Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மத்திய அரசை எதிர்ப்பதில் காங்கிரஸ் தலைவர்களிடம் பிளவு: சோனியாகாந்தி கடும் அதிருப்தி

Posted: 23 Dec 2015 10:40 PM PST

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை எதிர்ப்பதில் காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் ஒருமித்த கருத்து இல்லை என்பது வெட்ட வெளிச்சமாக தெரிய வந்துள்ளது. டெல்லி மாநில தலைமை செயலகத்தில் சமீபத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய சோதனை நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல்வர் சந்திரபாபு நாயுடு பெண்களுக்கு எதிரானவர்: நடிகை ரோஜா தாக்கு

Posted: 23 Dec 2015 09:52 PM PST

ஆந்திர சட்டசபையில் முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவை தரக்குறைவாக பேசியதாக நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜாவை சட்டசபையில் இருந்து ஒரு ஆண்டு சஸ்பெண்டு செய்து சபாநாயகர் சிவபிரசாத் உத்தரவிட்டார். இந்த சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சட்டசபையில்

ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்ட தங்க அங்கி ஊர்வலம்

Posted: 23 Dec 2015 09:41 PM PST

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 27–ந்தேதி மண்டலபூஜை விழா நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலையில் குவிந்துள்ளனர். மண்டல பூஜை நாள் அன்று சபரிமலை அய்யப்பனுக்கு திருவிதாங்கூர் மகாராஜா அளிக்கும் தங்க அங்கி சார்த்தப்படுவது வழக்கம். இந்த அங்கி

நான் செய்த தவறு என்ன? பதில் சொல்லுங்கள்: பா.ஜ.க.வில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி. கீர்த்தி ஆசாத் ஆவேசம்

Posted: 23 Dec 2015 09:25 PM PST

டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடுகள் தொடர்பாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி மீது ஆம் ஆத்மியினர் ஒருபுறம் புகார் தெரிவிக்க, மறுபுறம் பா.ஜனதா எம்.பி.யும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கீர்த்தி ஆசாத்தும் பல்வேறு புகார்களை அடுக்கியிருந்தார்.

தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவ் யாகத்தில் 50 ஆயிரம் பேருக்கு விருந்து

Posted: 23 Dec 2015 09:17 PM PST

தெலுங்கானா முதல்– மந்திரி சந்திரசேகரராவ் மெடக் மாவட்டம் எர்ர பள்ளியில் உள்ள தனது பண்ணை வீட்டில் மகா சண்டியாகத்தை நேற்று தொடங்கினார். உலக அமைதி, மாநில மக்கள் நலனுக்காக தனது சொந்த பணம் ரூ.20 கோடியை செலவு செய்து இந்த யாகத்தை நடத்துகிறார். வருகிற 27–ந்தேதி வரை நடக்கும் இந்த யாக பூஜையில் பங்கேற்கும்படி ஜனாதிபதி

கேரளாவில் 500 ஜோடி  இரட்டையர்கள் வாழும் அதிசய கிராமம்

Posted: 23 Dec 2015 09:13 PM PST

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ளது கோடினிகி கிராமம். 4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட இக்கிராமத்தில் சுமார் 20 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் 1000 பேர் அதாவது 500 ஜோடிகள் இரட்டையர்களாக உள்ளனர். இங்கு வசிக்கும் பல குடும்பங்களில் உள்ளவர்கள் இரட்டையர்களாக இருக்கும் தகவல் சமீபத்தில் வெளி உலகுக்கு தெரிய வந்தது. உடனே ஊடகங்கள்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாளை திருப்பதி வருகிறார்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

Posted: 23 Dec 2015 09:08 PM PST

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஐதராபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் தங்கி உள்ளார். வருகிற 27–ந்தேதி தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவ் நடத்தும் மகா சண்டி யாகபூஜையில் பங்கேற்கிறார்.

தொற்று நோய் பாதிப்பால் காளஹஸ்தி சிவன் கோவில் கோசாலையில் 15 பசுக்கள் பலி

Posted: 23 Dec 2015 08:53 PM PST

ஸ்ரீகாளஹஸ்தியில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. இது, புராணங்களில் தென் கயிலாயமாக பெயர் கொண்டு விளங்குகிறது. இங்குள்ள ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சர்ப்ப வடிவத்திலும், ஞானபிரசுனாம்பிகை தாயாரின் வட்டியாணத்தில் சர்ப்ப அலங்காரத்தோடு காட்சியளிக்கிறார். இதனால், இந்தத் தலம் ராகு–கேது சர்ப்ப தோஷ நிவாரண தலமாக

திருவனந்தபுரம் அருகே சிறுமி உள்பட 3 பெண்களை கற்பழித்த வாலிபர் கைது

Posted: 23 Dec 2015 08:51 PM PST

திருவனந்தபுரத்தை அடுத்த நெடுமாமூடு பகுதியைச் சேர்ந்தவர் சமீர்(வயது26). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த சிறுமி ஒருவருடன் சமீருக்கு பழக்கம் ஏற்பட்டது. அவருடன் அடிக்கடி பேசி வந்த சமீர், அந்த சிறுமியை வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்றார். அப்போது சிறுமி மேஜர் ஆனதும்

திருப்பதியில் லட்டு டோக்கன்களை கூடுதல் விலைக்கு விற்க முயன்ற ஊழியர் கைது

Posted: 23 Dec 2015 08:37 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு சலுகை விலையில் 2 லட்டுகளுக்கான டோக்கன் ரூ.20–க்கு வழங்கப்படுகின்றன. லட்டு டோக்கன் கொடுக்குமிடம் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ்சில் உள்ளன. அங்கு டோக்கன் கொடுக்கும் பணியை செய்து வரும் ஒப்பந்த ஊழியர்கள் சிலர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக தேவஸ்தான பறக்கும்படை

சித்தூர் அருகே 5½ டன் செம்மரம் பறிமுதல்: டிரைவர் கைது

Posted: 23 Dec 2015 08:32 PM PST

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சந்திரகிரி மண்டலம் சித்தூர்– திருப்பதி, திருப்பதி–பீலேரு இடையே உள்ள நெடுஞ்சாலையில் செம்மரம் கடத்தல் தடுப்பு பிரிவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் செம்மரம் கடத்தல் கும்பல் தங்களது வழியை மாற்றி ஆந்திர

அருண்ஜெட்லி மீது முன்னாள் அதிகாரி கே.பி.எஸ்.கில் பரபரப்பு குற்றச்சாட்டு

Posted: 23 Dec 2015 08:25 PM PST

மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகியாக இருந்தபோது பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக ஆம்ஆத்மி கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியது. இந்தப் புகாரை அருண் ஜெட்லி மறுத்தார். தன் மீது பொய்யான

மூடநம்பிக்கையை வளர்க்கும் கல்வியை ஊக்குவிக்கக்கூடாது: பள்ளி விழாவில் பிரணாப் முகர்ஜி பேச்சு

Posted: 23 Dec 2015 07:57 PM PST

பெங்களூரு ரெசிடன்சி ரோட்டில் பிஷப் காட்டன் ஆண்கள் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் 150-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு பேசியதாவது:- குழந்தைகளுக்கு அறிவியல் மனநிலையை வளர்க்கும், மூடநம்பிக்கையை

பாராளுமன்றத்தை எப்படி நடத்துவது என்று பா.ஜ.க.விற்கு தெரியவில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

Posted: 23 Dec 2015 07:42 PM PST

கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் 20 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் சிறார் குற்றவாளிகளின் வயது வரம்பை 16 ஆக குறைப்பது, போனஸ் சட்டதிருத்தம் உள்ளிட்ட 13 முக்கிய மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன.

பெங்களூருவில் மாநில புற்றுநோய் மருத்துவ மையம்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அடிக்கல் நாட்டினார்

Posted: 23 Dec 2015 07:19 PM PST

பெங்களூருவில் கித்வாய் அரசு புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் மாநில புற்று நோய் மருத்துவ மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு மாநில புற்றுநோய் மருத்துவ மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

மராட்டிய சட்டசபை குளிர்கால கூட்டத் தொடர் முடிந்தது: பட்ஜெட் கூட்டம் மார்ச் 9-ந் தேதி தொடங்குவதாக அறிவிப்பு

Posted: 23 Dec 2015 07:18 PM PST

மராட்டிய சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 7-ந் தேதி நாக்பூரில் தொடங்கியது. 3 வாரம் நடைபெறுவதாக இருந்த இந்த கூட்ட தொடர், நேற்று மாலை திடீரென தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இது தொடர்பாக கவர்னர் வித்யாசாகர் ராவ் பிறப்பித்த அறிக்கையை சபாநாயகர் ஹரிபாவு பாக்டே சட்டசபையில் வாசித்தார்.

பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிந்தது: எம்.பி.க்களுக்கு ஹமீது அன்சாரி கண்டிப்பு

Posted: 23 Dec 2015 06:58 PM PST

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 26-ந் தேதி தொடங்கியது. நேற்று முடிவடைந்தது. இறுதி நாளான நேற்று, பாராளுமன்ற மக்களவையில், சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வழக்கமான அலுவல்களை கவனிப்பதில் மும்முரமாக ஈடுபட்டார். ஆனால், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி பதவி விலகக்கோரி, சபையின் மையப்பகுதிக்கு சென்று அவர்கள் கோஷமிட்டனர்.

டெல்லியில் அருண் ஜெட்லி வீட்டின் முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 23 Dec 2015 06:46 PM PST

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் தலைவராக இருந்தபோது பல்வேறு ஊழல்கள் நடந்தது என்றும், அதற்கு அருண் ஜெட்லி உடந்தையாக இருந்தார் என்றும் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் சிலர் புகார் தெரிவித்தனர்.

ஆந்திர சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தாக்கல்

Posted: 23 Dec 2015 06:41 PM PST

ஆந்திர சட்டசபையில், கூடுதல் வட்டிக்கு பணம் கொடுப்பது பற்றி பேச ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கு சபாநாயகர் கொடிலா சிவப்பிரசாத் ராவ் அனுமதி மறுத்து வந்தார். இதைத்தொடர்ந்து அக்கட்சியினர் தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி தலைமையில் அக்கட்சியின்

டெல்லியில் விபத்துக்குள்ளான விமானம் 500 மீட்டர் உயரத்தில் பறக்கும் போது கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது

Posted: 23 Dec 2015 04:31 PM PST

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டெல்லி எல்லை பாதுகாப்பு படை விமான விபத்து குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் ராஞ்சிக்கு புறப்பட்டுச் சென்ற எல்லைப் பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான சூப்பர்சிங் ஏர்கிராஃப்ட்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™