதிவாயின. வாக்கு பெட்டிகள் ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன. கர்நாடகத்தில் 20 மாவட்ட தலைநகரங்களில் ஓட்டு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. சரியாக காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தேர்தல் அதிகாரிகள் முதலில் அனைத்து வாக்கு பெட்டிகளையும் திறந்து வாக்குச்சீட்டு

பொருளாதார வளர்ச்சி அதிகரித்தால் தான் சம்பள உயர்வின் நிதி சுமையை சமாளிக்க முடியும்: அருண்ஜெட்லி

Posted: 30 Dec 2015 04:18 PM PST

சம்பள உயர்வால் ஏற்படும் சிரமத்தை சமாளிக்கவும், மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும் இந்தியாவில் மேலும் 1 முதல் 1.5 சதவீதம் பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமென்று மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

ரூ.1,150 கோடி வரி செலுத்த தவறிய 18 நிறுவனங்கள்: வருமான வரித்துறை பட்டியல் வெளியிட்டது

Posted: 30 Dec 2015 04:00 PM PST

பெரிய அளவில் வருமான வரி செலுத்த தவறிய தனிநபர்கள், நிறுவனங்களின் பட்டியலை வருமான வரித்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு வரி செலுத்த தவறிய 49 நபர்களின் பெயர் பட்டியலை 2 தவணைகளில் வருமான வரித்துறை வெளியிட்டது.

ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவதில் அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம்: மத்திய மந்திரி சபை ஒப்புதல்

Posted: 30 Dec 2015 03:39 PM PST

தலைநகர் டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் நாடு முழுவதும் 100 'ஸ்மார்ட்' நகரங்களை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு தேவையான உதவிகளைப் பெறும் வகையில், அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அமைந்துள்ள புளூம்பெர்க்

சத்தீஷ்கார் முதல்-மந்திரிக்கு எதிராக ஆடியோ டேப் வெளியானது- முன்னாள் முதல்-மந்திரி அஜித் ஜோகிக்கும் தொடர்பா?

Posted: 30 Dec 2015 03:25 PM PST

இடைத்தேர்தலின்போது, பணம் கொடுத்து காங்கிரஸ் வேட்பாளர் வாபஸ் பெறப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், சத்தீஷ்கார் முதல்-மந்திரிக்கு எதிராக ஆடியோ 'டேப்' ஆதாரம் வெளியானது. இவ்விவகாரத்தில் முன்னாள் முதல்-மந்திரி அஜித் ஜோகிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் உளவுப்படை வளையத்தில் முன்னாள் ராணுவத்தினர்: உஷாராக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தல்

Posted: 30 Dec 2015 02:49 PM PST

பாகிஸ்தான் உளவுப்படையான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்புடைய உளவாளிகளுக்கு விமானப்படை ரகசிய தகவல்களை விற்றதாக விமானப்படை வீரர் ஒருவர் சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டார். கடந்த 28-ந் தேதி அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இதேபோன்று, முன்னாள் ராணுவத்தினர் மூலம் ரகசிய

குஜராத் எழுத்தாளர் ரகுவீர் சவுத்ரிக்கு ஞானபீட விருது

Posted: 30 Dec 2015 02:31 PM PST

இந்தியாவில் எழுத்துலகில் சிறந்து விளங்கும் எழுத்தாளர்களுக்கு, கடந்த 1961 முதல் ஆண்டுதோறும் ஞானபீட விருது வழங்கப்பட்டு வருகிறது. 2015-ம் ஆண்டுக்கான விருதுக்கு குஜராத் எழுத்தாளர் ரகுவீர் சவுத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

உங்கள் தூதரகங்கள் தரும் விசாக்களை நம்புங்கள்: அமெரிக்காவிற்கு இந்தியா பதிலடி

Posted: 30 Dec 2015 01:12 PM PST

அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக் கழகத்திற்கு படிக்க சென்ற இந்திய மாணவர்கள் சிலரை அமெரிக்க குடியேற்றல்(immigration ) துறை அதிகாரிகள் உள்ளே நுழைய விடாமல் தடுத்துள்ளனர். மாணவர்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை என்பதற்காக தடுக்கப்படவில்லை என்றும் அவர்களுடைய குடியேற்ற சான்றிதழில் ஏற்பட்டுள்ள மதிப்பீடு காரணமாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா தரப்பில்

பிரிவினைவாத தலைவர் மஸ்ரத் ஆலம் சிறை வாசலில் மீண்டும் கைது

Posted: 30 Dec 2015 12:54 PM PST

காஷ்மீரைச் சேர்ந்த பிரிவினைவாத அமைப்பான ஹுரியத் மாநாடு என்ற அமைப்பின் முக்கிய தலைவர் மஸ்ரத் ஆலம். மஸ்ரத் ஆலம் கடந்த ஏப்ரல் மாதம் ஸ்ரீநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தான் கொடியை


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™