Tamil Star |
- நத்தார் கொண்டாட்டங்களில் சிரிய நாட்டு அகதிகளையும் இணைத்துக்கொள்ளுங்கள்! – கனேடியப் பிரதமர்
- 18 மணித்தியாளங்களின் பின் திறக்கப்பட்ட குயீன் எலிசபெத் வழித்தடங்கள்
- நேர்த் யோர்க்கில் துப்பாக்கிச் சூடு
| நத்தார் கொண்டாட்டங்களில் சிரிய நாட்டு அகதிகளையும் இணைத்துக்கொள்ளுங்கள்! – கனேடியப் பிரதமர் Posted: 23 Dec 2015 07:18 PM PST
கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ விடுத்துள்ள நத்தார் தின செய்தியிலேயே இந்த அழைப்பை விடுத்துள்ளார்.குடும்ப உறுப்பினர்களுடனும், நண்பர்களுடனும் எமது தாராள குணத்தினையும், பெருந்தன்மையினையும் பகிரிந்து கொள்வதற்கான காலம் இது என்பதையும் அவர் நினைவுபடுத்தினார். இந்த மனப்பாங்குடன் முதன் முறையாக கனேடிய குளிர்காலத்தினை அனுபவிக்கும் சிரிய அகதிகளுடனும் கனேடியர்கள் பகிர்ந்து கொள்வார்கள் என தாம் நம்புவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். கனேடியர்களது தனிச்சிறப்பு அன்பு, நம்பிக்கை, கருணை போன்றவற்றை மற்றையவர்களுடனும் பகிர்ந்து கொள்வது என்று விபரித்த அவர்,அதுவே கனேடியர்கள் என்ற அடையாளமாக விளங்கிவருகிறது எனவும் பெருமைபாராட்டியுள்ளார். இதேவேளை இந்த விடுமுறைக் காலத்திலும் தமது குடும்பங்களுடன் இணைந்து இருக்க முடியாத நிலையில் கடமையாற்றிக்கொண்டிருக்கும் கனேடிய படை வீரர்களையும் கனேடியர்கள் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் படைவீரர்களின் தியாகங்களை அனைத்துக் கனேடியர்களும் மதிப்பதாகவும் பிரதமர் ஜஸ்டின் ரூடோ தமது நத்தார் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். The post நத்தார் கொண்டாட்டங்களில் சிரிய நாட்டு அகதிகளையும் இணைத்துக்கொள்ளுங்கள்! – கனேடியப் பிரதமர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| 18 மணித்தியாளங்களின் பின் திறக்கப்பட்ட குயீன் எலிசபெத் வழித்தடங்கள் Posted: 23 Dec 2015 07:15 PM PST
நேற்று இரவு இடம்பெற்ற மோசமான விபத்தை அத்து குயீன் எலிசபெத் நெடுஞ்சாலையில், ரொரன்ரோ நோக்கிய வழித்தடங்கள் போக்குவரத்திற்கு மூடப்பட்டிருந்தன. நெடுஞ்சாலையில், Trafalgar வீதிப் பகுதியில் நேற்று இரவு ஒன்பது மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.இந்த விபத்தில் இணைப்பு கொள்கலனுடனான இரண்டு கனரக வாகனங்கள் உள்ளிட்ட நான்கு வாகங்கள் தொடர்பு பட்டிருப்பதாகவும், அவற்றுள் ஒரு வாகனம் வெடித்து சிதறி எரிந்ததாகவும் ஒன்ராறியோ மாகாண காவல்த்தறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் சிக்கிய ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும், மேலும் ஒருவர் காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்ற போதிலும், காயமடைந்தவரின் தற்போதய நிலை குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. விபத்தினை அடுத்து குயீன் எலிசபெத் நெடுஞ்சாலையின் அனைத்து கிழக்கு நோக்கிய வழித்தடங்களும் மூடப்பட்டிருததுடன் இநத் நிலை இன்று மதியம் வரையில் நீடித்திருந்ததுடன், பிற்பகல் 3 மணியவில் மீண்டும் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. The post 18 மணித்தியாளங்களின் பின் திறக்கப்பட்ட குயீன் எலிசபெத் வழித்தடங்கள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நேர்த் யோர்க்கில் துப்பாக்கிச் சூடு Posted: 23 Dec 2015 10:23 AM PST
எனினும் அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என அவசர மருத்துவப் பிரிவினரும் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு 9.30 அளவில் நெடுஞ்சாலை 401 மற்றும் அலென் வீதிக்கு தென்கிழக்கே, Bagot Court மற்றும் Varna Drive பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. காவல்த்துறையினர் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த போது, ஆண் ஒருவர் காலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு்ள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காணங்கள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் விசாரணைகள் தொடர்வதாக கூறப்பட்டுள்ளது. சந்தேக நபர் தொடர்பிலான விபரங்களைக் காவல்த்துறையினர் இன்னும் வெளியிடவில்லை என்றும்இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. The post நேர்த் யோர்க்கில் துப்பாக்கிச் சூடு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

சிரிய நாட்டு அகதிகளையும் இணைத்துக்கொண்டு நத்தார் கொண்டாட்டங்களில் ஈடுபட முன்வருமாறு கனேடியப் பிரதமர் நாட்டு மக்களுக்க அழைப்பு விடுத்துள்ளார்.
குயீன் எலிசபெத் நெடுஞ்சாலையில், ரொரன்ரோ நோக்கிய வழித்தடங்கள் 18 மணித்தியாளங்களின் பின்னர் இன்று பிற்பகல் மூன்று மணியளவில் மீண்டும் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
நேர்த் யோர்க்கில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்ற நிலையில், அதில் படுகாயமுற்ற ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.