Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மயங்கி விழுந்ததால் நடிகை ரோஜா ஆஸ்பத்திரியில் அனுமதி: ஜெகன்மோகன் நேரில் சந்தித்து ஆறுதல்

Posted: 19 Dec 2015 09:59 PM PST

ஆந்திர சட்டசபையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா சட்டசபையில் முதல்– மந்திரி சந்திரபாபு நாயுடுவை தரக்குறைவாக பேசியதாக 1 ஆண்டு சஸ்பெண்டு செய்யப்பட்டார். நேற்று சட்டசபை கூடிய போது ரோஜா சஸ்பெண்டு செய்யப்பட்டதை ரத்து

இறைச்சிக்காக பசுக்களை கொல்ல தடைவிதிக்க கோரிய மனு: டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி

Posted: 19 Dec 2015 08:25 PM PST

இறைச்சிக்காக பசுக்களை கொல்ல கூடாது என தடைவிதிக்க கோரிய பொதுநல மனுவினை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. டெல்லியில் இயங்கிவரும் சாத் என்ற அரசுசாரா தொண்டு நிறுவனம் இறைச்சிக்காக பசுக்களை கொல்லவும், டெல்லியில் இயங்கிவரும்

பீகாரில் இன்று எக்ஸ்பிரஸ் ரெயில் கவிழ்ந்தது - 7 பெட்டிகள் தடம் புரண்டன

Posted: 19 Dec 2015 08:14 PM PST

பீகார் மாநிலத்தில் இன்று எக்ஸ்பிரஸ் ரெயில் கவிழ்ந்த விபத்தில் 7 பெட்டிகள் தடம் புரண்டன. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கதிஹார் பகுதியை பஞ்சாப் தலைநகர் அமிர்தசரசுடன் இணைக்கும் வகையில் தடம் எண்: 15707, உ.பி. கதிஹார்-அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இயங்கி வருகின்றது.

தடை மனு விசாரணையை ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்: டெல்லி கற்பழிப்பு வழக்கில் சிறார் குற்றவாளி இன்று விடுதலை

Posted: 19 Dec 2015 07:37 PM PST

டெல்லி மகளிர் ஆணையத் தலைவி சுவாதி மாலிவால் என்பவர் நேற்று நள்ளிரவில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் இல்லத்துக்கு சென்று தாக்கல் செய்த டெல்லி கற்பழிப்பு வழக்கில் தண்டனைபெற்ற சிறார் குற்றவாளியின் விடுதலைக்கு எதிரான மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் சிறார் குற்றவாளி இன்று விடுதலையாவது உறுதியாகி விட்டது.

டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் நடந்த மிகப்பெரிய ஊழலை அம்பலப்படுத்துவேன்: பா.ஜனதா எம்.பி. பரபரப்பு தகவல்

Posted: 19 Dec 2015 07:29 PM PST

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக பதவி வகித்த காலத்தில், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறியுள்ள ஆம் ஆத்மி தலைவர்கள், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

டுவிட்டரில் நீங்கள் குறிப்பிட்ட அதிகாரி யார்? கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ. கிடுக்கிப்பிடி

Posted: 19 Dec 2015 07:18 PM PST

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் முதன்மைச் செயலாளர் ராஜேந்திர குமார், ஊழல் பிடியில் சிக்கியுள்ளார். அவரது அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிரடியாக சோதனை நடத்தியது. அதைத் தொடர்ந்து கெஜ்ரிவாலுக்கும், சி.பி.ஐ.க்கும் இடையே மோதல் போக்கு வெடித்துள்ளது.

நடிகை ரோஜா நீக்கப்பட்ட விவகாரம்: ஆந்திர சட்டசபையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளி

Posted: 19 Dec 2015 06:10 PM PST

ஆந்திர பிரதேசம் விஜயவாடாவில் அதிகரித்து வரும் கந்துவட்டி கொடுமை குறித்து, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா நேற்று முன்தினம் மாநில சட்டசபையில் கேள்வி எழுப்பினார். அப்போது அவர், முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை தகாத வார்த்தையால்

நிர்பயா வழக்கில் சிறார் குற்றவாளி விடுதலையாக முடியுமா? முடிவு நாளை தெரியும்

Posted: 19 Dec 2015 04:24 PM PST

"நிர்பயா வழக்கு" என்று அழைக்கப்படும் டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருந்த சிறார் பாலியல் குற்றவாளி 3 ஆண்டுகள் தண்டனை முடிந்து இன்று விடுதலையாகவுள்ள நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக டெல்லி

டெல்லியில் வீடு ஒதுக்கப்பட்ட விவகாரம்: காங்கிரஸ் புகாருக்கு சுப்பிரமணிய சாமி பதில்

Posted: 19 Dec 2015 02:55 PM PST

சுப்பிரமணிய சுவாமிக்கு டெல்லியில் வீடு ஒதுக்கப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் கூறிய புகார்களை நேற்று அவர் மறுத்தார். பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமியின் பாதுகாப்பு கருதி, அவருக்கு டெல்லியில் புதிய வீடு ஒன்றை மத்திய அரசு நேற்று

நிர்பயா வழக்கில் திடீர் திருப்பம்: சிறார் குற்றவாளி விடுதலைக்கு எதிராக நள்ளிரவில் சுப்ரீம் கோர்ட்டில் மனு

Posted: 19 Dec 2015 12:41 PM PST

நிர்பயா வழக்கு என்று அழைக்கப்படும் டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருந்த சிறார் பாலியல் குற்றவாளி 3 ஆண்டுகள் தண்டனை முடிந்து இன்று விடுதலையாகவுள்ள நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக டெல்லி மகளிர் ஆணையத் தலைவி நள்ளிரவில் சுப்ரீம் கோர்ட்டில் மனு

கல்புர்கி, தபோல்கர், பன்சாரே, மூவரும் ஒரே ரக துப்பாக்கியால் சுட்டுக்கொலை

Posted: 19 Dec 2015 11:54 AM PST

மூடநம்பிக்கை மற்றும் இந்துத்துவா கருத்தாக்கத்திற்கு எதிராக பேசியும் எழுதியும் வந்த மூன்று ஆளுமைகள் ஒரே ரக துப்பாக்கியால் சுட்டுகொல்லப்பட்டிருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி (78) கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கிற்கும் மகாராஷ்டிராவில்

சாமியார் ஆசாராம் பாபு மீண்டும் ஜாமின் மனு தாக்கல்: சுப்ரமணியன் சுவாமி ஆஜராக வாய்ப்பு

Posted: 19 Dec 2015 11:03 AM PST

ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள அவரது ஆசிரமத்தில், பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி அளித்த புகாரின் பேரில், 2013ம் ஆண்டு ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டு

பள்ளியில் சாமியார் ஆசாராம் படத்தை வைத்து வழிபட்ட ஆசிரியர் சஸ்பெண்ட்

Posted: 19 Dec 2015 08:17 AM PST

ராஜஸ்தான் மாநிலத்தில், பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாமியார் ஆசாராம் பாபு படத்தை வழிபட்ட ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 16 வயது பள்ளி மாணவியை கற்பழித்ததாக அளிக்கப்பட்ட புகாரில், 74 வயது சாமியார் ஆசாராம், கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது ஜாமின்

வாரணாசி அருகே காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை

Posted: 19 Dec 2015 07:43 AM PST

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி அருகே காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் வழக்கறிஞருமான ராஜநாராயண சிங் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆசம்கர் நகரின் சித்தாரி பகுதியில் வசித்து வந்தவர் ராஜநாராயண சிங். காங்கிரஸ் கட்சியின் கூட்டுறவு பிரிவு தலைவரான இவர், அந்த பகுதி மக்களிடையே மிகவும் செல்வாக்கு மிக்க நபர் ஆவார். வழக்கம்போல் இன்று காலை அவர் வாக்கிங் சென்றுகொண்டிருந்தார். அப்போது,

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின் விளைவுதான் ஹெரால்டு வழக்கு: அசாம் முதல்வர் கருத்து

Posted: 19 Dec 2015 07:14 AM PST

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீதான நேசனல் ஹெரால்டு வழக்கு, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின விளைவு என்று அசாம் முதல் மந்திரி தருண் கோகாய் இன்று கூறியுள்ளார். இதுபற்றி கவுகாத்தியில் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "அரசியல் பழிவாங்கும் செயலாக இந்த வழக்கு அமைந்துள்ளது.

கொல்கத்தாவில் இருந்து வாடிகன் செல்கிறது அன்னை தெரசாவின் ரத்தம்

Posted: 19 Dec 2015 07:08 AM PST

கொல்கத்தாவில் உள்ள மியூசியம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள அன்னை தெரசாவின் ரத்த மாதிரி ரோமன் கத்தோலிக்க சபையினரால் பேரின்ப நிலை அடைய செய்வதற்காக வாடிகன் கொண்டு செல்லப்பட உள்ளது. அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவதாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது. அன்னை தெரசா, மேற்கு வங்காளத்தை சேர்ந்த மோனிகா பெஸ்ரா என்ற பெண்ணின் வயிற்று புற்றுநோயை 2002–ம் ஆண்டு குணப்படுத்தி அற்புதம்

டெல்லி கற்பழிப்பு வழக்கில் இளம் குற்றவாளியை விடுவிக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது: கிரண் ரிஜிஜு

Posted: 19 Dec 2015 05:44 AM PST

டெல்லியில் மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று ஆண்டு தண்டனை பெற்ற இளம் குற்றவாளி நாளை விடுதலை செய்யப்படுவான் என எதிர்பார்க்கப்படுகிறது. விடுதலைக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுத்ததையடுத்து, இன்று அவன் சிறுவர் சீர்திருத்த காப்பகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, ரகசிய இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.

அரசு பள்ளியில் விதவை பெண்ணை சமையல் செய்யவிடாமல் தடுத்த கிராம மக்கள்: கலெக்டர் அதிரடி நடவடிக்கை

Posted: 19 Dec 2015 05:25 AM PST

பீகார் மாநிலத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக அரசு பள்ளியில் சமையல் செய்யவிடாமல் கிராம மக்களால் தடுக்கப்பட்ட விதவை பெண் ஊழியருக்கு மாவட்ட கலெக்டர் நேரில் சென்று உதவி செய்துள்ளார். கோபால்கஞ்ச் மாவட்டம் கல்யாண்பூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் விதவைப் பெண் உள்ளிட்ட 5 பேர் மாதம் சம்பளமாக ரூ.1000 பெற்றுக் கொண்டு மதிய உணவு சமைத்து வந்துள்ளனர். தலைநகர்

மேற்கு வங்காள அரசு மருத்துவமனையில் மேலும் 3 குழந்தைகள் மரணம்

Posted: 19 Dec 2015 04:54 AM PST

மேற்கு வங்காள மாநிலம் மால்டாவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேலும் 3 பச்சிளம் குழந்தைகள் பலியாகியுள்ளனர். இதன்மூலம் கடந்த 72 மணி நேரத்தில் 10 குழந்தைகள் பலியாகியிருப்பது பொதுமக்களிடையே கடும் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மருத்துவக்கல்லூரியின் துணை முதல்வரும், மருத்துவ

சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகங்கள் ஆன்லைனில் இலவசமாக கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை

Posted: 19 Dec 2015 03:17 AM PST

மத்தியில் நடைபெற்று வரும் நல்லாட்சியின் ஒரு பகுதியாக, அனைத்து சி.பி.எஸ்.இ. புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் அனைத்தும் இணையதளத்தில் இலவசமாக கிடைக்க ஏற்பாடு நடந்து வருவதாக மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™