Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


அட்லான்டிக் கனடாவில பனிப்பொழிவு இன்று இரவும் நீடிக்கும்

Posted: 27 Dec 2015 08:44 PM PST

iop

iopஅட்லான்டிக் கனடா பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள மோசமான பனிப்பொழிவு நிலைமை இன்று இரவும் நீடிக்கும் என கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று இரவும் தொடரும் பனிப் பொழிவின் காரணமாக அனேகமான இடங்களில் 15 இலிருந்து 20 சென்ரிமீட்டர் அளவிலான பனிப்பொழிவு பதிவாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று நண்பகல் முதல் பொழியத் தொடங்கிய பனி மற்றும் உறைபனி காரணமாக நோவா ஸகொட்ஷியா மாநிலத்தின் வீதிகள் பனி இறுகி வழுக்கும் நிலைக்கு சென்றுள்ளன.iop

முடிந்த வரையில் வீதிகளில் வாகனங்களைச் செலுத்திச் செல்ல வேண்டாம் என ஹலிஃபக்ஸ் பிராந்திய காவல்த்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த பனிப்பொழிவு காரணமாக இன்று பகல் வேளையில் மட்டும் நியூ பிரவுன்ஸ்விக்கில் குறைந்து 25 வீதி விபத்துக்கள் சம்பவித்துள்ளதாக கனேடிய மத்திய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post அட்லான்டிக் கனடாவில பனிப்பொழிவு இன்று இரவும் நீடிக்கும் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வட ஈற்ரோபிக்கோவில் துப்பாக்கிச் சூடு – இரண்டு சந்தேக நபர்களுக்கு வலை வீச்சு

Posted: 27 Dec 2015 08:41 PM PST

ij

ijஈற்ரோபிக்கோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் இருவரை ரொரன்ரோ காவல்த்துறையினர் தேடி வருகின்றனர்.

வட ஈற்ரோபிக்கோவில் ஞாயிற்றுக்கிழமை இரவு வேளை இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாக காவல்த்துறையினர் தெரிவித்தள்ளனர்.

காவல்த்துறையினர் ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 2 மணிகளவில் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்ததுடன்,இரண்டு மூன்று துப்பாக்கிச் சூட்டுச் சந்தம் கேட்டதாக சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினரிடம் சாட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு நபர்கள் வட ஈற்ரோபிக்கோவில் உள்ள குறித்த அந்த வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்த்துறையினர், சம்பவம் தொடர்பில் யாரும் காயமடைந்தாக முறைப்பாடுகள் இல்லை என்றும் கூறியுள்ளனர்.ij

சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள புலனாய்வு விசாரணைப் பிரிவினர் உள்ளிட்டவர்கள், அங்கிருந்து வெற்றுத் தோட்டாக்களை மீட்டுள்ளனர்.

இரண்டு சந்தேக நபர்களும் கறுப்பு இனத்தினர் என்றும், ஒருவர் வெள்ளைநிற மேலாடையும், மற்றொருவர் கறுப்புநில மோடையும் போட்டிருந்தாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் காவல்த்துறையினரிடம் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

The post வட ஈற்ரோபிக்கோவில் துப்பாக்கிச் சூடு – இரண்டு சந்தேக நபர்களுக்கு வலை வீச்சு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

மிசிசாகா வர்த்தக வளாகம் ஒன்றில் தாக்குதல் சம்பவம் – இருவர் கைது

Posted: 27 Dec 2015 10:25 AM PST

Mississauga_mall_-_1227

Mississauga_mall_-_1227மிசிசாகாவின் பரபரப்பான Square One வர்த்தக வளாகத்தில் நேற்றைய தினம் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்றைய Boxing நாள் விடுமுறையை முன்னிட்டு ரொரன்ரோவில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வணிக வளாகங்களில் திரண்டிருந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்று்ளளமை குறிப்பிடத்தக்கது.

அந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டு பேரைக் கைது செய்துள்ள அதேவேளை மேலும் ஒருவரை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் இரண்டு மணியளவில் வர்த்தக வளாகத்தின் வாகனம் நிறுத்தும் பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றதான தகவல் தமக்கு கிடைத்ததாக பீல் பிராந்திய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.Mississauga_mall_-_1227

மோதல் ஒன்றின் போது ஒருவரைத் தாக்கி காயம் விளைவித்த மூன்று அல்லது நான்கு கறுப்பு இன ஆண்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிச் சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மோதலில் காயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே சிகிச்சைக்குள்ளாக்கப்பட்டதாகவும், சிறிது நேர தேடுதலில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும், மேலும் ஒருவரை தேடி வருவதாகவும் காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

The post மிசிசாகா வர்த்தக வளாகம் ஒன்றில் தாக்குதல் சம்பவம் – இருவர் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

மனிட்டோபா மாநில அரசாங்கம் தேர்தல் முறையில் மாற்றம்

Posted: 27 Dec 2015 09:42 AM PST

மனிட்டோபா மாநில அரசாங்கம் தேர்தல் முறை மாற்றத்தைக் அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. தேர்தல்களில் வாக்களிப்போரின் வயது எல்லையினை குறைக்கும் வகையிலான தேர்தல் முறை மாற்றத்தினை அறிமுகப்படுத்தப்படுவதற்கே அது திட்டமிட்டுள்ளது. இது குறித்து மனிட்டோபா முதல்வர் கிறெக் செலிங்கர் கருத்து தெரிவிக்கையில், இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் ஆலோசனைகள் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கும் குறைவானவர்களையும் வாக்களிக்க அனுமதிப்பதால் அனுகூலங்களே அதிகம் என நம்புகின்றேன். தாம் சந்தித்த மாணவர்கள் உள்ளிட்ட இள வயதினர் அரசியலில் ஈடுபட மிகுந்த ஆர்வம் காண்பித்து […]

The post மனிட்டோபா மாநில அரசாங்கம் தேர்தல் முறையில் மாற்றம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆஸ்துமாவைக் குணமாக்கும் இலை……!

Posted: 27 Dec 2015 07:23 AM PST

oi

oiதவசு முருங்கைச் செடி முழுவதுமே மருத்துவப் பலன்களைக்கொண்டது எனினும், இதன் இலைகள் சற்று சிறப்பு வாய்ந்தவை. இதன் இலைச்சாற்றை அருந்திவந்தால் இரைப்பு (ஆஸ்துமா), இருமல், ஜலதோஷம் குணமாகும்.

குழந்தைகளுக்கு மழைக் காலத்தில் சளிப் பிடித்துக்கொள்ளும். இந்த சமயங்களில் தவசு முருங்கை இலைச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்து, அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குழந்தைக்குக் கொடுக்கலாம்.

இதன் இலைச்சாற்றை இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை என ஒருவாரத்துக்குப் பருகிவந்தால், இரைப்பு நோயின் தீவிரம் குறையும்.

முழுச் செடியையும் நிழலில் உலர்த்தி, நன்றாகப் பொடித்துக்கொள்ள வேண்டும். எவ்வளவு பொடி இருக்கிறதோ அதே அளவுக்குச் சர்க்கரையும் சேர்த்து, நன்றாகக் கலந்துகொள்ள வேண்டும். இப்போது, அரை தேக்கரண்டி தவசு முருங்கை மற்றும் சர்க்கரை கலந்த பொடியுடன், ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து, நன்றாகக் குழைத்து காலை, மாலை என ஏழு நாட்களுக்கு சாப்பிட்டுவந்தால் சளி, இருமல் தொந்தரவுகள் நீங்கும்.oi

தவசு முருங்கை இலைகளை இடித்து, வதக்கி அடிபட்ட காயம், வீக்கம் ஆகியவற்றின் மீது பற்று போட்டால், அவை விரைவில் குணமாகும்.

தவசு முருங்கையின் இலைகள் மிகுந்த கசப்புச் சுவை கொண்டவை என்பதால், எப்போதும் தேன் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.

தவசு முருங்கையின் இலைச்சாற்றை 15-30 மி.லி எடுத்து அருந்திவந்தால், பெண்களுக்குப் பிரசவத்துக்குப் பின் கர்ப்பப்பையில் ஏற்படும் அழுக்குகள் நீங்கும்.

தவசு முருங்கைக் கீரை. தவசிக் கீரை என்பது வேறு என்பது வேறு இரண்டும் வெவ்வேறு மருத்துவப் பலன்களைக் கொண்டவை.

The post ஆஸ்துமாவைக் குணமாக்கும் இலை……! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பெண்மையை பாதுகாக்கும் கல்யாண முருங்கை

Posted: 27 Dec 2015 07:14 AM PST

op

opபெண்களுக்காக படைக்கப்பட்ட ஒரு தாவரம் என்றால் அது கல்யாண முருங்கை தான்.

தோட்டங்களில் அலங்கார மலருக்காக வளர்க்கப்படும் கல்யாண முருங்கை ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

குறிப்பாக பெண்களுக்காக படைக்கப்பட்ட மரம் என்றே சொல்லலாம், இந்த மரம் வீட்டிலிருந்தால் பெண்மை சார்ந்த எந்த நோயும் வராது என்று சொல்வதுண்டு.

பெண்களுக்கான நாளமில்லா சுரப்பி கோளாறுகளை நிவர்த்தி செய்யக்கூடியது.

இந்த மரத்தின் இலைகள் சிறுநீர் பெருக்கி, மலமிளக்கி, தாய்ப்பால் பெருக்கி, வாந்தி, வயிற்றுவலி, உடல் வெப்பம் மற்றும் வயிற்று புழுவை நீக்கும்.

இந்த இலையை அடையாக செய்து சாப்பிடலாம், தோசையாகவும் செய்யலாம். 'சூப்'பாகவும் பருகலாம். இதனால் பெண்மைக்கான ஹார்மோன் உற்பத்தி அதிகரித்து பெண்ணின் அழகும், கவர்ச்சியும் கூடும்.

மாதவிலக்கு ஏற்படும் காலங்களில் வயிற்று வலி, உதிரப்போக்கு அதிகம் இருந்தால் இதன் இலையை மருந்தாக சாப்பிடலாம்.

இன்றைய பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சினைகள் அதிகம் இருக்கிறது. அவற்றை இந்த கல்யாண முருங்கை இலை அற்புதமாக குணப்படுத்துகிறது.

கர்ப்பப்பையில் கரு வளர்ச்சி சரியாக இருக்க எண்டோமேர்டியம் என்ற சதை கர்ப்பப்பையின் உள்ளே வளருகிறது. இந்த சதை வளர்ச்சி சரியாக இருக்க வேண்டும். அப்போதுதான் கரு அதனுடன் ஒட்டி குழந்தையாக உருவெடுக்கும்.

இன்று பெண்கள் துவர்ப்பான, நார்ச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வதில்லை. துரித உணவு, மன அழுத்தம் போன்ற பலவற்றாலும் பெண்களுக்கு இயற்கையாக ஏற்படக்கூடிய கருப்பை உட்புற சதை வளர்ச்சி ஏற்படுவதில்லை.op

அதனால் கரு உருவாகாத நிலை, உருவான கருவும், சிதைவுறும் நிலை போன்றவை ஏற்படுகின்றன. இதனால் பெண்மை தாய்மை அடைய முடியாத நிலை ஏற்படுகிறது. இதற்கு கல்யாண முருங்கை மரத்தின் பட்டையை கொஞ்சம் எடுத்து லேசாக இடித்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, பாதி நீராக சுண்டச் செய்தபின் அதை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கருப்பையின் உட்புறச் சதை வளர்ச்சி மேம்படும். கருவும் உருவாகும்.

இதன் இலையை நறுக்கி, வெங்காயம் போட்டு, தேங்காய் நெய் விட்டு சாப்பிட்டால் தாய்மார்களுக்கு பால் சுரக்கும்.

The post பெண்மையை பாதுகாக்கும் கல்யாண முருங்கை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™