Tamil Star |
- விமானங்களை மீட்டுக்கொள்ளும் கனடாவின் நிலைப்பாட்டில் நெருக்கடி
- 214 சிரிய அகதிகள் நேற்று ரொரன்ரோவை வந்தடைந்தனர்
- பிரித்தானியர் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொன்றதாக கனேடியர் மீது குற்றச்சாட்டு
- பீட்ரூட் சாறு: நன்மைகளோ ஏராளம்!
- வீட்டை சுத்தம் செய்யும் எலுமிச்சை
| விமானங்களை மீட்டுக்கொள்ளும் கனடாவின் நிலைப்பாட்டில் நெருக்கடி Posted: 19 Dec 2015 08:02 PM PST
சில தினங்களின் முன்னர் ஈராக்கின் வட பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகளைக் குறிவைத்து கூட்டுப் படைகள் தாக்குதல்கள் நடாத்தப்பட்டதுடன், இந்த மிகப்பெரும் தாக்குதல் நடவடிக்கையில் கனேடிய போர் விமானங்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஐ.எஸ் அமைப்புடனான மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அவற்றுள் மேற்குலக நாடுகளின் பங்களிப்புகள் மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்பதே தனது அச்சமாக உள்ளது என பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.இந்த நிலைமை எதிர்காலத்தில் மேற்குலக நாடுகளை முற்றுமுழுதாக இந்த போரில் ஈடுபடுத்த வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிவிடுமோ என்பதே தமது கவலையாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.முன்னர் லிபியா, ஈராக் போன்ற நாடுகளில் இடம்பெற்ற நடவடிக்கைகள் இவ்வாறு நீண்டகால போருக்கு இட்டுச் செல்லும் என்ற கவலைகளை தோற்றுவிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை போர் விமானங்களை மீட்டுக் கொள்ளப் போவதாக ஜஸ்டின் ரூடோவின் அறிவிப்பினை பழமைவாதக் கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.போர் விமானங்களை மீடடுக் கொள்வதான லிபரல் அரசாங்கத்தின் கொள்கை முற்றுமுழுதாக ஒத்திசைவற்ற ஒரு நடவடிக்கை என பழமைவாதக் கடசியின் வெளிவிவகார விமர்சகர் டோனி கிலமென்ட் தெரிவித்துள்ளார். இதனிடையே கனடாவின் விமானத் தாக்குதல் நடவடிக்கைகள் அடுத்த வருடமும் தொடரும் என்ற பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது கனேடிய போர் விமானங்கள் உடனடியாக மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என புதிய சனநாயகக் கட்சியும் வலியுறுத்திவரும் நிலையில், பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட இந்த கருத்து கடும் சர்ச்சையினை தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. The post விமானங்களை மீட்டுக்கொள்ளும் கனடாவின் நிலைப்பாட்டில் நெருக்கடி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| 214 சிரிய அகதிகள் நேற்று ரொரன்ரோவை வந்தடைந்தனர் Posted: 19 Dec 2015 09:15 AM PST
ரொரன்ரோ பியர்சன் அனைத்துலக விமான நிலையத்தினை வந்தடைந்திருந்த அவர்களை ஆளுநர் நாயகம் டேவிட் ஜோன்ஸ்டன் அவர்கள் நேரில் சென்று வரவேற்றுள்ளார் அவர்களை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு சென்றிருந்த ஆளுநர் நாயகம், அரேபிய மொழியில் அவர்களை "மர்ஹாபா" என பலதடவைகள் அழைத்து வரவேற்றிருந்தார். ஆளுநர் நாயகத்துடன் சேர்ந்து அவரின் மனைவி, அவரது மகள் மற்றும் நான்கு பேரப்பிள்ளைகளும் சிரிய அகதிகளை வரவேற்றிருந்தனர். அகதிகளை ஏற்றி வந்த இந்த விமானம் கனேடிய அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பெய்ரூட்டில் இருந்து புறப்பட்டு வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சிரிய அகதிளை கனடாவி்ற்குள் ஏற்றிக்கொண்டு வந்த நான்காவது விமானம் இதுவாகும். கனேடிய மத்திய அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதியின் பிரகாரம் இந்த வருட இறுதிக்குள் பத்தாயிரம் அகதிகளை கனடாவினுள் அழைத்து வரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. The post 214 சிரிய அகதிகள் நேற்று ரொரன்ரோவை வந்தடைந்தனர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரித்தானியர் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொன்றதாக கனேடியர் மீது குற்றச்சாட்டு Posted: 19 Dec 2015 09:06 AM PST
உயிரிழந்தவர் பிரித்தானியா நாட்டைச் சேர்ந்த சுற்றுப் பயணி என்றும்,பேரு நாட்டில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்தகொண்டிருந்த போதே அவர் அவ்வாறு குத்திக் கொலை செய்யப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. பேரு நாட்டில் இக்விட்டோஸ் எனப்படும் நகரில் கடந்த புதன்கிழமை இரவு குறித்த நிகழ்வு இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவைச் சேர்ந்த 29 வயதான ஜோஷு ஆட்ரூ ஃபிரீமன் ஸ்டீவன் என்பவர் இந்த குற்றத்தினை புரிந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கத்திக்குத்தில் உயிரிழந்த பிரித்தானிய சுற்றுப் பயணி 25 வயதான யுனைஸ் கோம்ஸ் என்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே சண்டை மூண்டதாகவும், அதன் போது கனேடியர் பிரித்தானியரை கத்தியால் குத்தியதாக சாட்சியங்கள் தெரிவித்துள்ளதாகவும் பேரூ நாட்டு காவல்த்துறை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார் எனினும் அவரின் மரணத்திற்கான உண்மைக் காரணம் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை The post பிரித்தானியர் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொன்றதாக கனேடியர் மீது குற்றச்சாட்டு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பீட்ரூட் சாறு: நன்மைகளோ ஏராளம்! Posted: 19 Dec 2015 07:05 AM PST
100 கிராம் பீட்ரூட்டில் அடங்கியுள்ள சத்துக்கள் தண்ணீர் 87.7 விழுக்காடும், புரோட்டின் 17 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 0.8 விழுக்காடும், நார்ச்சத்து 0.9 விழுக்காடும், கார்போஹைட்ரேட் 8.8 விழுக்காடும் உள்ளது. மற்றும் கால்சியம் 18 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 5.5 மில்லிகிராமும், இருப்பு 10 மில்லிகிராமும், விட்டமின் சி 10 மில்லிகிராமும் மற்றும் விட்டமின் ஏ மற்றும் பி1, பி2, பி6 நியாசின், விட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், சல்வர், குளோரின், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன. மருத்துவ பயன்கள் 1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும். 2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும். 3. பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும். 4. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும். 5. பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும். 6. பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். இரத்த சோகையை குணப்படுத்தும். 7. பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும். 8. பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும். 9. பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும். The post பீட்ரூட் சாறு: நன்மைகளோ ஏராளம்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வீட்டை சுத்தம் செய்யும் எலுமிச்சை Posted: 19 Dec 2015 07:01 AM PST
ஒரு பாத்திரத்தில் தண்ணீரையும், சோடா உப்பையும் கலந்து வைத்து கொள்ளுங்கள், இதனை கொண்டு சுத்தம் செய்தால் ஜன்னல் பளிச்சென மின்னும். எலுமிச்சை பழத்தை கட் செய்து, ஜிங்க் முழுவதும் தெளித்து விடுங்கள், பின்னர் கல் உப்பையும் தெளித்து நன்றாக தேய்த்தால் சுத்தமாகும். தரையை சுத்தம் செய்யும் போது, எலுமிச்சை பழத்தை சில துளிகள் பிழிந்து ஈரத்துணி கொண்டு துடையுங்கள், பின்னர் பத்து நிமிடங்கள் கழித்து வினிகர் மற்றும் உப்பு கலந்த தண்ணீரை கொண்டு துடைக்க வேண்டும். வீட்டின் கழிவறையை சுத்தம் செய்ய சிறிது எலுமிச்சை தண்ணீரை தெளித்து பின்னர், வினிகர் தெளித்து சுத்தம் செய்தால் பளபளவென மின்னும். The post வீட்டை சுத்தம் செய்யும் எலுமிச்சை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

சிரியா மற்றும் ஈராக்க ஆகிய நாடுகளில் ஐ.எஸ் அமைப்பு மீதான தாக்குதல் நடவடிக்கைகளில் இருந்து விமானங்களை மீட்டுக்கொள்ளும் கனடாவி்ன் நிலைப்பாடு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.




பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட எலுமிச்சையை வைத்து வீட்டை சுத்தப்படுத்தலாம்.