Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


தெற்கு Barrieஇல் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி

Posted: 16 Dec 2015 06:50 PM PST

hfg

Barrie இன் தெற்குப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு Barrie நெடுஞ்சாலை ஒன்றில் இடம்பெற்ற இந்த விபத்தில் சிற்றூர்தி ஒன்றும்.கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

New Tecumseth Township இன் ஒன்பதாவது வழித்தடத்திற்கு அருகில் நெடுஞ்சாலை 89 இல் அதிகாலை ஒரு மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக ரொரன்ரோக் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த இருவரும் வாகனங்களைச் செலுத்திக் சென்ற சாரதிகள் என்றும் கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்த இருவரும் ஆண்கள் என்றும், ஒருவர் 64 வயதுடையவர் என்றும், மற்றையவர் 24 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை விபத்துக்குள்ளான வாகனங்கள் இரண்டிலும் பயணிகள் எவரும் இருக்கவில்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எனினும் விபத்துக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை.

விபத்தை அடுத்து குறித்த வீதிப் பகுதி மதியவம் வரையில் போக்குவரத்துக்காக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post தெற்கு Barrieஇல் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சிரிய அகதிகளை ஏற்றிய மூன்றாவது விமானமும் கனடாவை வந்தடைந்துள்ளது

Posted: 16 Dec 2015 10:43 AM PST

Remembrance_Day-1111

Remembrance_Day-1111சிரிய அகதிகளை ஏற்றிய மூன்றாவது விமானமும் ரொரன்ரோவை வந்தடைந்துள்ளது.

இந்த விமானத்தில் 214 சிரிய அகதிகள் வந்திறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இம்முறை கனடாவை வந்தடைந்தோரில் பெரும்பாலானோர், தனியாரின் அனுசரணையிலும், சிறி எண்ணிக்கையானோர் அரசாங்கத்தின் நேரடி அனுசரணையின் கீழும் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ரொரன்ரோவை வந்தடைந்துள்ள அவர்கள், நாட்டின் பல பாகங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும், இவர்களில் 4 பேர் ஹலிஃபக்ஸ் ற்கும், 8 பேர் வன்கூவருக்கும், ஏனையோர் இவ்விரு பகுதிகளுக்கும் இடைப்பட்ட சில இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.Remembrance_Day-1111

தமது தனிப்பட்ட முயற்சியிலும் கனடாவுக்கு வந்துள்ள சிரிய அகதிகளையும் சேர்த்து, இதுவரையில் 1,100ற்கும் அதிகமான சிரிய நாட்டு அகதிகள் இந்த புதிய அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் கனடாவுக்குள் வந்துள்ளனர்.

அரசாங்கத்தின் செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்றாவது விமானம் இது என்ற போதிலும், எதிர்வரும் வாரங்களில் இவ்வாறு எத்தனை விமானங்கள் வந்து சேரும் என்பதனை தெளிவாக கூறமுடியாதுள்ளது என குடிவரவு அமைச்சர் ஜோன் மக்கலம் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு முடிவடைய இன்னமும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், பத்தாயிரம் சிரிய அகதிகளையும், பெப்ரவரி மாத இறுதிக்குள் 25,000 சிரிய அகதிகளையும் கனடாவுக்குள் தருவிக்கவுள்ளதாக லிபரல் அரசாங்கம் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post சிரிய அகதிகளை ஏற்றிய மூன்றாவது விமானமும் கனடாவை வந்தடைந்துள்ளது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™